சந்தோஷம்
போன வாரம் குமுதத்தில் கொத்துபரோட்டாவை குறிப்பிட்டு அரசு பதில்களில் எழுதியிருந்தது பெரிய அளவிலான அங்கீகாரத்தை கொடுத்தது. புத்தகம் வந்து ஒரு வாரமாகியும் நிறைய வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள் சொன்ன வண்ணம் இருக்கிறார்கள். சினிமா துறை நண்பர்கள் பலர் குமுதம் அரசு பதில்களில் இடம் பெற்றது சாதாரண விஷயமல்ல என்று பாராட்டியது அளவில்லா மகிழ்ச்சியை வழங்கியது என்றே சொல்ல வேண்டும். தமிழ் கூறும் நல்லுகத்தில் தவிர்க்க முடியாத பத்திரிக்கை ஆளுமைகளுள் குமுதமும் உண்டு. அப்படிப்பட்ட பத்திரிக்கையில் எனக்குமொரு சிறிய இடத்தை அளித்து அங்கீகரித்த குமுதம் அரசுவுக்கு நன்றிகள் பல..
############################
சந்தோஷம் 2
இயக்குனர் சிகரம் திரு பாலசந்தருக்கு தாதா சாஹேப் பால்கே அவார்டை கொடுத்து கவுரவித்திருகிறது மத்திய அரசு. இந்த விருது அவரைப் பொருத்தவரை மிக தாமதமாக வந்திருக்கும் விருது என்றே சொல்ல வேண்டும். கமல் இதைத் சொல்லித்தான் வருத்தப்பட்டார். தாதா சாஹேப் பால்கே விருதெல்லாம் வயதானால்தான் கொடுக்க வேண்டும் என்று ஏதாவது சட்டமிருக்கிறதா என்ன? எனிவே இப்போதாவது கொடுத்தார்களே? தமிழ் சினிமாக்காரர்கள் எது எதற்கோ விழாவெடுக்கிறார்கள். இந்த விருது பெற்றவருக்கு எந்த விதமான அரசியல் பூச்சில்லாமல் மாபெரும் விழா எடுக்க வேண்டும் என்பது என் அவா. இன்னொரு முக்கிய விஷயம் அழகிரியும், துணை முதல்வரும் பாலசந்தரை வீடு தேடி போய் வாழ்த்திவிட்டு வந்தது பாராட்டப் படவேண்டிய ஒரு மாற்றம். ஆனால் முதல்வர் வழக்கப்படி வீட்டுக்கு கூட்டி வந்து சால்வை வாங்கிக் கொண்டு போட்டது கொஞ்சம் வருத்தமே. தேவையில்லாம எல்லாம் போய் பாக்குறாரு? கேட்டா “இன்னா செய்தாரைன்னு” குறள் சொல்லுவாரு.
###############################
என் பையன்களின் ஆர்வத்திற்காக ஐபிஎல் சென்றிருந்தேன் சேப்பாக்கத்திற்கு. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை ஆஸ்திரேலியா, இந்தியா டெஸ்ட் போட்டி பார்பதற்கு போனதாய் ஞாபகம். அப்போதைய அதர்சமான ஸ்ரீகாந்தின் ஆட்டத்தை பார்க்க போயிருந்தேன். அவர் மிகக்குறைந்த ரன்களின் அவுட்டாகிவிட்டது அதைவிட பெரிய சோகம். அதன் பிறகு இப்போதுதான். குறைந்த பட்ச டிக்கெட்டே 500 ரூபாய். அன்றைய சென்னை சூப்பர் கிங்க்ஸ், பூனே மேட்சுக்கு மொத்த மைதானமும் நிறையவில்லை. உள்ளே சென்றதும் ஏதோ ஒரு மாய ப்ரதேசத்தில் நுழைந்தது போல ஒளிவெள்ளத்தில் மைதானமே பளிச்சிட, அதற்கேற்றார் போல ஹை டெசிபல் ஒலியும், சென்னை கிங்ஸ் பாடலும், நடு நடுவே சினிமா பாடல்களையும் போட்டுக் கொண்டிருந்தார்கள். பிட்சின் நடுப்பக்கப் பார்வையில் உட்கார இடம் கிடைத்தது. காலரி சீட்டுகளைவிட அதிக டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டிருந்தார்கள் போலிருக்கிறது. எல்லோரும் முன்னால் நின்று மறைந்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே உத்தேசமாய் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம், அவன் டோனிதானே? போலிங்கர்தானே என்று தொடர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த