நான் – ஷர்மி -வைரம்
ஷர்மியை நான் முதன் முதலில் பார்த்தது, ஈசிஆரில் நடந்த ஒரு ப்ரைவேட் பார்ட்டியில்தான் அது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மிக சுவாரஸ்யமான பார்ட்டி. எங்களைப் போன்றவர்களைத் தவிர மற்ற ஆண்களுக்கு அனுமதி கிடையாது. நாங்கள் சென்னையின் பிரபல கால்பாய் நெட்வொர்க்கிலிருந்து அனுப்பப்பட்டவர்கள். நான், ராகுல், கந்தசாமி ஆனால் அவனை இம்மாதிரி அசைன்மெண்டுகளின் போது ராகேஷ் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்.
எங்களில் சிலரை நீங்கள் அடையாளம் கண்டிருக்கலாம். ஈசிஆரின் முக்கிய முக்குகளில், கேஃப், போன்ற காபி ஷாப்புகளின் வாசலில், சென்னையின் நட்சத்திர ஓட்டல் டிஸ்கோதேக்களில், டிஸ்கோ முடிந்து ஹோட்டல்களின் வெளியே கார் திரும்பும் இடத்தில், இரண்டு மூன்று பேராய் நின்றிருப்போம். நீங்கள் ஆணாக இருந்தால் நிச்சயம் ஏதோ குடித்துவிட்டு நின்றிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டோ, அல்லது உங்களது கேர்ள் ப்ரெண்டுகளை சப்பிக் கொண்டோ கிளம்பியிருப்பீர்கள். ஆனால் எங்களை சரியாக அடையாளம் காண அவர்களுக்குத் தெரியும்.
பெரும்பாலும் நடுத்தர வயது பெண்கள். முப்பதிற்கும் நாற்பதுக்கு நடுவே ஊஞ்சலாடும் இளமையானவர்கள். அந்த நடு ராத்திரியிலும், டிஸ்கோவிலிருந்து கிள்மபும் போது ரெஸ்ட் ரூம் போய் உதடு சிவக்க, லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு வருபவர்கள். இவர்களுக்கு நாங்கள் தான் டார்கெட். நான் இதனுள் வந்ததே ஒரு ஆக்ஸிடெண்ட் தான்.
பெரிதாய் படிப்பில்லை. ஆனால் பார்த்தால் தெரியாது. நுனி நாக்கு ஆங்கிலம் எனக்கு அத்துப்படி. காலேஜ் படிக்கும் நாட்களில் பெண்களின் பின்னால் காபிடேக்களிலும், சத்யம், ஐநாக்ஸுகளில் சுற்றி அலைந்தலைந்து ஃபிலிம் காட்டியே ஒரு மாதிரி செட்டாகிவிட்டது. எனக்கென பெரிய பேக்ரவுண்ட் கிடையாது. அக்கா ஒருத்தியிருக்கிறாள். அவ்வளவுதான். அவளும் ஏதோ ஒரு ஹாஸ்பிட்டலில் நர்சாக இருக்கிறாள் என்பது வரை மட்டுமே தெரியும். ராத்திரி படுக்க மட்டுமே வீட்டுக்கு போவது பல சமயம் அவளுக்கு வசதியாகவே இருந்தது. கடந்த மூன்று மாதமாய் ஒரு மாமா வந்திருக்கிறார். எத்தனை மாதத்திற்கு என்று தெரியாது.
இந்த மாமா வந்ததிலிருந்து கைச் செலவுக்கு காசு வாங்குவது கொஞ்சம் சிரமமாகவேயிருந்தது. எல்லாவற்றிக்கும் அக்காவையே எதிர்பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகவேயிருந்தது. வேலைக்கு போகலாம் என்றால் பெரும்பாலும் ஏதாவது கால் செண்டரில் நைட் ஷிப்ட்க்குத்தான் கூப்பிட்டார்கள். ராத்திரி பூராவும் முழித்துவிட்டு, காலையில் தூங்கும் வேலை எனக்கு பிடிக்கவில்லை. இரவைத் தவிர வேறேதும் தெரியாமல் போய்விடும் என்று நினைத்திருந்தேன்.
அப்போதுதான் அந்த விளம்பரத்தை தினசரியில் பார்த்தேன். “Get New Friendship, and New life” அணுகவும் என்று போன் செய்யச் சொல்லி ஒரு நம்பரை கொடுத்திருந்தார்கள். மனசுக்குள் ஆர்வ அரிப்பு ஆரம்பமாகியது. அது ஒரு டெல்லி நம்பர்.
ரீசார்ஜ் செய்து கொண்டு பேசிய போது, தெளிவாக ஆங்கிலத்தில் மாலின் என்பவள் பேசினாள். என்னைப் பற்றி விவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு, ”உங்களுக்கு என்ன மாதிரியான பேக்கேஜ் வேண்டும்? என்ஜாய்மெண்டா? அல்லது கேஷ்+என்ஜாய்மெண்டா?” என்று கேட்டாள்.. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை இப்படியெல்லாம் கூட சாத்தியமா? என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்முனைக் குரல் மீண்டும் “என்ன யோசிக்கிறீர்கள்?” என்று கேட்க, “கேஷ்+என்ஜாய்மெண்ட்” என்றேன்.
(தொடரும்)
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
கேபிள் ராக்ஸ்!
தொடருங்கள்.
இப்படத்தின் விமர்சனத்தை உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.
http://nasthenka.blogspot.com/2011/03/man-from-nowhere.html
- தண்டோரா (எ) மணிஜீ
நம்ம சைட்க்கு எல்லாம் சின்ன பசங்க வர்றதேயில்லை
-அருண்-
போன வாரம் எங்கே போனீங்க ? நீதியை நிலை நாட்ட தன்னந்தனியா போராட வேண்டியதா போச்சு
ரைட்டு தல..
அவர் உங்களைப்போல் முட்டாளில்லை..
”கேஷ்+என்ஜாய்மெண்ட்” புது character. இதை வைத்து வேறு கதையோ நாவலோ வந்ததாக நினைவில்லை. By the way,
auto-fiction... ;-) ம்... ம்... வெளுத்து வாங்குங்க...
சார்.. மிக்க் நன்றி.. முடிந்தவரை நன்றாக வர முயற்சிக்கிறேன். அது சரி ஆட்டோ பிக்ஷன் என்று இந்தகதையை பற்றியா எழுதியிருக்கிறீர்கள்..அவ்வ்வ்வ்:)