பகுதி12
அந்த பெரிய படம் என்ன என்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்த விரும்புகிறேன். தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படம் கமலின் “குருதிப்புனல்” தான் என்பதில் ஐயமே வேண்டாம். டால்பி டிஜிட்டலுக்கும், டி.டி.எஸ்சுக்கும் வித்யாசம் தெரியாத அறிவிலிகளுக்கும், முட்டாள்தனமான மூர்கர்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாலும் தகவல் பிழை என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு தகவலில் பிழை சொல்ல வேண்டுமென்றால் அதைப் பற்றி அடிப்படை அறிவாவது வேண்டும். சரி விடுங்கள் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்.
அந்த பெரிய படம் என்ன என்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்த விரும்புகிறேன். தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படம் கமலின் “குருதிப்புனல்” தான் என்பதில் ஐயமே வேண்டாம். டால்பி டிஜிட்டலுக்கும், டி.டி.எஸ்சுக்கும் வித்யாசம் தெரியாத அறிவிலிகளுக்கும், முட்டாள்தனமான மூர்கர்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாலும் தகவல் பிழை என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு தகவலில் பிழை சொல்ல வேண்டுமென்றால் அதைப் பற்றி அடிப்படை அறிவாவது வேண்டும். சரி விடுங்கள் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்.
தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படத்திற்கு காரணமான கமல், அபிராமி ராமநாதன், ஏவிஎம் இராஜேஸ்வரி, தேவி தியேட்டர் உரிமையாளர்கள் தான் காரணம் என்பதை வரலாறு சொல்லும். அதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் அதே நேரத்தில் இன்னொரு கம்பெனி தன்னுடய புதிய டெக்னாலஜியுடன் களமிறங்கியது. அதுதான் டி.டி.எஸ். டால்பிக்கு போட்டித் தயாரிப்பு. திரைப்படக் கல்லூரி மாணவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஆபாவாணன் தான் தமிழ் திரையுலகத்திற்கு டி.டி.எஸ் ஐ அறிமுகப்படுத்தியற்கு காரணமானவர். இவரது கருப்பு ரோஜா என்கிற படம் தான் தமிழின் முதல் டி.டி.எஸ்.படம்.
குருதிப்புனல் வந்த போது கமல் மற்றும் ஒரிரு தியேட்டர் அதிபர்கள் இணைந்து அந்த தொழில் நுட்பத்தை தங்களது தியேட்டர்களில் அளித்தது போல, டி.டி.எஸ் தொழில் நுட்பத்தை தியேட்டர் அதிபர்களுடன இணைந்து உடனடியாய் ஆபாவாணனால் கொண்டு வர முடியவில்லை. அப்படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடி செய்வதற்கே பெரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு நேரமில்லை என்றே சொல்ல வேண்டும்.
அதே போல குருதிப்புனலுக்கு மூன்று தியேட்டர்கள் இருந்ததைப் போல அப்படத்திற்கு டி.டி.எஸ் நிர்மாணிக்கப்பட்ட தியேட்டர்களும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தப் படம் ரிலீசான போது ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் டி.டி.எஸ் இருந்தாய் ஞாபகம். சரியாகத் தெரியவில்லை. அதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தன்யனாவேன்.
டால்பி டிஜிட்டல், டி.டி.எஸ் இரண்டுமே இதுவரை வழக்கிலிருந்து அனலாக் எனப்படும் இடது, வலது பக்க ஒலியமைப்பை கொடுக்கும் டெக்னாலஜியிலிருந்து வலது, இடது, நடு, வலது நடு, இடது நடு, பின்பக்கம் என்கிற ஆறு சேனல் ஒலியமைப்பை 5.1 என்கிற பெயரில் ஒலியை பிரித்து கொடுக்கும் காரியத்தைத்தான் செய்தது என்றாலும், அதை வெளிக் கொணரும் முறையில்தான் இரு கம்பெனி டெக்னாலஜியில் உள்ள வித்யாசம். முதலில் இவைகளுக்குண்டான டெக்னாலஜியை பார்ப்போம்.
