Thottal Thodarum

Apr 30, 2011

வானம்.

Vaanam Photos Vaanam new Tamil Movie pics Vaanam wallpapers சில திரைப்படங்கள் வேறு மொழியிலிருந்து ரீமேக் செய்யும் போது, அதற்கு விமர்சனம் செய்ய சோம்பேறித்தனமாய் இருக்கும் ஆனால் கிரிஷின் வானத்துக்கு அப்படி சோம்பல் பட முடியவில்லை. தெலுங்கு வர்ஷனான வேதம் விமர்சனம் படிக்க இங்கே க்ளிக்கவும். நண்பர் விசா தெலுங்கு பட விமர்சனத்தில் விசனப்பட்டிருந்தார். இம்மாதிரி கதைகள் எல்லாம் தயாரிப்பாளர் மகன்கள் மட்டுமே நடிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் எல்லாம் ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுப்பதுதான் முக்கிய நடிப்பாய் நடித்துக் கொண்டிருக்கிறர்கள் என்று ஆதங்கப்பட்டதை நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.

கேபிள் டிவியில் வேலை செய்யும் ராஜா, பெரும் பணக்காரியான ப்ரியாவை காதலிக்க, அவர்களுடய காதலை சொல்ல, நியூ இயர் பார்ட்டிக்கு ஸ்பெஷல் பாஸ் வாங்க நாற்பதாயிரம் தேவைப் படுகிறது. என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்து தோல்வியடைந்திருக்கும் நேரத்தில் ஒரு திருட்டை செய்கிறான். அது அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. க்ளைமாக்ஸ் ஆஸ்பிட்டலில்.
Vaanam tamil movie photos _15_
ராக் ஸ்டார் ஆவதுதான் தன் வாழ்வின் லட்சியமாய் கொண்டு அதற்கான வெறியோடு அலைபவன் பரத். முதல் முறையாக சென்னையில் ஒரு லைவ் ஷோவில் பங்கேற்க வாய்ப்பு வந்து பெங்களூரில் ப்ளைட்டை மிஸ் செய்து ரோடு வழியாய் சென்னை வரும் போது சந்திக்கும் ப்ரச்சனைகள். அந்த ப்ரச்சனைகளின் க்ளைமாக்ஸான ஆஸ்பிட்டல்.

வேறு ஒரு ஊரில் ராணியம்மா என்கிற ஒரு ப்ராத்தல் ஓனரிடமிருந்து தப்பித்து, சென்னையில் தனியாய் தொழில் செய்ய முனைந்து அங்கிருந்து தப்பி வரும் சரோஜா. தப்பி வந்த இடத்தில் அவளுக்கும் அவளின் திருநங்கை தோழியும் சந்திக்கும் ப்ரச்சனைகளும் அதன் க்ளைமாக்ஸ் ஆஸ்பிட்டல்.
vaanam-5
கந்து வட்டிக்கு பணம் வாங்கியதால் தன் பேரனை அடகாக வைத்து கொண்டதற்காக தன் மருமகளின் கிட்னியை விற்று கடனை அடைப்பதற்காக சென்னை வரும் மாமனாரும் , மருமகளும். அவர்களின் க்ளைமேக்ஸ் ஆஸ்பிட்டல்.

கோயம்புத்தூரில் நடந்த பிள்ளையார் சதுர்த்தி விழாவில் சாதாரண ப்ரச்சனை மத ப்ரச்சனையாக மாறி, தன் மனைவியின் கர்ப்பம் கலைந்து நொந்து போயிருக்கும் பிரகாஷ்ராஜும், சோனியா அகர்வாலும், அன்று காணாமல் போன தன் தம்பியை தேடி சென்னைக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் மீண்டும் முஸ்லிம் தீவிரவாதி என்று சந்தேக வளைக்குள் மாட்டிக் கொண்டு, தீவிரவாதியாய் முத்திரைக் குத்தப்பட்டு தப்பியோட நினைக்கும் போது காலில் சுடப்படுகிறார். க்ளைமாக்ஸ் ஆஸ்பிட்டல்.
Vaanam tamil movie photos _20_ எல்லார் கதைகளும் க்ளைமாக்ஸில் ஹாஸ்பிட்டலில்  வந்து நிற்க, ஆஸ்பிட்டலை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எல்லோரையும் கொல்ல நினைக்கிறார்கள். க்ளைமாக்ஸ் வெள்ளித்திரையில் நிச்சயம் பாருங்கள்.

