தமிழ் சினிமாவின் சமீபத்திய தியேட்டர் கூட்ட வறட்சியை போக்க வந்திருக்கும் முதல் கோடைக்காலப் படம் “கோ”. ஓளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்தின் மூன்றாவது படம். முதல் படத்தில் டீசண்டாய் இருந்து கொண்டு கந்துவட்டி மேட்டர், இரண்டாவது படத்தில் கள்ளக்கடத்தல் பின்னணி. இதில் அரசியலும், பத்திரிக்கை போட்டோகிராபரின் வாழ்க்கையை ஒட்டிய பின்னணி. மூன்றிலும் ஒவ்வொரு கதை களன். முந்தைய படமான அயனின் வெற்றியும், ஹாரிஸின் என்னவோ ஏதோவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.
ஒரு தின இதழின் போட்டோகிராபரான ஜீவாவையும், அதன் ரிப்போர்டர்களான கார்த்திகா, பியாவை சுற்றி நடக்கும் கதை. இவர்களின் செய்லால் தமிழ் நாட்டின் ஆட்சியையே மாற்றி அமைக்க எப்படி முடிகிறது? என்பதை முடிந்த வரை சுறுசுறுப்பான திரைக்கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் காட்சியான பேங்க் கொள்ளைக்காட்சியில் பற்றிக் கொள்ளும் திரைக்கதை, மெல்ல சூடு பரவி, எதிர்கட்சி தலைவர் கோட்டாவிடம் பற்றி எரிய ஆரம்பித்து, ப்ரகாஷ்ராஜிடம் வந்து நின்று எரிய ஆரம்பித்து சட்டென அணைந்துவிடுகிறது. நடுவே கொஞ்சம் நேரம் என்ன ஏது என்று புரியாமல் அலைபாய்ந்துவிட்டு, அஜ்மல் கட்சி மீட்டிங்கில் வெடித்தெழுகிறது. அதன் பின்பு நடப்பது தெரிந்த பாதையாய் போவதால் க்ளைமாக்ஸின் போது புஸ்ஸென ஆகிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. அஜ்மல் கேரக்டரின் அதீத முக்யத்துவமும், ஜீவா, அஜ்மல் நட்பும் பெரிதாய் ஒட்டவில்லை.
படத்தின் முதல் காட்சியான பேங்க் கொள்ளைக்காட்சியில் பற்றிக் கொள்ளும் திரைக்கதை, மெல்ல சூடு பரவி, எதிர்கட்சி தலைவர் கோட்டாவிடம் பற்றி எரிய ஆரம்பித்து, ப்ரகாஷ்ராஜிடம் வந்து நின்று எரிய ஆரம்பித்து சட்டென அணைந்துவிடுகிறது. நடுவே கொஞ்சம் நேரம் என்ன ஏது என்று புரியாமல் அலைபாய்ந்துவிட்டு, அஜ்மல் கட்சி மீட்டிங்கில் வெடித்தெழுகிறது. அதன் பின்பு நடப்பது தெரிந்த பாதையாய் போவதால் க்ளைமாக்ஸின் போது புஸ்ஸென ஆகிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. அஜ்மல் கேரக்டரின் அதீத முக்யத்துவமும், ஜீவா, அஜ்மல் நட்பும் பெரிதாய் ஒட்டவில்லை.
முக்கியமாய் பத்திரிக்கையாளர்களான சுபா, கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் பின்னணி நன்றாகவே தெரிந்திருக்கும் அப்படியிருக்கையில் ஒரு முதலமைச்சர் இண்டர்வியூ கொடுக்கும் போது இப்படி கோமாளித்தனமாய் நடந்து கொள்வாரா என்பது கேள்வியே. அது மட்டுமில்லாமல் கோட்டாவின் எபிசோட் ஆந்திரக் காரம்.
ஜீவாவுக்கு மிக இயல்பாய் பொருந்துகிறது இந்த போட்டோகிராபர் கேரக்டர். சம்பவங்கள் நடக்கும் போது சடாலென கேமராவை தூக்கிக் கொண்டு ஒடும் பரபரப்பும், போட்டோ எடுக்கும் லாவகமும் படு இயல்பு. கார்த்திகாவிடம் இவருக்கு இருக்கும் நெருக்கத்திற்கும், பியாவிடம் இருக்கும் நெருக்கத்திற்குமிடையே இவரிடம் தெரியும் பாடி லேங்குவேஜ் ரசிக்க வைக்கிறது.