டால்பி லெபாரட்டரி என்கிற கம்பெனியின் ஆடியோ கம்ப்ரெஷன் டெக்னாலஜிதான் இந்த டால்பி ஸ்டிரீயோ என்கிற டால்பி டிஜிட்டல். இந்த டெக்னாலஜியின் முக்கியமான விஷயமே 35 எம்.எம் பிலிமோடு, டிஜிட்டல் சவுண்டை கொடுத்ததுதான். இதற்கு முன்னால் பிலிமில் வெறும் அனலாக் எனப்படும் வலது, இடது என்கிற நார்மல் மோடில் வந்து கொண்டிருந்த ஒலியமைப்பு, மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.
1992 ஆம் ஆண்டு வெளியான பாட்மேன் ரிட்டர்ன்ஸ் என்கிற படம் தான் முதன்முதலில் டால்பி டிஜிட்டலில் வெளியான படம். படத்தில் ஒலிகுறியீடுகளை, வீடியோ டேட்டாக்களாய் மாற்றப்பட்டு, பிலிம் ரோலில் உள்ள காதுகளுக்கு இடையே ப்ரிண்ட் செய்யப்பட்டது. சரி ஒலியை படச்சுருளுக்குள் ஏற்றியாகிவிட்டது எப்படி அது ஆறு சேனல்களாகப் பிரிந்து ஒலியைத் தரும்? அதற்கு ஒரு கருவியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதன் பெயர் பெண்ட் ஹவுஸ் என்பதாகும். அந்தப் படச்சுருள் ஓடும் ப்ரொஜெக்டரில் பெண்ட் ஹவுஸ் எனப்படும் அந்தக் கருவியை இணைத்துவிட்டால், பிலிமினுள் உள்ள வீடியோ டேட்டாவை, படித்து, 5.1 ஒலியாய் மாற்றித் தருகிறது. இதே இடத்தில் டால்பி ஸ்டிரீயோவுக்கான ட்ராக்குகளும் இருக்கும். அது எதற்கென்றால், தொடர் ஓட்டத்தினால் பிலிம்களில் உள்ள ட்ராக்குகள் தேய்ந்து, இடர்பாடு ஏற்படும் நேரத்தில் இதிலுள்ள அனலாக் எனப்படும் இடது, வலது ட்ராக்குகளை எடுத்து அதை ஸ்டீரியோவாக மாற்றி அந்த ஒலியமைப்பில் உள்ள் இரைச்சல்களை குறைத்து டால்பி ஸ்டீரியோ எனப்படும் டால்பி எஸ்.ஆர். முறையில் ஒலிபரப்பப்படும்.
மேலுள்ள படத்தில் பிலிம்களின் காதுகளுக்கு நடுவில் சாம்பல் நிறத்திலிருக்கும் இடத்தில் டால்பியின் சின்னத்தோடு இருப்பதில் தான் டால்பி ஒலியமைப்பு குறியீடுகளைச் சேமித்திருப்பார்கள். இந்தப்படச்சுருள் ப்ரொஜெக்டருடன் இணைக்கப்பட்டுள்ள பெண்ட் ஹவுஸ் ரீடருடன் சேர்ந்து இதிலுள்ள வீடியோ கோடட் டேட்டாக்களை படித்து, அதை ஆறு சேனல் ஒலிஅமைப்பாய் மாற்றி தருகிறது. அமெரிக்காவின் பெரும்பான்மையான தியேட்டர்களில் இன்றும் டால்பி டிஜிட்டல்தான் கோலோச்சுகிறது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
44 comments:
Continuously reading,,interesting
interesting
Very informative...thanks
Cable,
Somebody in our tamil blog wrote a detailed article(series) about these sound track's.
anyone have that link plz
இங்கே டால்பி அவ்வளவு ஃபேமஸ் இல்லை! D.T.S. அல்லது THX தான் பல தியேட்டர்களில் இருக்கிறது! சோனி நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த தியேட்டர்களில் SDDS இருக்கிறது! எனக்குத் தெரிந்து டால்பி இன்னும் ஃபேமஸாக இருப்பது இங்கிலாந்தில்?
