சாப்பாட்டுக்கடை – வள்ளி மெஸ்
பதிவர், நண்பர் சஞ்செய்யின் திருமணத்திற்காக தர்மபுரி சென்றிருந்தோம். திருமணத்தன்று காலையில் மிகவும் லேட்டாகத்தான் டிபன் சாப்பிட்டிருந்ததால், மதிய சாப்பாட்டை திருமணம் நடந்த மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு வந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தோம். என் நண்பர்களுக்கு போன் செய்து ”நல்ல மெஸ்ஸா இருந்தா ஒண்ணு சொல்லுங்க?” என்று கேட்ட அடுத்த விநாடி அவர்களிடமிருந்து வந்த பதில் “வள்ளி மெஸ்” தான்.
ரூம்பாயிடம் போய் வாங்கி வர முடியுமா என்று கேட்டால் சார் ஏற்கனவே கும்பல் இருக்கும் குறைந்தது ஒரு மணி நேரம் ஆயிரும். பேசாம போய் நின்னு சாப்ட்டு வந்திருங்க என்று சொல்ல, நானும் நண்பர் வெங்கியும், நேரில் போய் சாப்பிட்டுவிட்டு வருவதாகவும், மற்றவர்களுக்கு பார்சல் வாங்கி வருவதாகவும் சொல்லிவிட்டு அட்ரஸ் கேட்டு கிளம்பினோம்.
நெசவாளர் காலனி மெயின் ரோடில் உள்ளே நுழைந்ததும் இடது வலதென நிறைய மெஸ்கள் முளைத்திருந்தன. ரோட்டின் உள் பக்கம் கடைசியில் இருந்தது வள்ளி மெஸ். மிகச் சிறிய கடை. பதினைந்து பேருக்கு மேல் உட்கார முடியாது. வழக்கம் போல எல்லா நல்ல மெஸ்களிலும் சாப்பிட உட்காருவது போல் சாப்பிடுபவர் பக்கத்திலேயே நின்று கொண்டு, கிடைத்த நேரத்தில் சட்டென உட்கார வேண்டும். எங்களுக்கு ஏற்கனவே அந்த பழக்கம் இருபதால் சட்டென இடம் பிடித்து ஆளுக்கொரு சாப்பாடு சொல்லி, ஒரு மட்டன்,சிக்கன், மீன், ஆம்லெட்டையும் சொல்லிவிட்டு காத்திருக்க, சாப்பாடு போட்டவுடன் தான் தெரிந்தது ஏன் இவ்வளவு மக்கள் காத்திருந்து சாப்பிடுகிறார்கள் என்று?. சிக்கன், மட்டன், மீன் குழம்பில்லாமல், ரசம், வத்தக் குழம்பு என்று எல்லா அயிட்டங்களும் அசத்தல். நன்றாக மசாலாவில் ஊற வைத்து, கல்லில் போட்டு புரட்டி எடுக்கப்பட்ட நன்கு வெந்த மட்டன், சிக்கன், மீன் அயிட்டங்களை இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது. இந்த மெஸ்சின் சிறப்பம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க பெண்களால் சமைக்கப்படும் கிச்சன். பார்சல் வாங்கியவர்கள் காரக்குழம்பையே ரசம் போல் குடித்தார்கள். தர்மபுரி போகிறவர்கள் நிச்சயம் இந்த மெஸ்சில் சாப்பிட மிஸ் செய்யக் கூடாது.
வள்ளி மெஸ்
நெசவாளர் காலனி
மெயின் ரோட்
தர்மபுரி.
ஹரி தியேட்டர் எதிர்புறம்.
நெசவாளர் காலனி
மெயின் ரோட்
தர்மபுரி.
ஹரி தியேட்டர் எதிர்புறம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!
ஆத்து மாமிக்கு உம்முடைய தில்லாலங்கடி வேலைகள் தெரியுமோன்னோ? தெரியாதா...................... இரும் ஒய் மெயில் அனுப்புறேன்!
Regards,
Ovi
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
நீங்கதானா . . . . அவரு . . .
நன்றி
'Valli Mess' is a house hold name for our town people. I know this mess from my school days.
பகிர்வுக்கு நன்றி..
தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க..
http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_15.html
அது ரெண்டு பேருக்கும் சேர்த்து.. நாங்கல்லாம் டயட்ல இருக்கோமாக்கும்.. :)
@தமிழ்வாசி
நிச்சயம்
2சுக்கு மாணிக்கம்
அட்ரஸ் தரவா?:)
நிச்சயம் சொல்லுங்க..
@சிவகுமார்
எந்தா இது மோனே.. நெக்ஸ்ட் டைம் கூட்டிட்டு போறாம்.
@ம.த்.சுதா
ஆமா. சுதா.
ஆமாம் கேள்விப்பட்டேன். அடுத்த முறை வரும் போது சந்திப்போம்
@உதவி இயக்கம்
அப்ப அந்த ஆள் நீங்க தானா?
@சிவகாசி மாப்பிள்ளை
இது வேற டேஸ்ட் தலைவரே
@ஜேபரணி
மிக அருமையான் மெஸ் பரணி
ம்
@கவிதைவீதி செள்ந்தர்
நன்றி
@
அதே போல் அடுத்த முறை வாய்ப்பு கிட்டினால், வள்ளி மெஸில் முட்டை சட்டினி சாப்பிட்டு பாருங்க :) (இரவு மட்டும் கிடைக்கும்)