Thottal Thodarum

Apr 25, 2011

கொத்து பரோட்டா-25/04/11

படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்துத்தான் தியேட்டரின் உள் நுழைந்தேன். சீட் கண்டுபிடித்து உட்கார்ந்தவுடன், என் மூன்றாவது சீட்காரன் “சார். சீட் மாற்றிக் கொள்ளுங்கள்” என்றான். ஏன் என்று கேட்டதற்கு “லேடீஸ் இருக்காங்க” என்றதும் எனக்கு சுரீரென்று கோபம் வந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு “நான் படம் பார்க்க வந்திருக்கேன்” என்றேன். அவன் மறுபடியும் சார்.. லேடீஸ் இருக்காங்கன்னு சொல்றேன்.. மாத்திக்க மாட்டீங்களா? என்றதும். “அலோ.. நான் தான் சொன்னேன் இல்ல.. நான் படம் பார்க்க வந்திருக்கேன். உங்க கூட வந்திருக்கிற லேடீஸை உரச வரலை” என்றதும் மறு பேச்சில்லாமல் படம் பார்க்க ஆரம்பித்தான்.

என்ன ஒரு அநாகரிகமான செயல் இது. தியேட்டரில் பெண்களுக்குப் பக்கத்தில் உள்ளவன் எல்லாம் காய்ந்து போய் அலைந்து கொண்டு தடவிக் கொண்டுதானிருப்பான் என்று நினைப்பது எவ்வளவு ஆபாசமான எண்ணம். அது மட்டுமில்லாமல் நான் டிக்கெட் புக் செய்தால் கால்களை நீட்டிக் கொண்டுபடம் பார்ப்பதற்காக, பாதையின் முனையில் உள்ள சீட்டைத்தான் தெரிவு செய்து புக் செய்வேன். இவ்வளவு பேசிய அந்த மூணாவது சீட்காரன் நாலு நிமிஷத்துக்கு ஒரு முறை அவளை தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் உடல் முழுவதையும் அசைத்து, அசைத்து நான் படம் பார்ப்பதை டிஸ்டர்ப் செய்து கொண்டிருந்தாள். ஞாயமா பார்த்தா நான் தான் இவங்கள வேற சீட்டுக்கு போகச் சொல்லியிருக்கணும்.
#####################################
நேரில் பார்க்காமல் போனில் காதலித்தவன், காதலியை நேரில் பார்த்ததும் அது அட்டு பிகராய் தெரிய எஸ்கேப்பாக முயற்சித்திருக்கிறான். ஆனால் அந்த பிகருக்கோ இவன் ஆணழகனாய் தெரிய, அவனை டார்ச்சர் செய்திருக்கிறாள். டென்ஷன் தாங்காத பையன் தற்கொலை செய்து கொண்டான். காதலிக்கும் போதே டார்சர் தாங்க முடியலைங்கிறவனெல்லாம் லவ் பண்ணி கல்யாணம் எப்படிப் பண்ணுவான்?. என்ன கொடுமை சார் இது.. முடியலை
#######################################
சனிக்கிழமை இரவு கேடிவியில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய “ஆஹா” படம் போட்டிருந்தார்கள். மீண்டும் ஒரு முறை பார்த்தேன். எனக்கென்னவோ பல முறை பார்த்தாலும், இது போன்ற ஒரு ஃபீல் குட் படத்தை இதுவரை சமீபத்தில் பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. அதே போல் அன்று ஒன்பது மணிக்கு ஜெயா மூவீஸில் உயிரே போட்டார்கள். ஐம்பதாவது தடவையாக பார்க்கிறேன் என்று நினைக்கிறேன். எனக்கு உயிரே ரொம்பவே பிடிக்கும். முக்கியமாய் உருக்கும் பின்னணியிசையான ”உயிரே…” என்று முடியும் ஆலாபனை இன்றும் உருக்கிறது. ரஹ்மான் ராக்ஸ்
######################################
காதல் திருமணம் செய்த தம்பதிகளில் பல பேர் தன் கணவணையோ,மனைவியையோ கொன்று விடுகிறார்கள். கள்ளக்காதல் ப்ரச்சனையால். சமீபத்தில் ஒரு பேராசிரியையின் கணவன் தன் மனைவியின் மேல் சந்தேகம் கொண்டிருக்கிறான். மனைவிக்கும் அவன் மேல் சந்தேகம். இத்தனைக்கும் காதல் திருமணம். குழந்தையில்லை. சந்தேகம் என்று வந்துவிட்ட பிறகு அதை நிவர்த்தி செய்ய ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்திருக்கலாம், வீட்டு பெரியவர்களை வைத்து பேசியிருக்கலாம். இல்லையேல் உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்று விவாகரத்து செய்திருக்கலாம். இது அத்தனையும் விட்டுவிட்டு கொலை செய்ய ஆள் வைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது?. இதற்கெல்லாம் காரணம் நம் சமூக அமைப்புதான் என்று தோன்றுகிறது. காதலிக்கும் போது ரெண்டு குடும்பமும் எதிர்ப்பது. எதிர்ப்பை சமாளிக்க போராடுவது, பின்பு வாழ்க்கையை செட்டில் செய்து கொள்ள போராடுவது என்று போராடி, போராடி அலுத்த வேளையில் அவர்களுக்குள்ளும் அலுக்க ஆரம்பிக்க, கள்ளக்காதலும், சந்தேகமும் தாண்டவமாட ஆரம்பித்துவிடுகிறது.  இதற்கு விவாகரத்துதான் சரியான தீர்வு என்று முடிவெடுத்து அதற்கு போனால், வீடு, சமூகம், எல்லோரும் பார்க்கும் பார்வை ஒரு விதம். அதையெல்லாம் தவிர்க்க, திருடர்கள் வந்து கொள்ளையடித்துவிட்டு போனார்கள், நகை திருட்டு என்று கதை செய்து கூலிப்படையினர் மூலம் கொலை செய்து தப்பித்துவிடலாம் என்று நினைக்கும் இவர்கள். போலீஸாரின் இரண்டொரு கேள்வியிலேயே கக்கி விடுகிறார்கள். என்னத்தை சொல்றது? கள்ளக்காதலுடனு இருப்பதை தடுத்த ஒரு தாய் தன் பதினெட்டு வயது மகளை கொன்று எரித்திருக்கிறாள். கலி முத்திடுத்து.. பகவானே..
