Thottal Thodarum

May 23, 2011

கொத்து பரோட்டா-23/05/11

புதிய தலைமை செயலகத்தை ஏன் பயன்படுத்தவில்லை என்று ஒரு விளக்கத்தை ஜெ அளித்துள்ளார். தூரத்திலிருந்து பார்க்கும் போது ஏதோ அவங்களுக்கு சரிபடலைப் போலருக்குன்னு நினைக்கிறாப்புல இருந்தாலும். உள்குத்தாய் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று ட்ராபிக் ப்ரச்சனை.  எதிர்காலத்தில் அங்கு பல பாலங்கள் வரவிருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் நிச்சயம் ஏற்படும் என்றும், அது மட்டுமில்லாமல் எதிரே இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் வியாபார ஸ்தலமான ரிச்சிதெரு வியாபாரிகளுக்கு ப்ரச்சனையாக இருக்கிறது என்றும், இன்னும் பல இடங்களில் லிப்ட் கூட சரி வர பிக்ஸ் செய்யாமல் இருப்பதாகவும். இரண்டாம் கட்ட கட்டுமானம் முடிந்தால்தான் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றும், இங்கு தலைமைசெயலகத்தை மாற்றியதால் சுமார் 30 கோடி பணம் வேஸ்ட்டாகியிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் எங்குமே இரண்டாவது கட்டகட்டுமானம் முடிந்தவுடன் தான் அங்கு மாறிக் கொள்வதாய் சொல்லவேயில்லை. இரண்டு கிலோமீட்டர் தூரம் கோப்புகளை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் வருவதால் மக்கள் பணி கெட்டுப் போகும் என்று சொல்லியிருப்பது சரியே.. ஆனால் கட்டிடத்தை உடனடியாய் கட்ட முடிந்த அரசாங்கத்தினால் இதை உடனே செய்ய முடியாதா?
####################################


