Dum Maro Dum
வெளிநாட்டு காலேஜில் ஸ்டைபண்ட்டோடு படிக்க தன் காதலியோடு அப்ளை செய்தவனுக்கு ஸ்டைபெண்ட் கேன்சலானதால் போக முடியவில்லை. காதலி மட்டும் போக, பணமில்லாமல் தவிக்கும் வேளையில், போதைப் பொருள் கடத்தும், கும்பல் ஒன்று இவனின் வெளிநாட்டு ஆபரை தெரிந்து கொண்டு, பெண்ணையும், போதையையும் கொடுத்து, பணமும் கொடுத்து அவன் மூலம் போதைப் பொருளை அமெரிக்காவுக்கு கடத்த முயலும் வேளையில், அஸிஸ்டெண்ட் கமிஷனர் அபிஷேக்கால் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப் படுகிறான். அந்த இளைஞனுக்கு உதவ வரும் ராணாவையும், அபிஷேக் அரெஸ்ட் செய்து கொண்டு போகிறான். ராணா ஏன் உதவ வந்தான்? அந்த அப்பாவி இளைஞனின் வாழ்க்கை என்ன ஆனது? அபிஷேக்கின் போதைப் பொருள் ஒழிக்கும் நடவடிக்கை அவனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதை நான் லீனியர் முறையில் கொஞ்சமும், லீனியர் முறையில் கொஞ்சமுமாய் சுவாரஸ்யமாய் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
படத்தின் கதையை விட, நடித்த நடிகர்களின் நடிப்புத்தான் பிரமாதப் படுத்துகிறது. முக்கியமாய் அபிஷேக், மற்றும் ராணா, பிபாஷாவின் நடிப்பு ஆஃப்ட். முக்கியமாய் அபிஷேக்கிற்கு போதை மருந்துகும்பலை அடியோடு பிடித்தொழிக்க பவர் கொடுக்கும் காட்சியில் அபிஷேக்கின் நடிப்பு கச்சிதம்.
பீரிதமின் இசையில் அபிஷேக் பாடும் ராப் போன்ற ஒரு பாடல் இண்ட்ரஸ்டிங். ஆனால் பழைய தம் மோரா தம் பாடலின் ரீமிக்ஸ் படு மொக்கை. ஆங்காங்கே மினி ஸ்கர்ட்டில் தெரியும் தீபீகா படுகோனின் தொடைகளின் பளிச்சிடலைத்தவிர பெரிதாய் ஏதுமில்லை. ஆனால் பிபாஷாவின் பர்பாமென்ஸ் நோட் வொர்த்தி. கேரியருக்காக காதலை விட்டுக் கொடுத்துவிட்டு, வேறொருவனுடன் வாழ்ந்து கொண்டு, இருதலைக் கொள்ளியாய் அலையும் கேரக்டரில் மனதில் நிற்கிறார். கோவிந்த் நாம்தேவின் டூயல் பர்சனாலிட்டி அதிர்ச்சியானதாக இருந்தாலும், இன்னொரு ஆர்வக்குட்டி இன்ஸ்பெக்டராக வரும் நபரின் முன் குறைவாகவே தெரிகிறார். டோபி காட் பரதீக் பாப்பரின் கேரக்டரை ரொம்பவே கோழையாய் காட்டியிருப்பதால் நிற்க மாட்டேனென்கிறது. அதித்ய பாஞ்சோலி ஒரு மிஸ் காஸ்டிங்.
ரோஹன் சிப்பி இயக்கியிருக்கிறார். ப்ளப் மாஸ்டரை விட இயக்கத்திலும், மேக்கிங்கிலும் மேலும் மெருகேறியிருக்கிறார். ஸ்ரீதர் ராகவனின் திரைக்கதை முன் பாதியில் கைக் கொடுத்த அளவுக்கு பின் பாதியில் கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே வரும் சில ஷார்ப்பான டயலாக்குகள் ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில் ஒரு பக்கா கமர்ஷியல் ஸ்டைலிஷ் மசாலா படத்தை அளித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
Dum Maro Dum- Commercial Dum Flick
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
இதிலயும் நல்ல நடிச்சிருப்பர் போலிருக்கிறதே..
இதிலயும் நல்ல நடிச்சிருப்பர் போலிருக்கிறதே..
இதிலயும் நல்ல நடிச்சிருப்பர் போலிருக்கிறதே..