தமிழ் சினிமாவிற்கு ஒரு டெம்ப்ளேட் மசாலாக் கதைகள் போல் ஹாலிவுட்டுக்கென்று சில டெம்ப்ளேட் மசாலாக் கதைகள் இருக்கிறது. அதுவும் ஒரு படம் ஹிட் ஆகிவிட்டதென்றால், தொடர்ந்து அதே போல் பார்ட்டு பார்ட்டாக எடுத்து தள்ளுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
ஒரு டிஸாஸ்டர் படம் ஹிட்டானது. அடுத்து ஒலகம் அழிப்போவுது பூமாதேவி உக்கிரமாயிட்டான்னு 2010னு ஒரு படம் சக்கைப் போடு போட்டது. உடனே அதைப் போல ஒரு நாலு படம் எடுக்க ஆரம்பிச்சதுல வந்திருக்கிற படம் தான் இன்வேஷன்: பேட்டில் ஆப் லாஸ் ஏஞ்செல்ஸ்.
எங்கிருந்தோ ஒரு பெரிய விண்கலம் ஊர் பூராவும் நானூறு மடங்கு பவர்புல்லான ரோபோவும் இல்லாத, ஏலியனுமில்லாத ஒரு வகையான ஜந்துக்கள் ஆளாளுக்கு ஒரு துப்பாக்கிய எடுத்து கொண்டு பார்பவைகளை எல்லாம் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இல்லாமல் ஒரு பத்து இருபது மினி ஸ்பேஸ் மிஷின்கள் வேறு, ஊரையே சுட்டு தீக்க்கிரையாக்குகிறது.
இதற்கு பிறகு என்ன நடக்கும்னு சொல்லுங்க.. சின்னக் குழந்தைகூட சொல்லிரும். ஒரு நாலு பேர் கொண்ட குழு அதுல ஒரு டிஜெக்டெட் ஆபீசர். காப்பாற்றும் குழுவில் இரண்டு மூன்று குழந்தைகள். உடன் வேலை செய்ய மறுக்கும் இரண்டு, மூன்று சோல்ஜர்கள், க்ளைமாக்ஸ் நெருங்கும் போது ஒரு பத்து நிமிஷம் வீர உரை, அப்புறம் சொதப்பலான க்ளைமாக்ஸ். ங்கொய்யால.. நாம ஜோதி தியேட்டர்ல பிட் பாக்கும் போது வெளியே பத்து ரூபாய்க்கு சிகப்பு கலர்ல ஸ்கீரின் மேல அடிக்க ரெட் கலர் லேசர் டார்ச் வச்சிருப்போமில்ல. அதை விட் கொஞ்ச பெருசா ஒண்ணை வச்சி அதுக்கு எங்கிருந்து கரெண்ட், பேட்டரி எல்லாம் எடுக்கிறாங்கன்னு தெரியலை. அந்த லேசரை தாய் களன் மேல அடிச்சி உலகத்தை காப்பாத்துறாங்களாம். டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. கொண்டேபுடுவேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்Post a Comment
25 comments:
ஒரு டிஸாஸ்டர் படம் ஹிட்டானது. அடுத்து ஒலகம் அழிப்போவுது பூமாதேவி உக்கிரமாயிட்டான்னு 2010னு ஒரு படம் சக்கைப் போடு போட்டது.////////////////////////
பாஸ், அது 2012 அப்புடின்னு நெனைக்குறேன்........
உலகத்துல என்ன நடந்தாலும் அத அமெரிக்க காரங்கதான் காப்பாத்துவானுங்க.. உலக வரைபடத்துல வேற நாடே இல்லையா? என்ன கொடும சார் இது......
அழியப் போற ஒலகம் எப்ப அழிஞ்சா என்ன உளவாளி..
