Thottal Thodarum

Apr 18, 2011

கொத்து பரோட்டா-19/04/11

நேற்று இரவு ஒரு போன். உங்களது மீண்டும் ஒரு காதல் கதை பற்றிய விமர்சனம் தினமலரில் படித்தேன். எனக்கு அந்த புத்தகம் உடனே வேண்டுமென ஒருவர் போன் செய்தார். அவருக்கு காதல் கதை என்றால் மிகவும் பிடிக்குமென்றும், தான் சினிமாவில் சேர இருப்பதாகவும் ஒரு வேளை நல்ல காதல் கதையாய் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்குமென்று நண்பர்கள், பத்திரிகை துறை நண்பர்கள் ரெபர் செய்யும் புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். என் கையில் அகஸ்மாத்தாக புத்தகம் இருக்க நண்பர் வீட்டில் மைலாப்பூரில் இருந்ததால் அங்கு வரச் சொல்லி புத்தகத்தை கொடுத்தேன். சில சமயங்களில் இம்மாதிரியும் புத்தகங்களின் ரீச் இருப்பது பற்றி சந்தோஷமாய் இருக்கிறது.  
#############################


கிட்டத்தட்ட சுமார் 29 ஆயிரம் 49 ஓ ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளதாம். நானும் என் தொகுதியில் 49 ஓ தான் போடப் போனேன். அதைப் பற்றிக் கேட்டதும் சுற்றி இருந்த அத்துனைக் கட்சிக்காரர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவனாதலால், அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க, ஒரு சிறிய யோசனைக்கு பிறகு “ஒண்ணுமில்ல.. கேட்டா என்ன ரியாக்‌ஷன்னு பாக்கலாம்னுதான்” என்று சொல்லிவிட்டு சமாளித்தபடி, ஓட்டை போட்டுவிட்டு வந்தேன். அடுத்த எலக்‌ஷனின் 49 ஓ வுக்கு ஒரு பட்டனை போடச் சொல்லுங்கப்பா.. நிச்சயம் ஆளும், ஆள ஆசைப்படும் அனைவருக்கும் ஒரு பெல் அடிக்க ஏதுவாக இருக்கும். பல இடங்களில் வெறும் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் நம் பதிவர் தராசுவுக்கு ஏற்பட்ட கதியும் நடந்திருக்கிறது. சில இடங்களில் ஆட்கள் மிரட்டவும் பட்டிருக்கிறார்கள்.
##############################
புத்தகம்
பெருமாள் முருகனின் மாதொருபாகனை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மிகவும் தின்னான ஒரு லைன். பொன்னாவுக்கும் காளிக்கும் பன்னிரெண்டு வருடங்களாய் குழந்தையில்லை. குழந்தைக்காக  அவர்கள் செய்யாத  வேண்டுதல்கள் இல்லை, சாங்கியங்கள் இல்லை. அதை பொன்னாவுக்கும், காளிக்குமிடையேயான காதலை பற்றி அடர்த்தியாய்ச் சொல்லி கதை நகர்த்திய விதம் அட்டகாசம். எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் கதை நடப்பதாக சொல்லியிருக்கிறார். நிறைய டீடெய்ல்கள் அள்ளி விடுகிறார். சிலது சுவாரஸ்யம். சிலது பக்க நிரப்பலாக படுகிறது. ஆனால் க்ளைமாக்ஸில் குழந்தைக்காக 14ஆம் நாள்கோயில்  திருவிழாவில் சுற்றியலையும் ஆண்கள் எல்லாம் அன்றைக்கு மட்டும் சாமி என்ற நம்பிக்கையை மையமாய் வைத்து, மாற்றானிடம் கூடியாவது குழந்தைப் பெற்றுக் கொள்ள பொன்னாவை திருவிழாவுக்கு அழைத்துக் கொண்டு போய் விடும் இடத்திலிருந்து உணர்சிகளின் சங்கமம். ஜெட் வேகம். மிக அழகான, சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான பல இடங்கள் இந்நாவலில் இருக்கிறது. அதையெல்லாம் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். நிச்சயம் படிக்க வேண்டிய நாவல். காலச்சுவடு வெளியிடு.