####################################
சென்னையின் முதல் மல்ட்டிப்ளெக்ஸ், டிஜிட்டல் ஸ்கீரினிங், குஷன் நாற்காலிகள், முதல் தம்மடிக்க முடியாத திரையரங்கு, முதல் ஆர்டிஎக்ஸ் ப்ரொஜக்‌ஷன், முதன் முதலில் பார்க்கிங்குக்கு பத்து ரூபாய் வாங்கியவர்கள், சப்டைட்டிலுடன் படம் போட ஆரம்பித்தவர்கள், என்று பல முதல்களுக்கு சொந்தக்காரர்களான சத்யம் திரையரங்கு உரிமையாளர்களின் அடுத்த சென்னையின் முதல் ஐமேக்ஸ். ஆம் சென்னையின் முதல் ஐமேக்ஸ் சத்யம் திரையரங்கு வளாகத்தில் வரவிருக்கிறதாம்.
################################################# 
Tu_32579 அவதார் படத்தின் வசூலை ஒரேயடியாய் தூக்கி சாப்பிட்டிருக்கிறது ஒரு படம். இரண்டு படத்திற்கு ஒரு ஒற்றுமை என்னவென்றால் 3 டி படம் என்பது மட்டும்தான். செக்ஸ் அண்ட் சின் என்கிற ஹாங்காங் படம் தான் அது. ஏற்கனவே 1991ல் சீனாவில் எடுக்கப்பட்டு ஓடிய குஜால் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். படம் முழுக்க அஜால் குஜால் முழு நீள நிர்வாணக் காட்சிகளும், உடலுறவு காட்சிகளைக் கொண்ட இப்படத்தின் வெற்றி, இதற்கான அடுத்த பாகத்தை எடுக்க தயாராகும் அளவிற்கு வந்திருக்கிறது. சைனாவில் இப்படம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கேள்வி. அதனால் அந்நாட்டு மக்கள் எல்லோரும் ஹாங்காங்குக்கு படையெடுத்து கொண்டிருக்கிறார்களாம். கண்ட ரோபோ கருமாந்திரப்படமெல்லாம் உடனே உடனே வருது, இந்தப் படம் எப்ப நம்ம ஊருல எப்ப வரும்..?
##############################
நண்பேண்டா
நான் நேசிக்கும் பலர் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப மறந்தாலும், நான் அனுப்ப மறப்பதில்லை. ஏனென்றால் எனக்கு எஸ்.எம்.எஸ் ஃபிரி..ஹி..ஹி
தவறான ஒருவனை நண்பனாகவோ, காதலனாகவோ தேர்ந்தெடுததிற்காக வருத்தப்படாதே. அதன் மூலம் தான் சரியான ஒருவனைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.
##############################################
இந்த வார புத்தகம்மாதொரு பாகனுக்கு பிறகு ஒரே மூச்சில் சமீபத்தில் படித்த புத்தகம் கே.ஆர்.பி.செந்திலின் “பணம்”. பணத்துக்காக வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பல அடி மட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை கண் முன்னே கொண்டு நிறுத்தும் புத்தகம். சில இடங்களில் முதுகில் சில்லிட வைக்கிறது நிஜங்கள். ஒரு த்ரில்லர் நாவலைவிட பரபரப்பான, அதிரடியான சம்பவங்கள் நிறைந்த நிஜ வாழ்க்கையின் வலிகள் நிறைந்த புத்தகம். ஒவ்வொரு அத்யாயமும் மிகச் நெகிழ வைக்கிறது. முக்கியமாய் மலேசியா எபிசோடில் வரும் நிகழ்வுகள் ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதையோடு இருக்கிறது. படித்தவுடன் ஒரு ஒன்லைன் போட்டுவிட்டேன். முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட வேண்டிய தமிழ்படக்கதை. ஆர்வமுள்ள, மலேசிய, சிங்கை நண்பர்கள் தயாரிக்க உதவினால் மிகக் குறைந்த செலவில் முழுப்படத்தையும் மலேசியாவிலேயே எடுத்துவிட முடியும். ஸ்யூர் ஷாட் கல்ட் படமாய் அமையும். ”ழ” பதிப்பக வெளியிடு. விலை.ரூ90
####################################################
போகக்கூடிய தியேட்டர் பற்றி எழுதும் போது போகக் கூடாத தியேட்டர் பற்றியும் எழுத வேண்டும். அதில் ஒன்று தேவிபாலா தியேட்டர். சீட்டெல்லாம் நல்ல வசதியாய்த்தானிருக்கிறது. டால்பி3டியில் படம் போட டிஜிட்டல் ப்ரொஜெக்டர் எல்லாம் இருக்கிறது. ஆனால் படு திராபையான சீட்டமைப்பு, முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலை நமக்கு மறைக்கிறது. அதுவும் மூன்றாவது வரிசையில் இருப்பவர் தலை. அது மட்டுமில்லாமல் படு கேவலமான ஒலியமைப்பு. சத்தம் அதிகம் வைத்தால் பக்கத்து வீட்டில் திட்டுவார்களோ என்று பயந்து வைத்தது போல ஒரு ஒலியமைப்பு. தேவி, தேவி பாரடைஸை நம்பி போனவர்கள் நிச்சயம் கெட்டார்கள். இதில் பதினைந்து ரூபாய் வாங்கிக் கொண்டு படு கேவலமான பார்க்கிங் அலைன்மெண்ட்.
############################################################
ப்ளாஷ்பேக்
என்பதுகளில் பெரிய ஹிட் பாடல். இந்த பாட்டை கேட்டதும் அட இந்தப் பாட்டா என்று துள்ளிக் குதித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. அப்படி ஒரு அட்டைக் காப்பி.  கேட்டுத்தான் பாருங்களேன்.

