தமிழ் சினிமா-2011- காலாண்டு ரிப்போர்ட்..
ஜனவரி-2011
சென்ற வருட முடிவில் வெளியான “தென்மேற்கு பருவக்காற்று” வியாபாரரீதியாய் பெரிய வருமானம் இல்லாவிட்டாலும், விமர்சகர்களால் கவனிக்கப்பட்டு, உலக திரைப்படவிழாக்களில் பங்கேற்றது. பொங்கலுக்கு ஆடுகளம், சிறுத்தை, காவலன், சொல்லித்தரவா மற்றும் இளைஞன் வெளியானது. ஆடுகளம் விமர்சகர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல பெயரைத் தட்டிச் சென்றது என்றாலும் வசூல் ரீதியாய் சென்னை போன்ற பெரிய நகரங்களைத் தவிர பெரியதாய் கல்லா கட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆட்சியாளர்கள் படத்தை வெளியிட தடை செய்கிறார்கள். அது இதுவென சும்மா சீன் போட்டு படத்துக்கு விளம்பரம் தேடிக் கொண்டு வெளியான படம் காவலன். நிஜத்தில் படத்தை வாங்கிய சக்தி சிதம்பரத்தின் பைனான்ஸியல் பின்னணியே படத்தின் ப்ரச்சனைக்கு காரணம். இந்த படம் வெளியாவதில் ப்ரச்சனையென்றால் தன்னுடய அடுத்த படமான வேலாயுதத்தில் ப்ரச்சனை வரும் என்று ஆஸ்கர் ரவியும், மதுரை அன்புவும் சேர்ந்து படத்திற்கான ப்ரச்சனைகளை சரி செய்து வெளியிட்டார்கள். படம் வழக்கமான விஜய் படம் போலில்லாமல் சாப்ட் ரொமாண்டிக்காக இருக்க, விஜய் ரசிகர்களை விட நார்மல் ஆடியன்ஸிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தாலும் படத்தின் வசூலைப் பொறுத்த வரை சுமாரே.. ஒவ்வொரு ஏரியாவுக்கும் குறைந்தது ஐந்திலிருந்து, பத்து பெரிய நோட்டு அடிபட்டிருக்கும் என்கிறது ட்ரேட் ஸோர்ஸ். பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே சூப்பர் ஹிட் சிறுத்தைதான். யாரும் எதிர்பார்க்காத ஆந்திர கார ஹிட். அதற்கு சந்தானத்தின் காமெடியும் ஒரு காரண்ம்.

கலைஞரின் கதை வசனத்தில், பா.விஜய்யின் நடிப்பில் வெளியான பெரிய பட்ஜெட் படமான இளைஞன் படத்திற்கு தியேட்டரில் படு மோசமான ஓப்பனிங் கிடைத்தது. பல தியேட்டர்களில் முதல் நாள் இரவுக் காட்சி கேன்சல் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சொல்லித்தரவா பற்றி ஏதுவும் சொல்லத் தேவையில்லை. பிறகு அம்மாதம் வெளியான படம் எஸ்.டி.சபாபதி இயக்கத்தில் தாணுவின் வெளியிட்டில் வந்த பதினாறு. பெயரிலும், விளமபர டிசைன்களிலும் கவர்ந்த அளவில் பத்து சதவிகிதம் கூட இல்லாத படமாய் அமைந்தது.
சூப்பர் ஹிட் – சிறுத்தை
ஆவரேஜ் ஹிட்- அடுகளம், காவலன்.
#####################################
பிப்ரவரி 2011
தூங்காநகரம், யுத்தம் செய், பயணம், நடுநிசி நாய்கள், சீடன் போன்ற படங்களைத் தவிர சிறிய படங்களும் வந்தன. தூங்காநகரம் அவர்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. நல்ல கருவாய் இருந்தாலும் மீண்டுமொரு மதுரை படமாய் வந்து திரைக்கதையில் சொதப்பிவிட்டது

யுத்தம் செய் படம் வெளியான நாட்களில் பெரிய அளவிற்கு வரவேற்பில்லாவிட்டாலும், மக்களின் மவுத் டாக் பரவி ஒரு ஆவரேஜ் படமாய் அமைந்தது. ப்ரகாஷ்ராஜின் பயணம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவு பெற்ற படம் என்ற மட்டில் வெற்றியே. ஆனால் கீழே இறங்கி ஓடவில்லை என்றே சொல்ல வேண்டும். கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளி வந்து பெரும் தோல்வியை சந்தித்த படமாய் அமைந்தது. சீடன் தனுஷ் சிறப்பு தோற்றத்திலிருந்தும் காப்பாற்ற முடியவில்லை.
ஆவரேஜ் – பயணம், யுத்தம் செய். பெரும் பாலும் மல்ட்டிப்ளெக்ஸ் மற்றும், பெரிய ஊர்களில் மட்டும்.
###############################
மார்ச் 2011
நிறைய சிறு முதலீட்டு படங்கள் வெளிவந்த காலமிது. உலகக் கோப்பை கிரிக்கெட், பரீட்சை என்று பெரிய படங்கள் எல்லாம் கோடை விடுமுறைக்காக காத்துக் கொண்டிருக்க, நிறைய சிறு முதலீட்டு படங்கள் வெளிவர வாய்ப்பு கிடைத்த்து. இருந்தாலும் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் போனது பெரும் வருத்தமே. சிங்கம்புலி, அவர்களும். இவர்களும், முத்துக்கு முத்தாக, குள்ளநரிக் கூட்டம் ஆகிய படங்கள் வெளிவந்தது.

