100% Love
சுகுமார், நாக சைதன்யா, ரொம்ப நாளைக்கு பிறகு தமன்னா தெலுங்கில், தேவி ஸ்ரீ பிரசாத, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் என்று ஒரு பெரிய வெற்றிக் கூட்டணியே ஒன்றினைந்திருக்கும் படம். அதனால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புக்கு அளவேயில்லை. வழக்கமாய் சுகுமாரின் அத்துனை படங்களிலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கும். அதாவது ஹீரோவின் கேரக்டரைஷேஷன். அது அவரது முதல் படமான ஆர்யாவிலாகட்டும், இரண்டாவதுபடமான ஜகடத்திலாகட்டும், மூன்றாவதான கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகப் போன ஆர்யா-2விலாகட்டும் ஒரு டீடெயில்டு கேரிக்கேச்சர் இருக்கும். அதற்காக அவர் நிறைய உழைத்திருப்பார். ஆனால் அம்மாதிரியான உழைப்பு கொஞ்சம் ஓவராகி ஆர்யா –2 போல தோல்வியடைவதும் உண்டு. தமிழ் நாட்டில் அப்படத்தை பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். ஏன் எனக்கும் மிகவும் பிடித்தப் படம். ஆனால் அந்திரத்தில் படம் வெகு சுமார் ரிசல்ட்டே.
மிகச் சாதாரணமான ஒரு லைன்தான். ஒரு அரகண்ட், ஸ்மார்ட் ஹீரோவான சைதன்யாவின் வீட்டிற்கு கிராமத்திலிருந்து அவளுடய மாமன் மகள் படிக்க வருகிறாள் தன்னை விட யாரும் உயர்வில்லை, தன்னை விட யாரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவன் சைதன்யா. தமன்னாவுக்கு அவன் சொல்லிக் கொடுத்து அவள் முதல் இடத்தில் வந்துவிட, மெல்ல அவர்களுக்குள் ஈகோ தலை தூக்குகிறது. அது கொஞ்சம் தணிந்திருக்கும் போது காதலாய் மாறி கல்யாண நிச்சயதார்த்தத்தில் வ்ந்து நிற்கும் போது அவர்களின் உட்சபட்ச ஈகோ வெடித்து இருவரும் பிரிகிறார்கள். அதன் பிறகு அவர்கள் இணைந்தார்களா?
எனக்கு பெரியதாய் தமன்னாவை பிடிக்காது. ஆனால் இந்த படத்தில் அவரின் சின்னச் சின்ன ரியாக்ஷன்கள் என்னை கவர்ந்துவிட்டது. முக்கியமாய் சைதன்யாவிற்காக தன் ஆசைகளை மாற்றிக் கொண்டு, நிற்கும் காட்சிகளில் எல்லாம் செம க்யூட். அவனது நார்சிஸ்டான ஆட்டிட்டியூடை சகித்து, அவனை ரசிக்கும் காட்சிகளில் எல்லாம் பர்பாமென்ஸ். முக்கியமாம் அந்த தொப்பளும், இடுப்பும். படம் பார்க்கும் எனக்கே கையை கொண்டு போய் வைக்கணும் போல இருந்தது. ம்ஹும். க்ளைமாக்ஸில் இவரது பர்பாமென்சும் நோட் வொர்த்தி.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்தினூடே செல்வதால் சுவாரஸ்யத்தை கெடுக்கவில்லை. ஹரிபிரசாத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். வேங்கட பிரசாத்தின் ஒளிப்பதிவு ஓகே. சைதன்யாவின் அறை அமைப்பை மிக அழகாகவும், சுவாரஸ்யமாகவும் அமைத்த ஆர்ட் டைரக்டர் ப்ரகாஷுக்கு வாழ்த்துக்கள்.
கதை, இயக்கம் சுகுமார். ஹீரோவின் கேரக்டரை மட்டுமே வலுவக்கிக் கொண்டு போகாமல், தமன்னா கேரக்டரையும் கூடவே கூட்டிப் போனது பலம். ஆனால் இவர்களது ஈகோவை அவர்களுக்கு உணர்த்துவதற்காக பாட்டி தாத்தா பிரிவு என்றொரு சிறு கிளைக்கதை, கதைக்கு ஒட்ட வைக்க ஏதுவாக இருந்தாலும் பழைய நெடி. க்ளைமாக்ஸில் சைதன்யாவின் கம்பெனி ப்ரச்சனையை தன் பிரச்சனையாய் எடுத்துக் கொண்டு முடிக்கும் காட்சியில் கொஞ்சம் ட்ராமா இருப்பதை மறுக்க முடியாது. இருவருக்கும் நிச்சயித்திருந்தவர்கள் படு மொக்கையாய் இருப்பது, சிறுவர் சிறுமிகளை வைத்து காட்சிகளை நகர்த்துவது போன்ற பழைய பாக்யராஜ் தனங்கள் என்று பல இடங்களில் சினிமா. இப்படி சில பல இடங்களில் சொதப்பியிருந்தாலும், சுவாரஸ்யமான கேரக்டர்களாலும், நல்ல ஷார்ப் வசனங்களாலும், (வசனமெழுதுவது எப்படி என்று சந்தேகம் கேட்டவர்கள் பார்க்க வேண்டியது) என்று ஒரு ஃபீல் குட் லவ்வபிள் படத்தை அளித்த சுகுமாருக்கு வாழ்த்துக்கள்.
100% Love- A Breezy Love Story For This Summer
டிஸ்கி: தயவு செய்து யாரும் உட்லான்ஸில் படம் பார்த்து விடாதீர்கள். க்யூப் ப்ரொஜெக்டரில் லைட் மக்கிப் போய் இருக்கிறது. இருட்டறைக்குள் படம் பார்பது போலிருப்பதாலும், ஏஸியை வேறு அணைத்து விடுவதாலும் வேறு நல்ல தியேட்டரில் போய் பார்பது உசிதம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments