Thottal Thodarum

Mar 31, 2011

காந்தி பைசெக்ஸுவலா?

25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி



mahatma bookசமீபத்தில் ஒரு புத்தகம் வெளியாகி இரண்டு மாநிலங்களில் அதற்கு தடை போட்டிருக்கிறார்கள்.Joseph Lelyveld’s Great Soul: Mahatma Gandhi and His Struggle With India  என்கிற இந்த புத்தகத்திற்குத்தான் இவ்வளவு ப்ரச்சனை. எழுதியவர் ஒன்றும் சாதாரணப்பட்டவர் அல்ல புலிட்சர் பரிசு பெற்றவர். முன்னாள் த நியுயார்க் டைம்ஸ் ஆசிரியர்.

இந்த புத்தகம் இது வரையில் இந்தியாவில் வெளியாகவில்லை என்றாலும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்து உருவான விவாதங்களினால் சூடு ஏறி, விஷயம் இந்திய அரசின் காதுகளுக்கு எட்டி, இன்று குஜராத்திலும், மஹாராஷ்ட்ராவிலும் இப்பதகத்தை தடை செய்திருக்கிறார்கள்.

புத்தகத்தில் காந்தியை ஒரு நிறவெறியர் என்றும் பைசெக்ஸுவல் என்று சொல்லியிருக்கிறாராம். அதாவது காந்திக்கும் ஜூயிஷ் உடற்பயிற்சியாளர் Herman Kallenbach என்பவருக்கும் இடையே செக்‌ஷுவல் தொடர்பு இருந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது.

ஊரில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஆளாளுக்கு திடீரென காந்தி பாசம் ஏறி அறிக்கை விட ஆரம்பித்திருக்கிற நேரத்தில், காந்தியின் பேரனான துஷார் காந்தி இந்த தடையுத்தரவை வன்மையாக கண்டித்திருக்கிறார்.  தடையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சாப்பாட்டுக்கடை -கல்யாண பவன் பிரியாணி

Post a Comment

19 comments:

vinthaimanithan said...

காந்தியை அவரது அரசியலுக்காக கடுமையாக எதிர்ப்பவர்களுள் நானும் ஒருவன். ஆனால் அவரது எதிரிகள்கூட சொல்லக்கூசும் குற்றச்சாட்டுகளைக்கூறி வெறுமனே விளம்பரத்துக்காக சீப்பாக இழிவுபடுத்துவது தண்டிக்கப்பட வேண்டியது.

கடைசிவரை தனிமனித வாழ்வில் யோக்கியமாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த ஒரு தலைவனை இழிவு படுத்தும் ஒருவனுக்கு நீங்கள் விளம்பரம் கொடுப்பதன் அரசியல் எனக்குப் புரியவில்லை :(

காந்தியை அவரது அரசியல் நிலைப்பாடுகளுக்காக இறுதிவரை எதிர்த்துவந்த ஈரோட்டுக்கிழவன் தந்தை பெரியார்கூட காந்தி இறந்தபோது "இந்த தேசத்துக்கு காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும்" எனக்கூறும் அளவுக்கு காந்தி என்கிற மனிதனின் தனிமனித வாழ்க்கை இருந்துவந்தது.

இனி சீப் பப்ளிசிட்டிக்காக எவன் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம். தடையில்லை :(((

பிரபல பதிவர் said...

பப்ளிசிடி பைத்தியங்கள் நிறைய இருக்கு தல...

CS. Mohan Kumar said...

:((

பிரபல பதிவர் said...

My life is my message - இத சொல்ற தைரியம் எந்த நாய்க்கும் கிடையாது... அந்த ஒருவரை தவிர.... தடை செய்வதைவிட - தூக்கு தண்டனை அறிவிக்க முடியுமா என்று பார்க்கலாம்....

Unknown said...

மிக கீழ்த்தரமான விமர்சனம் இது.. எழுதியது யாராக இருந்தாலும் நான் மிக வண்மையாக கண்டிக்கிறேன்..

மகாத்மா சத்திய சோதனையில் தன் அத்தனை விசயங்களையும் நேர்மையாக ஒத்துக்கொண்டிருக்கிறார்...

இது உண்மையாக இருப்பின் அதனையும் ஒத்துகொள்ளும் நேர்மை அவரிடம் இருந்தது..

Unknown said...

நீங்கள் பகிர்ந்து கொண்டுள்ள புகைப்படம் உள்குத்தாகவே எனக்கு தோனுகிறது..

shortfilmindia.com said...

தலைவரே அது அந்த புத்தகத்தோட அட்டைப்படம்.. நோ.. உள்குத்து.

rajasundararajan said...

நம்மை நம் மத போதனைகள் மிகவும் கெடுத்து வைத்திருக்கின்றன. ஆபிரகாமிய வேதங்களில், சோதோம் நகர நிகழ்ச்சிகள் வழி, ஒழுக்கத்தில் இவ்வொழுக்கம் கீழானதாகப் பேசப்பட்டு நம் மண்டைக்குள் திணிக்கப்பட்டுவிட்டது. (ஐயப்பன் பிறப்பை ஏற்றுக்கொள்ளும் மதத்தவரும் இம் மூளைச் சலவைக்கு இன்று அடைமைகள்).

