Thottal Thodarum

Mar 7, 2011

கொத்து பரோட்டா-07/03/11

Best Of Tamil Cinema 1931-2010
ஒரு நாள் யூடிவி தனஞ்செயன் சாரிடமிருந்து மெயில். உங்களுடய சினிமா வியாபாரம் படித்தேன்.மிக அருமையான புத்தகம். தமிழிலேயே இவ்வள்வு டீடெய்லான புத்தகம் வந்ததில்லை, இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வந்தால் நிச்சயம் உலக அளவில் முக்கியத்துவம் பெறும் புத்தகமாய் அமைந்துவிடும். ஏனென்றால் உலகம் முழுவதும் தமிழ் சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைப் பற்றிய தகவலக்ள் தமிழில் இருக்கிறதே தவிர, ஆங்கிலத்தில் இல்லை.  தாய் மொழியில் இருப்பது சிறப்பென்றாலும் உலக அரங்கில் நம் தமிழ் சினிமா உலகை நிலைநிறுத்த ஆங்கிலத்தில் இருப்பது மிகவும் தேவையான ஒன்று,  வெளிநாடுகளில் வாழும் தமிழ் படிக்கத் தெரியாத தமிழர்கள், வெளிநாட்டுக்காரர்களுக்கு இது மிகவும் பயன்படும் என்று சொல்லியிருந்தார். அதை அவர் தன்னுடய The Best Of Tamil Cinema-1931-2010 என்கிற இரண்டு வால்யூம் புத்தகத்தின் மூலமாய் நிறைவேற்றியும் விட்டார். நிச்சயமாய் இது ஒரு சாதனை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படத்தைத்தையும் முழுவதுமாய் பல முறை பார்த்து, படத்தின் கதை சுருக்கம், அதன் பின்னணி என்று அலசி ஆராய்ந்திருக்கிறார். இவ்விழாவை தொகுத்து வழங்க ஒரு சின்ன ஏவி விடியோவை தயாரித்திருந்தார்கள். மிக அற்புதமான தொகுப்பு அது. புத்தகத்தை திரு.கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்தினார்.  தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்புத்தகமும் இடம் பெறும் என்பதில் சந்தேகமேயில்லை. விரைவில் தமிழிலும் இப்புத்தகம் வெளிவர இருக்கிறது. வாழ்த்துக்கள் சார்.
################################## 

திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிந்து விட்டது என்று தலைமை அறிவித்ததும், கட்சிகாரர்கள் முதல் அனுதாபிகள் வரை சந்தோஷத்திலிருக்கிறார்கள். தங்களுக்கென்று தனி அடையாளம் இல்லாமல் இத்தனை நாள் மாநில கட்சிகளின் முதுகில் சவாரி செய்து கொண்டிருந்த ஒரு அகில இந்திய கட்சிக்கான முடிவு இதுவாகத்தான் இருக்கும். தங்களைப் பற்றி பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பதை விட தனியாய் நின்று தங்கள் கட்சியின் நிலையை புரிந்து கொள்ள காங்கிரஸுக்கு இதுதான் சரியான தருணம். பிகாரில் தனியாய் நின்று தெரிந்து கொண்டது போல், இதுவும் ஒரு சந்தர்ப்பம். எப்போதும் ஆளுங்கட்சியாகவோ, அல்லது ஆதரவுக் கட்சியாகவோ இருந்துவிட்டதால், ஒரு சிறந்த எதிர்கட்சியாய் ஆட்டம் ஆட பழகவில்லை. ஆட்டம் பழக வரும் ஐந்து ஆண்டுகள் காங்கிரஸுக்கு வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்தி ராகுல் காந்தி கட்சியை பலப்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம். அப்புறமொரு சந்தோஷ சமாச்சாரம். நம் அண்ணன் பதிவர் அப்துல்லா திமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், வழக்கமாய் ஜாதி அடிப்படையில் சீட் கணக்கில்லாமல், ஆள் பார்த்து கொடுத்தீர்களானால் நிச்சயம் ஒரு எம்.எல்.ஏ உண்டு உங்களுக்கு. அண்ணனுக்கு சீட் கிடைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள். பதிவுலகிலிருந்து ஒரு எம்.எல்.ஏ
############################
எனக்கென்னவோ…. காங்கிரஸ் கூட்டணியில்லாமல் திமுக நின்றால் திமுகவிற்கென்றிருக்கும் ஓட்டு வங்கி இன்னும் கொஞ்சம் ஏறும் என்று தோன்றுகிறது. அதே போல் அதிமுக, தேமுதிக சேர்ந்ததால் தேமுதிகாவுக்கு இருந்த நடுநிலை ஓட்டு வங்கியில் கொஞ்சம் டெண்ட் விழும் என்றும் தோன்றுகிறது.காங்கிரஸ் இல்லா திமுகவுக்கு ப்ளஸ் பாயிண்ட் அதிகம்  என பட்சி சொல்கிறது.பார்ப்போம்
##############################
சமீபத்தில் ஒரு பதிவை எனக்கு லிங்க் அனுப்பியிருந்தார் நண்பர் எல்.கே. பார்த்த போது அதிர்ந்து போய்விட்டேன். என்னுடய கேபிளின் கதை தொடரை, அப்படியே காப்பி பேஸ்ட் செய்து டைட்டிலை மட்டும் கேபிள் டிவி வளர்ந்த கதை என்று மாற்றி தன் பதிவாகப் போட்டிருந்தார். அதை பார்த்துவிட்டு அவருக்கு மெயில் அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் எடுத்தும் விட்டார். அப்போதுதான் பார்த்தேன் அவர் ஒரு நாளைக்கு இருபது பதிவெல்லாம் போடுகிறார் என்று. அவ்வளவு பதிவு போடணுமின்னா எழுதினா முடியுமா? எதுக்கும் அவ்ரு சைட்டுல போய் உங்களது ஏதாவது இருக்கான்னு பார்த்துட்டு ஒரு மெயில் போட்டுருங்க..
####################################
பதிவுலகில் சமீபகாலமாய் ஒரு வியாதி. எதையும் முழுதாய் படிக்காமல் உடனடி ஹிட்ஸுக்காக அரைவேக்காடுத்தனமாய் பதிவிடுவது. சினிமா வியாபாரம் தொடரில் தமிழின் முத்ல் டால்பி டிஜிட்டல் படத்தை எடுக்க முனைந்தவர்களில் கமல் , அபிராமி ராமநாதன், தேவி, மற்றும் ஏவிஎம் இராஜேஸ்வரி திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்கிருக்கிறது என்று  எழுதியிருந்தேன். அதற்கு தமிழின் முதல் டி.டி.எஸ் படம் குருதிபுனல் என்று தவறான தகவல் அளித்துவிட்டேன் என்று பதிவிட்டிருக்கிறார். டி.டி.எஸ்ஸுக்கும், டால்பி டிஜிட்டலுக்கும் வித்யாசம் தெரியாதவர்கள் எல்லாம் அதை பத்தி பதிவிட்டு, ஹிட்டடித்து என்னத்தை பு.. போகிறார்கள்? என்றே தெரியவில்லை.
#####################################
சென்னை மால்களில் சிட்டி செண்டரில் மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் வாங்கியதை ஜாஸ்தி என்றதை, பிவிஆர், ஈஏ போன்ற மால்கள் வந்த பிறகு சிட்டி செண்டர் பரவாயில்லை என்று சொல்லும்படி வைத்துவிட்டார்கள். மற்றவர்கள். ஈஏவைப் பார்த்து பிவிஆரும் மணிக்கு இருபது ரூபாய் வார நாட்களிலும், முப்பது ரூபாய் வாரயிறுதியிலும் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் ஈஏவில் ஒரு போர்ட் வைத்தார்கள் அதாவது பார்கிங்குக்கு ஹாப்பி அவர் என்று. காலை பத்து மணியிலிருந்து  பன்னிரெண்டு மணி வரை பார்க்கிங் செய்தால் பாதி பணம் தான் என்று. அதுவும் ஒரு கண் துடைப்புக்குத்தான். இம்மாதிரியான மால்களில் கூட்டமே காலைக் காட்சியான 12 மணிக் காட்சியிலிருந்த்துதான் ஆரம்பிக்கும் அப்படியிருக்க.. யாரை ஏமாற்ற இந்த கட்டணக்  குறைப்பு?