Shankar, I think more theaters had DTS when Karruppu Roja released. I watched it in Madurai Deepa/Roopa Complex which was the first theater in Madurai to introduce DTS followed by Maappillai Vinayagar back in early 90's.
Thanks for the technical informations.
Dolby Sound, Dts பற்றி ரொம்ப நாளாக தெரிந்துகொள்ள ஆவாலாயிருந்தேன். Dolby பற்றி எழுதியுருப்பது நல்லாயிருக்கு. DTS பற்றி இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என நம்புகிறேன்.
சாரா.. அந்த தியேட்டர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரமிருந்தால் சொல்ல முடியுமா? இக்கட்டுரைகள் புத்தகமாய் வரும் போது உதவியாக இருக்கும்.
I think you have taken all images and information from wiki link http://en.wikipedia.org/wiki/Dolby_Digital.. why don't you mention it as a note in your site....
ரவிஷா
thx என்பது ஒரு சர்டிபிகேஷன் போல. அது ஒரு முழு டெக்னாலஜி இல்லை..அது முக்கியமாய் டிஜிட்டல், ஸ்டீரியோ, டி.டி.எஸ் ஹோம் தியேட்டர்களுக்கு கூட thx சர்டிபிகேஷன் உண்டு. சோனியின் எஸ்.டி.டி.எஸ் பற்றியும், டி.டி.எஸ் பற்றியும் தனிக் கட்டுரைகள் அடுத்து எழுத இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த தகவல்களை கொடுத்தான் இன்னும் நன்றாக இருக்கும்.
miSter உயர்ந்த மனிதன்.. இங்க எங்கயாவது நான் தான் டால்பிய கண்டுபிடிச்சேன்னு எழுதியிருக்கேனா?
கிடைச்ச படத்தையெல்லாம் சோர்ஸோட சேவ் பண்றது இல்லை. ஓகே.. எல்லாருக்கும் தெரியும்.இந்த படஙக்ள் எங்கேயிருந்து கிடைக்குதுன்னு.. இதோ இப்ப நீங்க வந்து வேற சொல்லியிருக்கீங்க.. தாங்க்ஸ்
தல
பல அருமையான தகவல்களை தந்தீர்கள்
எனக்குத்தெரிந்து 1995 அக்டோபர் தீபாவளிக்கு வந்தது, தேவி, அபிராமி, சத்யம் அவசர அவசரமாக டால்பி செய்தனர் என படித்துள்ளேன், இந்தப்படத்தை அப்போது நான் பல்லாவரம் லட்சுமியில் சுமார் 10 முறை பார்த்திருக்கிறேன்.எதோ ஒரு டிவியில் கமல் தோன்றி டால்பி என்றால் என்ன என விளக்கினார்.அதில் இடது வலது உள்ளவர்கள் பேசினால் இடதுபுறம்,வலது-வலதுபுறம் .நடுவில் இருப்பவன் பேசினால் நடுவில்,ஒரு ரயில் நகர்கையில் அது ரியாலிட்டியில் எப்படி சத்தம் கூடிக்குறையுமோ அதே போல ஸ்பீக்கரில் ஒலிகூட்டிக்குறையும். யதார்த்தமான ஒலிச்சூழல் அரங்கினுள்ளே கிடைக்கும். என்றார். மிகவும் நல்ல பேட்டியது.கறுப்பு ரோஜா என்றொரு பாடாவதி படம் டிடீஎஸ் ஐ தமிழில் கொண்டு வந்தது.அப்போது அதையும் நான் லட்சுமி தியேட்ட்டரில் தான் பார்த்தேன் தல. கமலின் எல்லா படமும் தண்டையார்பேட்டை அக்ஸ்தியா70எம் எம்மில் ரிலீஸ் ஆகிவிடும்,தேவர் மகனை நான் அங்கே தான் பார்த்தேன், குருதிப்புனலுக்கு அவர்கள் நிச்சயம் டால்பி செய்திருக்க வேண்டும், அதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குருதிப்புனல் பற்றி இணையத்தில் தேடினால் எதுவும் உறுப்படியாயில்லை தல. நம் நண்பர் கானாபிரபாவிடம் கேட்டால் சிலபல தகவல் கொடுப்பார்.
