Thottal Thodarum

Apr 1, 2011

சினிமா வியாபாரம்-2- டி.டி.எஸ்

பகுதி 13
டால்பி டிஜிட்டல் தன் இருப்பை அமெரிக்க திரையரங்குகள், மற்றும் ஹோம் வீடியோ செக்டர் எனப்படும், டிவிடி, லேசர் டிஸ்குகளிலும் சப்போர்ட் செய்ய.. அப்போதுதான் டால்பிக்கு போட்டியாய் டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம்ஸ் என்கிற கம்பெனி உருவானது. மேற்ச் சொன்ன பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி பின்னாளில் டிஜிட்டல் இன்கார்பரேஷன் என்றானது.


DTS_small_logo.svg டிஜிட்டல் இன்கார்பரேஷனுக்கு முக்கியமான முதலீட்டாளர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். டால்பி டிஜிட்டல் வந்து கூட திரையரங்கு ஒலியமைப்புகளில் திருப்தியடையாத அவர் டி.டிஎஸுக்கு முதலீடு செய்தார். 1993 ஆம் வெளியான ஜுராஸிக் பார்க் படத்தின் டிடிஎஸ்ஸை அவர் அறிமுகப்படுத்தினார். டால்பி டிஜிட்டலில் பாட்மேன் ரிட்டர்ன்ஸ் வெளியாகி ஒருவருடத்தில் ஜுராசிக் பார்க் வெளியானது. டிவிடி வடிவிலும், லேசர் டிஸ்க் வடிவிலும் முதன் முதலில் டிடிஎஸ்ஸில் வெளியான படம் ஜுராஸிக் பார்க்தான்.

குருதிப்புனல் 1995ஆம் ஆண்டு டால்பி டிஜிட்டலில் வெளியானது. அமெரிக்காவைப் போலவே.. இங்கேயும் ஒரு வருட இடைவெளியில் டிடிஎஸ் கருப்பு ரோஜாவாக 1996ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
800px-35mm_film_audio_macro சரி டால்பி டிஜிட்டல் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்தோம். இப்போது டிடிஎஸ். மேலே உள்ள படத்தில் பிலிம் ரோலின் காதுகளுக்கடுத்து, இரண்டு கோடுகள் ஓடும். அது அனலாக் எனப்படும் சாதாரண ஒலியின் பதிவேற்றம். அதற்கு பக்கத்தில் டாட் லைன் போல ஒரு பதிவு இருக்கிறது பாருங்கள் அதுதான் டிடிஎஸ்ஸின் பதிவேற்றம். பிலிமில் 24பிட் டைம் கோட் ஐ கம்ப்ரெஸ் செய்து பதிவேற்றிவிடுவார்கள். ப்ரொஜெக்டரில் உள்ள எல்.ஈ.டி ரீடர் மூலம் பிலிம் ஓடும் போது அந்த டைம் கோட் ஐ படித்து டிஜிட்டல் டிகோடருக்கு அனுப்பும். டிகோடரில் கம்ப்ரெஸ் செய்யப்பட்ட டைம் கோட்டுடன் சிங்க் செய்யப்பட்ட ஆடியோ ட்ராக்குகள் சிடி ரோம் வடிவில் இருக்க, பிலிமில் ஓடும் படங்களின் டைம்கோட்டுக்கேற்ப டிகோடரில் இருக்கும் ஆடியோ டைம்கோடும் சிங்க் ஆகி சரியான காட்சிகளின் ஒலி படத்துடன் வெளியாகும். பிலிமுடன் இருக்கும் டைம் கோட்டுடன் ஒத்து வரும் சிடி ரோம் மட்டுமே அதனுடன் இணையும் என்பதால் வேறு ஏதாவது சிடி போட்டு குழம்ப சான்சேயில்லை. அது மட்டுமில்லாமல் பிலிம்களின் தேய்மானம் காரணமாய் டால்பி டிஜிட்டல் ட்ராக்குள் தரம் குறைய வாய்ப்புகள் உண்டு ஆனால் டிடிஎஸ்ஸில் ஆடியோ ட்ராக்குகள் தனி சிடி ரோம்களாய் இருப்பதால் தேய்மானம் குறைவு.

