சாப்பாட்டுக்கடை-விஸ்வநாதன் மெஸ்
கவிஞர் நா.முத்துகுமாரும் நானும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சாப்பாட்டின் சுவை பற்றி பேச்சு வந்தது. அசைவ உணவுகளை பற்றி பேச்சு வந்த போது, தலைவரே விஸ்வநாதன் மெஸ்ல சாப்ட்டிருக்கீங்களா? என்றார்.. இல்லை தலைவரே.. நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் இடம் தான் சரியாய் தெரிய மாட்டேன்குது என்றேன். வாங்க ஒரு நாள் நாம போவோம்.. என்று சொல்லிவிட்டு வழி சொன்னார்.
ராதாகிருஷ்ணன் சாலையின் கடைசியில் சிட்டி செண்டருக்கு திரும்புவோம் இல்லையா? அந்த ரோடில் திரும்பியவுடன், சிட்டி செண்டரை தாண்டி நடுவில் ஒரு பிரிட்ஜ் இருக்கும். அதன் பெயர் அம்பட்டன் வாராவதி.. அதாவது ஹாமில்டன் பிரிட்ஜ் என்ற பெயர்தான் மருவி அம்பட்டன் வாரவதியாயிற்று என்று ஒரு வரலாறு உண்டு.. அதை தாண்டியவுடன் இடது பக்கத்தில் ஒரு சிறு கடை உள்ளே மொத்தமாய் ஒரு பத்து பேர் சேர்ந்தார் போல உட்காரலாம் அவ்வளவுதான். ஆனால் உள்ளே நுழையும் போதே மணம் தூக்கி அடித்தது.
இவர்களது ஸ்பெஷாலிட்டி இறா தொக்கு, சிக்கன், மட்டன் சாப்ஸ், மற்றும் வஞ்சிரம் மீன். கொஞ்சம் கூட வாடையே வராத நல்ல வஞ்சிரம் மீன்.. மசாலா தடவி, ப்ரை செய்து தருகிறார்கள். அவர்களுடய மட்டன், சிக்கன், மீன் குழம்பு வகையராக்கள் எல்லாமே அருமையாய் இருக்கிறது. என்ன மீன் குழம்பில் மட்டும் கொஞ்சம் புளிப்பு ஜாஸ்தி.. ஆனால் அதுவும் ஒரு சுவையாகத்தான் இருக்கிறது. ஒரு சாப்பாடும், மீனும் சாப்பிட்டால் நூத்திபத்துரூபாய் ஆகிவிடும்.. பட் வொர்த். ஒரே ஒரு குறை என்னவென்றால் அவ்வளவு சுகாதாரமாய் இல்லை. அது மட்டுமில்லாது நிறைய நேரம் காத்திருந்தது சாப்பிடவேண்டியிருக்கும். கரண்டி கூட இல்லாமல் கையில் ஒரு சிறிய கப்பில் கிரேவிகளை எடுத்துக் கொண்டு அப்படியே ஊற்றுவது போன்ற இடங்களில் சாப்பிட்டு பழகாதவர்கள் பேசாமல் ஒரு பார்சல் வாங்கிக் கொண்டு போவது உசிதம். ஆனால் சாப்பிட்டே தீர வேண்டிய கடைகளில் இதுவும் ஒன்று.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
உடனடியாக சென்றுவிடவேண்டும்.
கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை
கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை
though i would love to eat outside.
இப்படித்தான் விஸ்வா..:)//
அப்ப உங்க படம் கூட மணிரத்னம் எபக்ட்டுல இருக்குமா? அய்யகோ!
Right.
//ரண்டி கூட இல்லாமல் கையில் ஒரு சிறிய கப்பில் கிரேவிகளை எடுத்துக் கொண்டு அப்படியே ஊற்றுவது//
உவ்வ்வ்வே...... கஷ்டமடா சாமீ