என் இளைய மகனுக்கு பதில் சொல்வதற்காக பக்கதிலிருந்த ஒரு கிரிக்கெட் விசுவாசியிடமிருந்து பைனாக்குலர் வாங்கி பார்ப்பதற்குள் தோனியோ, போலிங்கரோ இடமாறியிருக்க, அதன் பிறாகு அவன் யாரைக் கேட்டாலும் ஆமா என்று சொல்ல ஆரம்பித்துவிட்டேன். டோனி, சிக்ஸெல்லாம் அடித்தார் என்று ஸ்கோர் போர்டை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஸ்டேடியத்தின் ஸ்கோர் போர்ட் டிவியின் லைவ் ரிலே மற்றும் இல்லையென்றால் ஒரு எழவும் புரிந்திருக்க வாய்பில்லை. நிச்சயம் மேட்ச் பார்க்க ஒரு முறை மைதானத்திற்கு போவது, அந்த நேரத்தில் அனுபவத்திற்காக மட்டுமே இருக்க முடியும். இன்றைய டிவி கவரேஜ் காலத்தில் வீடே சரி. அட்லீஸ்ட் ஆடுறது யாருன்னாவது தெரியும். வந்திருந்த கூட்டத்தில் முக்காவாசி பள்ளிச் சிறுவர்களும், கொஞ்சம் ஹை ப்ரொபைல் காலேஜ் ஜோடிகளும் தான். அது சரி அங்கே ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு பப்ளிக் பர்பாமென்ஸ் ராயல்டியை ஐபிஎல் குழுவிடமிருந்து தமிழ்த் திரையுலகம் வாங்குகிறதா? இல்லாட்டி உடனே வாங்குங்க. காசா இல்ல அவிய்ங்க கிட்ட?
#################################
தத்துவம்
வாழ்க்கை ஒண்ணும் எம்பி3 ப்ளேயரில்லை, நாம விரும்புற பாட்டை போட்டுக் கேட்க, அது எப்.எம்ரேடியோ மாதிரி அது போடுற பாட்டை ரசிக்க நாமதான் கத்துக்கணும்.

வாழ்க்கையில ஜெயிக்கிறதுக்கு ரெண்டே வழிதானிருக்கு. ஒண்ணு நம்மோட திறமைகளை பெரிதாய் வளர்த்துக் கொள்வது. ரெண்டு: நம் கனவுகளை இருக்கிற திறாமைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது.
##################################
சாய்பாபாவின் மறைவு அவரது ஆன்மீக பாலோயர்களுக்கு பேரிடியாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் படித்தவர்கள். ஒரு மனிதனுக்கு மரணம் என்பது இயற்கை தான் என்பதை அறியாதவர்கள் இல்லை. எனககு சாய்பாபாவை பற்றி மாற்றுக் கருத்திருத்திருந்தாலும், அவரது மருத்துவ, மற்றும் புட்டபர்த்தி என்கிற ஊருக்கு அவர் செய்திருக்கும் பணிகள் நிறைய. நம் தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டு வருவதற்கு அரசின் அனுமதியை தவிர வேறு எந்த ஒரு உதவியையும் எதிர்பாராமல் செய்ததை வேறு யாராலும் செய்திருக்க முடியுமா என்றால் யோசிக்கத்தான் வேண்டும். சில சமயம் ஆன்மீக குருக்களும் நல்லதுதான் போலிருக்கிறது. தரிசனத்தை பற்றிய கதையொன்று படிக்க
##########################################
ப்ளாஷ்பேக்
ஷம்மிக்கபூர். கபூர் குடும்பத்தின் ஆளுமை. ஒரு காலத்தில் ஹிந்தி சினிமா பாடல்களில், நடிப்பில் தேவ் ஆனந்திற்கு பிறகு வைபரண்டான, லைவ்லியான பர்பாமென்சுக்கு சொந்தக்காரர். இவரது பாடல்கள் எல்லாம் கேட்டால் எழுந்த ஆடாமல் இருக்கமாட்டான் ரசிகன். இவரது படங்களில் பெரிய சோகமோ, கருத்தோ சொல்வது கிடையாது. எண்டர்டெய்னிங் படங்களாய் அமைந்தது இவருடய படங்கள். இதோ அவரது துள்ளத் துடிக்கும், இன்றைக்கும் இளைஞர்களை எழுந்து ஆட வைத்துக் கொண்டிருக்கும் அப்பாடல். மொஹமட் ரபியின் துள்ள்லான குரலோடு, சாய்ராபானுவின் அழகும் .. யாஹு..யாஹு….
