Thottal Thodarum

Feb 23, 2011

சாப்பாட்டுக்கடை-விஸ்வநாதன் மெஸ்

கவிஞர் நா.முத்துகுமாரும் நானும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சாப்பாட்டின் சுவை பற்றி பேச்சு வந்தது. அசைவ உணவுகளை பற்றி பேச்சு வந்த போது, தலைவரே விஸ்வநாதன் மெஸ்ல சாப்ட்டிருக்கீங்களா? என்றார்.. இல்லை தலைவரே.. நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் இடம் தான் சரியாய் தெரிய மாட்டேன்குது என்றேன். வாங்க ஒரு நாள் நாம போவோம்.. என்று சொல்லிவிட்டு வழி சொன்னார்.

Photo0164 ராதாகிருஷ்ணன் சாலையின் கடைசியில் சிட்டி செண்டருக்கு திரும்புவோம் இல்லையா? அந்த ரோடில் திரும்பியவுடன், சிட்டி செண்டரை தாண்டி நடுவில் ஒரு பிரிட்ஜ் இருக்கும். அதன் பெயர் அம்பட்டன் வாராவதி.. அதாவது ஹாமில்டன் பிரிட்ஜ் என்ற பெயர்தான் மருவி அம்பட்டன் வாரவதியாயிற்று என்று ஒரு வரலாறு உண்டு.. அதை தாண்டியவுடன் இடது பக்கத்தில் ஒரு சிறு கடை உள்ளே மொத்தமாய் ஒரு பத்து பேர் சேர்ந்தார் போல உட்காரலாம் அவ்வளவுதான். ஆனால் உள்ளே நுழையும் போதே மணம் தூக்கி அடித்தது.
Photo0165 இவர்களது ஸ்பெஷாலிட்டி இறா தொக்கு, சிக்கன், மட்டன் சாப்ஸ், மற்றும் வஞ்சிரம் மீன். கொஞ்சம் கூட வாடையே வராத நல்ல வஞ்சிரம் மீன்.. மசாலா தடவி, ப்ரை செய்து தருகிறார்கள்.  அவர்களுடய மட்டன், சிக்கன், மீன் குழம்பு வகையராக்கள் எல்லாமே அருமையாய் இருக்கிறது. என்ன மீன் குழம்பில் மட்டும் கொஞ்சம் புளிப்பு ஜாஸ்தி.. ஆனால் அதுவும் ஒரு சுவையாகத்தான் இருக்கிறது.  ஒரு சாப்பாடும், மீனும் சாப்பிட்டால் நூத்திபத்துரூபாய் ஆகிவிடும்.. பட் வொர்த். ஒரே ஒரு குறை என்னவென்றால் அவ்வளவு சுகாதாரமாய் இல்லை. அது மட்டுமில்லாது நிறைய நேரம் காத்திருந்தது சாப்பிடவேண்டியிருக்கும். கரண்டி கூட இல்லாமல் கையில் ஒரு சிறிய கப்பில் கிரேவிகளை எடுத்துக் கொண்டு அப்படியே ஊற்றுவது போன்ற இடங்களில் சாப்பிட்டு பழகாதவர்கள் பேசாமல் ஒரு பார்சல் வாங்கிக் கொண்டு போவது உசிதம். ஆனால் சாப்பிட்டே தீர வேண்டிய கடைகளில் இதுவும் ஒன்று.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

21 comments:

மரா said...

மீ த பர்ஸ்ட்டேய்...

மரா said...

மீ த செகண்டேய்....

மரா said...

மீ த தேர்டேய் :)

மரா said...

தர்மபுரில நாங்க சாப்டோம் ‘வள்ளி மெஸ்’ .அருமையான சாப்பாடு.இன்னும் நிறைய நல்ல மெஸ்கள் இருக்கு தர்மபுரில.முடிஞ்சா அங்க போய் சாப்பிட்டு வந்து எழுதவும் :)

க ரா said...

madurai amma mess la poi saptitu vangana oru thadava :)

Cable சங்கர் said...

மாரா.. வள்ளிதான் அடுத்த சாப்பாட்டுக்கடை. பார்சலைவிட நேரில் அட்டகாசம்.

Cable சங்கர் said...

சாப்டாச்சு ராமசாமி.. அதெல்லாம் பழசு.. அப்ப போட்டோவெல்லாம் எடுக்காத காலம்.:))

மதுரை சரவணன் said...

அட்ரஸ் தந்து உதவியமைக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

யுவா said...

பெங்களூர் வரும் போது சொல்லுங்கள் , இங்கேயிருந்து சிலவற்றை அறிமுகம் செய்யலாம்.

King Viswa said...

என்ன கொடுமை, நம்ம பேர்ல மெஸ்'சா? விடக்கூடாது.

உடனடியாக சென்றுவிடவேண்டும்.

கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

King Viswa said...

அது எப்படிங்க எல்லா பதிவையும் ராத்திரி ஒரு மணிக்கு மேலையே போடுறீங்க?


கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

Cable சங்கர் said...

இப்படித்தான் விஸ்வா..:)

moe said...

Shankar, not sure, if these places use MSG(aginomotto) to enhance the taste. After knowing about potential issues with MSG in food, it's little riskier to eat outside in india, where there's no regulation to say the ingredients in the food.
though i would love to eat outside.

ரகோத்மன் said...

right..try pannidalam. why dont you start a "cable mess"? engaluku nalla sappadu kidaikume :) :)

Anonymous said...

// சங்கர் நாராயண் @ Cable Sankar saidsaid...//

இப்படித்தான் விஸ்வா..:)//

அப்ப உங்க படம் கூட மணிரத்னம் எபக்ட்டுல இருக்குமா? அய்யகோ!

பிரதீபா said...

Incase u visit Gobichettipalayam, visit Amman Mess just near the Gobi Arch. Awesome kongu area food. I miss our food very much here.. Me cooking - my man thupping. Paavam:)

Jana said...

mmmmmm....
Right.

Aruna said...

விஸ்வனாதன் மெஸ் சாப்பாட்டை பொறுத்தவரை டேஸ்ட் ஸூப்பரா இருக்கும். ஆனால், ஏகப்பட்ட எண்ணெய். இரண்டு நாள் தொடர்ந்து சாப்பிட்டா, வயிற்று வலி நிச்சயம்(சொந்த அனுபவம்). பிரச்சினை அவங்க உபயோகம் பண்ற தண்ணியா இல்லை எண்ணெயான்னு தெரியலை. சைட் டிஷ்ஷெல்லாம் அளவு ரொம்ப கம்மி ஆனால் விலையோ அதிகம். ரெகுலரா சாப்பிட்டு கொண்டிருந்த என்னை மாதிரி நிறைய பேர் அங்க சாப்பிடுவதை நிறுத்தியாச்சு.

Unknown said...

இந்த வாரம் மறுபடியும் போகலாம்

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

எச்சில் ஊறவைக்கும் பதிவு. :)

பாலா said...

ஏற்கனவே வயிறு முன்சீட்டை இடிக்கிறதா எல்லாரும் கம்ளெயெண்ட் பண்ணுறாங்களாம். இதுல இம்புட்டு சாப்பாடா?

//ரண்டி கூட இல்லாமல் கையில் ஒரு சிறிய கப்பில் கிரேவிகளை எடுத்துக் கொண்டு அப்படியே ஊற்றுவது//

உவ்வ்வ்வே...... கஷ்டமடா சாமீ