Posts

Showing posts from April, 2011

வானம்.

Image
சில திரைப்படங்கள் வேறு மொழியிலிருந்து ரீமேக் செய்யும் போது, அதற்கு விமர்சனம் செய்ய சோம்பேறித்தனமாய் இருக்கும் ஆனால் கிரிஷின் வானத்துக்கு அப்படி சோம்பல் பட முடியவில்லை. தெலுங்கு வர்ஷனான வேதம் விமர்சனம் படிக்க இங்கே க்ளிக்கவும். நண்பர் விசா தெலுங்கு பட விமர்சனத்தில் விசனப்பட்டிருந்தார். இம்மாதிரி கதைகள் எல்லாம் தயாரிப்பாளர் மகன்கள் மட்டுமே நடிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் எல்லாம் ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுப்பதுதான் முக்கிய நடிப்பாய் நடித்துக் கொண்டிருக்கிறர்கள் என்று ஆதங்கப்பட்டதை நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.

Mr. Perfect

Image
  எப்போதும் தங்கள் சுயத்தை விட்டுக் கொடுக்காமல், யாருக்காகவும், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளாமல் வாழ்வதுதான் வாழ்க்கை என்று ஒருவன். தன் மனதுக்கு பிடித்தவனுக்காக தனக்கு பிடித்தவற்றையெல்லாம் விட்டொழித்துவிட்டு, அவனுடய ஆசையையே தன் ஆசையாய் எடுத்துக் கொண்டு வாழும் ஒருத்தி, இதில் எது சிறந்தது என்பதை பட்டிமன்றம் நடத்தாத குறையாய் சொல்லியிருக்கிறார்கள்.

ரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு

Image
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கும் ரானா திரைப்படத்தின் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் ஈராஸ் இண்டர்நேஷனலும், சவுந்தர்யா ரஜினிகாந்தும் வெளியிட்டிருக்கிறார்கள்.  கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், தீபிகா படுகோன், இலியானா மற்றும இன்னொரு பிரபல நடிகை நடிக்கவிருப்பதாய் செய்திகள் உலவுகிறது. எந்திரன் படத்தின் பட்ஜெட்டை பார்த்து தங்களால் ஆகாது என்று ஐங்கரனிடம் கைவிரித்த நிறுவனம் தான் இந்த ஈராஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.   எஸ்

சாப்பாட்டுக்கடை- மீன் சாப்பாடு

அரசு பிஷ்ஷரீஸ் டிபார்ட்மெண்ட் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறது. சென்னையில் அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயம் தாண்டி வரும் சிக்னலிருந்து, போயஸ் கார்டனுக்கு திரும்பும் இடத்தில் அந்த உணவகம் இருக்கிறது. இங்கு மதியம் அவர்கள் தரும் மீன் சாப்பாடு ம்ம்ம்.. செம தூள். ஒரு கப் சாதம், ஒரு பொரியல், மற்றும் மீன் குழம்பு, ரசம், மற்றும் மோருடன் நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். எக்ஸ்ட்ராவாக வறுத்த மீன், குழம்பு மீன், மீன் கட்லெட், என்று தனி லிஸ்டே இருக்கிறது. என்ன நின்று கொண்டு சாப்பிட வேண்டும், சரியான சர்வீஸ் கொஞ்சம் கிடைக்காது.. அதை பொறுத்துக் கொண்டு சாப்பிட்டால் நிஜமாகவே ம்ம்ம்ம்ம். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Dum Maro Dum

Image
மிகப் புகழ் பெற்ற பாடல். முக்கியமாய் ஹிப்பிகளின் போதை கலாச்சாரத்தையும், அதன் மையமான கோவாவையும், களமாய்க்  கொண்ட திரைப்படத்துக்கு இந்த பெயர் மகா பொருத்தம். ஷோலே இயக்குனரின் மகன் இயக்கியிருககும் படம். ஃபாக்ஸ் ஸ்டார் தயாரித்திருக்கும் படம் என்று ஏக எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் படம்.