####################################
குறும்படம்
The Actor  என்கிற இந்த ஹிந்தி குறும்படம் சுவாரஸ்யமான களத்தை கொண்டது. நடிகன் ஆவதற்கு சின்ன வயதிலேர்ந்தே ஆசைப்பட்டவன். அதற்கான பணத்தை தேற்றுவதற்காக அண்டர்வேர்ல்ட் கேங்கில் சேருகிறான். அதிலும் திருட்டு டிவிடி எடுத்து கராச்சிக்கு அனுப்பும் கும்பலில். மிக சுலபமாய் பெரிய அளவில் முன்னுக்கு வருகிறான். எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், அவனுடய நடிப்பு ஆசை மட்டும் தீரவேயில்லை. அவனின் போர்ட் போலியோ வீடியோ எடுத்து கராச்சிக்கு அனுப்பும் புதுப்பட டிவிடிக்கு பதிலாய் இந்த டிவிடியை அனுப்பி வைக்கிறான். இதை கண்டு கராச்சி மேலிடத்து தாதா அவனது நண்பர்களை வைத்து அவனை கொல்ல பணிக்கிறான். கொன்றார்களா? இல்லையா? என்பதுதான் கதை. கதைக் களன் கொஞ்சம் காமெடியாய் இருந்தாலும் மிக சீரியஸாய் முனைந்திருக்கிறார்கள். சுமார் நாற்பது லொக்கேஷன்களில் படம்பிடித்திருக்கிறார்கள். நல்ல மேக்கிங்க். ராம் கோபால் வர்மாவின் தாக்கம் அதிகம். வாழ்த்துக்கள் தாமஸ் ஜேகப்.

####################################
ப்ளாஷ்பேக்
எவர்க்ரீன்
காட்சியென்றால் இதுதான். எத்தனை முறை பார்த்தாலும், எந்தத் தலைமுறையினர் பார்த்தாலும் நச்சென மனதில் பதியும் நடிப்பு. வாழ்க சிவாஜி.

###############################
தத்துவம்
வாழ்வில் நல்ல நாள், கெட்ட நாள் என்று ஏதும் தனியாய் கிடையாது. எல்லாம் நம் மனதில் தானிருக்கிறது. ஒரே விதிதான் நீ அந்நாளை ஆள்கிறாயா? அல்லது அந்த நாள் உன்னை ஆள்கிறதா என்பது மட்டும் தான்.

வாழ்வது,  காதல் கொள்வது, சிரிப்பது, ஜெயிப்பது, தோற்பது எல்லாமே சாதாரண விஷயம்தான் இருப்பதிலேயே கஷ்டமான விஷயம் சாதாரணமாய் இருப்பதுதான்.
###################################
அடல்ட் கார்னர்
வீட்டுக்காரி : ஏங்க என் பேண்டீசை காணம்?
கணவர் : வேலைக்காரி எடுத்திருப்பாளோ?
வேலைக்காரி: அலோ.. தெனம் பாக்குறீங்க இல்ல எசமான். நான் அந்த கருமத்தை போட்டு பாத்திருக்கீங்களா?
###############################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

26 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! கொத்து பரோட்டா சூப்பர். சிக்கன் மட்டன், முட்டை எல்லாம் போட்டு ஒரு சூப்பர் கொத்தை கொடுத்திருக்கிங்க...

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

க ரா said...

கொத்து டேஸ்டா இருக்குண்னா...

sugi said...