இந்த டைம் கோட்.. டைம் கோட் என்கிறீர்களே அது என்ன ? என்பவர்களுக்கு.. hh:mm:ss:ff என்பதுதான். டைம் கோட் எனப்படும். Hh என்பது மணி நேரத்தையும், mm என்பது நிமிடங்களையும், ss என்பது செகண்டுகளையும், ff என்பது ப்ரேம் ரேட் அதாவது படம் எத்தனை ப்ரேம்கள் ஓடுகிறது எனபதை குறிப்பது. சினிமாவாக இருந்தால் ff 24 ஃப்ரேம்களும், டிவி அல்லது வீடியோ என்றால் 25/30 ப்ரேம் ரேட்டில் இருக்கும்.

இந்தியாவில் டிடிஎஸ் பெரிதும் வளர முக்கிய காரணம், அதற்கான ராயல்டி பணம்தான். ஆம் ராயல்டி பணம் தான் டிடிஎஸ், டால்பி போன்ற கம்பெனிகளின் வருமானம். ஒவ்வொரு படத்திற்கும் டால்பி சவுண்டையோ, டிடிஎஸ்ஸையோ உபயோகப்படுத்தி அந்த கோடக்குகளை உபயோகிப்பவர்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு ராயல்டி எனப்படும் காப்புரிமை பணத்தை கொடுக்க வேண்டும். அது டால்பி டிஜிட்டலுக்கு மிக அதிகம். அது மட்டுமில்லாமல் ஸ்பீல் பெர்க்கின் முதலீடு வேறு கம்பெனிக்கு பெரிய பப்ளிசிட்டியாக, ஜுராஸிக் பார்க்கின் வெற்றியும் அதனுடன் சேர, உலகெங்கும் டிடிஎஸ் வேகமாய் பரவ ஆரம்பித்தது.

அதே நேரத்தில் தமிழில் வெளியான கருப்பு ரோஜாக்கள் படம் வர்தரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் அதன் பின்னால் வந்த பல பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் டிடிஎஸ்ஸை உபயோகப்படுத்த ஆரம்பிக்க, தமிழ் சினிமாவில் டிடிஎஸ் நிலைக்க ஆரம்பித்தது. இந்நேரத்தில் ஏற்கனவே இருந்த டால்பி டிஜிட்டல், டிடிஎஸ்ஸுக்கு போட்டியாய் இன்னொரு கம்பெனி தன் புதிய ஆடியோ கோடக்கை அறிமுகப்படுத்தியது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

Thirumalai Kandasami said...

ஏன் பாஸ்,,பதிவு ரொம்ப சின்னதா இருக்கு .techincal விஷயம் அதிகம் சொன்னால் புரியாதுன்னு ..?

பொன் மாலை பொழுது said...

I like your simple summarization.
Thanks for sharing.

Unknown said...

நல்லதோர் பதிவு

மன்னார் and கம்பெனி said...

நான் திருவனந்தபுரம் kripa வில் இந்தியன் படம் dts இல் வியந்து பார்த்தேன் (1997 ஜூன் ) மிகவும் பிடித்து இருந்தது. நல்லதோர் பதிவு . மிக்க நன்றி.
http://www.youtube.com/watch?v=eV2PpCNQsNo

ம.தி.சுதா said...

/////ஆம் ராயல்டி பணம் தான் டிடிஎஸ், டால்பி போன்ற கம்பெனிகளின் வருமானம்./////

புதிது புதிதாய் பலதை அறிகிறேன் சகோதரம்.. நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

saran said...

http://ungalsarans.blogspot.com/

check tis too....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிறைச்சாலை படமும் DTS சில் வந்தது. கருப்பு ரோஜாவும், சிறைச்சாலையும் ஒரே சமயத்தில் ரிலீசானதாக ஞாபகம். டால்பி ஸ்டீரியோவில் ஸ்பீட் படம் ரிலீசாகி சென்னையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இது குருதிப் புனலுக்கு முன்னால் வந்தது என்று நினைக்கிறேன். இவை என் நினைவுக்கு வந்தவை.
தொடர் அருமையா போய்ட்டு இருக்கு சார்.