சாப்பாட்டுக்கடை -ஆற்காடு ஸ்டார் பிரியாணி
பிரியாணி என்றதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஊர் பிரியாணி ஞாபகம் வரும். அதில் ஒரு முக்கிய ஊர் பிரியாணி ஆற்காடு ஸ்டார் பிரியாணி. ரொம்பவும் பிரசித்தமான பிரியாணி கடை. ஹைவேயிலிருந்து ஆற்காடு பைபாஸ் வழியாய ஆற்காடு பஸ்ஸ்டாண்டுக்கு போகும் வழியில் பழைய ஜோதி தியேட்டருக்கு எதிரில்(இப்போது அந்த தியேட்டர் இல்லை இடித்து விட்டார்கள்) ஆற்காடு பிரியாணி கடை இருக்கிறது.
காலை சுமார் 10 மணிக்கு ஆரம்பித்து மதியத்துக்குள் அண்டா காலியாகிவிடும். பெங்களூர் போகிறவர்கள் கூட ஊருகுள்ளே வந்து பார்சல் வாங்கிக் கொண்டு போவார்கள். பிரபல அரசியல்வாதிகளிலிருந்து நடிகர்கள் வரை யார் அந்த ஏரியாவை க்ராஸ் செய்தாலும் ரெண்டு பார்சல் இல்லாமல் போக மாட்டார்கள். அவ்வளவு சுவை. பிரியாணி தவிர வேறேதும் அயிட்டங்கள் அங்கில்லை என்றாலும். எப்போது கூட்டம் நிரம்பி வழியும். பார்சல் கட்டும் போது, மசாலாவோடா? இல்லை ப்ளையினா என்று கேட்டால் நீங்கள் என்னவோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள். பிரியாணி கிளறும் போது அடியில் தங்கியிருக்கும் பிரியாணி மசாலா அப்படியே சோறுடன் கலந்திருக்கும். நீங்கள் மசாலா பிரியர் என்றால் யோசிக்காமல் தலையாட்டி ம்ம்..என்று சொல்லிவிடுங்கள். அவ்வளவு சுவையாய் இருக்கும். இவர்களுடய பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் சாப்பிட்டு முடித்தவுடன் வேறு ஏதாவது பிரியாணி என்றால் கொஞ்சம் மந்தமாய் இரவு வரை வேறு ஏதும் சாப்பிட முடியாது. ஆனால் இவர்களுடயது அப்படிக் கிடையாது. ம்ம்ம்..நாலு மாசம் ஆச்சு.. அங்க போயி.
பழைய ஆற்காடு ஜோதி தியேட்டர் எதிரில்
பஸ்ஸ்டாண்டுக்கு முன்பு.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
சாதாரணமா சாபிட்டாலே கும்முன்னு இருக்கும்.... ரெண்டு பீர் குடிச்சிட்டு அந்த பிரியாணி சாப்பிடும் பொது...சான்சே இல்லை.... இப்பல்லாம் ஊருக்கு லீவ்ல போகும் போது மட்டும் ஒரு முறையாவது சாப்பிடுறேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
@நர்மதன்
ம்
2கழுகு
நன்றி
@கோவை நேரம்
போய் ஒரு கட்டு கட்டுங்கள்
@அரவிந்த்
நெட்டிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும்தான்
@கார்த்தி
அப்படியா.. எனக்கு தெரிந்து இல்லையே தலிவரே.. பார்க்கிறேன்.
@வேலன்
ப்ளாஷ்பேக்