Thottal Thodarum

Mar 22, 2011

Dongalamutha- கேனான் 5டி கேமராவும், எட்டு நடிகர்களும், ராம்கோபால் வர்மாவும்

dongalamuthamovierev ராம் கோபால் வர்மா. இந்த பெயர் இந்திய சினிமாவில் பல பேருக்கு உற்சாகத்தை கொடுக்கும் பெயர். பல புதிய, கல்ட்டான விஷயங்களை மிகச் ஈஸியாக உடைத்தெறிந்தவர். அதே சமயம் அதற்காக படு பயங்கரமாய் விமர்சிக்கப்பட்டவரும் கூட. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டது கிடையாது. தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பது ஒன்றுதான் அவருடய முயற்சி. அப்படிப்பட்ட முயற்சியில் இந்தப்படமும் ஒன்று. இதில் அவர் நினைத்ததில் பாதி வெற்றி மீதி தோல்வி என்று தான் சொல்ல வேண்டும்.


DongalaMutha-Releasing-posters-wallpapers(1)
கேனான் 5டி கேமரா ஐந்து, ரவிதேஜா, ஷர்மி, பிரகாஷ்ராஜ், ப்ரம்மானந்தம், சுனில், மற்றும் சில நடிகர்கள் அனைவருக்கும் சம்பளம் கிடையாது. படத்தின் அவர்களும் ஒரு அங்கம். மொத்தம் ஐந்தே ஐந்து நாள் தான் படப்பிடிப்பு, ஒரே லொக்கேஷன், லொக்கேஷனில் கிடைக்கும் வெளிச்சத்தை வைத்தே முழு படப்பிடிப்பு என்று வெறும் ஆறு லட்சத்தில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார். இவ்வளவு நடிகர்களையும், டெக்னிக்கலாக ஒரு சிறந்த குழுவை அமைத்து, வெற்றிகரமாக குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள், நாட்களுக்குள் முடிக்க அருமையான முன்னேற்பாட்டை செய்த ராம்கோபால் வர்மா. கொஞ்சமே கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ஒரு கல்ட் வெற்றிப் படமாய் அமைந்திருக்கும்.

ரவிதேஜாவும், ஷர்மியும் காரில் வெளியூருக்கு போய்க் கொண்டிருக்க, வழியில் வண்டி ரிப்பேராகி விடுகிறது. அருகில் இருக்கும் ஒரு டொக்கு ரிஸாட்டில் தங்கி காரை சரி செய்து கொண்டு போகலாம் என்று ரூமெடுக்கிறார்கள். அந்த அடாசு ரிஸாட் ஒரு பாழடைந்த மாளிகையைப் போல இருக்க, இவர்கள் தங்கும் அறைக்கு அடுத்துள்ள அறையில் பேய் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் தான் படம்.  
dongalamutha (4) ரவிதேஜா மிக ஈஸியாக ஃபீல் செய்து நடித்திருக்கிறார். ஷர்மியும் அஃதே. பாதி படத்தில் வரும் பிரகாஷ் ராஜும், பிரம்மானந்தமும் தங்கள் இருப்பை நிருபிக்கிறார்கள். வித்யாசமான கழுத்தே இல்லாத ஒரு உடல் மொழியோடு வரும் பிரம்மாஜியின் நடிப்பு பயத்தை கொடுக்காமல் சிரிப்பையே கொடுக்கிறது.

கேமராமேனே கிடையாது. EFXகுழுவினரை வைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கேனான் 5டியின் அத்துனை சாதுர்யங்களையும் உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் இயக்குனரின் இதற்கு முந்தைய படங்களிலேயே இந்த கேமராவில் வைக்கப்பட்டிருக்கும் ஆங்கிள்களை விட வித்யாசமான ஆங்கிள்களை சினிமா கேமராவிலேயே வைத்திருப்பார்.நிச்சயம் ஒரு திரைப்படத்துக்கான எல்லா விஷயங்களையும் இதில் செய்ய முடியுமென்று நிருபித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பே நம் தமிழ் பட உலகத்தினர் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி என்கிற படத்தில் மிரட்டியிருப்பார்கள். 
dongalamutha (1) பிண்ணனி இசை அமர் மோஹில். செவ்வனே செய்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது இருக்கும் க்ரிப் இந்த 90 நிமிடப் படத்தில் முழுவதுமாய் இல்லை என்பது பெரிய குறையே.. எந்தவித நிகழ்வுமே இல்லாமல் ரிப்பீட்டடான ஒரே விதமான காட்சிகள், ஒரே வசனத்தை வைத்து திரும்ப திரும்ப பேசும் அர்த்தமில்லா பில்டப்புகள் என்று கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறார் இயக்குனர். அருமையான ஆரம்பத்தை கொடுத்த இயக்குனர் பாதி படத்திற்கு மேல் இது சீரியஸ் படமா? த்ரில்லர் படமா? பேய் படமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது காமெடிப்படமாய் மாறிப் போவது கொஞ்சம் ஏமாற்றமே.
Dongalu Mutha- Only For R.G.V
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்



Post a Comment

14 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

///இது சீரியஸ் படமா? த்ரில்லர் படமா? பேய் படமா?/// இப்படியெல்லாம் எங்கள கன்பியுஸ் பண்ணக் கூடாது..ஆமா!