சிம்பு, சந்தானம் காம்பினேஷன் வழக்கம் போல ஆரம்பம் முதல் களை கட்டிவிடுகிறது. அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் அவர் அடிக்கும் ரகளை. பல டயலாக்குகள் மைண்ட் வாய்ஸிலேயோ, அல்லது முணுமுணுப்பகத்தான் இருக்கிறது. ஆனால் தியேட்டர் அல்லோல கல்லோல படுகிறது. “டேய் உன் பைக்கை கொடுறா..” “அதெல்லாம் தரமுடியாது. பைக்கை நான் என் பொண்டாட்டிப் போல பாத்துக்கறேன்” என்றதும் “ அப்பன்னா ஏண்டா தினம் காலையில நடு ரோடுல வச்சி கழுவுற”. சிம்பு தெலுங்கில் அல்லு அரவிந்தைவிட  கொஞ்சம் ஹீரோத்தனம் செய்யத்தான் செய்தாலும், இரண்டாவது பாதியில் ஸ்கோர் செய்துவிடுகிறார். அதே போல சரண்யாவும் அந்த வயதான மாமனாரும், பணம் தொலைந்துவிட்டு பதறும் பதற்றம் இருக்கிறது அடடா.. உருக்குகிறது. அனுஷ்காவின் முதல் அறிமுகப்பாடல் தெலுங்கு டப்பிங்காக இருப்பது ஏனோ உறுத்துகிறது. தெலுங்கு பட காட்சிகளையே உபயோகித்திருப்பது நேட்டிவிட்டியை கெடுக்கிறது. ப்ரகாஷ்ராஜின் நடிப்பு மற்ற நடிகர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக படுவதை தவிர்க்க முடியவில்லை.  பாடகனாக வரும் பரத், வேகா ஜோடி தங்கள் பாத்திரம் உணர்ந்து செய்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொரு சின்னக் கேரக்டரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு நச். முக்கியமாய் ஆரம்ப சேங்க் காட்சியில் எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் போட்டிப் போடுகின்றன. எவண்டீ உன்னை பெத்தான். பாடல் எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  யுவனின் இசையில்  எவண்டீ பாடலும், இன்னொரு பாடலும், ஒரு குத்துப் பாட்டும் அதிர வைக்கிறது. பின்னணியிசை ஓகே.
Vaanam tamil movie photos _22_ எழுதி இயக்கியவர் கிரிஷ். இவரின் முதல் படமான கம்யத்தை ரிலீஸ் நாளன்று விஜயவாடாவில் பார்த்தேன். படத்தின் முதல் காட்சியிலிருந்து மிரண்டு போய் உட்கார்ந்திருந்தேன். அவ்வளவு ஸ்டைலான மேக்கிங், கதை சொல்லல்.  தெலுங்கு பட உலகமே அப்படத்தின் வெற்றியை திரும்பிப்பார்த்து, நந்தி அவார்ட் எல்லாம் கொடுத்து கெளரவித்தது. இந்த படத்தை முதலில் தெலுங்கில் பார்த்ததும் அவர் மீது இருந்த மரியாதை இன்னும் ரெண்டு மடங்கு ஏறிப் போனது. அவ்வளவு தெளிவான கதை சொல்லலும், இயக்கமும். தமிழில் அவரே இயக்குகிறார் என்றதும் ச்ந்தோஷப்பட்டேன். ஒரிஜினல் கதையிலிருந்து சிற்சில மாறுதல்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அதே அளவில் ஒரிஜினலின் தரம் குறையாமல் தந்திருக்கிறார். அனுஷ்காவின் எபிசோடுக்கு ஒரு அழகிய மென் சோகத்தோடு ஆரம்பிக்கும் காட்சிகளை நறுக்கியது ஏனோ?.  அதே போல் க்ளைமாக்ஸில் பரத்தின் முடிவு அக்கேரக்டரின் பங்களிப்பை குறைப்பது போலத்தான் தோன்றியது.வசனங்கள் தெலுங்கை விட கொஞ்சம் காரம் குறைவே. எனினும் தமிழில் ஒரு  சிறந்த படத்தை கொடுத்ததற்காக கிரிஷ்சை பாராட்டியே தீர வேண்டும். .
வானம்- நிச்சயம் பார்க்க வேண்டியப் படம்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்



Post a Comment

17 comments:

பிரபாகர் said...

