
கோ சூன் யங் ஒரு பிரபல டிவி தொகுப்பாளினி, நடுநிசி ரேடியோ ஜாக்கியும் கூட. சிங்கிள் பேரண்டாய் தன் மகளை போஷித்துவரும் கோவின் மகளுக்கு உடல்நிலை கோளாறு காரணமாய் பேச்சு வரவில்லை. அதை குணப்படுத்த ஆபரேஷன் செய்வதற்காக, தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கா செல்லவிருக்கிறாள். கடைசி நாள் நிகழ்ச்சியை சிறப்பாக முடிக்க போகும் முன் தன் அக்காவை அழைத்து குழந்தையை பார்த்துக் கொள்ள வரச் சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்கு செல்கிறாள்.

நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முன் ஒரு போன் கால் வருகிறது. அதில் ஒரு ஆண் குரல். அவன் ரேடியோ ஸ்டேஷனுக்கு இன்றைய ப்ளேலிஸ்டை பேக்ஸ் அனுப்பியிருப்பதாகவும், அதில் உள்ள பாடல்களை அதே வரிசையில் போட வேண்டும், இல்லாவிட்டால் உன் அக்காவை, அவளின் பெண்ணை, உன் குழந்தையை கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுக்கிறான். அவன் அவளுடய ரசிகன் என்றும், அவளின் கடைசி நிகழ்ச்சி தன்னுடயதாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் சொல்கிறான். நீ போய்விட்டால் அந்த நிகழ்ச்சிக்கு வேறு யாரும் சரியாக வரமாட்டார்கள் என்றும் அடிக்கடி சொல்கிறான். அதே நேரத்தில் அதே நிகழ்ச்சியில் பங்கு கொள்ள, பார்ப்பதற்கு மெண்டலி ரிட்டார்டர் போன்ற தீவிர ரசிகனும் வருகிறான். போலீஸுக்கு சொல்லக்கூடாது என்று கொலையாளி மிரட்டியிருந்தாலும், போலீஸுக்கு தகவல் கொடுக்கிறாள். வீட்டை சோதனையிடப் போகும் போலீஸாரை ரிஞ்சால் அடித்து கொலை செய்துவிட்டு அதை 3ஜி விடியோ போன் மூலமாய் அவளுக்கு காட்டுகிறான். ”உனக்கென்ன பிரச்சனை.. போலீஸுக்கு சொல்லாதே என்று தானே சொன்னேன். நான் சொன்ன பாடல்களை போடுவது என்ன அவ்வளவு கஷ்டமா?” என்று கேட்டுவிட்டு, அவ்ன் சொன்ன பாடலை போடாததால் அவள் அக்காவின் கால் சுண்டு விரலை கட் செய்து காட்டுகிறான்.

வேறு வழியில்லாமல் அவள் அவன் சொல்படியே பாடலைப் போட விழைய, ஆனால் அவன் அவளின் முதல் நாள் ஒளிபரப்பின் போது என்ன பேசி பாடலைப் போட்டாளோ? அதே வசனங்களைப் பேசி பாடலை ஒளிபரப்ப வேண்டும் கேட்கிறான். இல்லாவிட்டால் உன் அக்காவை கொன்று விடுவேன் எனச் சொல்ல, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கும் அவளது ரசிகனிடம் கேட்டு சொல்லி நிகழ்ச்சியை நடத்துக்கிறாள். இந்நிலையில் கொலையாளி அவளின் வீட்டில் நுழையும் போதே அவனை பார்த்து விடும் கோவின் வாய் பேச முடியாத மகள் வீட்டிற்குள்ளேயே ஒளிந்திருக்க, ஒரு கட்டத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் கோ எப்படி தன்னிஷ்டத்திற்கு பாடலைப் போடலாம்? என்று மாற்றிவிட, அதனால் கோபப்பட்ட அந்த கொலையாளி அவள் அக்காவை கொன்று விட்டு, அவளின் மகளை பிடித்து வைக்கிறான்.

இன்னொரு பக்கம் நிகழ்ச்சி லைவ்வாக போவதால் அங்கு நடக்கும் எல்லாவிதமான பேச்சுக்களும் மக்களுக்கு தெரிய அந்த நள்ளிரவில் பத்திரிக்கை, டிவி எல்லாம் பரபரப்பாகிறது. கொலையாளி ஒரு மன நோயாளி என்றும், இதற்கு முன் அவன் பல கொலைகள் செய்திருப்பதாகவும், அவன் ஒரு சைக்கோ என்றும் தெரிய வருகிறது. ஸ்டியோவிலிருந்து ப்ராட்காஸ்டிங் வேனில் ஒளிபரப்பிக் கொண்டே வீட்டையடைய, அப்போது கோவின் மகள் அவளது சகோதரியையும், காப்பாற்றி தப்பிக்க முயல, வழிமறித்து இருவரையும் தூக்கிக் காரில் போட்டுக் கொண்டு கிளம்புகிறான். கடைசியில் அவள் தன் குழந்தையை காப்பாற்றினாளா? அவன் ஏன் இப்படிச் செய்கிறான் என்பதற்கான விளக்கதை டோரண்டிலோ, டிவிடியிலோ கண்டு களியுங்கள்.