கனிமொழி கைது சமாச்சாரம் பல பேருக்கு பல விதமான ரியாக்‌ஷன்களை கொடுத்திருக்கிறது.  சில பேர் சந்தோஷப்படுகிறார்கள்.  கடவுள் இருக்கான்யா? இல்லாட்டி பொம்பளைன்னு பாக்காம அம்மாவை உள்ள தள்ளினாங்க இல்ல அதுக்கு பலன் இப்ப கிடைச்சிருக்கு என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கென்னவோ கனிமொழியின் கைதைவிட மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் நிலையை நினைத்துத்தான். ஏனென்றால் மாறன் சகோதரர்களால் தூக்கியடிக்கப்பட்டு சதி செய்து வெளியேற்றப்பட்ட அவரை வேண்டுமென்று கலைஞர் டிவி ஆரம்பித்தவுடன் அழைத்து வந்துவிட்டு, பின்பு கண்கள் பனித்து குடும்பம் சேர்ந்ததும், ராத்திரியோடு ராத்திரியாய் மாறன் சகோதரர்களால் அடிக்கப்பட்டு, பின்பு வெறும் கையெழுத்துப் போடு நிர்வாக இயக்குனராக இருந்தவரை சம்பந்தமேயில்லாமல் உள்ளே தள்ளியிருப்பதை நினைத்து என்ன சொல்வது?. அன்று ராஜாவை கை கழுவி விட்டவர்கள் இவரையும் கனிமொழிக்காக கைகழுவி விடுவாரக்ள். ம்ஹும். இவர்களை நம்பினால் கைவிடப்படுவர் என்பது தெரிந்த விஷயம்தானே.
##################################
படித்ததில் பிடித்தது
ஆயிரம் கதவுகள் திறக்கட்டும் என்ற ஸ்டெல்லாபுரூஸ் எழுதிய நாவலை நண்பர் தாமுர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனார். ஸ்டெல்லாபுரூஸ் இதை திரைப்படமாக எடுக்க எண்ணி வைத்திருந்த கதை இது. பின்பு அது சாத்யப்படாமல் நாவலாய் எழுதினாராம். இதை திரைக்கதையாக்கினால் நிச்சயம் ஒரு வித்யாசமான படம் கிடைக்கும் என்று தாமு சொன்னார். படித்துவிட்டு யோசித்தால் நிச்சயம் ஒரு நல்ல திரைப்படம், மனித மனங்களின் இன்னொரு பக்கத்தை காட்டக்கூடிய படமாய் அமையும் என்று தோன்றியது. என் வரைக்குமான ஒரு ஒன்லைனை எழுத அரம்பித்திருக்கிறேன்.
##################################
பாகிஸ்தான் தீவிரவதி அஜ்மல் கஸாப்பை தூக்கிலடத் தயார் என்று அறிவித்த மம்மு ஜாலட் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாராம். கஸாப் உசிரு கெட்டி போலருக்கே.. ம்ஹும்.
###################################
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ட்ராப் என்பது உங்களுக்கு பழைய விஷயமாய் இருக்கலாம். ஆனால் நான் சொல்லப் போகும் விஷயம் உங்களை துணுக்குறச்செய்யும். இது வரை பொன்னியின் செல்வனை எடுக்க விரும்பிய அத்துனை பேருமே எடுக்க முடியாமல் ஏதாவது ஒரு ப்ரச்சனையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் எம்.ஜி.ஆர். இதை படமாக்க எண்ணி அது முடியாமல் கைவிட்டார். அதன் பிறகு கமல் அதை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்று முனைந்து பின்பு பட்ஜெட் அது இதுவென பல காரணங்களால் ட்ராப்பாக. அடுத்து அதை டிவி சீரியலாய் எடுக்க முடிவு செய்து சன் டிவியில் பிரபலமாய் இருந்த ஜி.டி.என் நெட்வொர் பெரிய படோடோபமான பூஜையுடன் ஆரம்பித்தது. பூஜைக்கே ரத, கஜ, துரத பரிவாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் அதே நாளன்று இன்னொரு சேனலிலும் அதே பொன்னியின் செல்வனுக்கு பூஜை போடப்பட்டது.  கடைசியில் இரண்டுமே ஷூட்டிங் போகாமலேயே டராப் ஆனது. அதன் பிறகு இன்னொருவர் அதையே சின்ன பட்ஜெட்டில் செய்கிறேன் என்று ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட அபீஸில் ஆரம்பித்து ஒர் ஷெட்யூலில் முடித்துக் கொண்டார்கள்.  பின்பு கொஞ்ச நாள் வரை யாரும் அதை கையிலெடுக்காமல் இருக்க, கலைஞர் டிவி ஆரம்பித்தவுடன் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் தயாரிப்பில், விடாது கருப்பு புகழ் நாகா இயக்க மீண்டும் பொன்னியின் செல்வன் எடுக்க ஆரம்பித்து இரண்டு மாதம் ஷூட்டிங் போய் அதுவும் நின்று விட்டது. இப்படியிருக்க கடைசியாய் மணிரத்னமும் கைவிட. மீண்டும் அதை மக்கள் தொலைக்காட்சியில் சீரியலாக்க போகிறேன் என்று கும்பல் கிளம்பியிருக்கிறது. எனக்கு தெரிந்து பொன்னியின் செல்வனை மாரிமுத்து என்று நினைக்கிறேன். நாசர் நடிக்க மேடை நாடகமாக்கியது மட்டுமே வெற்றியடைந்திருக்கிறது. எதுனா காத்து கருப்பு தோஷம் இருக்குதோ?
#######################################
ப்ளாஷ்பேக்
ஜேசுதாஸின் காந்தர்வ குரலில் ரவீந்திரனுடய இசையில் சூப்பர் ஹிட் பாடல். ஹிஸ் ஹைன்ஸ் அப்துலல என்ற படத்திலிருந்து. அற்புதமான கர்நாடக இசையின் அடிப்படையில் இசையமைக்கப்பட்ட பாடல். கேட்டால் கேட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.  கவுதமியும், மோகன்லாலும் அவ்வளவு க்யூட்டாக இருப்பார்கள் இப்படத்தில். இனிமையான மெலடி உங்களுக்காக.

