100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.
கடந்த ஒரு வாரமாய் ஏகப்பட்ட கால்கள். வழக்கமாய் ஒரு 30-50 போன்கால்கள் வரும். பிஸியான நேரங்களில் இன்னும் கொஞ்சம் கூட கூடும். ஆனால் என்னுடய இன்னொரு எண்ணுக்கு தொடர்ந்து கால்கள் வந்ததேயில்லை. மிகவும் சில நபர்களுக்கே அந்த நம்பர் தெரியும். கடந்த ஒரு வாரமாய் நூற்றுக்கும் மேற்பட்ட கால்கள். மிஸ்ட் கால்கள். வாட்ஸப்பில் “கந்தி” மெசேஜுகள் என குவிய ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம்? நம்ம காயாடு லோஹர் தான். எனக்கும் அவருக்கும் ஸ்நானப் ப்ராப்தி இது வரை கிடையாது. எதிர்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறது என்றாலும் வருகிற போன் கால்களில் எல்லாரும் கூப்பிடுவது பெரும்பாலும் வடக்கன்கள் “கயாடு லோஹர்?” என்று கேட்க, நான் என் கந்தர்வக்குரலில் ‘ஹலோ” என்றதும், டக்கென கட் செய்து விடுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள். வெறும் “ஹலோ” மட்டுமே சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் அமைதியாய் இருப்பார்கள். நானும் பொழுது போகாத நேரங்களில் “மெளனமான நேரம்” விளையாட ஆரம்பித்துவிட்டேன். சமயங்களில் கயாடு லோஹர் குரலில் “ஹலோ” என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, செம்ம சுவாரஸ்யமாய் சமயங்கள் போகும். அலோ மேட்டர் எல்லாம் போய் கொஞ்சம் கொஞ்சமாய் கயாட...
Comments
padikkum pothu navil echchil urukirathu...