@உயர்ந்தமனிதன்.
நண்பரே,
விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், அங்கே இருக்கும் தகவல்களை ஒருவருக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை அவரது தளத்தில் தாராளமாக பயன்படுத்தலாம், ஒரே ஒரு நிபந்தனை
பயன் படுத்தும் படங்கள் காப்பிரைட்டட் ஆக இருக்கக்கூடாது.எங்கும் விக்கிக்கு க்ரெடிட் கொடுக்கவேண்டும் என சொல்லவேயில்லை,
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Non-free_content
தேவியில் குருதிப்புனல் பார்த்தேன். தேவி பாரடைசில் முத்து அதே நேரத்தில் வெளியானது. குருதிப்புனல் வருவதற்கு முன் பி.சி.ஸ்ரீராம் சொன்னது "இப்படத்தில் கதவு திறக்கும் சப்தம் கூட பிரம்மாண்டமாக இருக்கும்". ஹாட்ஸ் ஆப் டு நாசர் அண்ட் கமல்! இருவரும் இணைய இனி வாய்ப்பு உண்டா?
மிகச் சரியாக சொன்னீர்கள் பாஸ். "கருப்பு ரோஜா" வந்த போது, அது டி.டி.எஸ் என்றே விளம்பரபடுத்தபடவில்லை. மாறாக "தமிழின் முதல் 6 ட்ராக் டிஜிட்டல் சவுண்ட் திரைப்படம்" என்றே எல்லா விளம்பரங்களிலும் இருந்தது. குமுதத்தில் மொத்தம் 10 பக்கத்துக்கு அப்போது விளம்பரம் வந்தது.
ஆனால் 'குருதிப்புனல்' டால்பியை இந்தியாவுக்கு அறிமுகப் படுத்திய காலத்தில், டி.டி.எஸ் அசுர வேகத்தில் உலகில் உள்ள அத்தனை த்யேட்டர்களில் நிறுவப்பட்டு கொண்டு இருந்தது. எல்லாவற்றிற்கும் காரணம், டால்பி சவுண்டை முற்றிலும் வெறுத்த ஸ்பீல்பெர்க். "ஜூராசிக் பார்க்"கின் (முதல் டி.டி.எஸ் படம்) வெற்றி டால்பிக்கு சரிவை தந்தது.
Sankar, I lived in Madurai from 1993-2001. From my memory i think Deepa/Roopa Complex famous for adult films and 3rd grade english movies. After DTS makeover they revamped their business and screened hollywood movies. After Deepa/Roopa, Mappillai Vinayagar installed DTS and became the leader again. I think slowly Deepa/Roopa lost their business in hollywood movies. At that time Mappillai Vinayagar/Maanikka Vinayagar complex was the leader in South Tamilnadu in Hollywood movies (Jurassic Park ran over 50 days in both theaters, I have seen more than 350 hollywood movies in their theaters). One among the best maintained in Tamilnadu at
that time, i can say. Even Director
Simbudevan mentioned it in one of his interview as his favourite for english movies. But now i came to know, recently Mappillai Vinayagar received bomb threat not to screen hollywood films and started screening only tamil films. I dont know how true this is. And then Ambika/Moogambika complex came with DTS in Annanagar area and followed by Cinepriya complex and Amirtham
theater.
