Thottal Thodarum

Mar 12, 2011

வேராய் பரவும் மனிதர்கள்.

ஆறேழு மாதமிருக்குமென்று நினைக்கிறேன். கோபியில் என் உறவினர் வீட்டு விஷேஷத்திற்கு போயிருந்த போது, ஈரோட்டுக் கதிர் ஞாபகம் வர, “தலைவரே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன் எப்போது சந்திக்கலாம்?” என்று போன் செய்தேன். இன்று மாலை எங்கள் லயன்ஸ் கிளப்பில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்கவிருக்கிறது. சத்யமங்கலத்திலிருந்து ஒரு கார் வருகிறது. அதில் வந்துவிடுங்கள் நிச்சயம் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என்ற அன்புக் கட்டளையிட்டு அழைத்தார்.
மாலை ஆறு மணிக்கு அவர்கள் ஒரு மாருதி வேனில் வந்தார்கள். உள்ளே ஒரு சிறுவன், ஒரு புது கதர் சட்டையை போட்டுக் கொண்டு ஒரு வயதானவர் உட்கார்ந்திருந்தார். ஏதோ இரும்புக் கவசம் போட்டுக் கொண்டிருந்தது போல அவர் சட்டையை ஃபீல் செய்து கொண்டிருந்தார். “வேகுதுங்களாய்யா..?” என்றேன். “இல்லீங்க.. தம்பி.. நான் சட்டைப் போடுறதேயில்லை. இதோ இந்தப் பயலுவதான் அடம் பிடிச்சி வாங்கிக் கொடுத்தானுங்க.. நான் கழ்ட்டிறவா?” என்று பதிலுக்கு காத்திராமல் சரசரவென சட்டையை கழட்டியதும் ரிலாக்ஸானார். வழியில் காஞ்சிக் கோயில் நாகராஜனை பிக்கப் செய்து கொண்டு போக வேண்டும் என்று சொன்னார்கள். வழி கேட்டுப் போன போது, அவர் பேர் சொன்னதுமே ஆளாளுக்கு வந்து வழி சொன்னார்கள். ஊருக்குள்ளே கேட்டுப் பாரு நான் யாருன்னு சொல்வாங்கன்னு சொல்வாங்களே… அதை நான் அங்க பார்த்தேன்.
Image0522 ஒரு ஐம்பது வயது மனிதர் அவர் வீட்டருகே காத்திருக்க அவரும் அவர் மனைவியும் காரிலேற கிளம்பினோம். வழி நெடுக பேசிக் கொண்டே வந்ததில் அவர்களின் சாதனைகளைக் கேட்க..கேட்க நாமெல்லாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்துவிட்டோம் என்று வெட்கப்பட வைத்தார்கள். காஞ்சிக் கோவில் நாகராஜன் கடந்த நாற்பது வருடங்களாய் காஞ்சிக்கோவில் சுற்றி சுமார் பத்தாயிரம் மரக்கன்றுகள் நட்டிருக்கிறார். ஒன்றிரண்டல்ல பத்தாயிரம்..  சும்மா நட்டுட்டா போதுமா? என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆம் நட்டால் மட்டும் போதாது.. என்று நாகராஜனுக்கு தெரிந்திருக்கிறது. ஒரு மரக்கன்றை நட்டு,  அதைச் சுற்றி வேலியமைத்து, தொடர்ந்து ஒரு மாதம் அதற்கு தண்ணீர் ஊற்றி காப்பாற்றி அது ஊன்றி தழைக்க ஆரம்பித்த பிறகுதான் அடுத்த செட்டு மரம், அடுத்த இடம் என்று நகருவாராம். இத்தனைக்கும் அவர் ஒன்றும் வசதி படைத்தவர் அல்ல. மிகச் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்தான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த பெரியவர் ஒன்றும் சாதாரணப் பட்டவர் அல்ல.

அவர் பெயர் அய்யாச்சாமி. சுமார் மூவாயிரம் மரங்களை வளர்த்தவர். அவரை பார்த்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால்.. இவரும் இயற்கையை நேசிப்பவர், மரங்களுக்காக தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவு செய்துக் கொண்டிருப்பவர் என்றாலும் காஞ்சிக் கோயில் நாகராஜனிடம் மிக சீரியஸாக, அவரின் பணியைப் பற்றியும், அதற்கு ஊர்காரர்களின் உதவிகளைப் பற்றியும், தான் வளர்த்த மூவாயிரம் மரத்தை விட எண்ணிக்கையில் மட்டுமல்ல.. மரங்களை தழையச் செய்ய அவர் எடுக்கும் முனைப்புகளைப் பற்றி அதிசயித்து போய் பேசினார். “நானெல்லாம்  வேப்பமரம்தான் வளத்தேன். விதையைப் போட்டா தானா வளரப் போவுது.. ஆனா நீ செய்யுறது பெருசுங்கிறேன்.” என்று பாராட்டிய அந்த மனதுதான் எல்லாரையும் விட அவரை உயரத்தில் கொண்டு சென்றிருக்கிறது என்று புரிந்தது.

