சினிமா வியாபாரம்-2- டி.டி.எஸ்
பகுதி 13
டால்பி டிஜிட்டல் தன் இருப்பை அமெரிக்க திரையரங்குகள், மற்றும் ஹோம் வீடியோ செக்டர் எனப்படும், டிவிடி, லேசர் டிஸ்குகளிலும் சப்போர்ட் செய்ய.. அப்போதுதான் டால்பிக்கு போட்டியாய் டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம்ஸ் என்கிற கம்பெனி உருவானது. மேற்ச் சொன்ன பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி பின்னாளில் டிஜிட்டல் இன்கார்பரேஷன் என்றானது.
டிஜிட்டல் இன்கார்பரேஷனுக்கு முக்கியமான முதலீட்டாளர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். டால்பி டிஜிட்டல் வந்து கூட திரையரங்கு ஒலியமைப்புகளில் திருப்தியடையாத அவர் டி.டிஎஸுக்கு முதலீடு செய்தார். 1993 ஆம் வெளியான ஜுராஸிக் பார்க் படத்தின் டிடிஎஸ்ஸை அவர் அறிமுகப்படுத்தினார். டால்பி டிஜிட்டலில் பாட்மேன் ரிட்டர்ன்ஸ் வெளியாகி ஒருவருடத்தில் ஜுராசிக் பார்க் வெளியானது. டிவிடி வடிவிலும், லேசர் டிஸ்க் வடிவிலும் முதன் முதலில் டிடிஎஸ்ஸில் வெளியான படம் ஜுராஸிக் பார்க்தான்.
டால்பி டிஜிட்டல் தன் இருப்பை அமெரிக்க திரையரங்குகள், மற்றும் ஹோம் வீடியோ செக்டர் எனப்படும், டிவிடி, லேசர் டிஸ்குகளிலும் சப்போர்ட் செய்ய.. அப்போதுதான் டால்பிக்கு போட்டியாய் டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம்ஸ் என்கிற கம்பெனி உருவானது. மேற்ச் சொன்ன பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி பின்னாளில் டிஜிட்டல் இன்கார்பரேஷன் என்றானது.
குருதிப்புனல் 1995ஆம் ஆண்டு டால்பி டிஜிட்டலில் வெளியானது. அமெரிக்காவைப் போலவே.. இங்கேயும் ஒரு வருட இடைவெளியில் டிடிஎஸ் கருப்பு ரோஜாவாக 1996ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டைம் கோட்.. டைம் கோட் என்கிறீர்களே அது என்ன ? என்பவர்களுக்கு.. hh:mm:ss:ff என்பதுதான். டைம் கோட் எனப்படும். Hh என்பது மணி நேரத்தையும், mm என்பது நிமிடங்களையும், ss என்பது செகண்டுகளையும், ff என்பது ப்ரேம் ரேட் அதாவது படம் எத்தனை ப்ரேம்கள் ஓடுகிறது எனபதை குறிப்பது. சினிமாவாக இருந்தால் ff 24 ஃப்ரேம்களும், டிவி அல்லது வீடியோ என்றால் 25/30 ப்ரேம் ரேட்டில் இருக்கும்.
இந்தியாவில் டிடிஎஸ் பெரிதும் வளர முக்கிய காரணம், அதற்கான ராயல்டி பணம்தான். ஆம் ராயல்டி பணம் தான் டிடிஎஸ், டால்பி போன்ற கம்பெனிகளின் வருமானம். ஒவ்வொரு படத்திற்கும் டால்பி சவுண்டையோ, டிடிஎஸ்ஸையோ உபயோகப்படுத்தி அந்த கோடக்குகளை உபயோகிப்பவர்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு ராயல்டி எனப்படும் காப்புரிமை பணத்தை கொடுக்க வேண்டும். அது டால்பி டிஜிட்டலுக்கு மிக அதிகம். அது மட்டுமில்லாமல் ஸ்பீல் பெர்க்கின் முதலீடு வேறு கம்பெனிக்கு பெரிய பப்ளிசிட்டியாக, ஜுராஸிக் பார்க்கின் வெற்றியும் அதனுடன் சேர, உலகெங்கும் டிடிஎஸ் வேகமாய் பரவ ஆரம்பித்தது.
அதே நேரத்தில் தமிழில் வெளியான கருப்பு ரோஜாக்கள் படம் வர்தரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் அதன் பின்னால் வந்த பல பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் டிடிஎஸ்ஸை உபயோகப்படுத்த ஆரம்பிக்க, தமிழ் சினிமாவில் டிடிஎஸ் நிலைக்க ஆரம்பித்தது. இந்நேரத்தில் ஏற்கனவே இருந்த டால்பி டிஜிட்டல், டிடிஎஸ்ஸுக்கு போட்டியாய் இன்னொரு கம்பெனி தன் புதிய ஆடியோ கோடக்கை அறிமுகப்படுத்தியது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
Thanks for sharing.
http://www.youtube.com/watch?v=eV2PpCNQsNo
புதிது புதிதாய் பலதை அறிகிறேன் சகோதரம்.. நன்றி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
check tis too....
தொடர் அருமையா போய்ட்டு இருக்கு சார்.