படம் ஆரம்பித்த, முதல் பத்து நிமிடங்களில் நம்மை பரபரப்பில் ஆழ்த்தி விடுகிறார்கள். பெரிய பில்டப் ஏதுமில்லாமல், வெகு சில காட்சியிலேயே கதாநாயகி, அவள் எப்பேர்ப்பட்டவள், அவளது வாழ்க்கை, என்பதைப் போன்ற பல விஷயங்களை சின்ன சின்ன வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி நம்மை ஆயத்தப்படுத்திவிடுகிறார்கள். அவளுக்கும் அவளது மகளுக்குமான போன் மூலம் கை விரலால் டாப் செய்யும் உத்தியை க்ளைமாக்ஸ் வரை புத்திசாலித்தனமாய் கொண்டு சேர்த்திருப்பது இண்ட்ரஸ்டிங். அதே போல் கொலையாளி சைக்கோவாக இருந்தாலும் கோவின் தீவிர விசிறியாக இருப்பதும், அவள் நாட்டில் நடக்கும் அநியாயங்களைப் பற்றி அன்றைய தினத்தில் இதை யாராவது தடுக்க மாட்டார்களா? என்பது போல பேசியதை வைத்து அவன் தன்னை ஹீரோவாக ஃபீல் செய்து தொடர் கொலை செய்வதை, மிகக் குறுகிய நேரத்தில் நமக்கு உணர்த்தியிருப்பது இயக்குனர் கிம் சாங் மானின் வெற்றி எனத்தான் சொல்ல வேண்டும்.

கொஞ்சம் மனநலம் குன்றியவராக நிகழ்ச்சியில் பங்கேற்ற வரும் ரசிகரை பற்றிய மோசமான பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாறி, அவர் தன்னையும், தன் குழந்தைகளையும், உயிரைக் கொடுத்து காப்பாற்ற முயலும் போது நெகிழ்வாயிருக்கிறது. கதாநாயகியின் நடிப்பும், பொம்மைப் போல இருந்துக் கொண்டு, செம ஸ்மார்ட்டாய் தப்பிக்க நினைக்கும் அந்த வாய் பேச முடியாக் குழந்தை, இண்ட்ரஸ்டிங்கான கதைக் களம், திறமையான நடிப்பு, பரபரப்பான திரைக்கதை, கொஞ்சம் ஆங்காங்கே வரும் க்ளிஷே காட்சிகள் என்று சில மைனஸுகள் இருந்தாலும், ஒரு திருப்தியான திரில்லர் அனுபவத்தை கொடுத்த படம்.
Comments
for any one interested http://thepiratebay.org/torrent/6025360/Midnight.FM.2010.KOR.HDRip.x264.720p-PREGM
Thanks.
//நிகழ்ச்சியை ஆர்ம்பிக்கும்//
ஆரம்பிக்கும்
//அதனால் கோபப்பட்ட அந்த கொளையாளி//
கொலையாளி
பார்த்து எழுதுங்க சகோ.
இப்படிக்கு,
-தமிழ் காக்கும் இளைஞர் படை.
-அருண்-
எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.
ஓ ரேடியோ ஜாக்கியா....!!! நான்கூட நம்ம ஜாக்கியைப் பத்திதான் ஏதோ சொல்லியிருக்கீங்கன்னு பதறியடிச்சு ஓடிவந்தேன்...///
நானும்தான்.... :)))))
ஏற்கனவே ஐ சா தி டெவில் மற்றும் சில கொரிய படங்கள். எல்லாமே சைக்கோ கதைகள்.
இன்னொரு கொரிய சைக்கோ படமா?
இந்த ரேட்ல போனா கொரியாக்காரங்கள பார்த்தாலே சைக்கோ கத்திக்கிட்டு ஓடனும் போல இருக்கு :)
நம் ஊர்ல காதல் போல அவங்களால சைக்கோ இல்லாம படம் எடுக்க முடியாது போலிருக்கு :)
ஏற்கனவே ஐ சா தி டெவில் மற்றும் சில கொரிய படங்கள். எல்லாமே சைக்கோ கதைகள்.
இன்னொரு கொரிய சைக்கோ படமா?
இந்த ரேட்ல போனா கொரியாக்காரங்கள பார்த்தாலே சைக்கோ கத்திக்கிட்டு ஓடனும் போல இருக்கு :)
நம் ஊர்ல காதல் போல அவங்களால சைக்கோ இல்லாம படம் எடுக்க முடியாது போலிருக்கு :)
நன்றி
@ரோகிணி சிவா
நன்றி
@சே.குமார்
நன்றி
@டாரு
பார்த்துட்டு சொல்லுங்க
@மனோ
ம்
@தமிழ் ஈட்டி
உங்க கடமையுணர்ச்சிக்கு அளவேயில்லையா? அவ்வ்
@ஒரு வாசகன்
ம்
@பிலாசபி பிரபாகரன்
ஆவூன்னா ஜாக்கிய போட்டு இழுங்கய்யா.. அவ்வ்வ்
@தமிழ் வாசி பிரகாஷ்
பார்த்துருவோம்
முடிந்தவரை டவுன்லோட் செய்துதான் பார்க்கிறேன். அப்படங்களுக்கான சப்டைட்டிலையும் டவுன்லோட் செய்துதான் பார்க்கிறேன்
@முரளி
அதுசரி
@யாசவி
ஹா..ஹா..
u saw the another korean psycho thriller ''CHASEAR'
it is really gud movie