சுகுமார், நாக சைதன்யா, ரொம்ப நாளைக்கு பிறகு தமன்னா தெலுங்கில், தேவி ஸ்ரீ பிரசாத, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் என்று ஒரு பெரிய வெற்றிக் கூட்டணியே ஒன்றினைந்திருக்கும் படம். அதனால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புக்கு அளவேயில்லை. வழக்கமாய் சுகுமாரின் அத்துனை படங்களிலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கும். அதாவது ஹீரோவின் கேரக்டரைஷேஷன். அது அவரது முதல் படமான ஆர்யாவிலாகட்டும், இரண்டாவதுபடமான ஜகடத்திலாகட்டும், மூன்றாவதான கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகப் போன ஆர்யா-2விலாகட்டும் ஒரு டீடெயில்டு கேரிக்கேச்சர் இருக்கும். அதற்காக அவர் நிறைய உழைத்திருப்பார். ஆனால் அம்மாதிரியான உழைப்பு கொஞ்சம் ஓவராகி ஆர்யா –2 போல தோல்வியடைவதும் உண்டு. தமிழ் நாட்டில் அப்படத்தை பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். ஏன் எனக்கும் மிகவும் பிடித்தப் படம். ஆனால் அந்திரத்தில் படம் வெகு சுமார் ரிசல்ட்டே.
மிகச் சாதாரணமான ஒரு லைன்தான். ஒரு அரகண்ட், ஸ்மார்ட் ஹீரோவான சைதன்யாவின் வீட்டிற்கு கிராமத்திலிருந்து அவளுடய மாமன் மகள் படிக்க வருகிறாள் தன்னை விட யாரும் உயர்வில்லை, தன்னை விட யாரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவன் சைதன்யா. தமன்னாவுக்கு அவன் சொல்லிக் கொடுத்து அவள் முதல் இடத்தில் வந்துவிட, மெல்ல அவர்களுக்குள் ஈகோ தலை தூக்குகிறது. அது கொஞ்சம் தணிந்திருக்கும் போது காதலாய் மாறி கல்யாண நிச்சயதார்த்தத்தில் வ்ந்து நிற்கும் போது அவர்களின் உட்சபட்ச ஈகோ வெடித்து இருவரும் பிரிகிறார்கள். அதன் பிறகு அவர்கள் இணைந்தார்களா?
இம்மாதிரியான ஈகோ கதைகளில் சுவாரஸ்யமான கேரக்டர்கள் வேண்டும். அந்த விதத்தில் சைதன்யா, தமன்னா இரண்டு கேரக்டர்களுமே இரண்டு எக்ஸ்ட்ரீமாக இருக்க சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சைதன்யாவிடம் அந்த பொறாமை, டாமினென்ஸ் எல்லாம் ரசனை. காலேஜில் யாரோ ஒரு மாணவி அவருக்கு காதல் கடிதம் கொடுக்க, அதை தமன்னாவைவிட்டே படிக்க சொல்வதும், அவரை பாராட்டும் வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட சொல்வதும், சுவாரஸ்யம். ராத்திரி தமன்னா தூங்கும் போது அவரது இடையையும், தொப்புளையும் பார்த்து தொடப் போகும் போது, தமன்னா செய்யும் அமர்களம். சிக்கன் சாப்பிட்டால் புத்தி வளராது என்று தமன்னா குறைவாக மார்க் வாங்கும் பொது கிண்டலடிப்பதும், அவர் முதல் மார்க் வாங்கியதும் சிக்கனை வைத்துக் தமன்னா அவரை கலாய்க்கும் காட்சி. அந்த ஷாருக், கஜோல் காட்சிகள். க்ளைமாக்ஸில் சைதன்யா தண்ணியடித்துவிட்டு தமன்னாவிடம் தன் காதலைச் சொல்லி புலம்பும் காட்சியில் செம பர்பாமென்ஸ். என்ன அந்த முகத்துக்கு தம் அடிப்பது மட்டும் பொருந்த மாட்டேனென்கிறது.