கார்த்திகாவின் கண்கள் பல பேரை தூக்கமிழக்க செய்யப் போகிறது. நல்ல வாளிப்பான உயரம். ஆனால் நடிப்பதற்கு பெரியதாய் ஏதும் வாய்ப்பில்லை என்றாலும், பியாவின் காதலுக்காக தன் காதலை கட்டுப்படுத்திக் கொள்ளும் காட்சிகளில் ரசனை.
பியா அவுட் ஸ்போக்கன் சென்னைப் பெண். பரபரவென காதலை கொட்டிக் கவிழ்த்து, மடிந்து போகிறார். இவரிடமிருக்கும் துள்ளல் இவர் போனதும் போய்விடுவது குறையே.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு தரம். முக்கியமாய் அந்த ஓப்பனிங் சண்டை சேசிங் காட்சிகளும், ஹசிலி பிசிலி பாடல் காட்சிகளின் லொக்கேஷன்களும் இன்னமும் கண்ணில் நிற்கிறது. க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளில் அந்த மொட்டை மாடி ஜியாக்கிரபியும், அதை படமெடுத்த விதமும், விறுவிறுப்பு. அதற்கு இணையாய் ஆண்டனியின் எடிட்டிங்கையும் குறிப்பிட வேண்டும்.
ஹாரிஸின் பாடல்களில் மூன்று ஏற்கனவே ஹிட்லிஸ்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கியமாய் அந்த என்னவோ ஏதோ க்யூட் மெலடி. ஆனால் அந்த பாடலின் படமாக்கம் மிகவும் சொதப்பிவிட்டதாய் தான் தோன்றுகிறது. அந்த ஹசிலி பிஸிலியின் மெனக்கெட்டதை இந்த பாடலுக்கு மெனக்கெட்டிருக்கலாம். பின்னணியிசை வழக்கப்படி ஆங்காங்கே சுட்டுத் தெளித்திருக்கிறார்.
கதை திரைக்கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பரபரவென ஓடும் படத்திற்கு பெரிய ப்ரச்சனையே திரைக்கதைதான். திடீர் திடீரென வீழ்ந்து விடுகிறது. படம் பார்ப்பவர்களை திசை திருப்ப, எதிர்கட்சி தலைவர், முதலமைச்சர், அஜ்மல் என்று மூன்று பக்கமும் திரைக்கதை ஓடுவதால், ஆங்காங்கே பெரிய அளவில் திரைக்கதை தொய்ந்து வீழ்வதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் எடிட்டிங் செய்திருந்தால் இந்த தொய்வைத் தவிர்த்திருக்கலாம். நக நக பாடலில் ஜெயம்ரவி, ஹாரிஸ், சூர்யா, கார்த்தி, ஜீவா என்று நட்சத்திர பட்டாளங்களை ஆடவிட்டிருப்பது இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் அதில் கல்யாணராமன் கெட்டப் சிம்பு போல ஒரு கேரக்டரை உலவ விட்டிருப்பதில் ஏதேனும் உள்குத்திருக்குமோ என்று தோன்றுகிறது. இப்படத்தின் கதையை தெரிந்து கொண்டு ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதே வேலையில் எலக்ஷனுக்கு பிறகு வெளியிட்டதில் இருக்கும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டத்தான் வேண்டும். இன்னொரு அயனை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமிருக்கத்தான் செய்யும்.
கோ - Go
Post a Comment
34 comments:
me firstu
me 2nd?!
:)
Nice post...tomorrow going kg big cinemas...
கண்டிப்பாக ஏமாற்றம்... ஆனால் பல இடங்களில் ரசிக்க முடிந்தது... முக்கியமாக பியா, அஜ்மல், ஜீவா...
ஹசிலி பிசிலி பாடல் adhavan padathil thanaeee...intha padathil amali thumaalii paatu thanee iruku #doubt
கோ படம் பாத்தேன்.
கோ - கோடை விடுமுறைக்கான ரோட்டோர லெமன் சோடா....
ஜீவா - சேரவில்லை....
