கொத்து பரோட்டா- 30/05/11
நேற்று முன் தினம் கல்யாண மாலை மோகனுக்கு அறுபதாம் கல்யாணம். ஊருக்கே கல்யாணம் செய்து வைப்பவருக்கு கல்யாணம் எனும் போது உற்சாகம் கரை புரண்டது ஒன்றும் அதிசயமில்லை. பல பட்டிமன்ற பேச்சாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் அவரைப் பற்றி அவரது குடும்பத்தினரின் பகிர்தல் வீடியோ க்யூட் அண்ட் ஸ்வீட். நல்ல கம்பைளிங் மீரா நாகராஜன். எனக்கும் மிக நெகிழ்வாக இருந்தது. என் அப்பாவின் அறுபதாம் கல்யாணம் ஞாபகம் வந்தது. நெடுநாளைக்கு பிறகு நான் கிட்டத்தட்ட அரை நாளுக்கு மேல் நிகழ்வில் கலந்து கொண்டு மோகன் தம்பதியரின் ஆசியை பெற்று வந்தேன். கல்யாண மாலை மோகன் என் சித்தப்பா. #############################