சாப்பாட்டுக்கடை
ஈரோடு போகப் போகிறோம் என்றதுமே தண்டோரா நிச்சயம் குப்பண்ணா மெஸ்ஸில் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். காலையில் நாங்கள் லேட்டாய் போனதால் வெறும் பரோட்டா மட்டுமே கிடைக்க, சாப்பாடு வேறு ஆரம்பித்து விட்டதால் வெறும் பரோட்டா, மட்டன் மசாலா சாப்பிட்டோம். வாயில் வைத்தவுடனேயே மத்யானம் நிச்சயம் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. சாப்பாடு சாப்பிட்ட சூர்யா காரகுழம்பு என்று ஒன்றை காட்டி ஒரு வாய் சாப்பிட அடடா.. இத்தனைக்கும் அவர் சாப்பிட்டது வெஜ் மீல்ஸ். கடைசியாய் கிளம்பும் முன் ஒரு டம்ளர் ரசத்தை குடிக்க, நிச்சயம் மதிய சாப்பாடு இங்கேதான் என்று முடிவெடுத்துவிட்டோம்.
மதிய சாப்பாடுக்கு ஆளுக்கு ஒரு மீல்ஸும் நாட்டுக்கோழியையும் லபக்கிவிட்டு, ஒவ்வொரு அயிட்டத்தின் ருசியின் காரணமாய் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டோம். ரசம்னா அது ரசம். சமீபகாலங்களில் அவ்வளவு ருசியான ரசம் நல்ல தக்காளி, பூண்டு எல்லாம் போட்டு கமகமவென சாப்பிட்டதில்லை. யாரையும் சீட்டு இல்லாமல் அலைய வைப்பதில்லை. கூடவே வந்து சீட்டை காட்டி உட்கார வைத்து விட்டுத்தான் வேறுவேலை பார்க்கிறார்கள் இதற்கென உள்ள ஆட்கள். ஹோட்டலின் சுற்றுபுறம் அவ்வளவு சுத்தம். பஸ் ஸ்டாண்டிலிருந்து வலது பக்கம் திரும்பி நடந்தால் சிக்னல் தாண்டியவுடன் இருக்கிறது. யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு போய் விடுங்கள் ஜூனியர் குப்பண்ணா மெஸ்ஸை. ஈரோடுக்கு போய் விட்டு அங்கு சாப்பிடாமல் வருவது.. நிச்சயம் நீங்கள் ஒரு நல்ல உணவை மிஸ் பண்ணிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
Post a Comment
16 comments:
Me thaa first ya ....,,,,
தல புக் கிடைச்சிடுச்சி... நன்றி
நான் பலமுறை ஈரோடு போயிருக்கேன். இந்த மெஸ் போனதில்லையே. அடுத்த முறை என்னவருடன் சேர்ந்து போய்ட வேண்டியது தான். தேங்க்ஸ் கேபிள்.
இவ்வளவு நாள் தெரியாம போச்சே..
நம்ம கோவையிலும் இருக்கு ...வந்தீங்கன்னா இங்கயும் ஒரு பிடி பிடிக்கலாம் ....
எங்க ஊருக்கு வந்து எங்க ஊரு சாப்பாட்டு கடைய பத்தி சொன்னது ரொம்ம்ம்ப சந்தோசம்.... என்ன முதல் தடவை அங்க கூட்டிட்டு போனது எங்க அப்பா தான்............ ரொம்ப சின்ன வயசுல....
ஈரோடு மாவட்ட சுவையே தனி தான். (ஊரு பெருமை !) :)
ஆஹா...படிக்குபோதே நாக்குல எச்சில் ஊறுதே....
இன்றைய என் பதிவு http://ragariz.blogspot.com/2011/04/krp-senthil-author-of-panam.html
im fan of kuppanna mess
@sivakumar
2ook rightu
சிவகாசி மாப்பிள்ளை
படிச்சிட்டு சொல்லுங்க
@விக்னேஷ்வரி
அதுக்கென்ன இன்னொரு வாட்டு போயிட்டு வந்திருங்க..
@அங்குசாமி
ஆமா
@சுதர்ஷன்
இப்பதான் தெரிஞ்சிருச்சு இல்ல
@கோவை நேரம்
வந்திட்டாப் போச்சு பில் கொடுக்க ஆளிருக்கும் போது என்ன கவலை..?
2பிரதீபா
ஆமா..
@ரஹூம் கஸாலி
ம்..
2ஷங்கர்
அட..
Try kongu parotta stall and mudaliar mess in Erode.
We went last week but hat is called Kuppanna mess and I had asked about Junior Kuppanna. They told it is their branch...do not know correct or not... but this place also good... I feel.
:-))
hi shanker,
நானும் ஈரோடு தான்.சாப்பாடு தான் என் வாழ்வு.ஏர்காட்டில் ரிசாட்டில் மேளாலராக பணி.உணவை தேடி கண்டு பிடிப்பது தான் என் வேலை.ரசத்திற்க்கு சங்ககிரி மாய பஜாரில் சாப்பிட்டு பாருங்கள்.அசைவம் சேர்ந்து.....!!!அப்பறம் சொல்லுங்க நன்பரே...
Hi
Hi call me 9843098432
Post a Comment