அப்போ படம் ரொம்ப நல்லாருக்குன்னு சொல்றீங்க... அண்ணா சொன்னா பார்த்துவிட வேண்டியதுதான்!...

பிரபாகர்...

ஜெட்லி... said...

செய்ஞ்சு இருக்காங்களா???

King Viswa said...

தல, ஆயிரம்தான் சொல்லுங்க, சோம்பு ஹீரோயிசம் செய்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டு இருக்கிறார். சில இடங்களில் தாங்க முடியவில்லை.

அல்லு அர்ஜுன் ராக்ஸ். சிம்பு ?????????????

பாவம் க்ரிஷ், அவரது அட்டகாசமான ஒரிஜினல் படங்கள் எல்லாம் (கம்யம், வேதம்) தமிழில் மொக்கைதனமான ஹீரோயிச முயற்சிகளால் அவர் அடையவேண்டிய உயரத்தை அடைய முடியவே இல்லை.


கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை - சென்னை சூப்பர் கோமிக்ஸ் - பாண்டி : பாய் ஆப் தி மேட்ச்

சக்தி கல்வி மையம் said...

எனகென்னவோ வேதம் ரொம்ப பிடிச்சிருக்கு ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் சூப்பர்.

அனுஷ்கா கேரக்டர் தெலுங்கு டப்பிங், பரத் கேரக்டர் ரெண்டும் சொதப்பல்

இளங்கோ@ இளமகேஷ் said...

எல்லாருடைய படத்துக்கும் சுடச்சுட
விமர்சனம் தரும் தலைவா உன்
படத்துக்கு நாங்கள் விமர்சனம் செய்யும் நாள் விரைவில் வருமா?
அப்படி வர வாழ்த்துக்கள்.

Dr. Selvaganesan said...

சுடச்சுட விமர்சனம் அருமை. (கேபிள் சார் தாங்கள் தெலுங்கு பேசும் தமிழரா? தங்கள் பிளாக்கில் தெலுங்கு பற்றிய செய்தி அவ்வப்பொழுது ஆங்காங்கே தென்படுகிறது.)

ரதியழகன் said...

படம் ஓகே... ஆனா தெலுகு ல சூப்பர் படமிது...

மனோவி said...

படத்தில் உங்களைப் பார்த்து தான் கேபிள் ராஜா என்று வைத்து இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது.. உங்களுக்கு?


வானம் விமர்சனம்
 என்ன வாழ்க்கைடா இது?

Unknown said...

What Sankar, as per comments from my friends they are saying this movie not worth for money.. And Simbu is total waste... But, your the only man saying this movie is must watch one.. But, I have seen its Telugu version, in that also nothing was there.. No use...

TOtally Mokka movie in Telugu... If we watch it we need to feel.. As normal person we can only feel, so it better to avoid these films...

VISA said...

உங்கள் பதிவுகள் படிப்பேன். கமென்ட் போட சோம்பேறித்தனப்பட்டு போய்விடுவேன். இன்றைக்கு கமென்ட் போட வைத்துவிட்டீர்கள்.

:)

அருண் said...

வேதம் ஒரு நான் கமர்சியல் படம்னு சொல்லியிருந்திங்க,இது அப்படி இல்லையோ? நறுக் விமர்சனம்.
-அருண்-

VENG said...

நண்பர் S கேள்விக்கு பதில் செப்பண்டி...!

Karthick said...

Really superb movie... Screenplay and message is very good... No heroism...

Mothiyoci said...

ரொம்ப நல்லா வந்து இருக்க வேண்டிய படம் .... சுமாரான ஃப்லிமா வந்திருக்கு... சிம்பு வோட மத்த படத்துக்கு 100 time better.

சங்கி மங்கி said...

பட விமர்சனம் சூப்பர்!!!ஆனா நேக்கு என்னவோ படம் The Vantage Point மதிரியே Feeling கொடுத்துச்சு. பாத்துட்டு சொல்லுங்க.

சும்மா.. டைம் பாஸ் said...

Just watched this movie and wanted to see bloggers comments and you are first one I am reading. After reading your review I think I am not qualified to watch Tamil movie anymore