Thottal Thodarum

Feb 19, 2011

நடுநிசி நாய்கள்.

nadu-nisi-naigal-16 விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கதில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். உலகக் கோப்பைக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகியிருக்கிறது. படம் உலகக் கோப்பையை எதிர்கொள்ளுமா? மக்களின் எதிர்பார்ப்பை திருப்தி படுத்துமா? என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கும் படம்.
படத்தின் முதல் காட்சியில் ஒரு துப்பாக்கி வெடிக்கிறது. ஹைஸ்பீடில் ஒரு போலீஸ்காரர் மடேலென.. தண்ணீரில் விழுகிறார். லைப் லைன் ஹாஸ்பிட்டலில் ஒரு போலீஸ்காரருக்கு தன் சக போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவர் சொல்கிறார். அந்த பொண்ணு இந்த ஹாஸ்ப்பிடல்லதான் இருக்கு. அங்க ஒரு பையன் இருப்பானே? என்கிறார். ஹாஸ்பிட்டலுக்கு போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷனர் வருகிறார். அவரிடம் டாக்டர் என்ன நடக்கிறது என்று கேட்கிறார்?. போலீஸ்னு சொல்லிட்டு ஒருத்தன் அந்த பொண்ணை கடத்திட்டு போயிட்டான் என்று புலம்புகிறார். அஸிஸ்டெண்ட் கமிஷனர் கையில் கிடைத்த ஒரு சத்யம் தியேட்டர் டிக்கெட்டிலிருந்து விசாரணையை ஆரம்பிக்கிறார். நடு நடுவே கடத்தப்பட்ட பெண்ணைப் பற்றிய செய்திகள் பேட்ரோல் போலீஸ் தகவல் கொடுக்க, என்று இப்படி பரபரப்பாகத்தான் ஆரம்பிக்கிறது. யார் போலீஸ்காரர்களை கொன்றது? கடத்தப்பட்ட பெண் யார்? அவளுக்கும் கொலையாளிக்குமான சம்மந்தம் என்ன? அவள் காப்பாற்றப்பட்டாளா? என்பது போன்ற வைட்டலான கேள்விகளுக்கு வெண் திரை பதில் சொல்லும்.
nadu-nisi-naigal-1 ஒரு விஷயத்தில் கெளதமை பாராட்ட வேண்டும். பாடல்களுக்காகவே முக்யத்துவம் பெரும் படங்களை இயக்கியவர். பாடல்கள் இல்லாமல், பின்னணியிசை இல்லாமல் ஒரு படத்தை அதுவும் த்ரில்லர் படத்தை அளிப்பதற்கு தைரியம் வேண்டும். பீராவாக வரும் வீராவின் நடிப்பு நன்றாக இருந்தது.  படத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நடிகர்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் தங்கள் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