கொத்து பரோட்டா-25/04/11

Image
படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்துத்தான் தியேட்டரின் உள் நுழைந்தேன். சீட் கண்டுபிடித்து உட்கார்ந்தவுடன், என் மூன்றாவது சீட்காரன் “சார். சீட் மாற்றிக் கொள்ளுங்கள்” என்றான். ஏன் என்று கேட்டதற்கு “லேடீஸ் இருக்காங்க” என்றதும் எனக்கு சுரீரென்று கோபம் வந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு “நான் படம் பார்க்க வந்திருக்கேன்” என்றேன். அவன் மறுபடியும் சார்.. லேடீஸ் இருக்காங்கன்னு சொல்றேன்.. மாத்திக்க மாட்டீங்களா? என்றதும். “அலோ.. நான் தான் சொன்னேன் இல்ல.. நான் படம் பார்க்க வந்திருக்கேன். உங்க கூட வந்திருக்கிற லேடீஸை உரச வரலை” என்றதும் மறு பேச்சில்லாமல் படம் பார்க்க ஆரம்பித்தான்.

கோ

Image
தமிழ் சினிமாவின் சமீபத்திய தியேட்டர் கூட்ட வறட்சியை போக்க வந்திருக்கும் முதல் கோடைக்காலப் படம் “கோ ”.  ஓளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்தின் மூன்றாவது படம். முதல் படத்தில் டீசண்டாய்  இருந்து கொண்டு கந்துவட்டி மேட்டர், இரண்டாவது படத்தில் கள்ளக்கடத்தல் பின்னணி. இதில் அரசியலும், பத்திரிக்கை போட்டோகிராபரின் வாழ்க்கையை ஒட்டிய பின்னணி. மூன்றிலும் ஒவ்வொரு கதை களன். முந்தைய படமான அயனின் வெற்றியும், ஹாரிஸின் என்னவோ ஏதோவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.

Just Go With It- கல்யாணம் பண்ணி காதல்

Image
ப்ளாஸ்டிக் சர்ஜனான டானிக்கு ஒரு கெட்ட பழக்கம். தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதனால் மிகப் ப்ரச்சனையில் இருப்பதாக சொல்லி, சென்சிட்டிவாக உள்ள பெண்களை வளைத்து ஜாலி பண்ணும் பேர்வழி. உடன் வேலை செய்யும் காத்தரீனுடன் அப்படி ப்ளிரிட் செய்து கொண்டிருக்கிறான். காத்தரீன் ஒரு சிங்கிள் மாம். இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஒரு பார்ட்டியில் பால்மர் எனும் ஒரு பாம்ஷெல்லை பார்த்து டானி மயங்கிவிட, அவளிடம் தனக்கு திருமணமாகிவிட்டதாகவும், அவளுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகப் போகிறதென்றும், சொல்லி சிம்பதி தேடிக் கொள்ள, இருவரும் உடலுறவு வரை போய்விடுகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் போது பால்மர் அவனுடய மனைவியை பார்க்க விரும்ப, வேறு வழியில்லாமல் காத்தரீனை நடிக்கச் சொல்கிறான். அவளுடய குழந்தைகளை தன் குழந்தைகள் என்று பொய் சொல்லிவிட, அவர்களை சமாளிப்பதற்காக ஹவாயன் டிரிப் ஒன்றை லஞ்சமாய் கூட்டிக் கொண்டு போக, அங்கு இருக்கும் நாட்களில் காத்தரினுகும், பால்மருக்கும், டானிக்குமிடையே நடக்கும் காதல் போராட்டம் தான் படம்.

RIO

Image
ஐஸ் ஏஜ் குழுவினரின் அனிமேஷன் படம். 3 டி வேறு என்றவுடன் எதிர்ப்பார்ப்பு ஏகிறித்தான் பார்த்தேன். எனக்கு அனிமேஷன் படங்கள் மிகவும் பிடிக்கும். இவ்வகை படங்களின் கதை சொல்லல் முறை, நோகாமல் அறிவுரை சொல்லும் பாங்கு எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானது.

கமலின் அடுத்த படம்?