################################### 
கேர்ள்ப்ரெண்டு: எங்க போறீங்க? யாரோட? எப்படி போறீங்க? எதை கண்டுபிடிக்க? ஏன் நீங்க மட்டும்? நீங்க போயிட்டீங்கன்னா நான் என்ன செய்வேன்? நானும் வேணுமின்னா கூட வரட்டுமா? எப்ப வருவீங்க? எங்க தங்குவீங்க? என்னை மிஸ் பண்ணுவீங்க தானே?

கொலம்பஸ் ; நான் ஆணியே புடுங்கலை.

ம்ஹும் இப்படி ஒரு கேர்ள் ப்ரெண்டு மட்டும் இருந்திருந்தா எவ்வளவு நல்லாருந்திருக்கும். அமெரிக்காவையே கண்டு பிடிச்சிருக்க மாட்டார். ஒலகத்திற்கும் ஒரு நாட்டாமை இலலாது போயிருக்கும். எல்லாத்துக்கு ஒரு குடுப்பினை வேணும்.
##################################
என் கார்னர்
#################################
அடல்ட் கார்னர்
ப்ளைட் விரைவில் கிராஷ் ஆகப் போகிறது என்று பைலட் அறிவிக்க,  அமெரிக்க பெண் உடனடியாய் மேக்கப் போட, அழகாய் முகமிருந்தால் நிச்சயம் ரெஸ்க்யூ படை தன்னை உடனடியாய் அடையாளம் கண்டுபிடித்து காப்பாற்றுவார்கள் என்றாள். ப்ரெஞ்சு பெண் தன்னுடய ப்ராவை கழட்டி, அழகான மார்பகங்களை பார்த்து தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று கூற, அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த ஆப்பிரிக்க பெண் தன்னுடய பேண்டீஸை அவிழ்த்து விட்டு, உங்களுக்குகெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. என்னைத்தான் அவர்கள் காப்பாற்றுவார்கள். ஏனென்றால் ப்ளைட் க்ராஷ் ஆனதும் உடனடியா அவர்கள் தேடுவது ப்ளாக் பாக்ஸைதான் என்றாள்.

Post a Comment

15 comments:

Pradeep said...

good one :)

Sen said...

Rajarajan kattiya Periya Koil mattumilai, enga Thevar Rajarajane terror thaan..

Hats off to Jesudass.. Thanks for reminding such a beautiful song na..

Guru said...

இன்னிக்கு தேதிக்கு அம்மா சொன்ன சரியா தான் இருக்கும். (குறிப்பு :நான் அல்லக்கையோ அடிப்பொடியோ அல்ல). தந்தி அப்டி தான் சொல்லுது.

பொன்னியின் செல்வன் சகுனமோ என்னவோ கதைய சொதப்பி படம் எடுக்கறதுக்கு கதையாவே இருந்தா எல்லாத்துக்கும் நல்லது..

ப்ளாக் பாக்ஸ் ஜோக் ஹி ஹி ஹி ஆனா ப்ளாக் பாக்ஸ் ஆரஞ்சு கலர்ல தானா இருக்கும்.. சோ பிரெஞ்சுக்காரியை தான....

VISA said...

தலைமை செயலகம் விஷயத்தில் அம்மாவின் முடிவு சரியோ தவறோ....ஆனால் ஒரு விதத்தில் Its a Metaphor.

சுதா SJ said...

உண்மைதான் சரத்தின் நிலமைதான் மிக பரிதாபமானது :(
முகா குடும்பத்தை நம்பியோர் யார்தான் நன்றாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
முகா பிரண்சிப்பில் இது சகயமப்பா.....

Paleo God said...

நடுநிலையான புரோட்டா! :))

பிரபல பதிவர் said...

என்ன இப்பல்லாம் குருவி அடிக்கடி மலையாள கரையோரம் பறக்குது... எதுனா மேட்டரா???

K.S.Muthubalakrishnan said...

Kalingar enna karthara?

rajasundararajan said...

'ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா' படத்தின் இப் பாடலைப் பற்றி 'யட்சகாயகன்' என்னுமொரு தலைப்பில் February 23-இல் தனியொரு பதிவிட்டிருக்கிறார் ராகவன்.