காணாமல் போன பெண் கேரக்டரில் சமீரா ரெட்டி. படம் முழுக்க ஒரு விதமான பயத்தோடு அலையவேண்டியிருப்பதால் கிட்டத்தட்ட ஒரே ரியாக்‌ஷன். மற்றும் டப்பிங் ஆர்டிஸ்டின் ஒரே விதமான மாடுலேஷனில் வரும் அலறல்கள். ஆங்காங்கு வரும் நச் முத்தங்கள் இதம். ஆனாலும் ரொம்பவே முத்திப் போய் தெரிகிறார்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயெ படமாக்கப்பட்டிருப்பதால் ஒரு விதமான த்ரில்லிங் எபெக்ட்களை ஒளிப்பதிவு நிறைய விஷயங்களை கன்வே செய்கிறது. க்ளைமாக்ஸ் மழைக் காட்சியும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களுக்கும் மனோஜ் ஒரு பெரி அசெட்.
nadu-nisi-naigal-6 எழுதி இயக்கியவர் கெளதம் வாசுதேவ் மேனன். வழக்கமான டெம்ப்ளேட் கதைகளை எடுப்பதற்கு பதிலாய் வித்யாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள். இடைவேளையின் போது மீனாட்சியம்மா கேரக்டரின் இன்னொரு முகத்தை காட்டும் போது திடுக்கிட வைக்கிறார். ஒரு சைக்கோ கொலையாளியை பற்றி ஆங்கில படங்களை பார்த்தவர்களுக்கு இப்படம் ஒரு பெரிய இம்பாக்டை கொடுக்காமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம். முதல் பாதி கொஞ்சம் பார்வையாளனின் ஸ்பெகுலேஷனிலேயே இருப்பதால் சோர்வடையச் செய்கிறது. க்ளைமாக்ஸ் நெருங்க..நெருங்க ப்ரபரப்பாக ஓடுகிறது. ஆனால் என்ன தான் வித்யாசமான படம் என்று எடுத்தாலும் திரைக்கதை ரெம்பவும் டெம்ப்ளேட்டாய் இருப்பது பொறுமையை சோதிக்கிறது, மூக்கை சிந்துவது போன்ற ரியாக்‌ஷன்கள், அந்நியன் போன்ற ஒரு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி கேஸ் என்று பார்க்கும் போது சுவாரஸ்யம் மேலும் குறையத்தான் செய்கிறது. காட்சிகளை விரிவாக பேசுகிறேன் என்று எல்லாக் காட்சிகளையும், உங்களுக்கு கிடைக்கக்கூடிய இனிய அதிர்ச்சிகளையும் எழுதி பாழ் செய்ய விருப்பமில்லை. மீண்டும் டெக்னிக்கலி ஒரு அருமையான படத்தை அளித்திருக்கிறார்.

சிறு வயதில் பாலியல் கொடுமை பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் உண்டு என்பதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை பையனின் பார்வையில் இருப்பதால், ஒரு தேடல் இல்லாத திரைக்கதையாய் அமைந்துவிட்டது. அய்யோ பாவம் என்கிற மனப்பான்மை அவனை பார்த்து வர மாட்டேனென்கிறது. இதே கதையை ஹீரோயின் பாய்ண்டாப்வீயூவில் சொல்ல ஆரம்பித்து, அதில் ஹீரோவின் கதையை விளக்கியிருந்தால் சுவாரஸ்யமாய் இருந்திருக்குமோ? படம் கொஞ்சம் ப்ளாட்டாக இருப்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.  நிறைய இடங்களில் லாஜிக் இல்லவேயில்லை. சிகப்பு ரோஜாக்களில் ஒரு அருமையான காதல் இருக்கும்.அது படத்தின் பல இடங்களை காப்பாற்றும். த்ரில்லர் படம் என்கிற கேட்டகிரியில் படத்தை எடுத்திருந்தாலும், த்ரில்லாய் பெரிதும் ஏதும் இல்லாதது குறையே..

நடுநிசி நாய்கள் - ஓகே-- முயற்சிக்காக..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

26 comments:

Sukumar said...

வேட்டையாடு விளையாடு ரேஞ்சுக்கு மேலே கலக்குவார் என பார்ததால்.. என்ன தல.. பார்க்கலாமா வேணாமா......

COVAIGURU said...

nan than second

வருண் said...

Seems like Gautam Menon f'cked up finally! I think we need to royally ignore his frigging attempt at this time!

Why does not he go and take some Hollywood thriller next or some malayaaLam movie?

I think he is so f'cking SKILLFUL!

I think GM will understand my comment as it is not as offensive as his movies! So, don't worry about deleting this comment cable!

Philosophy Prabhakaran said...

அப்படின்னா இது பாசிடிவ் விமர்சனமா...?

தமிழ் அருவா! said...

இன்று முதல் தமிழில் ஏற்படும் பிழைகளை திருத்த அவதாரம் எடுத்திருக்கிறேன். “அவசரத்தில் எழுதியது. இதெல்லாம் சகஜம்” என்றெல்லாம் சொல்லப்படாது.