#####################################
அடல்ட் கார்னர்
சாகும் தருவாயில் இருக்கும் ஒரு கணவன் தன் ஆசை மனைவியிடம் கேட்கிறான்..
கணவன்:- நான் ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு இருந்தேன்..
மனைவி:- கேளுங்க..
கணவன்:- நம்ம அஞ்சி பசங்கள்ல கடைசி பையன் மட்டும் வித்யாசமா இருக்கானே, உண்மைய சொல்லும்மா, அவனுக்கு மட்டும் அப்பா வேற தானே..
மனைவி:- ஆமாங்க..
கணவன்:- நினைச்சேன்...யாரும்மா அது?
மனைவி:- நீங்க தாங்க..
கணவன்:- ?????????? (உயிர் பிரிந்தது..)
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
18 comments:
குமுதம் அரசு பதில்களில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
அருமையான கொத்து புரோட்டா..
தலைவரே,
கிரவுண்டில் மேட்ச் பார்க்க வேண்டுமெனில் (அதாவது ரசித்து பார்க்க வேண்டுமெனில்) பல விஷயங்கள உள்ளன. அதில் முதலாவது நாம எங்கிருந்து மேட்ச் பாக்குறோம் என்பதுதான். 1993 முதல் இதுவரை சேப்பாக்கில் நடக்கும் 90% மேட்சுகளை பார்த்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன் - நல்ல சீட்டிங் (அதாவது நல்ல டிக்கெட் - அதாவது அதிக விலை) இல்லையெனில் மேட்ச் மொக்கையாகிவிடும்.
ரெண்டாவது விஷயம் - துணை: அதாவது யாருடன் மேட்ச் பார்க்க போகிறீர்கள் என்பது. நானும் நண்பர்களும் சென்றோமேன்றால் அது தனி கதை. நானும் சக ஊழியர்களும் என்றோமேன்றால் அது தனி கதை. ஆகையால் நண்பர்களை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும். அப்போதுதான் மொக்கை மேட்சும் என்ஜாய் செய்து பார்க்க இயலும்.
கிங் விஸ்வா
லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்
வாழ்த்துகள் தல.
// அங்கே ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு பப்ளிக் பர்பாமென்ஸ் ராயல்டியை ஐபிஎல் குழுவிடமிருந்து தமிழ்த் திரையுலகம் வாங்குகிறதா? இல்லாட்டி உடனே வாங்குங்க. காசா இல்ல அவிய்ங்க கிட்ட?//
எனக்கு தெரிந்த வரை ராயல்டி எதுவும் இல்லை.
ஆனால் நீங்கள் எழுப்பி இருப்பது நல்லதொரு கேள்வி.
அதிர்ச்சியான ஜோக்
கிரிக்கெட் அனுபவம் நன்று..
அதுவும் முதலில் பைனாகுலர் பார்வையும்
பின்னர் "ஆமாம் சாமி" போட்டதும் ...
பாலச்சந்தருக்கு முன்னரே கொடுத்திருக்கலாம் எனும் ஆதங்கம் தமிழ் சினிமா ஆர்வலர் எல்லோருக்குமே உண்டு..
மறைமுகமாக கலைஞர் மூலம் ஒருவரை தாக்குகிறீரே?
தொடருங்கள் உங்கள் நற்பதிவுகளை...
//அங்கே ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு பப்ளிக் பர்பாமென்ஸ் ராயல்டியை ஐபிஎல் குழுவிடமிருந்து தமிழ்த் திரையுலகம் வாங்குகிறதா? இல்லாட்டி உடனே வாங்குங்க. காசா இல்ல அவிய்ங்க கிட்ட?//
ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே- நம்ம
காரியத்துல கண்ணா
இருக்கணும் தாண்டவக்கோனே!