Hi Sankar,
I like ur adult corner:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சமீபத்தில் ஒரு பதிவை எனக்கு லிங்க் அனுப்பியிருந்தார் நண்பர் எல்.கே. பார்த்த போது அதிர்ந்து போய்விட்டேன். என்னுடய கேபிளின் கதை தொடரை, அப்படியே காப்பி பேஸ்ட் செய்து டைட்டிலை மட்டும் கேபிள் டிவி வளர்ந்த கதை என்று மாற்றி தன் பதிவாகப் போட்டிருந்தார். அதை பார்த்துவிட்டு அவருக்கு மெயில் அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் எடுத்தும் விட்டார். அப்போதுதான் பார்த்தேன் அவர் ஒரு நாளைக்கு இருபது பதிவெல்லாம் போடுகிறார் என்று. அவ்வளவு பதிவு போடணுமின்னா எழுதினா முடியுமா? எதுக்கும் அவ்ரு சைட்டுல போய் உங்களது ஏதாவது இருக்கான்னு பார்த்துட்டு ஒரு மெயில் போட்டுருங்க..//

லிங்க் கொடுக்காமா போய் பாருன்னா என்ன பண்றது?

ம.தி.சுதா said...

////ஒரு நாளைக்கு இருபது பதிவெல்லாம் போடுகிறார் ////

இது பலருக்கு தொற்றியுள்ள வியாதி..... எனது பதிவுகளுக்கும் இதே நிலமை தான் எழுதி 2 மணித்தியாலத்தில எடுத்து ஒருத்தர் போடுறார்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

ம.தி.சுதா said...

அதில் அதிகம் திருடுவோர் உள்ள லிங் இது தான் வடிவாகப் பாருங்கள் உங்களது பதிவுகளும் இருக்கலாம்...

http://enayamtahir.blogspot.com/


http://biz-manju.blogspot.com/

Unknown said...

தத்துவம் நச்.

ஆயிரம் பேர் படிக்கிற உங்க பதிவை காப்பி பேஸ்ட்னா.....

Unknown said...

http://enayamtahir.blogspot.com/2011/03/blog-post_05.html

http://enayamtahir.blogspot.com/2011/03/25.html

இவையெல்லாம் கூட உங்கள் பதிவுகளே...

ம.தி.சுதா said...

ஹ..ஹ..ஹ.. கேபிள் ஜீ மன்னிச்சுக்கோங்கோ நான் யாரையும் வேணுமுன்னே காட்டிக் கொடுக்கல... என் அனுபவத்தைத் தான் பகிர்ந்தேன்...

எடுக்கிறது களவ அதில தலைப்புகள்ல பெரிய பில்டப் வேற.. அதில ரெண்டாம் அவர் போட்டிருப்பார் எனது பதிவுகளை படித்த விட்டு கருத்திடாமல் போவதற்கு நன்றியாம்...

அவருகிட்ட கேட்கணும் நீ களவெடுத்த இடத்தில கருத்திட்டு விட்டுத் தான் எடுத்து வந்தியா என...

எல் கே said...

@சுதா

அவரே அவரே.

ம.தி.சுதா said...

@ எல் கே said...

ஹ..ஹ..ஹ.. நீங்களும் பார்த்துகிட்டா இருக்கிங்க... நன்றி நன்றி...

நான் அவரை தொடர்பு கொண்டு கேட்டேன்.. எனது திருடப்பட்ட தொடுப்புகளை தரட்டாமாம்.. நீக்குகிறேனாம்...

பதிவுலகம் எப்படி மாறிட்டுது பாத்திங்களா ?

அருண் said...

ரொம்ப நல்லா இருக்கு,அந்த வலைப்பக்கத்துல உங்க பதிவுகள் தான் அதிகமா இருக்கும் போல.
-அருண்-

CS. Mohan Kumar said...