எனக்கு பெரியதாய் தமன்னாவை பிடிக்காது. ஆனால் இந்த படத்தில் அவரின் சின்னச் சின்ன ரியாக்ஷன்கள் என்னை கவர்ந்துவிட்டது. முக்கியமாய் சைதன்யாவிற்காக தன் ஆசைகளை மாற்றிக் கொண்டு, நிற்கும் காட்சிகளில் எல்லாம் செம க்யூட். அவனது நார்சிஸ்டான ஆட்டிட்டியூடை சகித்து, அவனை ரசிக்கும் காட்சிகளில் எல்லாம் பர்பாமென்ஸ். முக்கியமாம் அந்த தொப்பளும், இடுப்பும். படம் பார்க்கும் எனக்கே கையை கொண்டு போய் வைக்கணும் போல இருந்தது. ம்ஹும். க்ளைமாக்ஸில் இவரது பர்பாமென்சும் நோட் வொர்த்தி.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்தினூடே செல்வதால் சுவாரஸ்யத்தை கெடுக்கவில்லை. ஹரிபிரசாத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். வேங்கட பிரசாத்தின் ஒளிப்பதிவு ஓகே. சைதன்யாவின் அறை அமைப்பை மிக அழகாகவும், சுவாரஸ்யமாகவும் அமைத்த ஆர்ட் டைரக்டர் ப்ரகாஷுக்கு வாழ்த்துக்கள்.
கதை, இயக்கம் சுகுமார். ஹீரோவின் கேரக்டரை மட்டுமே வலுவக்கிக் கொண்டு போகாமல், தமன்னா கேரக்டரையும் கூடவே கூட்டிப் போனது பலம். ஆனால் இவர்களது ஈகோவை அவர்களுக்கு உணர்த்துவதற்காக பாட்டி தாத்தா பிரிவு என்றொரு சிறு கிளைக்கதை, கதைக்கு ஒட்ட வைக்க ஏதுவாக இருந்தாலும் பழைய நெடி. க்ளைமாக்ஸில் சைதன்யாவின் கம்பெனி ப்ரச்சனையை தன் பிரச்சனையாய் எடுத்துக் கொண்டு முடிக்கும் காட்சியில் கொஞ்சம் ட்ராமா இருப்பதை மறுக்க முடியாது. இருவருக்கும் நிச்சயித்திருந்தவர்கள் படு மொக்கையாய் இருப்பது, சிறுவர் சிறுமிகளை வைத்து காட்சிகளை நகர்த்துவது போன்ற பழைய பாக்யராஜ் தனங்கள் என்று பல இடங்களில் சினிமா. இப்படி சில பல இடங்களில் சொதப்பியிருந்தாலும், சுவாரஸ்யமான கேரக்டர்களாலும், நல்ல ஷார்ப் வசனங்களாலும், (வசனமெழுதுவது எப்படி என்று சந்தேகம் கேட்டவர்கள் பார்க்க வேண்டியது) என்று ஒரு ஃபீல் குட் லவ்வபிள் படத்தை அளித்த சுகுமாருக்கு வாழ்த்துக்கள்.
100% Love- A Breezy Love Story For This Summer
டிஸ்கி: தயவு செய்து யாரும் உட்லான்ஸில் படம் பார்த்து விடாதீர்கள். க்யூப் ப்ரொஜெக்டரில் லைட் மக்கிப் போய் இருக்கிறது. இருட்டறைக்குள் படம் பார்பது போலிருப்பதாலும், ஏஸியை வேறு அணைத்து விடுவதாலும் வேறு நல்ல தியேட்டரில் போய் பார்பது உசிதம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
8 comments:
100% i am the first....
:-) அவசியம் பாக்கனும்ன்னு நினைச்சிட்டிருந்த படம்.. இங்க ரிலீஸே பண்ணமாட்டேங்குறாங்களே? வேற வழியில்ல டவுன்லோட வேண்டியதுதான். பாடல்கள் எப்படி தலிவரே?
பாடல்கள் பெரிசா இல்லையென்றாலும் சொதப்பவில்லை. முரளி.
தெலுங்குப் படத்திற்கெல்லாம் விமர்சனம் தேவையா? ஏன் தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்
எங்கள் தலைவி தமன்னாவை பாராட்டியதற்கு நன்றி.
ஆர்யா-2 எனக்கு மிக மிக பிடித்த படம்..
உங்கள் விமர்சனம் சரியாக இருந்தது ஒரு விஷயத்தை தவிர..தமன்னா சைதன்யாவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார்..ஒரே மாதிரி சலிப்பூட்டும் நடிப்பு என்று படத்தின் தோல்விக்கு தமன்னாவும் முக்கிய காரணம்.
தமன்னாவை இவ்வளவு பாராட்டிட்டு ஒரு cute ஆன தமன்னா ஸ்டில் போடலையே..
Post a Comment