சற்றுச் சிந்தியுங்கள்: ஒரு திருநங்கையை இழிந்தவராகக் கருத என்ன இருக்கிறது? காந்தி, பை-ஸெக்சுவல் என்ன, ஏ-ஸெக்ஸுவலாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே - அதனால் அவருக்கு இழிவு என்ன? இந்த உடல் அரசியல் ஓர் மனிதனின் செயல் உன்னதத்தை எப்படிக் கலங்கப் படுத்தக் கூடும்?

நம் மண்டக்குள் இப்படி அவியாத அறநெறிகள் இருப்பதால் இழிபட்டுக் கிடக்கிறோமே அன்றி மேற்கத்தியன் கூற்றுகளால் அல்ல.

குளிகன் said...
This comment has been removed by the author.
குளிகன் said...

ஒன்றை மட்டும் எண்ணிப்பார்க்கவும். நீங்கள் மதிக்கும் ஒரு தலைவரைப்பற்றி இன்னொருவர் இந்த மாதிரி வசைகளை எழுதினால் என்ன செய்வீர்கள்? கொதித்து எழுவீர்கள். ஆனால் காந்தியர்கள் எவரும் அப்படிச் செய்வதில்லை. அதுவே காந்திக்கும் நீங்கள் மதிக்கும் தலைவர்களுக்குமான அடிப்படை வேறுபாட்டைச் சுட்டிக்காட்டும். காந்தி வசைபாடப்படுகிறார் என்பதற்கான முதல் காரணம் அவருக்காக எவரும் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதே

திராவிட இயக்கங்களின் மயக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் காந்திய சிந்தனையாளர்கள்
கேவலப்படுத்தப்படுவது வெகு சாதாரணமே. ‘தியாகி’ என்ற சொல்லை ஒரு கேலிக்குரிய
விசயமாக பேசுவது திராவிட இயக்கத்தவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் கூட என்னுடைய தாத்தாவைப் பற்றிப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் தலைவர்கள் டால்மியாபுரத்தை, கல்லக்குடியாக மாற்ற போராட்டம் நடத்தியதுதான் தியாகம். இந்திமொழியை எதிர்த்து நடத்தியதுதான் போராட்டம். இன்று அவர்கள் எங்கு சென்று குலாவுகிறார்கள் என்று கேபிள் சங்கர் போன்றவர்களுக்குத் தெரியாது!

அவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகமல்ல, தெரிந்தவரையில் கூட கேள்வி கேட்பதென்பது இவர்களால் இயலாத ஒன்று

ஆனால் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் சொம்பு எடுத்துக்கொண்டு ஓடி வருவார்கள்

எவன் ஒருவன் ஆயுதம் இல்லாமலிருக்கிறானோ அவனை தைரியமாய் அடி என்பது இன்றைக்கு திராவிடம் கற்றுக்கொடுத்த வீரம்

Ashok D said...

naan rajasundararajan avargalai vazhimozhigiren

krish said...

நானும் ராஜா சுந்தரராஜனை வழிமொழிகிறேன். காந்தி பை செக்சுவலாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? அவர் அரசியல் நிலைப்பாடு மற்ற விஷயங்களில் தவறு செய்வதாக விமர்சித்தாலாவது ஒரு அர்த்தம் இருக்கு. இது மிகவும் கீழ்த்தரமான ஒரு விளம்பரம்.

Prabu M said...

இது ஒரு கீழ்த்தரமான விளம்பரம்..
நீங்கள் இதனை இப்படியொரு கேள்வியுடன் ஒரு பதிவாக வெளியிட்டிருப்பதும்தான்.

Unknown said...

@rajasundararajan... well said :))

உலக சினிமா ரசிகன் said...

நடுநிசிநாய்கள் பார்க்கும் போது ஏற்பட்ட அதே உணர்வு இப்பதிவை படிக்கும் போது ஏற்ப்பட்டது.

Anonymous said...

காந்தியடிகள் எப்படியாவது இருந்துப் போவட்டும் அது அவர் தனிப்பட்ட வாழ்க்கை.. அதற்காக புத்தகத்தை தடைப் பண்ணுவது எல்லாம் நாகரிமற்ற செயல் என்றே தோன்றுகிறது. மற்றடி அந்தப் புத்தகத்தை நேற்றே வாசித்துவிட்டேன் .. மிகவும் மாறுப்பட்ட ஒரு சரிதம்..

Unknown said...

இப்படிப்பட்ட புத்தகங்கள் வெளிவருவதால் காந்தியின் உன்னதத்தை குறைத்து விட முடியாது.ஆனால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதன் யாரும் இருக்கமுடியாது.

Savitha said...

காந்தி பற்றி தரக்குறைவாக பேசினாலோ எழுதினாலோ நாட்டை அவமதிக்கும் ட்ரீசன் என்று ஐ.பி.சி யில் இருக்கு. கஷ்டகாலம்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இந்த உடல் அரசியல் ஓர் மனிதனின் செயல் உன்னதத்தை எப்படிக் கலங்கப் படுத்தக் கூடும்?//
இது ஏனோ இந்தியர்களுக்கு மட்டும் புரிவதே இல்லை.