###########################################
அடல்ட் கார்னர்
எமன்:- பெண்ணே , நீ செய்த குற்றம் என்ன?
பெண்-1:-கல்யாணத்துக்கு முன்னாடியே நான் ஒருத்தனுடன் மேட்டர் பண்ணிவிட்டேன்.
எமன்:- நீ நரகத்துக்கு போ.. அடுத்த பெண்..நீ என்ன தவறு செய்தாய்..
பெண்-2:- நான் என் கல்யாணத்துக்கு அப்புறம் கணவருடன் தான் மேட்டர் செய்தேன்.
எமன்:- அப்போ நீ சொர்கத்துக்கு போ..அடுத்த பெண்.. நீ என்னம்மா செஞ்ச..
பெண்-3:- என்னை இதுவரைக்கும் யாருமே மேட்டர் பண்ணல...
எமன்:- அப்போ நீ என் ரூமுக்கு போ..
எமண்டா :)
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

Prabhu said...

அய்ய்..முதல் வடை

கத்தார் சீனு said...

என்னங்கே தலைவரே கொள்ள காப்பியா இருக்கு??
சுசானா டு ஒ சோனா !!!
கொத்து அருமை எப்பவும் போல !!!

Unknown said...

மிக்க நன்றி தல...

JesusJoseph said...

