சாப்பாட்டுக்கடை - கல்யாண பவன் பிரியாணி
பிரியாணி என்றதும் நாசியை துளைக்கும் மசாலா வாசனையும், அந்த பிரியாணியை வைத்திருக்கும் பாத்திரத்தில் டக் டக்கென அடிக்கும் சத்தமும் நிச்சயம் நம் மனதில் தோன்றும். அதே போல முஸ்லிம் வீட்டு திருமணங்களுக்கு போனால் தலைவாழை இலையோ, அல்லது இன்றைய கலாச்சாரமான பேப்பர் இலையையோ போட்டு, அதில் கத்திரிக்காய் சட்னி, வெங்காய பச்சடி, கேசரி போல ஒரு ஸ்வீட் அயிட்டம் வைப்பார்கள். அதன் பிறகு தான் ஒரு தட்டு நிறைய கறித்துண்டுகளுடன் பிரியாணியை ஒரு தள்ளு நம் இலையில் தள்ளிவிட்டு போவார்கள். சில பணக்கார திருமணங்களில் சிக்கன் 65 போன்ற அயிட்டங்களையும் சேர்த்திருப்பார்கள். அப்படி ஒரு திருமண டைப் பிரியாணியை சுவைக்க வேண்டுமா?
அப்படியானால் நீங்கள் போக வேண்டியது கல்யாண பவன் பிரியாணி கடைக்குத்தான். பாந்தியன் ரோடிலிருந்து கமிஷனர் ஆபீஸுக்கு போகும் ரோடில் ரவுண்டானாவை தாண்டியவுடன் இடது பக்கமாய் ஒரு பெரிய ஓட்டல் இருக்கும் அது தான் கல்யாண பவன் பிரியாணி கடை. உள்ளே போனால் முஸ்லிம் திருமணங்களில் போடுவதை போல தலை வாழை இலை போட்டு, திருமணம் மற்றும் விஷேஷங்களுக்கு போடப்படும் கேசரி போன்ற ஒரு ஸ்வீட்டுடன் பிரியாணியை பரிமாறுகிறார்கள். மட்டன், சிக்கன், 65 பிரியாணி என்று பிரியாணி வகைகள் மட்டுமே கிடைக்கும். செம சுவை. மத்யான நேரத்தில் போவதானால் நிச்சயம் பசிக்கு முன்னமே போவது நல்லது ஏனென்றால் காத்திருந்துதான் சாப்பிட வேண்டும்.
*******************************************************************
Comments
ஆமாம்... நீங்கள் ஏன் சாப்பாட்டுக்கடை பற்றிய தொகுப்பை அடுத்த புத்தகமாக வெளியிடக்கூடாது?//
கேபிள் பதில் இப்படி இருக்கலாம்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்குறாங்களே..