ஜீவா நடித்திருந்த சிங்கம்புலி பெரிதாக செல்ப் எடுக்கவில்லை. குள்ளநரிக்கூட்டம் ஓரளவுக்கு மக்களிடையே தொடர் விளம்பரங்களால் சேர்ந்திருந்தாலும் வசூலில் பெரிய அளவிற்கு ரீச் ஆகவில்லை. யாரும் எதிர்பார்க்காத ஒரு படமான முத்துக்கு முத்தாக.. படம் ஒரு ஆவரேஜ் படமாய் அமைந்ததில் அனைவருக்கும் ஆச்சர்யம். டிவி சீரியலின் சினிமா வடிவமாய் இருந்தாலும் ஆங்காங்கே பாமர மக்களை நெகிழ வைத்ததால் இன்றளவும் கிராமங்களில் இவர்களது முந்தைய படமான மாயாண்டி குடும்பத்தாரைப் போல பெண்களை ரொம்ப நாளைக்கு பிறகு தியேட்டருக்கு கூட்டி வந்தது என்று சொல்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும்.
ஆவரேஜ் – முத்துக்கு முத்தாக
ஆவரேஜ் – முத்துக்கு முத்தாக
Comments
சிறுத்தை படம் செம ஓபனிங் இருந்தாலும் ஐந்து நாட்களுக்கு அப்புறம் வரவேற்பு குறைந்து விட்டதாக தகவல். காவலன் படம் மிகவும் ஸ்லோ ஆக பிக் அப் ஆனாலும் இறுதியில் அதுதான் ஜெயித்ததாக தகவல். பிரச்சினை என்னவெனில் சிறுத்தை படத்திற்கு கிடைத்த விளம்பரங்கள் காவலன் படத்திற்கு இல்லை. காவலன் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கழித்தே விளம்பரங்கள் கொடுத்தனர், அதுவும் மிகவும் குறைந்த அளவிலேயே. அனால் சிறுத்தை படம் மிகவும் பிரமாண்டமான அளவில் விளம்பரப்படுதப்பட்டது. ரிலீஸ் ஆகி இரண்டு வாரம் கழித்தும் படத்தை பூஸ்ட் செய்ய மறுபடியும் ஒரு பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டாவது பட்ஜெட் காவலனின் மொத்த விளம்பர பட்ஜெட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
இறுதியில் காவலனே ஜெயித்ததாக தகவல்.
கிங் விஸ்வா
லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்
இந்த link கை பாருங்க
http://www.tamilvix.com/kaavalan-completes-100-days-of-theatrical-run/
நிச்சயம் சார்பு இல்லை.. நூறு நாட்கள் ஓட்ட்வதற்காக.. கடைசி ஒரு வாரம் மட்டும் அண்ணா தியேட்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாது.
விரிவான அலசல்..
இந்தப் பதிவிற்காக விநியோகித்தவர்களிடம் எல்லாம் கேட்டு எழுதிய உழைப்பிற்கு பாராட்டுக்கள்.
விரிவான அலசல்..
இந்தப் பதிவிற்காக விநியோகித்தவர்களிடம் எல்லாம் கேட்டு எழுதிய உழைப்பிற்கு பாராட்டுக்கள்.
(ரிப்போர்ட் நல்லாருக்கு. காவலன் & ஆடுகளம் ஹிட் என்பது தான் சாதாரண பார்வையாளன் எண்ணம்)
eppadi.... sankar
அண்ணா மட்டுமல்ல. உட்லண்ட்ஸ் சிம்பொனியும் எடுத்தார்கள் :-)
‘தூங்கா நகரம்’ இன்னொரு முறை கொஞ்சம் விசாரித்துப் பாருங்களேன். ‘பி’ சென்டர்களில் இப்போது செகண்ட் ரன்னில் கூட நல்ல கலெக்ஷன் கொடுப்பதாக கேள்வி (படம் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம்)
seems to be one side view
அப்போ இந்த காலத்துல ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்கணும்னா அது எப்படிப்பட்ட படமாயிருக்கணும்?
-அருண்-
ஆமாஆமா ... எல்லாரும் சங்கர் நாராயன்
மாதிரி இந்தியன் குரோசாவா ஆகமுடியுமா ?
Thanks
கேபிள் சங்கர்
-அருண்-//
அது தெரிஞ்சா எல்லோரும் சூப்பர் ஹிட் படம் கொடுக்க மாட்டாங்களா?
http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-11-01/vijay-kavalan-05-05-11.html
http://thatstamil.oneindia.in/movies/specials/2011/05/05-kavalan-at-shanghai-film-festival-aid0136.html
இன்றளவும் B மற்றும் c சென்டரில் collection கொடுத்த படம் என்றால் அது சிறுத்தை மட்டுமே .
உரிமையுடன்,
இவண்
அகில உலக பவர் ஸ்டார் டாக்டர்.S. சீனிவாசன் ரசிகர் மன்றம்