சினிமா வியாபாரம்-2-12- Dolby Digital
பகுதி12
அந்த பெரிய படம் என்ன என்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்த விரும்புகிறேன். தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படம் கமலின் “குருதிப்புனல்” தான் என்பதில் ஐயமே வேண்டாம். டால்பி டிஜிட்டலுக்கும், டி.டி.எஸ்சுக்கும் வித்யாசம் தெரியாத அறிவிலிகளுக்கும், முட்டாள்தனமான மூர்கர்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாலும் தகவல் பிழை என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு தகவலில் பிழை சொல்ல வேண்டுமென்றால் அதைப் பற்றி அடிப்படை அறிவாவது வேண்டும். சரி விடுங்கள் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்.
தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படத்திற்கு காரணமான கமல், அபிராமி ராமநாதன், ஏவிஎம் இராஜேஸ்வரி, தேவி தியேட்டர் உரிமையாளர்கள் தான் காரணம் என்பதை வரலாறு சொல்லும். அதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் அதே நேரத்தில் இன்னொரு கம்பெனி தன்னுடய புதிய டெக்னாலஜியுடன் களமிறங்கியது. அதுதான் டி.டி.எஸ். டால்பிக்கு போட்டித் தயாரிப்பு. திரைப்படக் கல்லூரி மாணவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஆபாவாணன் தான் தமிழ் திரையுலகத்திற்கு டி.டி.எஸ் ஐ அறிமுகப்படுத்தியற்கு காரணமானவர். இவரது கருப்பு ரோஜா என்கிற படம் தான் தமிழின் முதல் டி.டி.எஸ்.படம்.
குருதிப்புனல் வந்த போது கமல் மற்றும் ஒரிரு தியேட்டர் அதிபர்கள் இணைந்து அந்த தொழில் நுட்பத்தை தங்களது தியேட்டர்களில் அளித்தது போல, டி.டி.எஸ் தொழில் நுட்பத்தை தியேட்டர் அதிபர்களுடன இணைந்து உடனடியாய் ஆபாவாணனால் கொண்டு வர முடியவில்லை. அப்படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடி செய்வதற்கே பெரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு நேரமில்லை என்றே சொல்ல வேண்டும்.
அதே போல குருதிப்புனலுக்கு மூன்று தியேட்டர்கள் இருந்ததைப் போல அப்படத்திற்கு டி.டி.எஸ் நிர்மாணிக்கப்பட்ட தியேட்டர்களும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தப் படம் ரிலீசான போது ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் டி.டி.எஸ் இருந்தாய் ஞாபகம். சரியாகத் தெரியவில்லை. அதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தன்யனாவேன்.
டால்பி டிஜிட்டல், டி.டி.எஸ் இரண்டுமே இதுவரை வழக்கிலிருந்து அனலாக் எனப்படும் இடது, வலது பக்க ஒலியமைப்பை கொடுக்கும் டெக்னாலஜியிலிருந்து வலது, இடது, நடு, வலது நடு, இடது நடு, பின்பக்கம் என்கிற ஆறு சேனல் ஒலியமைப்பை 5.1 என்கிற பெயரில் ஒலியை பிரித்து கொடுக்கும் காரியத்தைத்தான் செய்தது என்றாலும், அதை வெளிக் கொணரும் முறையில்தான் இரு கம்பெனி டெக்னாலஜியில் உள்ள வித்யாசம். முதலில் இவைகளுக்குண்டான டெக்னாலஜியை பார்ப்போம்.
டால்பி லெபாரட்டரி என்கிற கம்பெனியின் ஆடியோ கம்ப்ரெஷன் டெக்னாலஜிதான் இந்த டால்பி ஸ்டிரீயோ என்கிற டால்பி டிஜிட்டல். இந்த டெக்னாலஜியின் முக்கியமான விஷயமே 35 எம்.எம் பிலிமோடு, டிஜிட்டல் சவுண்டை கொடுத்ததுதான். இதற்கு முன்னால் பிலிமில் வெறும் அனலாக் எனப்படும் வலது, இடது என்கிற நார்மல் மோடில் வந்து கொண்டிருந்த ஒலியமைப்பு, மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
Somebody in our tamil blog wrote a detailed article(series) about these sound track's.
anyone have that link plz
thx என்பது ஒரு சர்டிபிகேஷன் போல. அது ஒரு முழு டெக்னாலஜி இல்லை..அது முக்கியமாய் டிஜிட்டல், ஸ்டீரியோ, டி.டி.எஸ் ஹோம் தியேட்டர்களுக்கு கூட thx சர்டிபிகேஷன் உண்டு. சோனியின் எஸ்.டி.டி.எஸ் பற்றியும், டி.டி.எஸ் பற்றியும் தனிக் கட்டுரைகள் அடுத்து எழுத இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த தகவல்களை கொடுத்தான் இன்னும் நன்றாக இருக்கும்.
