கேப்டவுனில் செஃப்பாக வேலை பார்க்கும் மைக்கேல் வேலாயுதம், மீராவும் சந்திக்கிறார்கள். கொஞ்சம், கொஞ்சமாய் நெருக்கமாகி, நண்பர்களாகி, ஒருவரை ஒருவர் உள்ளுக்குள் காதல் கொள்கிறார்கள். இப்படியே ஒரு வருடம் போக, மீராவுக்கு அவளுடய் ஆர்கியலாஜில் துறையில் மேலும் சில விஷயங்களுக்காக, அவளுடய துறையில் சாதிப்பதற்காக இந்தியா போக வேண்டுமென்ற நிர்பந்தம் வர, அதே நேரம் மைக்கேல் வேலாயுதம் தன் கனவு வேலையான ஒரு அமெரிக்க கம்பெனியில் வேலையில் சேருவதற்காக காத்திருப்பதால் அவளுடன் வர முடியாது என்று சொல்ல, இருவருக்கும் தங்களது குறிக்கோள்களே இலக்காயிருக்க, இதற்கு வேறு வழியேயில்லை என்று இருவரும் பேசி வைத்து கொண்டு பிரிகிறார்கள்.
இதற்கு பிரேகிங்கப் பார்ட்டி வேறு கொடுக்கிறார்கள். அதன் பிறகு ஆளுக்கோரு திசையில் பயணப்பட்டாலும், SMS, Internet, phone என்று எல்லா இணைப்புகள் வழியாகவும் தொடர்பு தொடர்ந்து கொண்டிருக்க, இந்தியாவில் மீராவுக்கு ஒரு புதிய தொடர்பு கிடைக்க, அங்கே ஜெய்க்கு ஒரு வெளிநாட்டு பெண் கிடைக்க, இங்கே இந்தியாவில் மீராவின் திருமணம் நடை பெறுகிறது. திருமணத்தன்று இருவருக்கும் உள்ளே ததும்பி கொண்டிருக்கும் காதல் மேல வர, க்ளைமாக்ஸ். இதற்கு நடுவில் சேனாபதி எனும் நண்பர் மைக்கேல் வேலாயுதத்திடம், தன் நண்பன் அர்ஜுன் காதலைப் பற்றிச் சொல்கிறார். இரண்டு கதைகளின் நாயகனும் பவன் கல்யாணாக இருக்க, க்ளைமாக்ஸ் பேரலலாக போகிறது.
இந்தி லவ் ஆஜ் கல் தான் தீன்மாராகியிருக்கிறது. இந்தியில் இருந்த ஒரு லைவ்லினெஸ் படத்தின் ஆரம்பத்தில் இல்லையென்றே சொல்ல வேண்டும். இத்தனைக்கும் த்ரிஷா, பவனின் முத்தக்காட்சிகள் இருந்தும் கூட.. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாய் இரண்டு பேரின் காதல் உள்ளுக்குள் ஏற, ஏற, க்ளைமாக்ஸின் போது நெகிழ வைத்து விடுகிறார்கள்.

குஷிக்கு பிறகு இவ்வளவு வைப்பரண்டான பவனை இப்போதுதான் பார்கக் முடிகிறது. அதுவும் க்ளைமாக்ஸின் போது பவனின் பர்பாமென்ஸ் அருமையோ.. அருமை. இதை இதைத்தான் எதிர்ப்பார்க்கிறோம் பவன் உங்களிடம்.
த்ரிஷா அதிசயமாய் அழகாயிருக்கிறார். மினி ஷார்ட்ஸ் எல்லாம் போட்டு சூடாக்குகிறார். ஆரம்ப காட்சிகளில் ஏதோ கொஞ்சம் ஒட்டாமல் இருந்தது போல இருந்தாலும் இவரும் க்ளைமாக்சில் சேர்ந்து அசத்துகிறார்.
ஒரிஜினல் ஹிந்தியில் ரிஷிகபூர் அவருடய கதையை சொல்வார். அதில் சாயிப் கேரக்டராய் வருவார். இதில் பரேஷ் ராவல் தன் நண்பனின் கதையாய் சொல்வது கொஞ்சம் எடுபடத்தான் இல்லையென்று சொல்ல வேண்டும். திருவிக்ரம் கொஞ்சம் கவனித்திருக்கலாம். அது மட்டுமில்லாமல் இந்தியில் டயலாக் கொஞ்சம் க்ரிஸ்பாக இருக்கும் இதில் கொஞ்சம் வள வள.மற்றபடி ஒளிப்பதிவு , இசை எல்லாமே ஓகே ரகம் தான். பவன் கல்யாணுக்கு இது கம்பேக் மூவி என்றுதான் சொல்ல வேண்டும்.
Teenmaar - காதலிப்பவர்களுக்கும், காதலிக்க போகிறவர்களுக்கும்
Post a Comment
9 comments:
awaiting for good print.
boss, trivikramaa, jayanth ah?? kanpees aagidaadheenga??
விமர்ச்சனம் நல்லா இருக்கு...
kaa.kee.. படத்துக்கு டயலாக், ஸ்க்ரீன் ப்ளே திருவிக்ரம்.
ok, righttu.. :)
//ஒரிஜினல் ஹிந்தியில் ரிஷிகபூர் அவருடய கதையை சொல்வார்//
டூப்ளிகேட் ஹிந்தியில்...?
கேபிள்ஜி... உங்க கடிகாரத்திலேயும் 24 மணிநேரம்தானே இருக்கு. பொறாமையா இருக்கு சாமி!
கேபிள் சார்.. நாளை வெளி வரப்போகும் குமுதம் வார இதழில் அரசு கேள்வி பதில் பகுதியில் உங்கள் கொத்து பரோட்டா பற்றி ஒரு லைனும் ஒரு ஜோக்கும் வருது .. வாழ்த்துக்கள்.
அந்த ஜோக்
க்ளோஸ் ஃபிரண்ட் - நர்ஸ் நல்லாருக்கான்னு விசாரிப்பான்..சாதா ஃபிரண்ட் உடம்பு எப்படி?ன்னு விசாரிப்பான் -கொத்து பரோட்டா
Post a Comment