Thottal Thodarum

May 16, 2011

கொத்து பரோட்டா –16/05/11

ஒரு வழியாய் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி மம்மி ரிட்டர்ன்ஸ். கிட்டத்தட்ட ஒரு சுனாமி போல எல்லாருடய பிரெடிக்‌ஷன்களையும் அடித்து தூள் தூளாக்கியிருக்கிறார். அவர்களே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்பது கட்சிக்காரர்களின் கரை புரளும் சந்தோஷ மிகுதியிலேயே தெரிகிறது. இதெல்லாம் இருக்க, சனிக்கிழமை காலையிலேயே எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை போட வருகிறார், பெரியார் சிலைக்கு மாலை போட வருகிறார் என்று பட்டப்பகலில் அதற்கான படி மற்றும் அலங்கார ஏற்பாடுகளை செங்கோட்டையனே ஆணியடிக்காதகுறையாய் முன்னின்று செய்து கொண்டிருந்தார்.ட்ராபிக் ஜாம். மம்மி வரும் போது அந்த குளறுபடியில்லை என்று பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள். ஆனால் அரை மணி நேரத்திற்கு மேல் ட்ராபிக் ஜாம். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மம்மி கொடுத்த பேட்டி செம மெச்சூர்டு. இதே மெச்சூரிட்டியுடன் ஆட்சியிருந்தால் சந்தோஷம்.
#############################


சந்தோஷம்
சென்ற வார கல்கியில் என்னுடய மற்றொரு சிறுகதை வெளிவந்தது..
############################################
“எப்படியோ நாம ஜெயிக்க வச்சிட்டோம்”

”அடுத்து இவளாவது ஊழல் பண்ணாம இருக்கட்டும்”

”அதெப்படி பண்ண முடியும்? அதான் ஒரு லட்சத்தி எத்தனையோ கோடின்னு டிவியில் சொல்றாங்களே? இனிமே கவர்மெண்டு காசு சம்பாதிச்சு அதை அடிக்கறதுக்குள்ளே… அடுத்த ஆட்சி வந்திராது” இரண்டு ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் குடந்தை கும்பேஸ்வரர் கோயில் நடையில் பேசிக் கொண்டது. சொந்த செலவில் சூனியம் என்பது இதுதான். இவங்களே டிவியை கொடுத்திட்டு, அதிலேயே இவங்களைப் பத்தின செய்தியையும் காட்டிட்டு ஓட்டுப் போடுங்கன்னா எப்படி போடுவாங்க?
#########################################
நண்பர் ஒருவர் சைனாவிற்கு வியாபார நிமித்தமாய் அடிக்கடி சென்று வருபவர். ஒரு விஷயத்தைச் சொன்னார். அம்மக்களுக்கு நமது இந்தி, தமிழ் படங்களின் பாடல்களை மிகவும் விரும்புகிறார்களாம். அங்கே நேரடியாய் சைனீஸ் சப்டைட்டிலுடனோ, அல்லது டப் செய்தோ படங்களை வெளியிட்டால் நிச்சயம் பெரிய வரவேற்பிருக்கும் என்கிறார். யாராவது ஆட்டத்திற்கு வருகிறீர்களா?
##############################
இம்முறை அதிமுகாவிற்கு அதிக சதவிகித ஓட்டுக்கள் பெற்றதும், திமுக சதவிகிதம் குறைந்ததற்கான காரணம் என்னவென்று அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் சொன்னது “ புதிய வாக்காளர்கள் சுமார் 25 சதவிகிதத்தினர், முதல் முறை ஓட்டுப் போடுபவர்கள் யாரும் திமுகவிற்கு ஓட்டிடவில்லை. அதற்கு காரணம் ஸ்பெக்டரம் என்று சொன்னார். இதுவும் ஒரு வகையில் சரியான அலசல் தான் என்று தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?. என்னைப் பொருத்த வரை திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் கலாநிதி, தயாநிதி தான் என்றால் தப்பில்லை என்று தோன்றுகிறது.
###################################
படித்தத்தில் பிடித்தது.
இரா.முருகனின் ராயர்ஸ் காப்பி கிளப் படித்தேன். சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். சுஜாதா பாணி எழுத்துடன் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாய் பல விஷயங்களை தொடுகிறார். லண்டன் பற்றிய செய்திகள் அனைத்தும் புதிதாய் ப்ரெஷ்ஷாய் இருக்கிறது. ஒவ்வொரு அத்யாயத்தின் முடிவிலும் ஒரு குட்டி வெண்பா வருவது சுவாரஸ்யம். இவரின் அடுத்த புத்தகத்தை படிக்கும் ஆவல் அதிகரித்துள்ளது. நான் படிக்கும் இரா.முருகனின் முதல் புத்தகம் இது.
################################
தத்துவம்
உன் வாழ்க்கையை காட்டும் கண்ணாடி பனிபடர்ந்து முகம் தெரியாமல் போனால். உன் கைகளினால் அதை துடைத்து விடு. மீண்டும் உன் வாழ்க்கையெனும் கனவின் பிம்பம் தெளிவாகத் தெரியும்.