Good Collection

Thanks
Joseph
Job Opportunity: Need candidates with good English knowledge and basic computer knowledge with any degree.
Contact: Kannan: 94435-87282
Work Location: Kanyakumari Dist.

vinthaimanithan said...

மிக்ஸிங் கரீட்டா கீது நைனா :)

வெள்ளிநிலா said...

முதல் பாரா , அடியேனுக்கும் நடந்துள்ளது, பெண்கள் அருகில் சினிமா பார்க்க உட்காருவதில்லை, சத்யம் தவிர்த்து ., காரணம் நாம் கம்போர்டாக உட்காரமுடியாது., தெரியாமல் ஏதும் நடந்தாலும் பிரச்சனை, அதுனாலதான்

Cinema Virumbi said...

கேபிள் சார்,

வாழ்த்துக்கள்! உங்கள் பெயரைக் குமுதம் அரசு பதில்களில் பார்த்தேன்!

நன்றி!

சினிமா விரும்பி

Suthershan said...

அந்த படம் சிங்கைல ரிலீஸ் ஆகி இருக்கானு பார்க்கணும்.. ஹி. ஹி. தகவலுக்கு நன்றி..
தேவா பாடெல்லாம் எதில் இருந்து சுட்டார்னு நீங்க ஒரு புத்தகமே போடலாம்..

Anonymous said...

ஐமேக்ஸ் சத்யம் திரையரங்கு வளாகத்தில்...Great News!

kamalakkannan said...

கே.ஆர்.பி.செந்திலின் “பணம்” புத்தகம் கிடைக்கும் இடம் தெரிய படுத்தினால் உதவியாக இருக்கும் .

R.Gopi said...

என்னா தல....

இசையமைப்பாளர் (!!) தேவா BUFFALO SOLDIER பாட்ட அடிச்சு “அகிலா அகிலா” போடலியா... அது மாதிரி தான்... தேவா / வேதா / சங்கர் கணேஷ் இவங்க எல்லாம் ஒரிஜினலா ட்யூன் போட்டா தான் அது நியூஸ்...

தமிழ் சினிமா செய்திகள் said...

இதுல முதல் குற்றவாளி ஹாரிஸ் தான்..

selventhiran said...

அந்த 3டி படத்தின் நாயகி சர்வதேச அளவில் போர்னோ படங்களுக்குப் பெயர் பெற்றவர். பிரமாதமான அழகி. மேடத்தைப் பற்றியும் இரண்டு வரி எழுதி இருக்கலாம்.

Unknown said...

//கே.ஆர்.பி.செந்திலின் “பணம்” புத்தகம் கிடைக்கும் இடம் தெரிய படுத்தினால் உதவியாக இருக்கும்//

சென்னையில் டிஸ்கவரி புக் பேலசில் கிடைக்கும்..

பனித்துளி சங்கர் said...

///நான் படம் பார்க்க வந்திருக்கேன். உங்க கூட வந்திருக்கிற லேடீஸை உரச வரலை” என்றதும் மறு பேச்சில்லாமல் படம் பார்க்க ஆரம்பித்தான்//////////

சரியான பதில்தான் கொடுத்து இருக்கிறீர்கள் தலைவா . இதுபோல் இன்னும் திருந்தாமல் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் .

arul Sudarsanam said...

சார், எப்போ IMAX வருதுன்னு தெரியுமா, நான் imax - ன் தீவிர விசிறி

Nakkiran said...

//என்பதுகளில் பெரிய ஹிட் பாடல்.//???

Thonnoorugalil thalaiva....

Cable சங்கர் said...

இந்த ஒரிஜினல் பாடல் என்பதுகளில் மிகப் பேமஸு.. நக்கீரன் அவர்களே.. குற்றம் குற்றமே..:)

Katz said...

//கள்ளக்காதலுடனு இருப்பதை தடுத்த ஒரு தாய் தன் பதினெட்டு வயது மகளை கொன்று எரித்திருக்கிறாள். //

change it.


தடுத்த தன் பதினெட்டு வயது மகளை ஒரு தாய்

gud kothu.

pichaikaaran said...

"இவ்வளவு பேசிய அந்த மூணாவது சீட்காரன் நாலு நிமிஷத்துக்கு ஒரு முறை அவளை தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் உடல் முழுவதையும் அசைத்து, அசைத்து நான் படம் பார்ப்பதை டிஸ்டர்ப் செய்து கொண்டிருந்தாள்"

ஆக, நீங்க படத்தை திரையில் பார்க்கல.. பக்கத்துலயே , சென்சார் இல்லாம, பார்த்து ரசிச்சு இருக்கீங்க ,,ம்ம்ம்