####################################
ப்ளாஷ்பேக்
கேட்டவுடன் மெய்மறக்கச் செய்யும் இசையமைப்பு.  மிக எளிமையாய் தெரியும் இந்தப் பாடலின் பின்னணியில் உள்ள ஆர்கெஸ்ட்ரேஷனை கவனித்தால் தெரியும் இதன் மேன்மை. இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமில்லாமல் இளையராஜாவின் குரலில் தெரியும் ஒரு இன்னொசென்ஸும், இக்னோரன்ஸும் வேறு யாராவது பாடியிருந்தால் வந்திருக்குமா? என்று சந்தேகமே.
###################################
தமிழ் நாட்டில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லையாதலால் தெலுங்கு படம் சக்கைப் போடு போடுகிறது. பவன் கல்யாண், த்ரிஷா நடித்த தீன்மார் சுமார் எட்டு தியேட்டர்களில் சென்னையிலும், சென்னை சுற்றுப் புறத்தில் ஐந்துக்கும் மேற்ப்பட்ட அரங்குகளில் ஓடுகிறது. நன்றாகவே போகிறதாம். இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் என்ன தான் கிரிக்கெட், பரிட்சை எல்லாம் இருந்தாலும் படம் பார்க்க ஒரு கூட்டம் இருக்குன்றதும், படம் நல்லாயிருந்தா நிச்சயம் ஓடும் என்பதைத்தான் விநியோகஸ்தர்களும், நடிகர்களும், இயக்குனர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது.
######################################
நாம் யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பது ரகசியமாய் பாதுகாக்க வேண்டிய ஒன்று, சாதாரணமாய் எந்த மீடியாவினர் கேட்டாலும் சொல்லக்கூடாதது என்பது புதிதாய் ஓட்டுப் போடுபவர்களுக்கு கூட தெரியும். அதையும் மீறி மீடியா நெருக்கினால் கமல் செய்ததைப் போல அவர்களை சத்தம் போட்டு விலக்கிவிட்டு போட்டிருக்க வேண்டும். துணை முதல்வர் ஸ்டாலின் ஓட்டுப் போடும் போது அருகில் அவரது மனைவி இருக்க, தள்ளி நிற்கச் சொன்னார்.. அவர் புரியாமல் நிற்க, மீண்டும் சத்தமாய் கொஞ்சம்  தள்ளி நில்லுங்க என்று சொல்லிவிட்டுத்தான் ஓட்டுப் போட்டார். டிவியில் அவர் ஓட்டுப் போட வந்த போது காட்டிய காட்சிகளில் இருந்தது. ஆனால் ரஜினி யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பதை டிவி கேமராக்கள் கண்கள் விழுங்க, ஓட்டுப் போட்டது ஒரு பிரபல, குடிமகனுக்கு அழகா?  இந்த நிகழ்வுக்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு வரும் ரஜினி ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்ன செய்வது?. ரஜினி என்ன குற்றம் சொல்வதற்கு அப்பார்ப்பட்டவரா? என்ன?.
################################
bala-1
திருநெல்வேலியில் இருக்கும் சினிமா ஆர்வலர்களுக்கு ஒர் தகவல். உங்கள் ஊரில் நடக்கவிருக்கும் குறும்படப் பட்டறையில் என்னை பேச அழைத்திருக்கிறார்கள். சினிமா மற்றும் குறும்பட வியாபாரங்களைப் பற்றி பேச.. 23-26 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இக்குறும்பட பட்டறையில் பயில படத்தில் உள்ள தொலைபேசி எண்ணை அணுகவும். அநேகமாய் 25 அல்லது 26 ஆம் தேதி என்னுடய பங்களிப்பு இருக்குமென நினைக்கிறேன். சினிமா வியாபாரத்துடன் சந்திப்போம்.