நான் கருப்பு ரோஜா படத்தை மதுரை சரஸ்வதி திரையரங்கில் பார்த்தேன். அப்பொழுது அந்த திரையரங்கில் DTS ஒலி அமைப்பு நிறுவப்படவில்லை. உங்களின் கட்டுரை பழைய இனிய நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது. நன்றி.
விக்கிபீடியாவில் இதை ஏற்கனவே படித்து பார்த்திருக்கிறேன் .. ஆனால் அவ்வளவாக (ஒன்றுமே ) புரியவில்லை ... எளிமையாக தமிழ் படுத்தி எல்லாருக்கும் புரியும்வகையில் எழுதி இருக்கிறீர்கள் ....
வேலூர் ஆனந்தா தியேட்டர் முதல் தமிழக டி.டி.எஸ் தியேட்டர்....
ட்ரூ லைஸ் அர்னால்டின் படத்திற்காக டி.டி.எஸ் செய்தனர்.....
தகவல் சரிபார்த்து கொள்ளவும்
//தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படம் கமலின் “குருதிப்புனல்” தான் என்பதில் ஐயமே வேண்டாம்.///
நிச்சயமாக ஐயம் இல்லை..... ஆனால் அந்த பட படுதோல்விதான் தமிழில் டால்பி பரவாததன் காரணம்.... அதை ஒத்துக்கொள்ளாமல் திருக்குவளை தீயசக்தி மாதிரி மற்றவர்களை திட்டாதீர்கள்.....
பூனைக்கு மணி கட்டுவது கமல் இல்லாட்டி ராமராஜன் கட்டிருப்பாரு... ஏன்னா இது டெக்னாலாஜி.... யாராவது ஒருத்தர் எங்கேர்ந்தாவது ஆரம்பிச்சிருப்பாங்க..... சும்மா ஆரம்பிச்சதினாலயே தமிழ் சினிமாவ காப்பாத்த வந்த கடவுள் அது இதுன்னு பில்டப் கொடுத்ததுதான் உங்கள் ரசிகர்கள் மற்றும் உங்கள் பார்வையில் அறீவிலி, முட்டாள்களான எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது......
வேற ஒண்ணும் இல்லை
மாப்பிள்ளை.. மீண்டும் உங்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். அது தோல்வியோ வெற்றியோ.. இக்கட்டுரை அதைப் பற்றியதல்ல.. யார் முதன் முதலில் தமிழில் அறிமுகப்படுத்தினார்கள் என்பதற்கான கட்டுரை. அது மட்டுமில்லாமல் அந்த தொழில் நுட்பம் ஏன் இந்தியாவில் வீழ்ந்தது என்பதற்கு அமெரிக்க காரணம் ஒன்று இருக்கிறது. அது வருகிற் பதிவுகளில் வரப்போகிறது. அதுவரை சும்மா கமல் எதிர்ப்பு புராணம பாடாமல் கவனிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நேற்றே சொல்லிவிட்டேன். நோ.. மோர். டிஸ்கெஷன்ஸ் ரிகார்டிங் திஸ்.. கீப் வாட்சிங்.. சில உண்மைகளை யார் என்ன செய்தாலும் மறைக்க முடியாது.
சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வ்ளவு பேர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் யார் முலமாய் வாங்கிக் கொடுத்தது என்பதுதான் வரலாறு.. சோ.. டோன்ட் ஜாயின் இன் த க்ளப். நண்பா..
தியேட்டர் ஓனர்களுக்கு டால்பிக்கு செலவு பண்ண காசு தேறினிச்சான்னு சினிமா வியாபாரத்தில சொல்லவும்....
ஆனா என்ன முத்து ல கிடைச்ச காசுதான் ரெண்டு வருஷத்துக்கு போதுமே....
//சங்கர் நாராயண் @ Cable Sankar said...
சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வ்ளவு பேர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் யார் முலமாய் வாங்கிக் கொடுத்தது என்பதுதான் வரலாறு.. சோ.. டோன்ட் ஜாயின் இன் த க்ளப். நண்பா..
///
அதேதான்.... அதத்தான் சொல்றோம்... நாங்க காந்தி, நேதாஜி பத்தி சொல்லும் போது..... நீஙக மங்கள் பாண்டேதான் சுதந்திர போராட்டத்த ஆரம்பிச்சாரு.... அவர்தான் இந்தியாவ காப்பாத்துன கடவுள் அது இதுன்னு பிதற்றுகிறீர்களே..... அந்த கண்மூடித்தனத்ததான் கொஞ்சம கண்டிக்கிறோம்....
reading,,interesting
இதையும் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்
Dear Sankar antha same timela than salem Alankar theater, unmayile oru padavathi theater aana intha padathukkaka DTS seithu irunthanga.
|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...//
/எனக்குத்தெரிந்து 1995 அக்டோபர் தீபாவளிக்கு வந்தது//
உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் தெரிந்து...
//பல்லாவரம் லட்சுமியில் சுமார் 10 முறை பார்த்திருக்கிறேன்///
பத்து தடவ பாத்து புரிஞ்சிருக்காதே....
//ஒரு டிவியில் கமல் தோன்றி டால்பி என்றால் என்ன என விளக்கினார்.//
அதோட கதயவும் விளக்கிருந்தா கொஞ்சமாவது விளங்கிருக்கும்....
//குருதிப்புனல் பற்றி இணையத்தில் தேடினால் எதுவும் உறுப்படியாயில்லை///
இன்னமுமா இத தேடுறிங்க... இந்தாங்க தகவல்
துரோக்கால் என்ற படத்த ரீமேக் பண்ணனும்னு முடிவு பண்ணி.... பி.சி. ய டைரக்டரா போட்டு.... கிழவிய ஃபேர் அன் லவ்லி போட்டு மேக்கப் பண்ற மாதிரி டால்பிய வச்சி தப்பிக்கலாம்னு பாத்தாரு... பட்ட நாமம்.. அவருக்கும்... அவர் பயன்படுத்துனதால டால்பிக்கும்... போதுமா....
Sir,
I watched Karuppu Roja in Coimbatore KG Complex it was furnished with DTS. I Watched Kurudhipunal also in Coimbatore in a theatre, that was also furnished with Dolby. sorry i dont remember the theatre name
கேபிள் உங்களுக்கு மண்டகனம் ரெம்ப ஜாஸ்தி ஆகிடுச்சுனு நினைக்கிறேன். உங்களுடைய பின்னூட்டமும் அதை தான் நிறுவுகிறது
இதை கொஞ்சம் படிங்க
http://itsmeena.wordpress.com/2011/03/17/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/
அண்ணே அறிவில்லாதவன்ணே.. பாவம்ணே அவரு. அவரால முடிஞ்ச வரைக்கும் என்னையை பாராட்டி எழுதியிருக்காரு.. அதைப் போய் இப்படி நீங்களும் லிங்க் கொடுத்து பிரபலமாக்கிட்டியளே..
அண்ணே.. எது காமெடி, எது தகவல்னு எதுல பகடி இருக்குன்னு கூட தெரியாம இருக்குறவங்கள நான் என்னன்னு சொல்ல.. சரி.. உங்க கிட்ட சொல்லி என்னா புண்ணியம்..
:))
நன்றிண்ணே..லிங்க் கொடுத்து என்னைய பாக்க வச்சதுக்கு.. இவரு ஏற்கனவே நான் ஃபோர்னோ கதை எழுதுறவன்னு திட்டினவருதான். நம்ம தோஸ்துதான். விடுங்க...விடுங்க..
