வில்பர் சர்குணராஜ்
எப்படி சாம் ஆண்டர்சன் தமிழ் இணைய உலகில் பிரபலமோ.. அவரை விட பிரபலம் இந்த வில்பர் சர்குணராஜ். இந்திய கக்கூஸுகளை உபயோகிப்பது எப்படி? என்று வீடியோ பாடமாய் எடுத்தவர். காதல் திருமணம் பற்றி பாடல் எழுதி ரோஜா பட ருக்குமணி ருக்குமணியில் ஆடும் கிழவிகளை விட படு கிழவிகளையும், லோக்கல் நடிப்பு ஆர்வலர்களையும் வைத்து மியூசிக் வீடியோவாக வெளியிட்டவர். அழுந்த வாரிய தலையும், பார்மலாய் இன் செய்யப்பட்ட பேண்ட் சர்ட்டுடன், டை கட்டிக் கொண்டு, முகத்தை மறைக்கும் பெரிய பழைய மாடல் ப்ரேம் போட்ட கண்ணாடியோடு, இவர் நடிக்கும் மியூசிக் வீடியோவை பார்த்தால் நிச்சயம் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும்.
எப்படி டி.ஆர்., சாம் ஆண்டர்சன் ஆகியோரின் வீடியோவை பார்த்து, நக்கலடித்து, கிண்டல் செய்து சிரிக்கிறோமோ அது போல இவரைப் பார்த்தும் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு பிரபல பத்திரிக்கை அவருடய பேட்டிக்காக கேட்டிருக்க, அவர் தான் பிஸியாக இருப்பதாகவும், அடுத்த வருடம் வரை டைமில்லை என்று சொன்னதாகவும், கடைசியில் தொலைபேசி பேட்டியை படு கிண்டலுடன் போட்டது. நாம தான் அவரை கிண்டல் செய்திட்டு இருக்கோம். உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் நாளை காலை பத்து மணிக்கு நம்ம வில்பர் சர்குணராஜின் “ சிம்பிள் சூப்பர் ஸ்டார் “ என்கிற புதிய ஆல்பத்தை பர்பிள் நோட் என்கிற கார்பரேட் கம்பெனி சத்யம் தியேட்டரில் வெளியிடுகிறது. எல்லாரையும் காமெடியா பாக்கப்படாது..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சினிமா வியாபாரம்-2-11 பகுதியை படிக்க
Comments
நீங்கள் ரெம்ப லேட்.......
http://shilppakumar.blogspot.com/2011/01/blog-post_17.html
He is a real superstar...you can watch many more videos of him(esp videos of his performance among foreigners)before coming to a conclusion about him...even though he knows people make fun out of him he doesnt bother and i like his attitude...and he really has music sense...
http://www.ndtv.com/article/catch%20of%20the%20day/catch-love-marriage-made-him-a-youtube-star-87878