//ஹைஸ்பீடில் ஒரு போலீஸ் காரர் மடேலென.. தண்ணீரில் விழுகிறார்//

போலீஸ் காரர். ரெண்டு பேரா? போலீஸ்காரர் என்று இடைவெளியின்றி எழுதவும்.

//அஸிஸ்டெண்ட் கமிஷனர் கையி கிடைத்த ஒரு சத்யம் தியேட்ட்ர்//

கையி? தியேட்ட்ர் என்ன இதெல்லாம்?

//வெண் திரை பதில் சொல்லும்//

வெண் திரை பதில் சொல்லுமா? திரை எப்படி பதில் சொல்லும். ஸ்பீக்கர் தானே பதில் சொல்லும்.

//ஒரு விஷயத்தில் கெளதமை பாராட்ட வேண்டும் பாடல்களுக்காகவே முக்யத்துவம் பெரும் படங்களை இயக்கியவர்.//

கெளதமை பாராட்ட வேண்டும் என்ற வார்த்தைக்கு பிறகு புள்ளி வைக்கவில்லை. முக்யத்துவம்??? முக்கியத்துவம்.

//பெரும் பாலும் இரவு நேரங்களிலேயெ//

பெரும்பாலும் என்று இருக்க வேண்டும். கேப் உள்ளது. //நேரங்களிலேயெ// நேரங்களிலேயே தான் சரி.

..நான் சொன்னது எல்லாம் சரிதானே அய்யா? தவறென்றால் மன்னிக்க.

வெல்க தமிழ்! வளர்க தமிழர்!

வருண் said...

***..நான் சொன்னது எல்லாம் சரிதானே அய்யா? தவறென்றால் மன்னிக்க. ***

அதென்ன அய்யா???

ஐயா னுதானே சொல்லனும்?

Cable சங்கர் said...

அட வெண்ணை கொண்டேபுடுவேன்.. ப்ரச்சனை,முக்யத்துவம் என்றெல்லாம் எழுதுவ்து சிலரின் ப்ரத்யோகத்தனம். இப்படி எழுதக்கூடாது என்று நீ சொல்வாயானால்.நிறைய இலக்கியவாதிகளை பற்றி நீ எழுத வேண்டியிருக்கும்.

நிஜமாவே தப்பு செய்திருக்கிறேன் என்றால் ரெண்டே ரெண்டுதான் உன் கணக்கில். மற்றெதெல்லாம் ஸ்பேஸ் ப்ராப்ளம்.

அது மட்டுமில்லாம் இப்ப உன் பின்னூட்ட்டத்திலேயே தப்பு இருக்கு. மொதல்ல.. அங்க சரி பண்ணிட்டு வந்தா நல்லாருக்கும்.

இருந்தாலும் உன் பணியை மெச்சினோம். இனிமேல் பதிவு போட்டவுடன் வந்து இம்மாதிரியான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளை கண்டு பிடித்து சொன்னால் அடுத்த பின்னூட்டம் வருவதற்குள் நிச்சயம் பார்க்கப்படும் பட்டி. நன்றி.. நன்னி.. நன்னி.. இது பிழையில்லை.. :))

Cable சங்கர் said...

எனக்கும் ப்ருப் பார்க்க ஆளில்லாமத்தான்.. ரொம்ப நாளா அலைஞ்சிட்டிருந்தேன். இப்ப நீ சிக்கிட்டே.. மவனே நெதம் வந்து ஒளுங்கு மருவாதையா பார்த்து கொடுக்கல.. கொண்டே..புடுவேன்.. கொண்டு.

Cable சங்கர் said...

ஆனா உன்னைப் பார்த்தா..எனக்கு பாவமாயிருக்கு.. கொண்டேபுடுவேன். நானெல்லாம் கொசு.. ஆனா மலையெல்லாம் இருக்கே.. அதுக்கு என்ன செய்ய போறே நீ? ம்ஹும்.. என்ன அங்கெல்லாம் இந்த பின்னூட்டம் போட்டா.. பப்ளிஷ் ஆவாது. இங்க ஆவும். அப்புறம் ஒரு விஷயம் அந்த ஸ்பேஸ் ப்ரச்சனைக்கூட விண்டோஸ் லைவ்லை அலைன் பண்றதுல வருவது. :))

Shanmugam Rajamanickam said...

ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே உங்கள் பதிவை பார்த்திருக்கிறேன். நீங்கள் செய்யும் திரைவிமர்சனம் படிக்கவே பிடிக்கமால் செய்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு படத்தை விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதில் 80 சதவீத குறைகளும் 20 சதவீதம் தான் நிறைகளும் சொல்கிறீர்கள். உங்க விமர்சனம் படிச்சா படம் பார்க்கலாம் என்ற எண்ணமே போய்டுது. உங்க விமர்சனம் அந்த படத்தோட இயக்குனருக்கு எழுதபட்டதுபோலவே தெரிகிறது. நானெல்லாம் உங்க வாசகருங்க. எனக்காகவும் கொஞ்சம் எழுதுங்க. உங்க கொத்துபரோடாவெல்லாம் எப்பவுமே நல்லாதான் இருக்கும்.
நன்றி வணக்கம்.

Shanmugam Rajamanickam said...

ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே உங்கள் பதிவை பார்த்திருக்கிறேன். நீங்கள் செய்யும் திரைவிமர்சனம் படிக்கவே பிடிக்கமால் செய்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு படத்தை விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதில் 80 சதவீத குறைகளும் 20 சதவீதம் தான் நிறைகளும் சொல்கிறீர்கள். உங்க விமர்சனம் படிச்சா படம் பார்க்கலாம் என்ற எண்ணமே போய்டுது. உங்க விமர்சனம் அந்த படத்தோட இயக்குனருக்கு எழுதபட்டதுபோலவே தெரிகிறது. நானெல்லாம் உங்க வாசகருங்க. எனக்காகவும் கொஞ்சம் எழுதுங்க. உங்க கொத்துபரோடாவெல்லாம் எப்பவுமே நல்லாதான் இருக்கும்.
நன்றி வணக்கம்.

Cable சங்கர் said...

உங்களுக்கு பிடிச்ச இயக்குனர் படத்தை விமர்சனம் செஞ்சா அப்படித்தான் தோணும். என் விமர்சனம் படிக்க பிடிக்கவேயில்லைன்னு சொல்லிட்டு முழுசா படிச்சிட்டு வந்திருக்கீங்க. அதுவும் பின்னூட்டம் போட்டிருக்கீங்க. என்ன பண்றது சண்முவம்.. எனக்கும் கெளதம் மேனன் படம்னா உசுரு.. கவுத்துப்புட்டாரே.. உண்மையச் சொல்லித்தானே ஆவணும்.. விடு..விடு.. மனச தேத்திட்டு அடுத்த படத்த பாப்போம். அதுக்காவ.. இப்படி கோச்சிக்கிரதா..? நன்றி.. சண்முவம்.

Anonymous said...

@கொன்டே புடுவேண்

உங்களுக்கு இங்கிட்டு நெறையவேளை இருக்கு...

எள்ளோரட பதிவுளயும் வந்து இப்பிடியே பிழை திறுத்திக் குடுத்தா நள்ளா இருக்கும்.

எணக்கும் இந்த மாதிர் பிழை திறுத்தம் செய்து குடுங்க...

தமிழினியன் said...

//எனக்கும் ப்ருப் பார்க்க ஆளில்லாமத்தான்.. ரொம்ப நாளா அலைஞ்சிட்டிருந்தேன். இப்ப நீ சிக்கிட்டே.. மவனே நெதம் வந்து ஒளுங்கு மருவாதையா பார்த்து கொடுக்கல.. கொண்டே..புடுவேன்.. கொண்டு.
//

:):):)

Selva said...

sankar, payapada aaramichitara? illa sombu adika aaramichitara?..

Kuppa padam, kuppa kadhai.

thayavu seithu ithaiyu padinga..

http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_2098.html

Jana said...

