சாப்பாட்டுக்கடை- Renneth Kitchen
”ழ” பதிப்பக கே.ஆர்.பியும், விந்தைமனிதன் ராஜராமும் டிஸ்கவரி புக் பேலஸுக்கு வந்து அழைத்தார்கள். கடை மூடும் வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு, சாப்பிடக் கிளம்பலாமென்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு என்றவுடன் என்னை கேட்க, இந்த நேரத்தில் இங்கே பக்கத்தில் பாண்டியன் ஹோட்டல் தான் இருக்கும் என்று சொல்ல.. சரி என்று முடிவு செய்து அங்கே போன போது பக்கத்தில் புதிதாய் Renneth Kitchen என்று ஒரு புதிய கடை ஆரம்பித்திருந்தார்கள்.
சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று முடிவு செய்து ஆளுக்கொரு பரோட்டாவையும் ஒரு பெப்பர் செட்டிநாடு சிக்கனையும் ஆர்டர் செய்தோம். பெப்பர் சிக்கன் சரியான கலவையில் கலக்கியிருந்தார்கள். பரோட்டா கொஞ்சம் ஆறியிருந்தாலும் ஸாப்ட்டாக சுவையாய் இருந்தது. அடுத்ததாக ஆளுக்கொரு கல் தோசை ஆர்டர் செய்ய, கல் தோசை அவ்வளவு சாப்ட், அதற்கு அருமையாய் ஒரு கிரேவியும், இரண்டு சட்டினிகளும் தருகிறார்கள்.
மிகவும் குட்டியான கடையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த கடையின் ஓனர் ஒரு பெண். டேஸ்ட் பற்றி பாராட்டிக் பேசிக் கொண்டிருந்த போது அவரது கணவர் வந்தார். தான் ஒரு Foodiee என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இன்ஷூரன்ஸ் துறையில் வேலை செய்வதாகவும். தங்களின் ஆதர்சமாய் இந்த உணவு விடுதி என்றார். ஒரு மாஸ்டரை அறிமுகப்படுத்தினார். அவர் பெரியமேட்டில் பிரபல பிரியாணிக் கடை பாய் என்றார்கள். அவரின் பிரியாணி அடுத்த சில நாட்களில் இங்கேயே கிடைக்குமெனவும், தங்களுடய ஸ்பெஷாலிட்டி, க்ரில், மற்றும் தந்தூரி என்று சொன்னார். சாப்பிட்டு பார்க்க வேண்டும். இத்தனைக்கும் விலை ஒன்றும் அதிகமில்லை. நாங்கள் சப்பிட்டதற்கு வெறும்166 ரூபாய்தான் ஆனது.
இவர்களது இன்னொரு ஸ்பெஷாலிட்டி, அருமையான புல்கா, நான், மற்றும் சைட் டிஷ்கள். அதிலும் ஒரு முழு ப்ளேட் சைட் டிஷ்ஷாய் வாங்காமல் அரை ப்ளேட் கூட வாங்கிக் கொள்ளலாம்.
இவர்களது இன்னொரு ஸ்பெஷாலிட்டி, அருமையான புல்கா, நான், மற்றும் சைட் டிஷ்கள். அதிலும் ஒரு முழு ப்ளேட் சைட் டிஷ்ஷாய் வாங்காமல் அரை ப்ளேட் கூட வாங்கிக் கொள்ளலாம்.
Renneth Kitchen
No.92/A1, Rajamannar salai,
west K.K.nagar, chennai –78
Ph: 044-65660027
cell: 89395 92436
No.92/A1, Rajamannar salai,
west K.K.nagar, chennai –78
Ph: 044-65660027
cell: 89395 92436
Comments
இந்த K.K நகரில் ஆப்ப கடை ரொம்ப பிரபலமாம், அது என்னன்னு கண்டுபிடிங்க.
அர்த்தம் மாறுவது போல தெரிகிறது... நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது கடையா...? கடை ஓனரா...?
இருக்கு பாஸ்
நாங்க ஈரோட்டுல இருந்து அத்தனை தொலைவு வந்து சாப்பிட முடியாது..
ஹாஹ்ஹா...
போட்டோவுல உள்ள ரெண்டு பேரும் மாவாட்டின போட்டோ எங்க?//
********
ஹா...ஹா...ஹா...
யோவ் ரமேசு... நீயி நெசமாவே “நெம்ப நல்லவன்”யா....
இந்த ரமேஷை நம்பாதீங்க கோபி.. இவரு ப்ரெண்டு வடிவேலன்னு ஒருத்தர கே.எப்.சியில சிக்கன் தோல் உரிக்க விட்டுட்டு வந்திட்டாரு..:)) பஸ்சுல அழுவுறாரு அவரு.. //
annae athu venkat hehe
வாங்கிட்டாப் போச்சு..
@நட்ராஜ்
நிச்சயம் நட்ராஜ்
ந்ன்றி
@கே.ஆர்.பி.
ஆமாம்
@மதுரை சரவணன்
நன்றி
2பார்வையாளன்
அப்படியா நன்றி..:)
நிச்சயமா
@காவேரி கணேஷ்
எது பக்கதில இருக்கு காவேரி கணேஷ்
@பிலாசபி..பிரபாகரன்.
நல்லா படிச்சி பாக்கணும்..:))
@சிவகுமார்
என்னை பார்க் ஷெராட்டன் கூட்டிப்போக ஆசைப்படும் தம்பி சிவகுமாருக்கு நன்றிகள் பல.
அதுசரி
@சே.குமார்
நன்றி
@பிரதீபா
கவலைப்படாதீங்க.. அடுத்தமுறை சென்னை வரும்போதுசொல்லுங்க சேர்ந்து போய் சாப்பிடுவோம்..
@ஸ்ரீனி
நான் ஈரோட்டுக்கு வந்து சாப்ட்டிருக்கேனே..