அவர் பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி இதோ:


ப்ரமதவனம் வீண்டும்
ரிது ராகம் சூடி

:சுபஸாயாஹ்னம் போலே
தெளிதீபம் களிநிழலின் கைக்கும்பில்
நிறையும்போழ் என்...


ஏதேதோ கதயில் -
ஸரயுவில் ஒரு சுடு மிழிநீர்க் கனமாய் ஞான்

கவியுடெ கான ரஸாம்ரித லஹரியில்
ஒரு நவ கனக கிரீடமிதணியும் போழ்
இன்னிதா...


ஏதேதோ கதயில் -
யமுனயில் ஒரு வன மலராய் ஒழுகிய ஞான்

யதுகுல மதுரிம தழுகிய முரளியில்
ஒரு யுக ஸங்க்ரம கீதயுணர்த்தும் போழ்
இன்னிதா...


முன்பு அப்படி, இன்று இதோ (இன்னு + இதா = இன்னிதா) என்று சிறுமையின் உயர்ந்து பெருமையில் முடியும் சரணங்கள்.

//இந்த ராகம். நாட்டையா அல்லது தைவதத்தை தவறவிட்ட வடக்கத்தியர்களின் ஜோக் ராகமா என்ற குழப்பமும், மயக்கமும்//

semi classical என்றுதான் குறிப்பு இருக்கிறது.

பலூன்காரன் said...

கல்கியின் மோகினி தீவு - இது ஒரு அருமையான காதல் கதை. திரைப்படமாக எடுப்பதற்கான அனைத்து அம்சங்களும் இருக்கிறது என்பது என் எண்ணம். இதை யாராவது முயற்சி செய்யலாமே..

Anonymous said...

delete
subject:the resident movie

ஹிலாரி ஸ்வான்க் நடித்து ரிலீஸ் ஆகியுள்ள the resident(2011)பார்த்தேன். ஒரு டாக்டர் பெண் ஒரு அப்பார்ட்மெண்டுக்கு தனியாக குடி வருகிறாள். அவளது ரூமிற்கும் பக்கத்தில் உள்ள அப்பார்மென்ட்டில் ஒரு கிழவன் உள்ளார். அந்த கிழவரின் அப்பார்மென்ட்டுக்கும் இவளது அப்பார்மென்ட்டுக்கும் இடையில் ஒரு ரகசிய வழி உண்டு. அது வழியாக இவளது அறைக்கு இவளுக்கே தெரியாமல் வரலாம். அக்கிழவரின் பேரன் தினமும் இரவில் இவளது அறைக்கு வந்து இவளை இவள் தூங்கும் போது கண்காணிக்கிறான். இன்னும் பலவும் செய்கின்றான். எதையும் மிக வெளிப்படையாக காட்டினால் அதன் அழகு போய் விடும் என்பதை இதன் இயக்குனர் நன்றாக உணர்ந்திருக்கிறார். படம் முடியும் வரை திரில் இருந்து கொண்டிருந்தது. பாருங்கள்.இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து பாருங்கள்.
for details see
http://www.imdb.com/title/tt1334102/

Unknown said...

saravedi

kumar said...

ப்ளாக் பாக்ஸ் ஆரஞ்சு கலர்ல இருக்கும்னு அந்த ஆப்பிரிக்க பெண்ணுக்கு
தெரியாதா?இல்லை உங்களுக்கே தெரியாதா?என்னதான் ஜோக்குன்னாலும்
லாஜிக் வேணும் பாருங்க?

Yoga.s.FR said...

///ப்ளைட் க்ராஷ் ஆனதும் உடனடியா அவர்கள் தேடுவது ப்ளாக் பாக்ஸைதான் என்றாள்./// பெயர் தான் கறுப்புப் பெட்டியே தவிர அதன் நிறம் என்னவோ ஆரஞ்சு தான்!பனியிலோ,மழையிலோ,கடலிலோ எங்கு கிடந்தாலும் பளீரென்று தெரியும் நிறம் என்பதால்!

Anonymous said...

http://google.com/transliterate/indic/Tamil


copy essays in blogs and paste it in above page. it has maximum width. u can read essays easily without need to scroll much....