// த்ரில்லர் படம் என்கிற கேட்டகிரியில் படத்தை எடுத்திருந்தாலும், த்ரில்லாய் பெரிதும் ஏதும் இல்லாதது குறையே..//

:)

அருண் said...

// த்ரில்லர் படம் என்கிற கேட்டகிரியில் படத்தை எடுத்திருந்தாலும், த்ரில்லாய் பெரிதும் ஏதும் இல்லாதது குறையே..//
அதான் த்ரில்லா ஏதும் இல்லன்னு சொல்லிட்டிங்களே,அப்புறம் என்ன திரில்லர் கேட்டகிரி.

vasan said...

'த‌ம்' உள்ள‌ உங்க‌ளை மாதிரி ஆளுங்க‌ விம‌ர்ச‌ன‌ம்தான் ந‌ம்ப‌கத‌ன்மை உள்ள‌தா இருக்கு.
சிக‌ப்பு ரோஜ‌வை ச‌ரியா இதோட‌ க‌ம்பேர் பண்ணிங்க‌ ப‌த்திங்க‌ளா, அது தான் கேபிள் க‌னெக்ச‌ன் என்ப‌து.

KathaiSolli said...

நானும் கௌதம் படம்னு நம்பி போனேன், சமீரா அந்த கேரக்டருக்கு ஒட்டவேயில்லை சமீராவுடன் படித்தாக சொல்லப்படும் எல்லோருக்கும் அவர் சூப்பர் சீனியர் மாதிரி தெரிகிறார், அந்த மீனாட்சி கேரக்டர் கொஞ்சம் மிகை படுத்தியது போல இருந்தாலும் கிளைமாக்ஸில் அது சரியாகத்தான் தெரிகிறது, அனேகமா சமந்தாவை வச்சு இரண்டாம் பாகம் டிரை பண்ணலாம்னு நினக்கிறேன்.. சரியா சார்..

# ”சிகப்பு ரோஜாக்களில் ஒரு அருமையான காதல் இருக்கும்.அது படத்தின் பல இடங்களை காப்பாற்றும். த்ரில்லர் படம் என்கிற கேட்டகிரியில் படத்தை எடுத்திருந்தாலும், த்ரில்லாய் பெரிதும் ஏதும் இல்லாதது குறையே..”

உண்மைதான் சார் வெகு ஜனங்களிடம் போய் சேருமான்னு கொஞ்சம் டவுட்டு இருக்கு. :-(

மதன்செந்தில் said...

http://www.narumugai.com/?p=26034 நாய்கள் விமர்சனம்

rajasundararajan said...

உங்களுடைய விமர்சனமும் இன்னொரு சினிமாத்தொழிற் புகைப்படக்காரருடைய விமர்சனமும் எப்படி இருக்கிறது என்றால், "வாந்திதான், ஆனா முந்திரிப் பருப்பு ரெம்பக் கிடக்குது!"

R.Gopi said...

சங்கர் ஜி...

பதிவை விட பின்னூட்டங்கள் களைகட்டிடுச்சு தல...

//வருண் said...
***..நான் சொன்னது எல்லாம் சரிதானே அய்யா? தவறென்றால் மன்னிக்க. ***

அதென்ன அய்யா???

ஐயா னுதானே சொல்லனும்?//

அய்யான்னு சொன்னா தான், தைலாபுரத்துல சீட்டு கீட்டு ஏதாவது கிடைக்குமோ என்னவோ!!

'பரிவை' சே.குமார் said...

Nalla Vimarsanam.

Dhatchana said...

waste film

jyothi said...

padam sariyana aruvai.menon cheated

thanjai gemini said...

காட்சிகளை விரிவாக பேசுகிறேன் என்று எல்லாக் காட்சிகளையும், உங்களுக்கு கிடைக்கக்கூடிய இனிய அதிர்ச்சிகளையும் எழுதி பாழ் செய்ய விருப்பமில்லை.


நீங்க உண்மையான சினிமாக்காரர் அண்ணே
நன்றி