இந்த உலகக் கோப்பை, பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஆரம்பித்ததிலிருந்து தமிழ் சினிமா உலகில் பெரியதொரு வறட்சி தென்படுகிறது. இது வழக்கமாய் இருப்பதுதான் என்றாலும், கூடவே தேர்தலும் சேர்ந்து கொண்டதால் இன்னும் வறட்சி அதிகமாய்த்தான் போய்விட்டது. இம்மாதிரியான நேரங்களில் பெரிய, ஓரளவுக்கு மக்கள் அறிந்த நடிகர் நடிகைகள் நடித்த சுமார், மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை யாரும் வெளியிட விரும்புவதில்லை. சரி அப்படியானால் தியேட்டர்களை எப்படி நடத்துவது?. கிரிக்கெட், அரசியல் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்றால் என்ன செய்வார்கள்?
இப்படிப்பட்ட காலங்களில் தான் நிறைய சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளிவரும் காலமாக அமையும். ஆனால் இன்றைய தமிழ் சினிமா காலகட்டத்தில் அவைகளுக்கும் தியேட்டரில் கூட்டம் கூடுவதில்லை. ஏனென்றால் வருவதெல்லாம் மிகவும் திராபையாக இருப்பதும் ஒரு காரணம். இதற்காக ரிஸ்க் எடுத்து எழுபது என்பது ரூபாய் கொடுத்து படம் பார்க்க நிறைய பேருக்கு தைரியமிருப்பதிலை. சென்ற வாரம் ஒரு நாள் சென்னையின் முக்கியமான ஒரு காம்ப்ளெக்ஸ் திரையரங்கிற்கு சென்றிருந்தேன். தியேட்டர் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த போது, “நேத்து நம்ம காம்ப்ளெக்ஸுல மொத்த நாலு தியேட்டர்லேயும், சேர்த்து எவ்வ்ள்வு ஆடியன்ஸ் வந்திருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? என்று கேட்டார். அது சென்னையின் முக்கியமான காம்ப்ளெக்ஸ். பழம்பெரும் தியேட்டர். சென்னை அண்ணாசாலையில் புகழ் பெற்றது. எந்தவிதமான படங்கள் போட்டாலும், சுமாரான வசூலைக் கொடுக்கக்கூடிய சென்டர். நூறு ரூபாய்க்கு குறைவான அனுமதிக்கட்டணம் இப்படிப்பட்ட எல்லா வசதிகளையும் கொண்ட திரையரங்கு காம்ப்ளெக்ஸ் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அவர் பொறுமையில்லாமல் மொத்தமாய் நான்கு தியேட்டர்களையும் சேர்த்து 350 பேர் என்றார். நான் அதிர்ந்து போய்விட்டேன். இந்த நிலையிஅ நான் இந்த செண்டரில் எதிர்பார்க்கவில்லை. ரெண்டொரு வாரத்திற்கு முன் சத்யமில் நூறு ரூபாய் டிக்கெட்டில் நான் மட்டும் படம் பார்த்த அனுபவம் எனக்கிருந்தாலும் இந்த செய்தி அதிர்ச்சியாய்த்தான் இருந்தது.
சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் நான்கு காட்சிகள் ஓடுகிறது. ஆனால் மற்ற ஏரியாக்களில் பெரும்பாலும் இரவுக் காட்சிகள் ஓட்டப்படுவதேயில்லை. ஆட்கள் இருந்தால் தானே படம் ஓட்டுவதற்கு?. சின்ன பட்ஜெட் படங்கள் விளம்பரமில்லாமலும், படத்தின் தரம் குறைவாலும் மக்களை உள்ளிழுக்க முடியாமல் தடுமாறும் நேரத்தில் பல தியேட்டர்களுக்கு சுவாசப் புத்துணர்ச்சியே இம்மாதிரியா ஸாப்ட் போர்ன் வகை படங்கள் தான். இம்மாதிரியான படங்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு மினிமம் கூட்டம் நிச்சயம். போட்ட காசை எடுக்க ஆதீதமாய் கவர்ச்சியோடு போஸ்டர்கள் ஒட்டபட்டு, மக்களை கவர்ந்திழுத்து கல்லா கட்ட பிட்டு படங்களுக்கு இருக்கிற சக்தி வேறெந்த படங்களுக்குமில்லை என்றே சொல்லலாம். இம்மாதிரி படஙக்ளுக்கென்று இருக்கிற குறைந்த பட்ச ஓப்பனிங் தான் இம்மாதிரியான நேரங்களில் தியேட்டர்காரர்களுக்கும், சிறு முதலீட்டு விநியோகஸ்தர்களுக்கும் சுவாசப் புத்துணர்ச்சி.
