Thottal Thodarum

Apr 21, 2011

RIO

blu-blue-macaw-rio-007 ஐஸ் ஏஜ் குழுவினரின் அனிமேஷன் படம். 3 டி வேறு என்றவுடன் எதிர்ப்பார்ப்பு ஏகிறித்தான் பார்த்தேன். எனக்கு அனிமேஷன் படங்கள் மிகவும் பிடிக்கும். இவ்வகை படங்களின் கதை சொல்லல் முறை, நோகாமல் அறிவுரை சொல்லும் பாங்கு எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானது.


Rio--004 பஞ்சவர்ணகிளிகளில் ஒர் அறிய வகை நீல வண்ண கிளி. பிரேசில் காடுகளில் பறவைகளை பிடித்து விற்கும் கும்பல் ஒன்று காடுகளில் சுற்றித் திரியும் ப்றவைகளை பிடித்து விற்கிறது. அவர்கள் பறவைகளை கடத்தும் போது, அதிலிருந்து தப்பித்த நீல கிளி  சிறுமி லிண்டாவின் கையில் வளர்கிறது. வீட்டுக் கிளியாகவே வளர்ந்து வரும் ப்ளூ என்று பெயரிடப்பட்ட அந்த கிளி, அதன் இயல்புத்தன்மையை மறந்து, பற்க்கவே தெரியாமல், இது தான் வாழ்க்கை என்று சந்தோஷமாய் இருக்கும் நேரத்தில், பிரேசிலிருந்து ஒருவன் வருகிறான். இந்த அரிய வகை நீலக் கிளி உயிரினங்கள் ஆல்மோஸ்ட் அழிந்துவிட்டதாகவும், ஒரே ஒரு பெண் கிளி மட்டும் பிரேசிலில் இருப்பதாகவும், ரியோவையும், அந்த பெண் கிளியையும் இணைத்துவிட்டால், இந்த இனம் தழைத்தோங்கும் என்று சொல்லி, ப்ளூவையும், லிண்டாவையும் பிரேசிலுக்கு கூட்டிப் போகிறான். அங்கிருக்கும் வில்லனான பறவை கடத்தல்காரன், மியூசியத்திலிருந்து இரண்டு ப்ளூ பறாவைகளையும் கடத்துகிறான். இரண்டு நீலப் பறவைகளும் ஒன்று சேர்ந்தனவா?, தான் ஒரு பறவை என்பதையே உணராமல் இருக்கும் ப்ளூவுக்கும், அந்த பெண் பறவைக்குமிடையே காதல் மலர்ந்ததா? என்பதை திரையில் காண்க.
rio-20110413011047960_640w ஐஸ் ஏஜ் அளவிற்கு படமில்லாவிட்டாலும், சுவாரஸ்யமாகவே கதை சொல்லியிருக்கிறார்கள். சுற்றுப்புற சூழல் பற்றியும், வாழ்க்கையின் போதனைகளையும் உறுத்தாமல் சொல்கிறார்கள். இம்மாதிரியான் படங்களுக்கு கிட்டத்தட்ட டெம்ப்ளேட்டான திரைக்கதைதான் இருக்கும். ஏனென்றால் பெரும்பாலும் குடும்ப ஆடியன்ஸை, முக்கியமாய் குழந்தைகளை குறிவைத்து தயாரிக்கப்படுவதால் அம்மாதிரியான அமைப்பு தவிர்க்க முடியாதது.
rio-20110413011027258-000 பறக்கவே தெரியாத ப்ளூவையும், அந்த பெண் பறவையையும் செயின் போட்டு கால்களில் சேர்த்து கட்டிவிட, வேறு வழியில்லாமல் பறக்கவே தெரியாத ப்ளூவுடன், அந்த பெண் பறவை போராடுவதும், அவர்களுக்குள் உண்டாகும் ரொமான்ஸும் இன்ட்ரஸ்டிங். நடுவே வந்து அவர்களுக்கு உதவும் இரண்டு சின்னப் பறவைகள், அந்த ஜொல் ஒழுகும் புல்டாக் என்று பல சுவாரஸ்யங்கள் கலர்புல்லாக இருக்கிறது. அவ்வப்போது 3டியில் தெரியும் அருகாமை குழந்தைகளையும், உங்கள் மனக்குழந்தையையும் குதூகலிக்க வைக்கும்.
Rio- A summer treat For your Kiddies
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

Unknown said...

Nice Movie..

joe vimal said...

அந்த நீல பறவை பேரு hyacinth macaw நிஜத்திலுமே மிக அறிய வகை பறவை

பிரபல பதிவர் said...

கொத்து புரோட்டா படித்தேன்....

சுஜாதாவின் கற்றதும்... பெற்றதுமின் மினியேச்சர் மாதிரி இருந்தது.... புத்தகமாக போகிறது என்று தெரியாததால் இயல்பாக இருந்தது.... ஆனால் கொடுத்த காசுக்கு ஒர்த் இல்லை... 30 ரூபாயாக இருந்தால் ஒகே....
மீண்டும் ஒருகாத‌ல் க‌தை... லெம‌ன் ட்ரீ எல்லாம் கொடுத்த காசுக்கு ஒரு முழுமையான நிறைவை தந்த‌ன‌... இதில் மிஸ்ஸிங்

Anonymous said...

ரியோ நகரில் நடக்கும் திருவிழா காட்சிகள் அசத்தல். Tangled அனிமேசன் திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது சத்யத்தில்.

shortfilmindia.com said...

@நன்றி தேவிகா
@நன்றி ஜோ

@சிவகாசி மாப்பிள்ளை..
நன்றி தலைவரே.. முப்பது ரூபாய்க்கு எல்லாம் புக்கு போட முடியாது தலைவரே.. விலைவாசி ஏறிப் போச்சு.. அவ்வ்வ்வ்..

@சிவகுமார்
ஆமாம்..