:)))))
வாழ்த்துக்கள்.
அவரது விருது பெரும் சந்தோசத்துக்குரியது சகோதரம்....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)
தலைவரே,
அப்படியே கிரவுண்ட்ல தண்ணி பாட்டில், கூல்ட்ரிங்க்ஸ் இன்னபிற எல்லாம் எம் ஆர் பி ரேட்லேர்ந்து எவ்ளோ அதிகம் வெச்சி விக்கறாங்கன்னும் எழுதி இருந்திருக்கலாமே??
விந்தைமனிதன் said...
//அங்கே ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு பப்ளிக் பர்பாமென்ஸ் ராயல்டியை ஐபிஎல் குழுவிடமிருந்து தமிழ்த் திரையுலகம் வாங்குகிறதா? இல்லாட்டி உடனே வாங்குங்க. காசா இல்ல அவிய்ங்க கிட்ட?//
ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே- நம்ம
காரியத்துல கண்ணா
இருக்கணும் தாண்டவக்கோனே!
:)))))///
எல்லாரும் பாட்டுக்கு கோனார் உரை எழுதினா இவரு உரைக்கு கோனார் பாட்டு எழுதறாரே? :))
@நன்றி குரு.
@கிங் விஷ்வா..
ஐநூறு ரூபாய்க்கு மேல் வாங்க முடியாது தலைவ்ரே.. ஆனால் ஐநூறு ரூபாய் டிக்கெட் காலரி வீயூவிங் படு மொக்கை..
அடுத்த முறை உங்களூடன் பார்க்கலாமா? நான் ரெடி..
@செங்கோவி
நன்றி
@கிங் விஸ்வா
அப்படியென்றால் நிச்சயம் தமிழ் இசை வெளியிடும் ச்மூகம் காசு பார்க்க முடியும்.
@நெல்லை அண்ணாச்சி
நன்றி
@நன்றி மனோவி
@ஷங்கர்.
தலைவரே அது ஒரு வித்யாசமான ஐடியாவை செய்கிறார்கள். குளிர்பானங்கள் முதற்கொண்டு தண்ணி வரை பாட்டிலாக கொடுக்காமல், க்ளாஸில் ஊற்றுத்தான் தருகிறார்கள். எனவே அவர்கள் பேக்கேஜ்டு டிரிங்காக த்ராமல், பிரித்து தருவதால்.. ஒன்றும் கேட்க முடியாது. அவர்கள் சொல்லும் விலைதான்.. என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா..
ரஜினிக்கு பேதி ஆனால் கலைஞர் சென்று பார்க்கிறார். இது அல்லவா தமிழ் சினிமாவின் பொற்காலம்.
Yov cablear unakkku rombhaa thaan apdi yennnaa iyaaa rajini unakku keduthal seinjar. But kalaignar poi avarai parthathu over thaan..Irukattume unga thirai ulagin oruvarai thane parthaar. Venna kamalaiyum poi paduthukka sollungaaa. Vandhu paarpar. Aana kamal Bedla admit aana nurse yellam paavam thane...Check Vetaiyadu Vilaiyudu for kamal's wonderful acting in hospital after kamalini died..Well done Kamalahasan!!! ;)
Very happy for the Arasu reference.Watching a match at Chepauk is an "experience". The atmosphere is great with different sounds emanting from all directions. In those grand old days they used to sell ground nuts, kamala orange and Ratna cafe food packets. I can still recollect those smells around me.
I fully share with you regarding the "Darshan" article way back in 2007.I think most men (mainly husbands, suffer from this problem. We do not subscribe to the wife's beliefs and faith in most of their rituals, but we are forced to play along.I my case, She enjoys the temple and I, the long drives.
Recently we drove to shirdi from Chennai and both of us enjoyed. The arrangements were pathetic and we did not get even an iota of peace from the visit.Only plus point was the great food court outside the temple complex.
SMS padathulla vara madhiri, Each person has different feelings.
ஷம்மிக்கபூர் is an icon of ecstatic relaxation in india
வாழ்த்துகள் Sir.
Post a Comment