சினிமாவில் தொய்வு ஏற்படும் காலகட்டத்தில் இம்மாதிரி படங்களுக்கு டிமாண்ட் அதிகமாகிவிடும். ஏனென்றால் இந்த படங்களை டிவியில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் என்று வெளியிடமாட்டார்கள். சென்னையை தவிர மற்ற ஊர்களுக்குள் திரையிடும் போது சிலபல காட்சிகளை சேர்த்து வெளியிட முடியும். அது மட்டுமல்லாமல். சுமார் பத்து லட்சம் இருந்தால் இன்றைய டிஜிட்டல் டெக்னாலஜியில் நான்கைந்து கவர்ச்சி நடிகைகளுக்கு மட்டும் சம்பளம் கொடுத்துவிட்டு படமெடுத்துவிடலாம். விளம்பரம், மற்ற இத்யாதிக்கள் செலவுகள் எல்லாம் சேர்த்தால் முப்பது லட்சத்திற்குள் மொத்த படத்தையும் எடுத்துவிடலாம். அதன் பிறகு இம்மாதிரியா படங்களுக்கு மொழி பிரச்சனையே இல்லை என்பதால், தமிழ், தெலுங்கும் மலையாளம் என்று கலந்து கட்டி ஏரியாவுக்கு ஒரு லட்சம் என்று விற்றால் கூட நல்ல லாபம் தயாரிப்பாளர்களுக்கு. ஆனால் எல்லா பிட்டு படங்களும் ஓடுவதில்லை. அதை வாங்கி தோல்வியடைந்த விநியோகஸ்தர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை படங்கள் கல்லா கட்டுவதால் ஒரு நம்பகத்தன்மை இம்மாதிரியான் படங்களுக்கு விநியோகஸ்தர்கள், தியேட்ட்ர்காரர்களுக்கு கிடைத்திருப்பதென்னவோ உண்மைதான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
7 comments:
vada enake....
its true Cable....
In the same Anna salai Theatre, i witnessed only 80 seats occupied in saturday evening show last month for singampuli movie
சரி... சரி...
பிட்டு படத்துல இப்ப பிட்டே இல்லையே..ஏமாதுறாங்க
எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு
super!!!!
பிட்டு பிட்டு வச்சிட்டீங்க. ஐ.பி. எல். போட்டி நாளைக்கி ஆரம்பம். மந்திரா பேடி மேடம் வந்தா ....எல்லா பிட் படமும் தியேட்டர விட்டு ஓட வேண்டியதுதான்.
நாடே தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்ற கவலை .....
உமக்கு தியேட்டரில் கூட்டம் வரவில்லை என்ற கவலை ....
http://kanthakadavul.blogspot.com/2011/04/blog-post_07.html
// ஏனென்றால் வருவதெல்லாம் மிகவும் திராபையாக இருப்பதும் ஒரு காரணம்.// அது தான் உண்மை.மொதல்ல குப்பை பொறுக்கறவர்கள் போல அசிங்கமான ஹீரோக்களை கட்டுவதை நிறுத்தி கொஞ்சம் ஹீரோக்கள் மூஞ்சிய நல்ல விதமா காமிச்சு டீஸண்ட் படம் எடுத்தாதான் மக்கள் பாப்பாங்க. இப்போ பரீட்சை சமயம் வேற, அதனாலயும் கூட்டம் வராம இருக்கலாம். முக்கியமா இந்த மதுரை பாஷை ஈ அடிச்சான் காப்பி அடிச்சி படம் எடுக்கறத நிறுத்தி மாத்தி யோசிக்க சொல்லுங்க. சினிமா மாறும்! என்ன சரியா நான் சொல்றது.
Post a Comment