கிடைச்ச படத்தையெல்லாம் சோர்ஸோட சேவ் பண்றது இல்லை. ஓகே.. எல்லாருக்கும் தெரியும்.இந்த படஙக்ள் எங்கேயிருந்து கிடைக்குதுன்னு.. இதோ இப்ப நீங்க வந்து வேற சொல்லியிருக்கீங்க.. தாங்க்ஸ்
பல அருமையான தகவல்களை தந்தீர்கள்
எனக்குத்தெரிந்து 1995 அக்டோபர் தீபாவளிக்கு வந்தது, தேவி, அபிராமி, சத்யம் அவசர அவசரமாக டால்பி செய்தனர் என படித்துள்ளேன், இந்தப்படத்தை அப்போது நான் பல்லாவரம் லட்சுமியில் சுமார் 10 முறை பார்த்திருக்கிறேன்.எதோ ஒரு டிவியில் கமல் தோன்றி டால்பி என்றால் என்ன என விளக்கினார்.அதில் இடது வலது உள்ளவர்கள் பேசினால் இடதுபுறம்,வலது-வலதுபுறம் .நடுவில் இருப்பவன் பேசினால் நடுவில்,ஒரு ரயில் நகர்கையில் அது ரியாலிட்டியில் எப்படி சத்தம் கூடிக்குறையுமோ அதே போல ஸ்பீக்கரில் ஒலிகூட்டிக்குறையும். யதார்த்தமான ஒலிச்சூழல் அரங்கினுள்ளே கிடைக்கும். என்றார். மிகவும் நல்ல பேட்டியது.கறுப்பு ரோஜா என்றொரு பாடாவதி படம் டிடீஎஸ் ஐ தமிழில் கொண்டு வந்தது.அப்போது அதையும் நான் லட்சுமி தியேட்ட்டரில் தான் பார்த்தேன் தல. கமலின் எல்லா படமும் தண்டையார்பேட்டை அக்ஸ்தியா70எம் எம்மில் ரிலீஸ் ஆகிவிடும்,தேவர் மகனை நான் அங்கே தான் பார்த்தேன், குருதிப்புனலுக்கு அவர்கள் நிச்சயம் டால்பி செய்திருக்க வேண்டும், அதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குருதிப்புனல் பற்றி இணையத்தில் தேடினால் எதுவும் உறுப்படியாயில்லை தல. நம் நண்பர் கானாபிரபாவிடம் கேட்டால் சிலபல தகவல் கொடுப்பார்.
நண்பரே,
விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், அங்கே இருக்கும் தகவல்களை ஒருவருக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை அவரது தளத்தில் தாராளமாக பயன்படுத்தலாம், ஒரே ஒரு நிபந்தனை
பயன் படுத்தும் படங்கள் காப்பிரைட்டட் ஆக இருக்கக்கூடாது.எங்கும் விக்கிக்கு க்ரெடிட் கொடுக்கவேண்டும் என சொல்லவேயில்லை,
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Non-free_content
ஆனால் 'குருதிப்புனல்' டால்பியை இந்தியாவுக்கு அறிமுகப் படுத்திய காலத்தில், டி.டி.எஸ் அசுர வேகத்தில் உலகில் உள்ள அத்தனை த்யேட்டர்களில் நிறுவப்பட்டு கொண்டு இருந்தது. எல்லாவற்றிற்கும் காரணம், டால்பி சவுண்டை முற்றிலும் வெறுத்த ஸ்பீல்பெர்க். "ஜூராசிக் பார்க்"கின் (முதல் டி.டி.எஸ் படம்) வெற்றி டால்பிக்கு சரிவை தந்தது.
that time, i can say. Even Director
Simbudevan mentioned it in one of his interview as his favourite for english movies. But now i came to know, recently Mappillai Vinayagar received bomb threat not to screen hollywood films and started screening only tamil films. I dont know how true this is. And then Ambika/Moogambika complex came with DTS in Annanagar area and followed by Cinepriya complex and Amirtham
theater.
ட்ரூ லைஸ் அர்னால்டின் படத்திற்காக டி.டி.எஸ் செய்தனர்.....
தகவல் சரிபார்த்து கொள்ளவும்
நிச்சயமாக ஐயம் இல்லை..... ஆனால் அந்த பட படுதோல்விதான் தமிழில் டால்பி பரவாததன் காரணம்.... அதை ஒத்துக்கொள்ளாமல் திருக்குவளை தீயசக்தி மாதிரி மற்றவர்களை திட்டாதீர்கள்.....
வேற ஒண்ணும் இல்லை
ஆனா என்ன முத்து ல கிடைச்ச காசுதான் ரெண்டு வருஷத்துக்கு போதுமே....
சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வ்ளவு பேர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் யார் முலமாய் வாங்கிக் கொடுத்தது என்பதுதான் வரலாறு.. சோ.. டோன்ட் ஜாயின் இன் த க்ளப். நண்பா..