#################################
வாழ்க்கை ஒரு விளையாட்டு. ஆட்டத்திற்கு முன் போடும் பூவா தலையா நமக்கு சொல்லித்தரும் விஷயம் ஆயிரம். நான் நூறு முறை வென்றிருக்கிறேன். ஆனால் என் நூறு வெற்றிகள் என் ஆயிரம் தோல்விகளால் வந்தது.- ரோகர் பெடரர்
எவனொருவன் மற்றவர்கள் தன் மேல் வீசியெறிந்த கற்களைக் கொண்டு வீடு கட்டிக் கொள்கிறானோ அவனே வெற்றியாளன்.
######################################
அடல்ட் கார்னர்
ஒரு பெண் தன் வீட்டில் யாரும் இல்லை என்பதால் தன் பாய் பிரண்டை வர சொல்லி செக்ஸில் ஈடுபட்டார்கள். மேட்டர் முடிந்ததும் பாய் பிரண்ட் உடைகளை அணிய தொடங்கியபோது ஒரு ஆணின் பிரேம் போட்ட போட்டோ அந்த பெண்ணின் மேஜை மேல் இருந்ததை பார்த்தான்.
பையன்:- ஹேய்...யாருப்பா இது...புதுசா இருக்கான்..உன்னோட அண்ணனா?
பொண்ணு:- ச்சே..ச்சே..எனக்கு அண்ணன் யாரும் கிடையாது...
பையன்:- அப்புறம்..உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவனா?
பொண்ணு:- அப்படி எல்லாம் எதுவும் இல்லை..
பையன்:- அப்புறம் யாரு அவன்?
பொண்ணு:- இது வேற யாருமில்ல...நான் தான். மும்பை ஆபரேஷனுக்கு முன்னாடி எடுத்த போட்டோ இது...
பையன்:- ??????????????
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

24 comments:

செங்கோவி said...

சூடான சுவையான கொத்துப் புரோட்டா எனக்கே!

shortfilmindia.com said...

nandri
cablesankar

Unknown said...

சுவையான கொத்துப் புரோட்டா.....

வந்தியத்தேவன் said...

இன்றைக்கு உங்களுக்கு நாள் சரியில்லை என நினைக்கின்றேன்.ரஜனி ரசிகர்கள் உங்களைப் பிரித்துமேயப்போகின்றார்கள். ஸ்டாலின் கமலுக்கு இருக்கின்ற விழிப்புணர்ச்சி ரஜனியிடம் இல்லாதது ஏனோ.

rajamelaiyur said...

Super joke. . .and all matters are very intersting

Paleo God said...

உங்களின் லோக நாயகன் ஓட்டே போடாமல் லிஸ்ட்லயே இல்லை என்று கூறி ஓட்டுப் போடாமல் டீலில் விட்ட குடிமகன் ஓட்டு போடும் நாளுக்கு முன்பாக தன் பெயரை ஏன் சரிபார்க்கவில்லை என்ற நியாயத்தைக் கொத்து புரோட்டாவில் எழுதி இருக்கிறீர்களா ஜி?

லோகத்தையே கரைத்துக் குடித்த அந்தக் குடிக்கு இந்தக் குடி பரவாயில்லை. என்னமோ சூப்பர் ஸ்டார்தான் கூட்டத்தைக் கூட்டிவந்து ஓட்டுப்போட்டு வீடியோ எடுத்த மாதிரி?

கலைஞர் மட்டும் தனியா எல்லாரையும் தள்ளிப் போகச் சொல்லி ஓட்டுப் போட்டாரு?

ரஜினிய வம்பிழுக்காம உங்களால எழுதவே முடியாதா தல?

13-ம் தேதி உங்களுக்கு வெச்சிக்கறோம் கச்சேரிய..

:))

shortfilmindia.com said...

யோவ்.. ஷங்கரு.. நீரு குசும்பனய்யா..:))

கேபிள் சங்கர்

Unknown said...

விஷயங்களுக்கு நன்றி நண்பரே

குசும்பன் said...

