டிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா?
அடல்ஸ் ஒன்லி படமானதால் தன் கூட வந்த நண்பனை ஐடி கார்டு இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் தான் வாங்கிய டிக்கெட்டை தியேட்டர் கவுண்டரிலேயே ரிட்டர்ன் செய்ய வந்தான் ஒரு புது தாடி மீசை முளைத்த இளைஞன். தியேட்டர்காரர்கள் “நாங்கள் டிக்கெட் கொடுக்கும் போதே சொல்லித்தானே கொடுத்தோம் நாங்கள் ரிட்டர்ன் எடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். பையனுக்கோ, அவசரம் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, அந்த டிக்கெட்டை நான் வாங்கினேன். டிக்கெடை வாங்கி தேதி, மற்றும் சீட் நம்பரை பார்த்துவிட்டு, டிக்கெட்டை சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, வண்டியை பார்க்கிங் போட கிளம்பினேன்.
போகும் போது போன் வர பாக்கெட்டிலிருந்து போன் எடுத்து பேசிவிட்டு போனை வைக்கும் போது பார்த்தேன் பாக்கெட்டில் டிக்கெட் இல்லை. நடந்து வந்த பாதையில் திரும்ப ஒரு ரவுண்ட் அடித்து தேடிப் பார்த்தாகிவிட்டது. சரி வேறு வழியில்லை என்று மீண்டும் அதே கவுண்டரில் டிக்கெட் வாங்க போய் நின்ற போது, கவுண்டர் ஸ்டாப் “ சார்.. நீங்க அந்த படத்துக்கு இப்பத்தானே டிக்கெட் வாங்கினீங்க? என்று கேட்க, நான் நடந்ததை சொன்னேன். உடனே உள்ளே போய் மேனேஜரை பாருங்க.. அவர் உங்களுக்கு உதவுவார் என்றார். இதில் உதவ என்ன இருக்கு என்று யோசித்தபடி சென்றேன்.
நாங்கள் தியேட்ட்ர் நடத்தும் காலத்தில் கூட டிக்கெட் இல்லாமல் யாரையும் அனுமதிக்க மாட்டோம். நான் மேனேஜரிடம் நடந்ததை கூறினேன். நான் சொன்ன சீட் நம்பர், அதை வாங்கிய ஆள் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு தியேட்டரின் உள்ளே என்னை அழைத்துக் கொண்டு போய் நான் சொன்னது உண்மையா என்று டிக்கெட் விற்றவனிடம் போய் விசாரித்துவிட்டு “சார்.. நான் உங்களை நம்புகிறேன். ஆனால் ஒரு ப்ரச்சனை. ஒரு வேளை டிக்கெட்டை யாராவது கண்டெடுத்து வந்தால் அவர்களுக்கு அந்த சீட்டை நான் கொடுத்தாகவேண்டும். ஒரு வேளை அநேரத்தில் டிக்கெட் புல் ஆகிவிட்டால் நீங்க வெளியே போக வேண்டும் என்றார். நானும் பரவாயில்லை என்று சொன்னேன். படம் ஆரம்பித்து ஒர் அரை மணி நேரம் கழித்து ஒருவர் நான் தொலைத்த டிக்கெட்டை எடுத்து வர, உடனே அவரை கொஞ்சம் நிற்க வைத்துவிட்டு டிக்கெட் புல் ஆகாததால், எனக்கு ஒரு சீட்டை ஒதுக்கி, அவருக்கும் சீட்டை கொடுத்துவிட்டு தான் அந்த நபர் நகர்ந்தார். வெளியே வந்த போது அவருக்கு நன்றி சொன்னேன். முக்கிய்மாய் ஒரு ஆளை எனக்காக போட்டு நான் படம் பார்ப்பதை எந்த அளவிற்கும் டிஸ்ட்ராக்ட் ஆகாமல் செய்தற்காக என்றபோது, “அது தானே சார் எங்க ட்யூட்டி” என்று சிரித்தபடி வெளியேறினார். நன்றி சாம். நன்றி சத்யம் மல்ட்டிப்ளெக்ஸ் நிர்வாகம். நான் ஏன் இந்த தியேட்டரை விரும்புகிறேன் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் போய்விட்டது.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
பிரபலமாயிட்டா இதெல்லாம் சகஜம் தானே
அதுதான் உண்மையான சேவை!