///
அதேதான்.... அதத்தான் சொல்றோம்... நாங்க காந்தி, நேதாஜி பத்தி சொல்லும் போது..... நீஙக மங்கள் பாண்டேதான் சுதந்திர போராட்டத்த ஆரம்பிச்சாரு.... அவர்தான் இந்தியாவ காப்பாத்துன கடவுள் அது இதுன்னு பிதற்றுகிறீர்களே..... அந்த கண்மூடித்தனத்ததான் கொஞ்சம கண்டிக்கிறோம்....
இதையும் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்
/எனக்குத்தெரிந்து 1995 அக்டோபர் தீபாவளிக்கு வந்தது//
உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் தெரிந்து...
//பல்லாவரம் லட்சுமியில் சுமார் 10 முறை பார்த்திருக்கிறேன்///
பத்து தடவ பாத்து புரிஞ்சிருக்காதே....
//ஒரு டிவியில் கமல் தோன்றி டால்பி என்றால் என்ன என விளக்கினார்.//
அதோட கதயவும் விளக்கிருந்தா கொஞ்சமாவது விளங்கிருக்கும்....
//குருதிப்புனல் பற்றி இணையத்தில் தேடினால் எதுவும் உறுப்படியாயில்லை///
இன்னமுமா இத தேடுறிங்க... இந்தாங்க தகவல்
துரோக்கால் என்ற படத்த ரீமேக் பண்ணனும்னு முடிவு பண்ணி.... பி.சி. ய டைரக்டரா போட்டு.... கிழவிய ஃபேர் அன் லவ்லி போட்டு மேக்கப் பண்ற மாதிரி டால்பிய வச்சி தப்பிக்கலாம்னு பாத்தாரு... பட்ட நாமம்.. அவருக்கும்... அவர் பயன்படுத்துனதால டால்பிக்கும்... போதுமா....
I watched Karuppu Roja in Coimbatore KG Complex it was furnished with DTS. I Watched Kurudhipunal also in Coimbatore in a theatre, that was also furnished with Dolby. sorry i dont remember the theatre name
இதை கொஞ்சம் படிங்க
http://itsmeena.wordpress.com/2011/03/17/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/
அண்ணே.. எது காமெடி, எது தகவல்னு எதுல பகடி இருக்குன்னு கூட தெரியாம இருக்குறவங்கள நான் என்னன்னு சொல்ல.. சரி.. உங்க கிட்ட சொல்லி என்னா புண்ணியம்..
:))
நன்றிண்ணே..லிங்க் கொடுத்து என்னைய பாக்க வச்சதுக்கு.. இவரு ஏற்கனவே நான் ஃபோர்னோ கதை எழுதுறவன்னு திட்டினவருதான். நம்ம தோஸ்துதான். விடுங்க...விடுங்க..
அவருக்கு ஃபோர்னோவும் தெரியலை.. பகடியும் புரியலை..
அந்தப் பதிவிகள் உங்கள் கருத்தை மறுத்தனவே தவிர உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கியதாகத் தெரியவில்லை..(நான் படித்தவரை)
உங்களை பொருட்படுதுவதால் தான் விமர்சங்கள் வருக்கின்றன..
அதை நீங்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம் அல்லது உண்மையை ஆதாரத்துடன் விளக்கலாம். ஆனால் முட்டாள்கள் மூர்க்கர்கள் என்று வசைபாடுவது அவ்வளவு சரியான போக்கல்ல.
வசைபாடுவது மிக எளிதானது
இண்டர்நெட்டு, ஈமெயிலுன்னு பயன்படுத்துற அளவுக்கு இஸ்கூலு காலேசு எல்லாம் படிச்சிருந்தும் இன்னனும் ஒலக்கைக் கொழுந்தாட்டம் அறிவு இருக்கறத்த ருசுப்பிக்கிறமாதிரி ரஜினிகாந்துங்குற ஒரு வியாபாரிக்கு வெளக்கு புடிச்சிட்டு திரியுற சென்மத்துக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கீரே! இப்பத்தான்யா ஒங்க அறிவு மேல சந்தேகம் வர்து.
பாபா பொட்டிய தூக்கிட்டு போன மரம்வெட்டி அம்புமணிக்கு, பொண்ணு கல்யாணத்துக்கு வீடுதேடிப்போயி பத்திரிகை. உசிரை மசிரா நெனச்சி ரசிகர்மன்றம் வெச்சி ஒழச்ச ரசிகன்லாம் கல்யாணத்துக்கு வரவேண்டாம்னு அறிக்கை. இந்த மசிரு அறிக்கைய ஒவ்வொரு படம் ரிலீசானப்பவும் விட வேண்டியதுதான?
அந்த வியாபாரிக்கு இணையத்துலகூட வக்காலத்து வாங்க ரெண்டு அல்லக்கையிங்க. போங்கடாங்....
Dolby Digital EX or DTS-ES 6.1 Audio வில் படங்கள் வந்தது உண்டா?
Ram