ஒரு ஐம்பது கிலோ மீட்டர் பயணத்தில் வாழ்க்கையின் பல பரிமாணங்களை, புரிய வைத்த அந்த இரு ஜாம்பவான்களுடனான பயண அனுபவத்தை கொடுத்த கதிருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சென்ற வாரம் அய்யாசாமி அவர்கள் நம்மிடமிருந்து பிரிந்துவிட்டார் என்று தெரிந்ததும் நிஜமாகவே அந்த மாமனிதனுக்காக.. கண்ணீர் விட்டேன். அவர் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற மரங்களின் வேர் போல அவரின் எண்ணங்களின் வேர் என்னுள் ஊடுருவிச் சென்று பரப்பியிருக்கும் கிளைகளால் தழைக்கும். அவருக்கு என் அஞ்சலிகள்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

நையாண்டி நைனா said...

நம்மை அக்குவேராய் ஆணிவேராய் கிழித்து பார்க்க தூண்டிய பதிவு..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அவரிடமிருந்து நாமும் மரம வளர்க்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்...

எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

நேசமித்ரன் said...

அந்த மாமனிதருக்கு இங்கும் என் அஞ்சலிகள்

செங்கோவி said...

அற்புதமான பதிவு..வருங்கால சந்ததிகளுக்காக சிந்தித்த அந்த நல்ல உள்ளத்திற்கு என் அஞ்சலிகள்!

தமிழ் ஈட்டி! said...

சென்ற பதிவில் இருந்த பிழைகளை இன்னும் சரிசெய்யவில்லை.

இந்த பதிவில் உள்ள பிழைகள்:

//விஷேஷத்திற்கு //
விசேஷத்திற்கு

//ஆளாளுக்கு வ்ந்து//
வந்து

//அது உன்றி தழைக்க//
ஊன்றி தழைக்க

//புரிய வைதத //
வைத்த

Anonymous said...

இப்படியானவர்கள் இருப்பதால் தான் என்னவோ வான் நின்று பெய்கிறது இன்னமும் .... வாழ்த்துவோமாக

Suthershan said...

சொந்த வூரிலேயே சாதனை மனிதர்களை பற்றி தெரியாமல் இருந்திருக்கிறேன்... உங்களின் நட்பு வட்டம் ஆச்சர்யபடவைகிறது ... இப்படிக்கு சத்யமங்கலத்துக்காரன்...

ஈட்டி : உங்களுக்கு பத்திரிகை அலுவலகத்தில் சிறந்த பணி காத்து கொண்டு இருக்கிறது.. உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

jayaramprakash said...
This comment has been removed by the author.
jayaramprakash said...

""நானெல்லாம் வேப்பமரம்தான் வளத்தேன். விதையைப் போட்டா தானா வளரப் போவுது.. ஆனா நீ செய்யுறது பெருசுங்கிறேன்.” என்று பாராட்டிய அந்த மனதுதான் எல்லாரையும் விட அவரை உயரத்தில் கொண்டு சென்றிருக்கிறது என்று புரிந்தது.""

அடுத்தவரை பாராட்டுபவர் தான் உண்மையிலேயே பெரிய மனிதர்.

பா.ராஜாராம் said...

நெகிழ்வான பகிர்வு தல.

Paleo God said...

நெகிழ்ச்சி!

ponsiva said...

சிந்திக்க வைக்கும் தலைப்பு கேபிள் சார்..

sugi said...

Touching:(....

மாதேவி said...

அவரின் பணிக்கு வாழ்த்தும்.
மறைவுக்கு அஞ்சலியும் செலுத்துவோம்.

Unknown said...

நல்ல தலைப்பு நண்பரே....தேவையான பதிவு...

'பரிவை' சே.குமார் said...

அற்புதமான பதிவு.. அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு

அன்று சட்டையோடு வந்து பாதியில் கழட்டி விசயம் தெரியாது

மிகப்பொருத்தமான தலைப்பு!

முகவை மைந்தன் said...

இதுமாதிரி கேள்விப் படுறப்பல்லாம் ஒரு நூறாயிரம் மரமாவது வளத்துரணும்னு தோணுது. பொது இடத்துல மரம் நடுவதால் உண்டாகக் கூடிய சிக்கல்கள் என்ன, எப்படி எதிர் கொள்வது?ன்னு ஒரு இடுகை போடுங்களேன். நூறு மரமாவது முயல்றேன்.

shortfilmindia.com said...

@நையாண்டி நைனா
நன்றி

@தமிழ் வாசி
ம்

@நேசமித்ரன்
:)

@செங்கோவி
நன்றி

@தமிழ் ஈட்டி
நான் ரொம்ப பிசி

@இக்பால் செல்வன்
ஆமாம்

@சுதர்சன்
அதனால் பரவாயில்லை இப்போது தெரிந்து கொண்டீர்கள் இல்லையா?

@ஜெயப்பிரகாஷ்
அது உண்மைதான்

@பா.ராஜாராம்
நன்றி

@ஷங்கர்
ம்

@பொன்.சிவா
ம் நன்றி

@சுகுணா
நன்றி

@மாதேவி
நன்றி

@நந்தா ஆண்டாள்மகன்
நன்றி

@சே.குமார்
நன்றி

@ஈரோடு கதிர்
நன்றி

@முகவைமைந்தன்
நிச்சயம்

TamilTechToday said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com