கார்த்திகா - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அஜ்மல் - வில்லனாவார் என்று யூகிக்க முடிவதால் சுவாரஸ்யமில்லை
பியா - ஒரே ஆறுதல்
ஹாரிஸ் - கொட்டாவி....
பாடல் - ஸ்மோக்கிங் சோன்
கதை - நைட் பஸ் நாவல்
திரைக்கதை - ஓகே
வசனம் - ஆங்காங்கே கிச்சு கிச்சு... அப்பப்போ நச்
டைரக்ஷன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
ரொம்பவே தூக்கி வச்சு கொண்டாடமால், இயல்பான விமர்சனம்..
தல
சினிமா வியாபாரம் படித்து கொண்டிருக்கிறேன்.... செம....
டீடெய்ல்ட் விமர்சனம் நாளை.....
பியா சேலை கட்டி நடந்து வரும் காட்சி.... க்யூட்....
பியா ரசிகன் ஆயிடுவேணோன்னு பயமா இருக்கு....
அயனையும் நக்கல் அடித்திருப்பார்... கவனிச்சீங்களா.....
டைட்டிலில் தலைவர் ஓவியத்தை காட்டும் போது தியேட்டர் அதிர்ந்திருக்குமே அதபத்தி ஒண்ணும் சொல்லலை....
லோக நாயகனை காட்டும்போது ரெஸ்பான்ஸே இருந்திருக்காதே... அதபத்தியாவது எதாவது சொல்லலாம்ல....
கேபிள் அண்ணே... எந்த படம் பார்க்க போகும் முன் உங்க கருத்தை படித்தப் பிறகுதான் போகலாமா வேண்டாமான்னு முடிவெடுப்பேன். உங்களுடைய நடுநிலை நல்லவிஷயங்களை ஹைலைட் பண்ணி, குறைகளை பெருந்தன்மையாக அன்டர்ப்ளே செய்யும் லாவகம் அழகாக இருக்கும். ஆனா, சமீப காலமாக உங்கள் விமர்சனங்களில் முக்கால்வாசி குறைகளை மையப்படுத்திவருவது போல உணர்கிறேன். (குறிப்பாக தமிழ் படங்களுக்கு இது அதிகம் பொருந்துகிறது.)
முதல் பாரா இரண்டு முறை....எக்"கோ"வா?
தாங்கள் சொன்னது போல ஆனந்தின் படங்களில் மாறுதல்கள் வந்த வண்ணமே இருக்கிறது. விரைவில் பார்க்க முயற்சிக்கிறேன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு).
ஹாய் @ நையாண்டி நைனா
படம் பார்க்க தூண்டும் விமர்சனம்......
பார்க்க என் பதிவு
கேபிள் சங்கரை மேற்கோள் காட்டி பதிவர்களை பெருமைபடுத்திய அரசு
http://ragariz.blogspot.com/2011/04/cable-sankar-and-kumudam.html
கிளைமேக்க்ஸில் ஜீவா சிரித்தபடியே ஃப்ரீஸ் ஆகும் ஷாட் எனக்கு ரொம்ப பிடிச்சது. பயபுள்ள பிண்றான், எங்கயாவது அவன் நடிச்சான்னு சொல்ல முடியுமா என்ன?
அது சரி...."கோ".....--- இதுக்கு அர்த்தம்தான் என்ன ???? படத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்...யாராவது விளக்குங்களேன்...... "கோ"-ன்னா அரசன் - ன்னு தெரியும். நாட்டோட தலைவனை மாத்தறதால அப்படியோ
ரொம்ப நாளாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ...உங்கள் எல்லா விமர்சனங்களிலும் ஆங்கில வார்த்தைகள் அதிகம். பல வார்த்தைகள் எனக்கு புரிவதேயில்லை ... just go with it விமர்சனத்தில் கூட 'ப்ளிரிட்' என்றால் என்ன என்று தெரியவில்லை.
மேலும் 'க்ளிஷே ஃபீல் குட்' என்றால் என்ன?
தீன் மார் பட விமர்சனத்தில் ..செஃப்பாக... லைவ்லினெஸ்...வைப்பரண்டான ...கம்பேக் மூவி ....