சரி போன வருஷமே அழிஞ்சதா வச்சிப்போம்...:)
அட ராமா,,,
இந்த படம் ரிலீஸ் அன்றுதான் ஜப்பானில் சுனாமி.... எனவே இந்த படத்தால்தான் சுனாமி என்று எடுத்துக் கொள்ளலாமா தல...... நீங்க கமல் குருதிபுனல் எடுத்துதான் தமிழ் சினிமாவ காப்பாத்துனாருன்னு சொல்ற மாதிரி.....
மாப்பிள்ளை நீங்க அந்த லிஸ்டுல சேர மாட்டீங்கன்னு நினைச்சேன்.
தல... முத டால்பி படம் குருதிபுனல்தான்.... ஆனா அந்த பட படுதோல்வி உடனடியா மத்த படங்கள் அந்த டெக்னாலஜி உபயோகபடுத்த முடியாம பண்ணிருச்சி... இந்த நுணுக்கமான உண்மைய நீங்க கண்ண மூடிக்கிட்டு மறைக்கிற வரைக்கும் அந்த லிஸ்ட்லதான் இருந்தாகனும் தல...
ஏன் ரஜினி முதன் முதல் டிடிஎஸ் யூஸ் பண்ண படமும் படு தோல்விதான்.....
ஒருவேளை இந்த லைவ் ரிகார்டிங் எழவு எதிர்காலத்தில ஹிட்டான உடனே கமல் ம.அ. பயன்படுத்தி தமிழ் சினிமாவ காப்பாத்தினாருங்கிறதுதான் அபத்தம்... மத்தபடி கமல் ஹாலிவுட்லேர்ந்து டெக்னாலஜி மற்றும் கதையை உடனே காப்பியடிச்சி அரைவேக்காடா ஒரு முதல் தமிழ் முயற்சி சினிமா பண்ணிடுவார்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை (பர்டிகுலர்லி அடுத்தவன் காசுல)....
ஏன் தல,தெரிஞ்சே போய் விழுறீங்க?
படத்தின் வெற்றி தோல்வி பற்றி இங்கு பேச் வரவில்லை.. முதலில் யார் பூனைக்கு இங்கு மணி கட்டுகிறார்கள் என்பதுதான் பேச்சு.
குருதிப்புனல் அவர் சொந்தப்படம். அநேகமாய் நீங்களும் “அந்த’ லிஸ்டில் சேர ஆரம்பித்துவிட்டீர்கள் என்று தெரிகிறது.:)
வேற வழியேயில்லாம படத்தோடவிநியோகஸ்தர் கூட்டிட்டு போய் உட்கார வச்சிட்டாரு. சத்யம் தியேட்டர்ல முத மூணு ரோ பத்து ரூபா டிக்கெட் அது மட்டும்தான் புல். பின்னாடி இருந்த நூற் ரூபா டிக்கெட்டுல நான் மட்டும்தான்.
சங்கர் நாராயண் @ Cable Sankar said...
வேற வழியேயில்லாம படத்தோடவிநியோகஸ்தர் கூட்டிட்டு போய் உட்கார வச்சிட்டாரு. சத்யம் தியேட்டர்ல முத மூணு ரோ பத்து ரூபா டிக்கெட் அது மட்டும்தான் புல். பின்னாடி இருந்த நூற் ரூபா டிக்கெட்டுல நான் மட்டும்தான்
//
இப்டில்லாம் மாட்றீங்களா???.... அந்த முத மூணு ரோ சரக்கடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க... எப்பவுமே ஃபுல்லாத்தான் இருக்கும்.....
//AM
சங்கர் நாராயண் @ Cable Sankar said...
படத்தின் வெற்றி தோல்வி பற்றி இங்கு பேச் வரவில்லை.. முதலில் யார் பூனைக்கு இங்கு மணி கட்டுகிறார்கள் என்பதுதான் பேச்சு.
