Thottal Thodarum

Apr 22, 2011

Just Go With It- கல்யாணம் பண்ணி காதல்

just_go_with_it_poster01 ப்ளாஸ்டிக் சர்ஜனான டானிக்கு ஒரு கெட்ட பழக்கம். தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதனால் மிகப் ப்ரச்சனையில் இருப்பதாக சொல்லி, சென்சிட்டிவாக உள்ள பெண்களை வளைத்து ஜாலி பண்ணும் பேர்வழி. உடன் வேலை செய்யும் காத்தரீனுடன் அப்படி ப்ளிரிட் செய்து கொண்டிருக்கிறான். காத்தரீன் ஒரு சிங்கிள் மாம். இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஒரு பார்ட்டியில் பால்மர் எனும் ஒரு பாம்ஷெல்லை பார்த்து டானி மயங்கிவிட, அவளிடம் தனக்கு திருமணமாகிவிட்டதாகவும், அவளுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகப் போகிறதென்றும், சொல்லி சிம்பதி தேடிக் கொள்ள, இருவரும் உடலுறவு வரை போய்விடுகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் போது பால்மர் அவனுடய மனைவியை பார்க்க விரும்ப, வேறு வழியில்லாமல் காத்தரீனை நடிக்கச் சொல்கிறான். அவளுடய குழந்தைகளை தன் குழந்தைகள் என்று பொய் சொல்லிவிட, அவர்களை சமாளிப்பதற்காக ஹவாயன் டிரிப் ஒன்றை லஞ்சமாய் கூட்டிக் கொண்டு போக, அங்கு இருக்கும் நாட்களில் காத்தரினுகும், பால்மருக்கும், டானிக்குமிடையே நடக்கும் காதல் போராட்டம் தான் படம்.


  837882 - JUST GO WITH IT சென்ற வருடத்திய Grownupக்கு பிறகு வந்திருக்கும் ஆடம் சாண்டலரின் படம். இம்மாதிரியான கேரக்டர்கள் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மனுஷன் ஊதித்தள்ளுகிறார். பால்மரை மடக்கி பீச்சில் நிலவொளியில் மேட்டர் செய்துவிட்டு, கல்யாண மோதிரத்தை பார்த்ததும் பால்மர் இது என்ன என்று கேட்கும் போது மனுஷன் மிக அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு “ஜஸ்ட் எ ஓ” என்று சொல்வது அட்டகாசம்.
just_go_with_it03 காத்தரினாக வரும் ஜெனிபர் அனிஸ்டன் க்யூட். கொஞ்சம் கொஞ்சமாய் சாண்ட்லரின் மனதில் நுழைவது போல நம் மனதிலும் நுழைகிறார். ஒரு காட்சியில் டூ பீஸில் வந்து கலக்குகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் நல்ல உருக்கம்.
பால்மராக ப்ரூக்ளின் டெக்கர். ம்ம்ம்மா.. என்று மூச்சடைக்க வைக்கும் கவர்ச்சி பாம். உடையணிந்து வரும் போது சூடேற்றுபவர், நொடியில் உடை துறந்து , டூ பீஸில் டைவ் அடிக்கும் போது ம்ஹும் முடியலைடா சாமி. டெக்னிக்கலாய் பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை.ஆங்காங்கே வரும் இயல்பான நகைச்சுவைக் காட்சிகள், சின்ன சின்ன க்ளிஷே ஃபீல் குட் படங்களுக்கான காட்சிகளோடு ரசிக்கும் அளவிற்கான ஒரு படம். 

Just Go With It – Just Go To Feel Good.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

பிரபல பதிவர் said...

கோ படம் பாத்தேன்.

கோ - கோடை விடுமுறைக்கான ரோட்டோர லெமன் சோடா....

ஜீவா - சேரவில்லை....

கார்த்திகா - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அஜ்மல் - வில்லனாவார் என்று யூகிக்க முடிவதால் சுவாரஸ்யமில்லை

பியா - ஒரே ஆறுதல்

ஹாரிஸ் - கொட்டாவி....

பாடல் - ஸ்மோக்கிங் சோன்

கதை - நைட் பஸ் நாவல்

திரைக்கதை - ஓகே

வசனம் - ஆங்காங்கே கிச்சு கிச்சு... அப்பப்போ நச்

டைரக்ஷன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

செ. நாகராஜ் - C. Nagaraj said...

இந்த வாரம் குமுதம் வாசித்தீர்களா, அதில் அரசு பதிலில் உங்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அமர பாரதி said...

இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் ஆடம் சான்ட்லர் எனக்கு மிக மிக பிடித்தமான நடிகர். ஜேனிபர் ஆனிஸ்டனும் கூட. ஜேனிபர் ஆனிஸ்டனை பிரன்ட்ஸ் டீ.வீ. சீரியலலில் தினமும் பார்ப்பது வழக்கம். வயது ஒரு 42/43 இருக்குமா?

Cable சங்கர் said...

@சிவகாசி மாப்பிள்ளை
நல்ல விமர்சனம்

@செ.நாகராஜ்
படித்தேன் நன்றி தலைவரே

@அமரபாரஹி
இருக்குமென்று நினைக்கிறேன்.

FREIND-நண்பன் said...

This story has already come in a Hindi movie "Maine pyar kyun kiya"- Salman khan(Doctor), Sushmita sen(nurse) and Lover (Katirna Kaif).

ஆதவா said...

The Heartbreak Kid மாதிரி இருக்குமோ???