மாப்பிள்ளை பட விமர்சனத்தில்..மோஸ்தரில்...ஸ்கிரீன் ப்ரெசென்ஸ்...பாடிலேங்குவேஜிலேயே
நஞ்சுபுரம் பட விமர்சனத்தில். .............திரைக்கதையில் இருக்கும் 'லேக்கை'...
குடுமான வரை ஆங்கில வார்த்தைகளை தமிழ்படுத்தி எழுதினால் நன்றாக இருக்கும்
மிக தாழ்மையான கோரிக்கை இது தவறாக நினைக்க வேண்டாம்.
உங்களது விமர்சனம் படித்த பின்னரே நன் பல படங்களை தியட்டரில் பார்த்து இருக்கின்றேன். விமர்சனம் படத்தின் தரத்திற்கு தகுந்தாற்போல் இருக்கும். ஆனால் கோ ஒரு தரமான படம். ஒரு தரமான படத்திற்கு இவ்வளவு bad கமெண்ட்ஸ் தேவையா? சமீபத்தில் நான் ரசித்த படங்களில் கோவும் ஒன்று..
மேலும் ஜானகி ராமன் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.
ram நான் படத்தைப் பற்றி குறையாக மிக சிலதையே சொல்லியிருக்கிறேன். அப்படி சிலாக்கிக்கக்கூடிய படமுமல்ல என்பது என் எண்ணம்.
Saw Sterday!! Kandippa Ayan oda better dhaan!!!
Ayan - Similar to Sivaji
Ko - Similar to Mudhalvan
KO ->Racy Entertainer - super Fast Action Political Thriller!!!
Kandippa Nalla Padam!!! Sure Hit!!
ஒவ்வொரு படத்தின் விமர்சனத்தை
விகடன் மூலமோ,குமுதம் மூலமோ
தெரிந்து கொள்ள ஒரு வாரம்வரை
காத்திருக்க வேண்டி இருக்கிறது.
ஆனால்,கேபிள் சார் புண்ணியத்தில்
படம் ரீலிசான அன்றே சுடச்சுட
விமர்சனம் கிடைத்துவிடுகிறது.கேபிள்
தலைவா... வாழ்க உமது சினிமா
தொண்டு.
//இன்னொரு அயனை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமிருக்கத்தான் செய்யும்.//
இது ரைட்டு.இன்னைக்கு காலையில தான் பார்த்தேன்.என்ன பொறுத்த வரைக்கும் ஓ.கே ரகம்.
-அருண்-
நஞ்சை காட்பரிஸ் சாக்லேட்டாக்கி தந்திருக்கிறார்கள்.மிகவும் ஆபத்தான படம்.தேர்தல் முடிந்ததும் ரீலிஸ் செய்ததிலேயே இவர்களது அயோக்கியத்தனம் தெரிகிறது.ஒரு சிறந்த புத்தகத்தை அறிமுகம் செய்துள்ளேன். வந்து பார்த்து கருத்துரைக்கவும்.கீழே சொடுக்கவும்.
எதிர்ப்பும் எழுத்தும்
//ஹசிலி பிசிலி பாடல் காட்சிகளின் லொக்கேஷன்களும் இன்னமும் கண்ணில் நிற்கிறது//
எனக்கென்னவோ நீங்க தெரிஞ்சே தான் இப்படி எழுதி இருக்கீங்கன்னு தோணுது...ரெண்டும் ஒரே டியூன் தானே ;-)
aamaam parthiban. தெரிஞ்சேத்தான் எழுதினேன். :))
perfect critics
http://kuttakozhappi.wordpress.com/2011/04/24/%E0%AE%95%E0%AF%8B-ko-go-to-dust-bin/
ஆக திட்டமிட்டே மிகக் கொடூரமாக நக்ஸல் விரோதத்தை மக்களிடம் பரப்புவதற்கே இது போன்று கதைக் கருவை இவர்கள் கையாண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.
hi shankar... good review... but i guess u would ve known the story before hand if u had seen the movie "state of play". its a blatant rip off of story with some masala...
state of play padathin atta copy ko.adhukku naan original padatha pathukiraen.indha kazhuku mookkan jeevaava evan paarppan
enna maximum enna endha padamum satisfy pannathu.. but kho is a latest movie which satisfied me.. unga comments pidikala.. romba ethirpaakringa neenga..
Post a Comment