//
முதல் டால்பி படம்கிறதோட நிறுத்தீருந்தீங்கன்னா லிஸ்டில வந்திருக்க மாட்டேன்.... தமிழ் சின்மாவின் ஆபத்பாந்தவன்... அனாத ரட்சகன்..... காப்பாத்த வந்த கடவுள் என்று சொன்னதுனாலதான் கொஞ்சம் எட்டி பாக்க வேண்டியதாயிருச்சி.... நாங்க என்ன கமல் அப்ப்டி இல்லன்னா சொல்றோம்...இருந்தா நல்லாருக்கும்தானே சொல்றோம்.....
மீண்டும் சொல்கிறேன் மாப்பிள்ளை. தயவு செய்து நீங்கள் அந்த லிஸ்டில் இடம் பெறாதீர்கள். நீங்கள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும், சில விஷய்ங்களை ஏற்க மறுத்தாலும் உண்மை அதுதான்.ஸோ.. நோ ..மோர் ஆர்க்யூமெண்ட்ஸ். நான் எவ்வளவு நடுநிலை என்று பின் வரும் சினிமா வியாபாரம் தொடரைபடித்துவிட்டு முடிவு செய்து கொள்ளவும்.
தொடர மட்டும் படிக்காம புத்தகமா வெளிவந்தததும் வாங்கியும் படிப்போம்.....
கண்டிப்பா வெயிட் பண்றோம்....
ஒகே நோ மோர் ஆர்கியுமெண்ட்ஸ்.... உண்மை உண்மைதான் என்று ஒத்து கொண்டதால்....
என்ன கொடும இது...
அப்பா இந்த படமும் மொக்கையா...
//Sathishkumar said...
அப்பா இந்த படமும் மொக்கையா...
//
தல... யாரு இந்த குயந்த.... உண்மைய சொல்லுங்க
"தமிழ் சினிமாவிற்கு ஒரு டெம்ப்ளேட் மசாலாக் கதைகள் போல் ஹாலிவுட்டுக்கென்று சில டெம்ப்ளேட் மசாலாக் கதைகள் இருக்கிறது"
அதே போல , "வித்தியாசமான "படங்களுக்கு என்றே கமல் ஒரு டெம்ப்ளேட் வைத்து இருப்பாரே .. அதை விட்டு விட்டீர்களே...
.... "ஆனா அந்த பட படுதோல்வி உடனடியா மத்த படங்கள் அந்த டெக்னாலஜி உபயோகபடுத்த முடியாம பண்ணிருச்சி..."
போன வாரம் எங்கே சென்றாய் நண்பா?
நல்ல வேளை ..இப்போதாவது உண்மைக்கு குரல் கொடுக்க வந்ததற்கு நன்றி
அநேகமாய் நீங்களும் “அந்த’ லிஸ்டில் சேர ஆரம்பித்துவிட்டீர்கள் என்று தெரிகிறது.:) "
எப்போதுமே நண்பரும் , சகோதரரும் நல்லவருமான சிவாகாசி மாப்பிள்ளை, நடுநிலையாளர் என்ற லிஸ்ட்டில்தான் இருக்கிறார்.. இப்போது புதிதாக சேரவில்லை
கேபிள் சார், உங்க பேர்ல யாரோ நிறைய கமண்டுக்கு பதில் சொல்லி இருக்காங்க.
"இந்த படம் ரிலீஸ் அன்றுதான் ஜப்பானில் சுனாமி.... எனவே இந்த படத்தால்தான் சுனாமி என்று எடுத்துக் கொள்ளலாமா தல...... நீங்க கமல் குருதிபுனல் எடுத்துதான் தமிழ் சினிமாவ காப்பாத்துனாருன்னு சொல்ற மாதிரி..... "
ஹா ஹா....
நண்பா.... சிரித்து சிரித்து வயிறு வலிக்குது...
வொய் வொய்... நோ பேட் வேர்ட்ஸ்...
இந்த மாதிரி எத்தன படம் வந்தாலும் நாங்கலாம் பாக்குறத நிறுத்தமாட்டோம்..(ஓ அவனா நீ.!!!)
Post a Comment