//லிங்க் கொடுக்காமா போய் பாருன்னா என்ன பண்றது?//

Yes.

shortfilmindia.com said...

mohan குமார்ணே.. லிங்க் பின்னூட்டங்கள்ல இருக்கு பாருங்க.. நம்ம மக்கள்கிட்டேயிருந்து வரணும்னுதான் லிங்க் கொடுக்காம விட்டேன். போய் பாருங்க உங்களுது கூட இருந்தா இருக்கும்.

moe said...

Mr. Abdullah is contesting with the secular party, which doesnt look at the caste or religion. So he will get the seat in virali malai.

குசும்பன் said...

//அண்ணனுக்கு சீட் கிடைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள். பதிவுலகிலிருந்து ஒரு எம்.எல்.ஏ//

அண்ணனுக்கு சீட் கிடைத்து வெறிப்பெற வாழ்த்துகிறேன். மத்த கட்சியில் எல்லாம் இளைஞர் ஆதிக்கம் அதிகமாய் இருக்க திமுகவில் மட்டும் தான் எல்லாரும் ஓல்டா இருக்காங்க...இந்த முறை கொஞ்சம் இளைஞர்களுக்கும் சான்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Ashok D said...

தத்துவம் :)

அரசியல் கூட்டு பார்வை..:) நேக்கும் பட்சி அப்டிதான் சொல்றது...
இருந்தாலும் பட்டர்பளை சூர்யா பதிவுக்கு வைட்டீங்

Nat Sriram said...

அண்ணன் அவரோட/நம்மோட சொந்த ஊரு புதுகைல நிக்கலையா?

A ஜோக் விசுவலாக நினைத்துப்பார்த்தால் செம காமெடி.

dts டால்பி நானும் கவனித்தேன். ரெண்டும் அடிப்படையில் வெவ்வேறு ஆடியோ இஞ்சினியரிங் கம்பெனிகளின் ப்ராடக்டுகள்.

Ashok D said...

அப்புறம் மறந்துட்டேன்.. அண்ணண் அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள் :)

(டாஸ்மாக்ல நல்ல சரக்கு கிடைக்குனுன்னு கோரிக்கை வைச்சிடலாம். அப்படியே ப்ரைவடிஸ் பண்ணிடலாம்)

Ravikumar Tirupur said...

மறுபடியும் பேச்சுவார்த்தை நடாத்தி திமுக காங் சேர்ந்துரும். ஏன்னா ஆதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு நல்லாவே இருக்கு. விஜயகாந்த் 20 எம்.எல்.ஏ க்களேட சட்டசபைக்குள்ள நுழைய போறார்.

Thirumalai Kandasami said...
This comment has been removed by the author.
Thirumalai Kandasami said...

Check this blog too..Simple -- Cut,copy and paste,

http://azifair-sirkali.blogspot.com

Unknown said...

தம்பியண்ணனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் - சீட் கிடைக்கவும், வெற்றிபெறவும். ஒரு வாரம் விராலிமலையில் டேரா போடலாம்னு பிளான் பண்ணியிருக்கேன் :)

கட்டபொம்மன் வசனம் - கேட்க கேட்க உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும். சின்ன வயதில் மனப்பாடம் பண்ணி பக்கத்து கடைத் தாத்தாகிட்டே ஒப்பிச்சு, மிட்டாய் வாங்கி திண்ண ஞாபகம் வருது...

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே பெரியாளாயிட்டிங்க பாருங்க. ப்ளாக்குக்கே ப்ராஞ்ச் வைச்சுருக்க ஒரே ஆளு நீங்களாத்தான் இருப்பிங்க.


http://enayamtahir.blogspot.com

90% உங்க பதிவுகள் தான் இருக்கு.

Rishoban said...

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்
தமிழ்ல இதுவரைக்கும்,
Dolby Digital EX or DTS-ES 6.1 Audio வில் படங்கள் வந்தது உண்டா?

ராஜரத்தினம் said...

Hi
After reading your kothu barota I think you are either DMK supporter or feel good about DMK . Sorry I never support a blog which supports DMK. I don't want spend a penny to DMK supporter by reading or watching your blogs. Sorry bye.