நஞ்சுபுரம்
நஞ்சுபரம் எனும் ஊர் நான்கு பக்கங்களிலும் மலைகளாலும், நச்சுப் பாம்புகளாலும் சூழப்பட்டது. ஊரே பாம்பை பார்த்து பயந்து கொண்டிருக்க, அந்த ஊர் பெரியதனக்காரர் மகன் மட்டும் பாம்பைப் பார்த்து பயப்படாமல் இருக்கிறான். ஊர் கீழ் ஜாதி பெண்ணைக் காதலிக்கிறான். ஒரு நாள் நாகப்பாம்பை கொல்லாமல் விட்டு விட, அது திரும்ப வந்து பழிவாங்கும் என்ற நம்பிக்கையால் ஒரு பெரிய பரணைக்கட்டி அதில் அவனை உட்கார வைக்கிறார்கள். இதன் நடுவில் யாருக்கும் தெரியாமல் காதல், அவர்களுக்குள் கசமுச, கீழ் ஜாதி, மேல் ஜாதி, என்று பல விஷயங்கள் ஓட, நடுவே இவர்களது நம்பிக்கையும் சேர்ந்து பெரியதனக்காரன் மகன் கோழையாகிறான். எங்கே தான் பாம்பு கடித்து செத்துப் போவோமோ? என்று பயந்து, காதலியை பார்க்காமல் இருக்கிறான். அவனது பயம் தெளிந்ததா? காதலியுடன் அவன் சேர்ந்தானா? பாம்பு பழி வாங்கியதா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தியேட்டரில்.
ராகவ், மோனிகாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் புதுசாக ஏதுமில்லை. மோனிகாவை பார்க, பார்க்க ரொம்பவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. க்யூட்.
சொல்ல வந்த விஷயம் நல்ல இண்டர்ஸ்டிங்கான விஷயம் தான். ஆனால் ஆங்காங்கே வரும் பாடல்கள் பெரிய தடை கற்கள். சுவாரஸ்யமாய் கதை சொல்லும் போது பாட்டு வந்து இம்சை செய்கிறது. படத்தில் பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்களாகவும், டிவி சீரியல் ஆட்களாகவுமிருக்கிறார்கள். ஹெச்டிவியில் எடுக்கப்பட்ட படம். வெளிப்புற படப்பிடிப்பில் பல இடங்களில் வீடியோ ப்ளீச் இருந்தாலும் மிக நல்ல முயற்சி.. அதிலும் இரவு நேரக் காட்சிகளில் துல்லியம்.
நஞ்சுபுரம்- விஷம் இல்லை.
Comments
சாரைப்பாம்புன்னு வச்சிருக்கலாம்..
உணர்ச்சிகள் மற்றும் சில பல படங்களில் நடித்து இப்படி ஒரு டிமாண்ட் இருப்பதை தமிழ் சினிமாவுக்கு உணர்த்தி காப்பாற்றியவர் கமல் என்றால் அது மிகையாகாது.....
ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் இம்மாதிரி படங்களுக்கு இருந்த மவுசை பார்த்து தமிழுக்கு கொண்டு வந்த பெருமை அவரையே சாரும்
அடித்து சொல்கிறேன் கமல் மட்டும் இல்லையென்றால் வறட்சி காலங்களில் தமிழ் சினிமா அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டிருக்கும்....
இந்த படம் எடுப்பதற்கு முன் கமல் தியேட்டர் அதிபர்களிடம் பேசி இப்படியான படங்களுக்கென்றே ஒவ்வொரு ஊரிலும் தனி தியேட்டர் அமைக்க ஏற்பாடு செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்....
இதையும் பாருங்கள் live Watch Online TV-RADIO
Your comment is in a wrong post :-)