செல்வராகவன், கமல் கூட்டணி விசா மற்றும் சில பல ப்ரச்சனைகளால் கிளம்ப நேரமாகியிருக்கும் நேரத்தில் ஒரு க்யூக்கியாய் மலையாள சூப்பர்ஹிட்டான “டிராபிக்’ படத்தை ரீமேக்க திட்டமிட்டிருப்பதாய் செய்திகள் உலவுகிறது.

சாப்பாட்டுக்கடை -ஜூனியர் குப்பண்ணா மெஸ்.

சாப்பாட்டுக்கடை  ஈரோடு போகப் போகிறோம் என்றதுமே தண்டோரா நிச்சயம் குப்பண்ணா மெஸ்ஸில் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். காலையில் நாங்கள் லேட்டாய் போனதால் வெறும் பரோட்டா மட்டுமே கிடைக்க, சாப்பாடு வேறு ஆரம்பித்து விட்டதால் வெறும் பரோட்டா, மட்டன் மசாலா சாப்பிட்டோம். வாயில் வைத்தவுடனேயே மத்யானம் நிச்சயம் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. சாப்பாடு சாப்பிட்ட சூர்யா காரகுழம்பு என்று ஒன்றை காட்டி ஒரு வாய் சாப்பிட அடடா.. இத்தனைக்கும் அவர் சாப்பிட்டது வெஜ் மீல்ஸ். கடைசியாய் கிளம்பும் முன் ஒரு டம்ளர் ரசத்தை குடிக்க, நிச்சயம் மதிய சாப்பாடு இங்கேதான் என்று முடிவெடுத்துவிட்டோம்.

Teenmaar

Image
கேப்டவுனில் செஃப்பாக வேலை பார்க்கும் மைக்கேல் வேலாயுதம், மீராவும் சந்திக்கிறார்கள். கொஞ்சம், கொஞ்சமாய் நெருக்கமாகி, நண்பர்களாகி, ஒருவரை ஒருவர் உள்ளுக்குள் காதல் கொள்கிறார்கள். இப்படியே ஒரு வருடம் போக, மீராவுக்கு அவளுடய் ஆர்கியலாஜில் துறையில் மேலும் சில விஷயங்களுக்காக, அவளுடய துறையில் சாதிப்பதற்காக  இந்தியா போக வேண்டுமென்ற நிர்பந்தம் வர,  அதே நேரம் மைக்கேல் வேலாயுதம் தன் கனவு வேலையான ஒரு அமெரிக்க கம்பெனியில் வேலையில் சேருவதற்காக காத்திருப்பதால் அவளுடன் வர முடியாது என்று சொல்ல, இருவருக்கும் தங்களது குறிக்கோள்களே இலக்காயிருக்க, இதற்கு வேறு வழியேயில்லை என்று இருவரும் பேசி வைத்து கொண்டு பிரிகிறார்கள்.

கொத்து பரோட்டா-19/04/11

Image
நேற்று இரவு ஒரு போன். உங்களது மீண்டும் ஒரு காதல் கதை பற்றிய விமர்சனம் தினமலரில் படித்தேன். எனக்கு அந்த புத்தகம் உடனே வேண்டுமென ஒருவர் போன் செய்தார். அவருக்கு காதல் கதை என்றால் மிகவும் பிடிக்குமென்றும், தான் சினிமாவில் சேர இருப்பதாகவும் ஒரு வேளை நல்ல காதல் கதையாய் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்குமென்று நண்பர்கள், பத்திரிகை துறை நண்பர்கள் ரெபர் செய்யும் புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். என் கையில் அகஸ்மாத்தாக புத்தகம் இருக்க நண்பர் வீட்டில் மைலாப்பூரில் இருந்ததால் அங்கு வரச் சொல்லி புத்தகத்தை கொடுத்தேன். சில சமயங்களில் இம்மாதிரியும் புத்தகங்களின் ரீச் இருப்பது பற்றி சந்தோஷமாய் இருக்கிறது.   #############################

பொன்னர் சங்கர்

Image
இளைஞன் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த என் மன உறுதியை சதி செய்து கெடுத்த லக்கியை எவ்வளவு திட்டினாலும் தகும். பார்க்கவே கூடாது என்றிருந்த படத்திற்கு லக்கி சத்யத்தில் டிக்கெட்டிருக்கிறது என்று “எலி”க்கு வடை காட்டுவது போல காட்டி பார்க்க வைத்துவிட்டார். இதனால் வரும் பழி பாவங்களுக்கெல்லாம் லக்கியே காரணம்.