எல்லா ஆண்களும் கோடீஸ்வரர்கள்.  அட்லீஸ்ட் அவர்களுடய விந்தணுகளிலாவது. ஆனால் என்ன கொடுமையென்றால் அதைக்கூட பெண்களிடம் தான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
#################################
ப்ளாஷ்பேக்
ரங்கு பர்ஸே… அமிதாப், ரேகா, சஞ்சீவ்கபூர், ஜெயாபாதுரி நடித்து, யாஷ் சோப்ரா இயக்கிய படம். முக்கியமாய் இப்பாடலில் நடக்கும் சம்பவங்களும், அதை படமாக்கிய விதமும், நடிகர்களின் நடிப்பும் அட்டகாசமாய் இருக்கும். அதை விட இப்படம் வந்த போது நிஜ வாழ்க்கையில் ஜெயாபாதுரி அமிதாபிற்கு நடுவே ரேகா இருந்தார் என்று கிசுகிசுக்கப்பட்ட நேரத்தில் இந்தப் பாடல்  சும்மா இருந்த சங்கை வேறு ஊதிவிட்டது. மிக அருமையான பாடல். இன்றளவில் எவ்வளவோ பாடல்கள் ஹோலியை மையப்படுத்தி வந்திருந்தாலும் இது எவர்லாஸ்டிங் சாங்தான்.
##################################
எலக்‌ஷனுக்கு அடுத்த நாள் முழுவதும் சன் டிவியின் வழக்கமான திரைப்பட விளம்பரங்கள் வரவேயில்லை. அட என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அடுத்த நாள் ஞாயிறன்று வழக்கப்படி ஆரம்பித்துவிட்டார்கள். அன்றே மதியம் பிரபுதேவா, ஜெயம்ரவி, ஹன்ஷிகாவுடன் விஜய்சாரதி பேட்டி கண்டார். படு மொக்கையான பேட்டி. படம் பார்த்தவர்களுக்கு தெரியும் அவர்கள் பேசுவது எவ்வளவு மொக்கை என்று. இருப்பதிலேயே மிகப் பெரிய கடுப்பு, என்னவெனறால் ஒவ்வொரு முறை படத்தின் பெயரை சொல்லும் முன் சன்பிக்க்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும் எங்கேயும் காதல் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததுதான்.
####################################
அடல்ட் கார்னர்
ஒரு அம்மாவும், சின்ன வயசு குழந்தையும் கடை தெருவில் நடந்து செல்லும்போது,

குழந்தை:- (அழுதபடி...) அம்மா..தூக்கும்மா..

அம்மா:- ஆமாம்..உனக்கும் உன் அப்பாவுக்கும் வேற வேலையே இல்ல, ரெண்டு பெரும் சும்மா இதையே சொல்லுங்க...
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

Unknown said...

ஸ்பெக்டரம் எல்லாம் சென்னையை தாண்டி யாருக்கும் தெரியாது என்று சொன்ன உ.பி க்களின் அரசியல் அறிவை குழி தோண்டிப் புதைத்தது கே.டி பிரதர்ஸ்தானா?

முடியல...

Unknown said...

இப்படி இருக்குமோ
http://www.youtube.com/watch?v=apkSkb6Ak3I

பிரபல பதிவர் said...

வெற்றி எதிர்பார்த்ததுதான்....

ஆனாலும் இவ்வளவு பெரிய வெற்றிக்கு லக்கிலுக்கின் இரண்டு கட்டுரைகள்தான் காரணமாக இருக்க முடியும்... ஸ்பெக்ட்ரம் மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாள் கட்டுரை அனைவரையும் சென்றடைந்ததே காரணம்...

பிரபல பதிவர் said...

உங்கள மாதிரி பாழாப்போன பதிவர எல்லாம் தட செய்வாங்களா அம்மா... சும்மா அரைமணி நேரம் அம்மாவுக்காக நிக்க முடியாம கொத்தும் உங்களல்லாம்.... என்ன செய்யலாம்....

பிரபல பதிவர் said...

தல... எப்படியாவது இந்த ஆட்சில படம் எடுத்துடுங்க.... அடுத்து அய்யா ஆட்சி வந்தா அவுங்க குடும்பம்தான் படம் மட்டும் இல்ல பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் எடுக்க முடியும்

பிரபல பதிவர் said...

