சின்ன பட்ஜெட்டில் படமெடுப்பது என்பது தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் அப்படி எடுக்கப்படும் சின்ன பட்ஜெட் படங்கள் சில சமயம் காதல், மைனா போல சரித்திரமாகிவிடுவது உண்டு. ஆனால் அதையடுத்து ஒரு இருநூறு படங்களாவது தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம் பிடிக்க முயற்சிக்கும் காலங்களில் இம்மாதிரி படங்கள் வருவதுண்டு.
நாட்டில் அரசியல்வாதிகள், ரவுடிகள், வக்கீல், ஏசிபி,முன்னாள் எம்.எல்.ஏ,ஆகியோர் கடத்தப்படுகின்றனர். யாரென்று பார்த்தால் ஒரு மாணவர் கும்பல் அதற்கு பொறுப்பேற்க்கிறது. முதல்வருக்கே போன் செய்து உங்களுக்கு ஈமெயில் அனுப்பியிருக்கிறேன் படித்துவிட்டு சொல்லுங்கள். எங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறோம் என்று சொல்கிறார்கள். மெயிலிருந்து ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. அதற்கு பிறகு கதை சொல்வது மிக ஈஸி. நேற்று பிறந்த குழந்தைக் கூட சொல்லிவிடும். ஒரு ஊருல ஒரு ரவுடி அவனை எதிர்த்த ஹீரோவை, பழிவாங்க அவனோட மொத்த குடும்பத்தையும் காலி செய்யுறாங்க. ஹீரோ குடும்பத்தை அழித்த கொடியவர்களை கடத்திக் கொண்டு வந்து ஒரு பெரிய கோரிக்கை வைகிறார். அது என்னவென்றால் என்னதான் சட்டம் தன் கடமையை செய்தாலும், ஜாமீன் என்கிற ஒரு கோர்ட்டு வஸ்துவை வைத்து எல்லோரும் வெளியேவந்து மீண்டும் தங்கள் அராஜகங்களை செய்கிறார்கள். எனவே ஜாமீன் என்கிற விஷயமே மொத்தமாக ஒழிக்கபடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். அது நடந்ததா? இல்லையான்னு முடிஞ்சா பாத்துக்கங்க.
நம்ம தொல்.திருமாவளவன் முதலமைச்சரா நடிச்சிருக்காரு. லிப் சிங்க் இல்லாம மீட்டிங்குல பேசுறா மாதிரி முவத்துல பகுடர் பூசி டச்சப் செய்யாம வேர்வையோட சில காட்சியில பேசியிருக்காரு. மக்களே உங்களுக்கு ஒரு கோரிக்கை. எப்படியாவது இவரை கொஞ்சம் அரசியல்ல பிஸியாக்குங்கப்பா.. நல்லதா போகும். படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும், ஏதோ ஒரு வகையில் நடிக்க பெரு முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

ஹீரோவாக நடித்திருப்பவர் தன்னை ரஜினி,விஜய் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி நடித்திருப்பதாக நினைத்துக் கொண்டு ஒரே பக்கமாய் பார்த்துக் கொண்டு வீர வசனம் பேசுவது போன்ற காமெடிக்கு குறைவில்லை. தனியே கேரட்டுக்கும், பீட்ரூட்டுக்கும் ஆங்கில பெயர் கேட்டு ஒரு காமெடி வரும்..ஹி..ஹி..
படத்தில் மிகப் பெரிய டிவிஸ்ட் என்று இயக்குனர் நினைத்திருக்கும் காட்சி செம காமெடி. ஊரு கோடியில இருக்கிற ஒரு சாதாரண குடிமக்ன் கிட்ட போன்ல பேசுற முதலமைச்சர், பக்கத்தில நடக்குற போலீஸ் அராஜகத்தை, ரவுடியிசத்தை பத்தி தெரியாமயா இருப்பாரு..? கிட்டத்தட்ட விடுதலை சிறுத்தைகள் பிரச்சார படம் போல இருக்கிறது. பெரிய பொருட் செலவில் படத்தை தயாரிச்சிருக்காங்க. ஏன்னா ஜீனியர் ஆர்டிஸ்டிலேர்ந்து ஹீரோ வரை எல்லார் மொவத்திலேயும் பேன் கேக்கை அப்பிவிட்டிருக்காங்க.. செலவு ஆவாதா என்ன?
மின்சாரம் – பெயரில் மட்டும்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
12 comments:
நீங்க கடேசியா போட்ருக்குற ஸ்டில்லருந்தே தெரியுது... திருமா தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க எவ்ளோ உழைக்கிறார்னு. தமிழ்ச் சமூகத்தை 'பள்ளத்தாக்கு'களிலிருந்து தூக்கி நிறுத்துவது என்ன சாதாரண காரியமா?! தொடரட்டும் திருமாவின் பணி :)))
eppudi sir
நா அப்பிடியே ஷாக்காயிட்டேன்....
//greatB said...
நா அப்பிடியே ஷாக்காயிட்டேன்...//
intha commentthaan naanum podarathaa irunthen.
vada poche!
படம் நல்லாயிருக்கோ இல்லையோ, ரெண்டாவதா போட்டிருக்கு பொண்ணு படம் அழகா இருக்கு. :-)
படத்தை விமர்சனம் செய்யா விட்டாலும் ஹீரோயின்ஸ் ஐ சரியா விமர்சனம் பண்ணுவிங்களே.. இதுல என்ன மறந்துடிங்களா? இல்ல மொக்கையாய் இருப்பதால் கண்டு(க்)காம விட்டுடிங்களா???
ரொம்ப முக்கியம்
http://www.sriramworld.net/Images/Minsaram/MinsaramFront.jpg
போஸ்டரையு போட்டால் யாரும் தெரியாம கூட போகமாட்டாங்கல்ல?
விமர்சனமா...
"பவர் ஸ்டார்" சீனிவாசனின் லத்திகா விமர்சனம் இன்னும் எழுதாமல் இருப்பதற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஷாக்....
நுண்ணரசியல்.....
ரசித்தேன்
தாம்பரம் நேஷ்ணளில் பார்த்தேன். மூணு நாலா சரியாய் சாப்பிட முடியல. அந்த பட கதாநாயகிய நினைச்சு குமட்டலா இருக்கு.
Post a Comment