எண்டர் கவிதைகள்-19

Image
திறந்து கிடந்த பாட்டில்கள் நசுங்கிப் போன சொம்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் எலும்புத்துண்டுகள் அரைநிலா எதிர்வீட்டு ட்யூப்லைட் நான்குஜோடிக் கால்கள் கலைந்து கிடக்கின்றன என் மனம் போல் சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

இதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…

Image
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

கொத்து பரோட்டா-11/04/11

Image
சிவந்த கைகள் என்றொரு நாவல். சுஜாதா எழுதியது. அதில் நாயகன் தான் ஒரு எம்.பி.ஏ படித்தவன் என்று போலிச் சான்றிதழ் கொடுத்துவிட்டு, மிகக் குறுகிய காலத்தில் சேர்மனின் பெண்ணை திருமணம் செய்யும் அளவுக்கு வந்துவிட, எத்தேசையாய் சர்டிபிகேட்டுகளை செக் செய்யும் ஒரு வயதான குமாஸ்தாவிடம் மாட்டிவிடுவான். பொய்யை மெய்யாக்க முடியாமல் அவன் அந்த குமாஸ்தாவை கொன்றுவிடுவான். ஒரு பொய்யை மறைக்க, ஒவ்வொரு பொய்யாய் சொல்லிச் சொல்லி, கடைசியில் கொலைகாரனாய் நிற்பான். அவனுக்கான தண்டனை அடுத்த பாகமான கலைந்த பொய்கள் என்கிற நாவலில் கொடுத்திருப்பார். ஏனோ சொல்லணும்னு தோணிச்சு.மனசு கஷ்டமாத்தானிருக்கு வேற வழியில்லை. #########################

மாப்பிள்ளை.

Image
சில சமயங்களில் பழைய விஷயங்களின் அருமை பெருமைகள் எல்லாம் புது மோஸ்தரில் வந்திருக்கும் விஷயங்களைப் பார்த்ததும் தான் தெரியும் பழைய விஷயத்தின் வீர்யம். அப்படி புரிந்து கொள்ள வைத்த படம் தான் தனுஷ் நடித்த மாப்பிள்ளை.

நஞ்சுபுரம்

Image
ரொம்ப நாளாய் நஞ்சு பரவாமல் பெட்டியில் இருந்த படம். அதை இராமநாராயணன் தட்டி வெளிகொணர்ந்ததற்கு பாராட்டுக்கள். சின்னத்திரை புகழ் ராகவ் இசை, நடிப்பு, தயாரிப்பில் உருவான படம். பிரபல சின்னத்திரை இயக்குனர் சார்லஸ் இயக்கியபடம். முக்கியமாய் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட படம். இயக்குனர் ஒரு பதிவரும் கூட.

பிட் படங்களும்.. தியேட்டர்காரர்களும்.

Image
இந்த உலகக் கோப்பை, பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஆரம்பித்ததிலிருந்து தமிழ் சினிமா உலகில் பெரியதொரு வறட்சி தென்படுகிறது. இது வழக்கமாய் இருப்பதுதான் என்றாலும், கூடவே தேர்தலும் சேர்ந்து கொண்டதால் இன்னும் வறட்சி அதிகமாய்த்தான் போய்விட்டது. இம்மாதிரியான நேரங்களில் பெரிய, ஓரளவுக்கு மக்கள் அறிந்த நடிகர் நடிகைகள் நடித்த சுமார், மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை யாரும் வெளியிட விரும்புவதில்லை. சரி அப்படியானால் தியேட்டர்களை எப்படி நடத்துவது?. கிரிக்கெட், அரசியல் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்றால் என்ன செய்வார்கள்?

நீங்க ரொம்ப நல்லவரு…

செல்போன் அடித்தது. வண்டியை ஸ்லோவாக்கிக் கொண்டே ஷார்ட்ஸின் பாக்கெட்டில் கைவிட்டு போனை எடுத்தபடி வண்டியை நிறுத்த, படுவேகமாய் குறுக்கே பாய்ந்தார் ஒரு இன்ஸ்பெக்டர். டிராபிக் போலீஸ் இல்லை.  அதிர்ந்து போய் பார்த்தேன்.

டிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா?

அடல்ஸ் ஒன்லி படமானதால் தன் கூட வந்த நண்பனை ஐடி கார்டு இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் தான் வாங்கிய டிக்கெட்டை தியேட்டர் கவுண்டரிலேயே ரிட்டர்ன் செய்ய வந்தான் ஒரு புது தாடி மீசை முளைத்த இளைஞன். தியேட்டர்காரர்கள் “நாங்கள் டிக்கெட் கொடுக்கும் போதே சொல்லித்தானே கொடுத்தோம் நாங்கள் ரிட்டர்ன் எடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். பையனுக்கோ, அவசரம் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, அந்த டிக்கெட்டை நான் வாங்கினேன். டிக்கெடை வாங்கி தேதி, மற்றும் சீட் நம்பரை பார்த்துவிட்டு, டிக்கெட்டை சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு,  வண்டியை பார்க்கிங் போட கிளம்பினேன்.

கொத்து பரோட்டா-04/04/11

Image
உலகக் கோப்பை பைனலை கோலாகலமாய் டக்கீலாவோடு மணிஜியின் அலுவலகத்தில் முடித்துவிட்டு, நான் மணி, ஓ.ஆர்.பி ராஜா மூவரும் ஒரு கடையின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது, எங்களைச் சுற்றி மின்சாரமாய் இளைஞர்கள் அடித்தொண்டையில் “ஹே.. என்று கத்திக் கொண்டுப் போக, அப்போது அங்கே வந்த இரண்டு இளைஞர்கள் ஸ்ரீவத்ஸன், வசந்த் கோவிந்த் ஆகியோர் சட்டென என்னை பார்த்து அடையாளம் கண்டு, சந்தோஷமாய் அளவளாவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்ப, அப்போது ஒரு இளைஞன் மீண்டும் கத்திக் கொண்டே வர, மணிஜி அவனை அழைத்து “ என்ன என்னா ஆச்சுங்க? எல்லாரும்  இப்படி கத்திட்டே போறாங்க?” என்று கேட்க, அதற்கு அவன் கருமசிரத்தையாய் “இந்தியா ஜெயிச்சிருச்சுங்க” என்றவுடன், “ அட அப்படியா” என்றார். ###################################

Sakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..

Image
சக்தி..பிருந்தாவனம் படத்திற்கு பிறகு என்.டி.ஆரின் மிகப் பெரிய பட்ஜெட் படம். அதாவது தெலுங்கு மஹதீராதான் இது நாள் வரை தெலுங்கு படங்களிலேயே அதிக பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சக்தியின் பட்ஜெட் மஹதீராவை விட அதிகமில்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த கோடை கால சீசனுக்கு வந்திருக்கிற முதல்  பெரிய பட்ஜெட் படம். படம் ஏற்படுத்திய ஹைப்பை தக்கவைத்துக் கொண்டதா என்று பார்த்தால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். 

சினிமா வியாபாரம்-2- டி.டி.எஸ்

Image
பகுதி 13 டால்பி டிஜிட்டல் தன் இருப்பை அமெரிக்க திரையரங்குகள், மற்றும் ஹோம் வீடியோ செக்டர் எனப்படும், டிவிடி, லேசர் டிஸ்குகளிலும் சப்போர்ட் செய்ய.. அப்போதுதான் டால்பிக்கு போட்டியாய் டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம்ஸ் என்கிற கம்பெனி உருவானது. மேற்ச் சொன்ன பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி பின்னாளில் டிஜிட்டல் இன்கார்பரேஷன் என்றானது.

ஒரு மாணவனின் கனவு நினைவாவதற்கு உதவ முடியுமா?

Dear Friends One of our student whom we support his education is studying in PUNE Film institute in the area of Music and Sound, He has worked in a documentary and it has been nominated for an award in a film festivel in UK and this guy has no money to travel and we are pooling in money for his travel. He has to travel on 2nd Morning so that he can attend his function on 3rd Morning.