Thottal Thodarum

Apr 29, 2011

Mr. Perfect

 mr எப்போதும் தங்கள் சுயத்தை விட்டுக் கொடுக்காமல், யாருக்காகவும், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளாமல் வாழ்வதுதான் வாழ்க்கை என்று ஒருவன். தன் மனதுக்கு பிடித்தவனுக்காக தனக்கு பிடித்தவற்றையெல்லாம் விட்டொழித்துவிட்டு, அவனுடய ஆசையையே தன் ஆசையாய் எடுத்துக் கொண்டு வாழும் ஒருத்தி, இதில் எது சிறந்தது என்பதை பட்டிமன்றம் நடத்தாத குறையாய் சொல்லியிருக்கிறார்கள்.

mr3 விக்கி ஆஸ்திரேலியாவில் ஒரு கேமிங் கம்பெனி ஆரம்பிக்கவிருக்கும் ஒரு கேமிங் ஜித்தன். தன் கனவு ப்ராஜெட்டிற்காக, தன் வெற்றிக்காக எதையும், எங்கேயும், எப்போது அட்ஜெஸ்ட் செய்து கொள்ளாதவன். அவனுடய அப்பா அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாக சொல்ல, அவனின் தங்கையின் திருமணத்திற்கு வரும் போது அவளை பார்த்து சொல் என்று சொல்கிறார். அவனோ.. ஒரு பத்து நாள் பழகிப் பார்க்கிறேன். அதன் பிறகுதான் சொல்வேன் என்று சொல்லி இந்தியா வருகிறான். அந்த பெண்ணின் அப்பாவும், விக்கியின் அப்பாவும் பால்ய காலத்து நண்பர்கள். விக்கியும், ப்ரியாவும் பால்யகாலத்தில் ஒன்றாய் விளையாடியவர்கள்தான் என்பதால், பழைய விரோதம் தொடர, ஒரு கட்டத்தில் ப்ரியாவும், அவனும் ஒத்துப் போகிறார்கள். சரி ஒத்துப் போய்விட்டார்களே என்று பெரிசுகள் திருமணம் பேசி முடிக்க முயலும் போது, விக்கி தன்னால் அவளைத் திருமணம் செய்ய முடியாது என்கிறான். தனக்காக அவளின் ஆசாபாசங்களை எல்லாம் விட்டுக் கொடுத்து வாழும் அவளை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு ஆஸ்த்ரேலியா போய்விடுகிறான். அங்கு அவனின் எண்ணம் போன்ற மேகியை சந்திக்கிறான். இருவரும் காதலிக்க ஆர்ம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ப்ரியாவும் ஆஸ்திரேலியா வர, மூவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய நிர்பந்தம். விக்கிக்கும் மேகிக்கும் திருமணம் நடந்ததா? பிரியாவின் நிலை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.
mr5 இண்ட்ரஸ்டிங்கான லைன் தான். ஆனால் சீனெல்லாம் அரத பழசாய் இருக்கிறது. பிரபாசின் அறிமுக காட்சி படு அபத்தம். ஆஸ்திரேலியாவில் தெலுங்கு பேசிக் கொண்டே சண்டை போடுவது எல்லாம் ஓவரோ ஓவர். எந்த ஆஸ்திரேலியாக்காரன், பைஜாமைவையெல்லாம் பேண்டாய் போட்டுக் கொண்டு இக்கிலி பிக்கிலி பாகெட்டெல்லாம் வைத்துக் கொண்டு, சட்டைக்கு மேல் ஸ்வெட்டர் போட்ட சட்டையெல்லாம் போட்டுக் கொண்டு திரிகிறான். வெளிநாட்டுக்காரன் என்பதை வெளிப்படுத்த பிரபாசின் காஸ்டூயூம் ஆகட்டும், பாடி லேங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரியாகட்டும் யக்..
mr2 காஜல் அகர்வால்தான் படத்தின் சேவிங் கிரேஸ். படு க்யூட். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் மனதை கொள்ளை கொள்கிறார். மொட்டை மாடியில் தனியே உட்கார்ந்திருக்கும்போது, அப்பாவிடம், இங்கே உட்காரும் போது எனக்கும் அம்மா ஞாபகம் மட்டுமே வரும்.. ஆனா இப்போ எனக்கு விக்கியோட ஞாபகமும் வருதேப்பா, என்று கூறுமிடத்தில் டச்சிங். தபஸியின் பார்ட் கொஞசமே எனறாலும் நச்சென இருக்கிறது. என் மீண்டும் ஒரு காதல் கதை நாயகி ஷ்ரத்தாவை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.
mr4 தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் ஓகே.என்றே சொலல் வேண்டும். பெரிதாய் இம்சை செய்யவில்லை.  ஹரியின் திரைக்கதைட்யில் அடுத்து என்ன என்பதை யார் வேண்டுமானாலும் சொல்லிவிட முடியும். அவ்வளவு அரத பழசாய் இருக்கிறது. பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, நாசர், பிரகதி ஆகியோரும் படத்திலிருக்கிறார்கள். யாராவது தெலுகு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடமிருந்து இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு விடுதலை வாங்கித்தர மாட்டார்களா? எல்லாபடத்திலும் ஒரே மாதிரியான ஸ்ட்ரிக்ட் ஃபாதர், தாத்தா, அடுத்த தலைமுறைகளை கிண்டலடிக்கும் கேரக்டர், என்று டெம்ப்ளேட்ட்டாய் பார்த்து பார்த்து அலுக்க ஆரம்பித்துவிட்டது.
Mr.Perfect- ஓகே மூவி
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

பிரபல பதிவர் said...

ப்ரியமானவளே படத்தோட பேட்ச் ஒர்க் மாதிரி இருக்கு

பிரபல பதிவர் said...

oh firsta???

சக்தி கல்வி மையம் said...

அப்ப படம் பாக்கலாம்னு சொல்லரிங்க...

King Viswa said...

பாஸ்,

படம் சென்னையில் கூட செம ஹிட். பிரபாஸ்'க்கு ஒரு நல்ல கம்பேக்.

//யாராவது தெலுகு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடமிருந்து இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு விடுதலை வாங்கித்தர மாட்டார்களா? எல்லாபடத்திலும் ஒரே மாதிரியான ஸ்ட்ரிக்ட் ஃபாதர், தாத்தா, அடுத்த தலைமுறைகளை கிண்டலடிக்கும் கேரக்டர், என்று டெம்ப்ளேட்ட்டாய் பார்த்து பார்த்து அலுக்க ஆரம்பித்துவிட்டது.//

தல, இந்த படத்துல அவருக்கு ஒரு நல்ல கேரக்டர் தானே? எக்சுவலா பிரபாஸ்'க்கு தானே பழைய தலைமுறையை கிண்டல் அடிக்கும் கேரக்டர்?


கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை - சென்னை சூப்பர் கோமிக்ஸ் - பாண்டி : பாய் ஆப் தி மேட்ச்