அவருக்கு ஃபோர்னோவும் தெரியலை.. பகடியும் புரியலை..
nice
கமலால் தான் DTS வந்தது என்ற உங்கள் பதிவையும், அதை மறுத்த பல பதிவுகளும் நான் படித்து வருகிறேன்.
அந்தப் பதிவிகள் உங்கள் கருத்தை மறுத்தனவே தவிர உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கியதாகத் தெரியவில்லை..(நான் படித்தவரை)
உங்களை பொருட்படுதுவதால் தான் விமர்சங்கள் வருக்கின்றன..
அதை நீங்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம் அல்லது உண்மையை ஆதாரத்துடன் விளக்கலாம். ஆனால் முட்டாள்கள் மூர்க்கர்கள் என்று வசைபாடுவது அவ்வளவு சரியான போக்கல்ல.
வசைபாடுவது மிக எளிதானது
i also mentioned DTS instead of Dolby Digital. Hope you wont scold for that.
first dts theater in chennai Abirami and woodlands i still remember i watched karupoo roja at woodlands theater in chennai.
தமிழ்நாட்டில் முதன் முறையாக டிடிஎஸ் ஒலியில் ஸ்பீட் என்றஆங்கிலப்படம் தேவி தியேட்டரில் திரையிடப்பட்டது.
ஏன்யா கேபிளு... நானும் ஒங்கள இத்தன காலமும் ரெம்ப புத்திசாலின்னு நென்ச்சிட்டு இர்ந்தேன்யா. ஆனா...
இண்டர்நெட்டு, ஈமெயிலுன்னு பயன்படுத்துற அளவுக்கு இஸ்கூலு காலேசு எல்லாம் படிச்சிருந்தும் இன்னனும் ஒலக்கைக் கொழுந்தாட்டம் அறிவு இருக்கறத்த ருசுப்பிக்கிறமாதிரி ரஜினிகாந்துங்குற ஒரு வியாபாரிக்கு வெளக்கு புடிச்சிட்டு திரியுற சென்மத்துக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கீரே! இப்பத்தான்யா ஒங்க அறிவு மேல சந்தேகம் வர்து.
பாபா பொட்டிய தூக்கிட்டு போன மரம்வெட்டி அம்புமணிக்கு, பொண்ணு கல்யாணத்துக்கு வீடுதேடிப்போயி பத்திரிகை. உசிரை மசிரா நெனச்சி ரசிகர்மன்றம் வெச்சி ஒழச்ச ரசிகன்லாம் கல்யாணத்துக்கு வரவேண்டாம்னு அறிக்கை. இந்த மசிரு அறிக்கைய ஒவ்வொரு படம் ரிலீசானப்பவும் விட வேண்டியதுதான?
அந்த வியாபாரிக்கு இணையத்துலகூட வக்காலத்து வாங்க ரெண்டு அல்லக்கையிங்க. போங்கடாங்....
தமிழ்ல இதுவரைக்கும்,
Dolby Digital EX or DTS-ES 6.1 Audio வில் படங்கள் வந்தது உண்டா?
Neengal kurippidum andha first DTS theatre Erode Krishna theatre-a irukkalam. Yeena naan antha theatre-la thaan Karuppu Roja padatha DTS la parthen. Andha kudirai odara saptham matrum sila effects innum nalla niyabagam irukku
Ram
watched this movie karupppu rojakkal in madurai deepa and roopa,now the theatre is not showing any movies .I think it become car shed ...mapillai vinayagar theatre the prorblem 4 english movies is not bomb threat ,its because of piracy theatre incurred huge loss in showing english movies.now IAm hapy with Indias first sony reald 4k theatre guru in madurai
இந்தியாவின் முதல் dts திரையரங்கம் சென்னையில் உள்ள அபிராமி திரையரங்கம் தமிழில் முதல் dts படம் கறுப்புரோஜா 1995 2வது படம் சிறைச்சாலை 1996 3வது படம் இந்தியன்1996
மதன்
Post a Comment