Thottal Thodarum

Mar 31, 2011

சாப்பாட்டுக்கடை - கல்யாண பவன் பிரியாணி

பிரியாணி என்றதும் நாசியை துளைக்கும் மசாலா வாசனையும், அந்த பிரியாணியை வைத்திருக்கும் பாத்திரத்தில் டக் டக்கென அடிக்கும் சத்தமும் நிச்சயம் நம் மனதில் தோன்றும். அதே போல முஸ்லிம் வீட்டு திருமணங்களுக்கு போனால் தலைவாழை இலையோ, அல்லது இன்றைய கலாச்சாரமான பேப்பர் இலையையோ போட்டு, அதில் கத்திரிக்காய் சட்னி, வெங்காய பச்சடி,  கேசரி போல ஒரு ஸ்வீட் அயிட்டம் வைப்பார்கள். அதன் பிறகு தான் ஒரு தட்டு நிறைய கறித்துண்டுகளுடன் பிரியாணியை ஒரு தள்ளு நம் இலையில் தள்ளிவிட்டு போவார்கள். சில பணக்கார திருமணங்களில் சிக்கன் 65 போன்ற அயிட்டங்களையும் சேர்த்திருப்பார்கள். அப்படி ஒரு திருமண டைப் பிரியாணியை சுவைக்க வேண்டுமா?

அப்படியானால் நீங்கள் போக வேண்டியது கல்யாண பவன் பிரியாணி கடைக்குத்தான். பாந்தியன் ரோடிலிருந்து கமிஷனர் ஆபீஸுக்கு போகும் ரோடில் ரவுண்டானாவை தாண்டியவுடன் இடது பக்கமாய் ஒரு பெரிய ஓட்டல் இருக்கும் அது தான்  கல்யாண பவன் பிரியாணி கடை. உள்ளே போனால் முஸ்லிம் திருமணங்களில் போடுவதை போல தலை வாழை இலை போட்டு, திருமணம் மற்றும் விஷேஷங்களுக்கு போடப்படும் கேசரி போன்ற ஒரு ஸ்வீட்டுடன் பிரியாணியை பரிமாறுகிறார்கள். மட்டன், சிக்கன், 65 பிரியாணி என்று பிரியாணி வகைகள் மட்டுமே கிடைக்கும். செம சுவை. மத்யான நேரத்தில் போவதானால் நிச்சயம் பசிக்கு முன்னமே போவது நல்லது ஏனென்றால் காத்திருந்துதான் சாப்பிட வேண்டும். 
*******************************************************************

Post a Comment

12 comments:

Unknown said...

ஊரில் கல்யாண வீட்டுக்கு போய்தான் பிரியாணி சாப்பிடமுடியவில்லை... கல்யாண பவனில் போய் சாப்பிட்டுதான் பார்ப்போமே.... ஒரு தட்டின் சாரி ஒரு இலலயின் விலை என்னவோ..?

Cable சங்கர் said...

நியாயமான விலைதான் சிநேகிதி.. சுமார் அறுபது முதல் அறுபத்தியைந்து வரை இருக்கும்.

vinthaimanithan said...

ஏற்கனவே நீங்கள் சிபாரிசு செய்ததன் பேரில் நான் கல்யாணபவனில் சாப்பிட்டிருக்கிறேன். எக்ஸலண்ட். ஆமாம்... நீங்கள் ஏன் சாப்பாட்டுக்கடை பற்றிய தொகுப்பை அடுத்த புத்தகமாக வெளியிடக்கூடாது?! சாப்பாட்டுக்கடை, கேபிளின் கதை என்று இரண்டு நான் - ஃபிக்க்ஷன்களும், நான் -ஷர்மி-வைரம் என்கிற நாவலும் கைவசம் இருக்கின்றதே? கூடிய சீக்கிரம் இயக்குனராகும் முன்னமேயே இவற்றை வெளியிட்டு விடுங்கள்! இது என் அன்புக்கட்டளை.

Sivakumar said...

கட்சி பிரச்சாரத்துக்கு போனா ஓசில பிரியாணிய செம கட்டு கட்டுறாங்க நம்ம ஆளுங்க. ராங் டைம்ல போஸ்ட் பண்ணி இருக்கீங்க.

Sivakumar said...

//விந்தைமனிதன் said...//
ஆமாம்... நீங்கள் ஏன் சாப்பாட்டுக்கடை பற்றிய தொகுப்பை அடுத்த புத்தகமாக வெளியிடக்கூடாது?//

கேபிள் பதில் இப்படி இருக்கலாம்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்குறாங்களே..

a said...

m. antha pakkam pokumpothu kalyan bavanil kandippaga stopping undu.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே !!! அப்போ திருமண பிரியாணி என்பது இதற்கு போட்டியா ? கிரின்ஸ் ரோடில் இருப்பது ...அங்கேயும் அதே வாழை, கேசரி மற்றும் கத்திரிக்காய் கொஸ்து :)

Arul said...
This comment has been removed by the author.
pradeep said...

நனபர் கேபிளுக்கு, தர்போது பிரியானியின் விலை 120.கல்யான் பிரியானியின் நீண்ட நாள் ரசிகன்.கல்யான் பிரியானிக்கு ஈடு எதுவும் இல்லை!!

சுரேகா.. said...

அந்தக்கடைக்கு ஒரு நண்பரோட போயிருக்கேன். அவர் சாப்பிட்டார். நான் வேடிக்கை பார்த்தேன்..! :)

ஜோசப் பால்ராஜ் said...

நெக்ஸ்ட் டைம் சென்னை வர்றப்ப அங்க கூட்டிட்டு போறிங்க. சரியா?

Sivabalan Kumbakonam said...

Super boss now chicken briyani is 145 mutton briyani is 160.. Chicken 65 is 105... Worthy for price and stomach...