//என் கையில் அகஸ்மாத்தாக புத்தகம் இருக்க நண்பர் வீட்டில் மைலாப்பூரில் இருந்ததால் அங்கு வரச் சொல்லி புத்தகத்தை கொடுத்தேன்.//

அண்ணே 350 புத்தகங்கள் வாங்கிய எழுத்தாளர் வரிசையில் இடம்பிடிக்க வாழ்த்துகள்!:))) (குறிப்பு 350ம் சொந்த புத்தகம்)

shortfilmindia.com said...

அட.. நம்புங்கய்யா.. நிசமாவே அகஸ்மாத்தாத்தான் இருந்திச்சு..:) விடு இந்த உலகம் மத்தவங்களை வச்சித்தான் எல்லாரையும் எடை போடுது..அவ்வ்வ்வ்

கேபிள்

Sukumar said...

நைஸ்....

பிரபல பதிவர் said...

மறுபடியும் ரஜினியை வம்புக்கு இழுக்கும் அரைவேக்காட்டு புரோட்டா....

ஸ்டாலினையோ, தீயசக்தியையோ, அம்மாவையோ, லோக நாயகனையோ இவ்ளோ மீடியா நெருக்கவில்லை....

ரஜினியை பூத் இங்கே, அங்கே என்று இருமுறை அலைய விட்டதினால் ரசிகர் கூட்டமும் சேர்ந்து கொள்ள இவ்ளோ நெருக்கடி என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாதா??. தவறு தேர்தல் கமிஷன் மீது.. சுதந்திரமாக வாக்களிக்க விடாததற்காக‌

ரஹீம் கஸ்ஸாலி said...

கொத்துபுரோட்டா சூடாகவும் சுவையாகவும் இருக்கு தல.....49ஒ பற்றி சமாளித்த விதம் அருமை

ரஹீம் கஸ்ஸாலி said...

49'O பற்றிய நமது பதிவு
http://ragariz.blogspot.com/2011/04/chance-to-rulling-party-rahim-gazali.html

rajasundararajan said...

'லவ் ஆஜ் கல்'தான் 'தீன்மார்'. எனக்கென்னவோ, ஹிந்திப்படம்தான் பிடித்திருந்தது. தெலுங்கில், த்ரிஷாவை (இதற்கு முந்திய படங்களைவிட) எக்ஸ்போஸ் பண்ணியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

Sivakumar said...

//எவனொருவன் மற்றவர்கள் தன் மேல் வீசியெறிந்த கற்களைக் கொண்டு வீடு கட்டிக் கொள்கிறானோ அவனே வெற்றியாளன்.//

வீடு கட்ட கல்லு மட்டும் போதுமா, கொஞ்சம் மணலை அள்ளி வீசுனா நல்லா இருக்கும்.

ரஹீம் கஸ்ஸாலி said...

! சிவகுமார் ! said...

//எவனொருவன் மற்றவர்கள் தன் மேல் வீசியெறிந்த கற்களைக் கொண்டு வீடு கட்டிக் கொள்கிறானோ அவனே வெற்றியாளன்.//

வீடு கட்ட கல்லு மட்டும் போதுமா, கொஞ்சம் மணலை அள்ளி வீசுனா நல்லா இருக்கும். ////
விட்டா ரெண்டு கொத்தனரையும் சேர்த்து கேட்பாரு போல நம்ம சிவா

ராவணன் said...

ரஜினியை குற்றம் சொல்ல நீ யாரு?

Cable சங்கர் said...

cablesankar

THE IRON MAN! said...

//ராவணன் said...
ரஜினியை குற்றம் சொல்ல நீ யாரு?//

என்ன கொடும சரவணன்...

manivannan said...

ரஜினியை குற்றம் சொல்ல நீ யாரு?//

Suthershan said...

கொத்து பரோட்டா சூப்பர். சம பந்தி விருந்து..

royale said...

why u always told anything wrong about rajini, if you are kamal fan ok not do like this

Unknown said...

அப்ப ...ஒரு ஓட்டை சரியாக யாருக்கும் தெரியாமல் போட தெரியத இந்த மாதிரி நடிகனை வெக்கம் இல்லாமல் முதல்வர் பதவிக்கு வரவேண்டும் அழைக்கும் அறிவு இல்லா மூட மக்களை என்ன செய்ய