//என்னைப் பொருத்த வரை திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் கலாநிதி, தயாநிதி தான் என்றால் தப்பில்லை என்று தோன்றுகிறது.
//

கருணாவின் கண்கள் பனித்த நாள்தான் திமுகவின் மரண அடியின் முதல் ஆணி.... என் எண்ணத்தோடு ஒத்து போகிறீர்கள்...

bandhu said...

//ரங்கு பர்ஸே… அமிதாப், ரேகா, சஞ்சீவ்கபூர், ஜெயாபாதுரி நடித்து, யாஷ் சோப்ரா இயக்கிய படம். முக்கியமாய் இப்பாடலில் நடக்கும் சம்பவங்களும், அதை படமாக்கிய விதமும், நடிகர்களின் நடிப்பும் அட்டகாசமாய் இருக்கும்//

முக்கியமாக, பாடலை பாடியது அமிதாப்! மிக அருமையாக பாடியிருப்பார்!

ஷர்புதீன் said...

:)

Sivakumar said...

//யாராவது ஆட்டத்திற்கு வருகிறீர்களா? //

केबल सार, नींग आराम्बिची वैंग.

anban said...

//உங்கள மாதிரி பாழாப்போன பதிவர எல்லாம் தட செய்வாங்களா அம்மா... சும்மா அரைமணி நேரம் அம்மாவுக்காக நிக்க முடியாம கொத்தும் உங்களல்லாம்.... என்ன செய்யலாம்....//அன்பின் சிவகாசி மாப்பிள்ளை கடந்த ஜனவரியில் ரிதர்டான் ரோடில் தயாநிதி வருகிறார் என்று சொல்லி சாலையில் இருபது நிமிடம் நின்றேன் நான். நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. பிடிக்காத மருமகள் கை பட்டால் குற்றம் கால பட்டால் குற்றம். இதுபோல் இருக்கிறது உங்கள் பின்னூட்டம்

disney said...

"இருப்பதிலேயே மிகப் பெரிய கடுப்பு, என்னவெனறால் ஒவ்வொரு முறை படத்தின் பெயரை சொல்லும் முன் சன்பிக்க்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும் எங்கேயும் காதல் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததுதான்".
எனக்கும் அதே காண்டு தான் பாஸ்
இவனுங்க எப்போ தான் திருந்துவாங்களோ????

Raju said...

\\எலக்‌ஷனுக்கு அடுத்த நாள் முழுவதும் சன் டிவியின் வழக்கமான திரைப்பட விளம்பரங்கள் வரவேயில்லை. அட என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுஅடுத்த நாள் ஞாயிறன்று வழக்கப்படி ஆரம்பித்துவிட்டார்கள்.\\

எலக்ஷனுக்கு அடுத்த நாள் வியாழக்கிழமை! அதற்கடுத்த நாள் வெள்ளிக்கிழமை...
:-)

Cinema Virumbi said...

___________________________________

கேபிள் சார்,
>>>>>>>தத்துவம்

எல்லா ஆண்களும் கோடீஸ்வரர்கள். அட்லீஸ்ட் அவர்களுடய விந்தணுகளிலாவது. ஆனால் என்ன கொடுமையென்றால் அதைக்கூட பெண்களிடம் தான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.<<<<<

அடல்ட் கார்னரில் வர வேண்டியதை மாற்றித் தத்துவத்தில் போட்டு விட்டீர்களே?!

சன் டிவியில் சண்டே அன்று வந்த நடிகையின் பெயர் ஹன்சிகா மோட்வானி. ஹன்ஸ் என்றால் அன்னப் பறவை. ஹன்சிகா என்றால் அன்னப் பறவையின் குட்டி என்று வைத்துக் கொள்ளலாம்!

நன்றி!

சினிமா விரும்பி

கானா பிரபா said...

அங்கே நேரடியாய் சைனீஸ் சப்டைட்டிலுடனோ, அல்லது டப் செய்தோ படங்களை வெளியிட்டால் நிச்சயம் பெரிய வரவேற்பிருக்கும் என்கிறார். யாராவது ஆட்டத்திற்கு வருகிறீர்களா? //

சீனா சென்றபோது கடைவளாகத்தில் நிறைய ஹிந்திப்படங்கள் விற்பதைக் கண்டிருக்கின்றேன் ஆனால் கூட வேலை செய்யும் சீனர்களைக் கேட்டுப் பார்த்ததில் அவர்களுக்கு பாலிவூட்டின் நடனங்கள் தூக்கலாக உள்ள படங்களைத்தான் ரசிக்கிறார்களாம் எனவே நீங்க படம் திரையிடுறதா இருந்தா கரன் ஜோகரை அணுகவும் ;0