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

உளவாளி said...

கொஞ்சம் நேரம் எடுத்து நிதானமா படம் பண்ண என்ன?

Unknown said...

நம்மால 25 லட்சத்துல ஒரு படம் எடுக்க முடியாதா?

Ba La said...

The review reminds me the movie 'Identity'
http://www.imdb.com/title/tt0309698/

Unknown said...

பாஸ், காசுக்குத் தகுந்த தோசை தானே வரும். 6 லட்சத்துக்கு இதுவே ஒரு நல்ல முயற்சி இல்லையா!

இங்கே உள்ள செய்தித் தாள்களில் படம் சுத்த வேஸ்ட்னு விமர்சனம் எழுதுறாங்க. அப்பள்ராஜூ படத்து மேல உள்ள டோலிவுட்டின் கோபத்தை இந்தப் படத்து மேல காட்டி தீத்துக்குறாங்களோன்னு தோணுது.

இன்னொரு விஷயம், பாட்டே இல்லாத படத்துல கணிசம் காமெடியாவது இருந்தாத் தான் கொஞ்சமாவது ரசிக்க முடியும். ஒரே டயலாகை எல்லா கேரக்டரும் சொன்னது தவிர்த்து எதுவுமே வலிந்து திணித்ததாகத் தோண்றவில்லை.

ஒரு சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம். கேமெரா சார்மியின் இடுப்பையே காட்டிக் கொண்டிருந்தது, ரவி தேஜா ஒரே பாதையில் நடந்து போவதை அடிக்கடி காட்டியது, ப்ரம்மாஜியின் பாடி லேங்குவேஜ், போன்றவற்றைச் சொல்லலாம்.

சரியாகத் தொன்னூறு நிமிடத்துக்கு ஒரு படம் வருவது என்பது தியேட்டர் காரர்களுக்கும் நல்ல விஷயம் தான். ஒன்றிரண்டு ஷோ எக்ஸ்ட்ராவாகக் காட்டலாம். கடந்த ஞாயிறு மதியம் படம் பார்த்தேன். 350 சீட்டுகளுள்ள அரங்கில் 150+ சீட்டுகள் நிரம்பியிருந்தன. வார இறுதியே இப்படி என்றால் வார நாட்களில் இன்னும் குறைவாகத் தான் இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் 25000 பேர் இந்தப் படத்தைப் பார்த்தாலே படத்தின் மொத்த செலவையும் எடுத்துவிடலாம்.

டெக்னிக்கல் விஷயங்களில் அதிகம் அக்கறை செலுத்தாத என்னைப் போன்றவர்களுக்குப் இந்தப் படம் நல்ல பொழுது போக்கு தான். வேணும்னா இதை “காமெடி த்ரில்லர்” அல்லது “திரில்லர் காமெடி” என்று வகைப்படுத்தலாம். :)

'பரிவை' சே.குமார் said...

6 லட்சத்துக்கு ஒரு நல்ல முயற்சி இல்லையா?

Thirumalai Kandasami said...

இந்த படம் ஆரோக்கியமான புது முயற்சி என்ற வகையில் ஏற்று கொள்ளலாம்.

ஒரு அரசியல்வாதி உருவான கதை

நேசமித்ரன் said...

@ http://www.blogger.com/profile/00109845562741363082

கே.ஆர்.பியாரே

நம்மால் நிச்சயம் முடியும் :)

YESRAMESH said...

தொங்கல முதா இல்லை. தொங்கல முடா. திருட்டு கும்பல்.

நர்மதன் said...

இதையும் பாருங்க

கவுண்டமணியின் சில மணியோசைகள்

R.Gopi said...

சங்கர் ஜி....

சார்மியின் “நடிப்பை” பற்றி “ஸ்பெஷலா” சொல்றதுக்கு ஒண்ணும் இல்லையோ...

இப்போ எல்லாம் அக்கட பூமியில சார்மிய போட்டு உரிச்சு எடுக்கறாய்ங்களாமே .. அதான் கேட்டேன்....

Cable சங்கர் said...

@விஜய கோபால்சாமி

எனக்கு ராம்கோபால் வர்மாவின் முந்தைய படமான அப்பளராஜுவைப் பற்றிய அங்குள்ள நடிகர் நடிகைகளின் கருத்துப் பற்றி ஆச்சர்யமாக இருக்கிறது. இதை விட கிண்டலடித்து படமெடுத்திருக்கிறார்கள். சாதாரணமாக நம்மூரில் தான் அவ்வளவாக சகிப்புத்தன்மை இருக்காது.

நீங்க சொன்னது போல காமெடி த்ரில்லரா.. அல்லது த்ரில்லர் காமெடியா என்று கொஞ்சம் குழப்பமாய்த்தான் உள்ளது.

Cable சங்கர் said...

#உளவாளி
பண்ணியிருக்கலாம்தான் யார் வேணாம்னு சொன்னாங்க.. ம்ஹும்.

Cable சங்கர் said...

சார்மியின் நடிப்பு..பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் அவரின் ஜீன்ஸ் பேண்டிற்குள்ளும் ஏதோ இருக்கிறது என்பது போன்ற ஷாட்கள் ஏராளம். :)