404- அமானுஷ்யங்களின் தேடல்
404 என்பது டிம்ஸ் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டலில் இருக்கும் ஒரு அறையின் எண். கல்லூரி சீனியர் மாணவர்களின் ராகிங் ப்ரச்சனையால் தூக்கு மாட்டிக் கொண்டு கெளரவ் எனும் மாணவன் தற்கொலை செய்து கொள்ள அதனால் அந்த அறையில் ஆவி நடமாட்டம் இருப்பதாய் அரசல் புரசலாய் பேசப்பட்டதால் அந்த அறை மூன்று வருடங்களாய் பூட்டப்பட்டிருக்கிறது. அப்போது அங்கே முதலாண்டு படிக்க வரும் அபிமன்யூ எனும் மாணவன் தனக்கு பேய் போன்ற பாராநார்மல் விஷயங்களில் நம்பிக்கையில்லை எனவே அந்த அறையை தாருங்கள் என்று கேட்டு அங்கேயே தங்குகிறான்.
அபிமன்யூவை உற்சாகப் படுத்தி அவனுக்கு ஆதரவாய், பேய் போன்ற விஷயங்களே இல்லை என்பதை நிருபிக்க தீஸிஸ் எழுதிக் கொண்டிருக்கும் பிரபல சைக்யாட்ரிஸ்ட், ப்ரொபசர் அனிருத். அவரின் கூற்றுப்படி பேய் போன்ற பயங்கள் எல்லாம் ஹலூசினேஷன் என்றும், நம் மூளையில் நாமே உருவாக்கிக் கொள்வது என்பதை நிருபிப்பதுதான்.
பேய் போன்ற பயங்களே இல்லாத அபிமன்யூவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சீனியர் மாணவர்களின் ராகிங்கின் மூலமும், அவனது அறையில் நடக்கும் சில அமானுஷ்யங்களும் சேர்ந்து குழம்பி பை போலர் டிஸ்ஸாடர் எனும் மனநோயில் வீழ்கிறான். அறையில் இறந்த கெளரவுடன் அவன் தனியாக பேசுவதும், அவன் தம்முடனேயே இருக்கிறான் என்று எண்ணும் அளவிற்கு நிஜத்திலும் சில அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன.
இவையெல்லாம் அவனது மூளையில் பதியப்படுகிற விஷயங்கள் என்றும் அம்மாதிரி விஷயங்கள் ஏதுமில்லை என்று நிருப்பிப்பதாய் அபிமன்யூவிடம் சொல்லி தன் திசீஸை முடிக்கும் அவருக்கும் நமக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியான க்ளைமாக்ஸ் காத்திருக்கிறது.
படத்தின் டைட்டில் காட்சியிலேயே இது வழக்கமான படமில்லை என்று நம்மை தயார் செய்துவிடுகிறார்கள். படத்தின் திரைக்கதை படம் பார்க்கும் ஆடியன்ஸின் அமானுஷம் பற்றிய நம்பிக்கைகளை ஒட்டிய கேள்விகளை தமக்குள்ளே கேட்டுக் கொண்டு அதற்கான விடைகளை தேடும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பதில் அவர்கள்து புத்திசாலித்தனம் தெரிகிறது. சவிதா சிங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான அத்துனை மூட்களையும் நமக்கு தருகிறது. முக்கியமாய் பின்னணியிசையமைத்த இமாட் ஷா பாராட்டப்பட வேண்டியவர்கள்.
ப்ரொபசராய் வரும் மும்பை மேரி ஜான், டோம்பிவெல்லி பாஸ்ட் போன்ற படங்களின் இயக்குனர் நிஷிகாந்த் காமத்தின் நடிப்பும் பாடி லேங்குவேஜும் அருமை. மிகவும் கண்ட்ரோல்ட் ஆக்டிங் என்றே சொல்ல வேண்டும். ஓரிரு காட்சிகளில் இவரே ஒரு பைபோலர் சிண்ட்ரோமில் அவதிப்படுபவரா? அல்லது அந்நிலையிலிருந்து அமானுஷ்யங்களை ஆராய்பவரா என்று சிறு குழப்பம் வரத்தான் செய்கிறது. அபிமன்யூவாக வரும் ஆரோரா, அந்த மூன்று சீனியர் மாணவர்கள், ஹாஸ்டல் வார்டனாக வரும் இயக்குனர் சதிஷ் கவுஷிக் என்று சிறு சிறு கேரக்டர்களுக்கும் முக்யத்துவம் கொடுத்திருக்கிறார்கள். சின்ன பட்ஜெட் படம் என்பதால் காலேஜ் ஹாஸ்டல் என்பது கொஞ்சம் கூட சாட்சியாய் மாணவர்கள் கும்பல் ஏதுமில்லாமல் இருப்பது உறுத்துகிறது.
குறையென்று சொன்னால் திரைக்கதையின் வேகத்தைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் படம் ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் வகை என்பதால் அதிகம் சைக்காலஜி ப்ரச்சனை பற்றி பேச வேண்டியிருப்பதால் தவிர்க்க முடியாமல் மெதுவாக நகர்கிறது. ஆனால் அக்குறையை கடைசி அரை மணிநேரத்தில் சரி செய்து விடுகிறார்கள். வசனங்களில் நிறைய விஷயங்களை உறுத்தாமல் சொல்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் நிச்சயம் நாம் உறைந்து போய் நிற்பதை மறுக்க முடியாது. ஒரு வித்யாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜெனரில் ஒரு புத்திசாலித்தனமான திரைக்கதையோடு அளித்த இயக்குனர் பிரவல் ராமனை பாராட்ட வேண்டும்.
404 - A Movie For Intelligent Film Lovers
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
404 - A Movie For Intelligent Film Lovers
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
உங்களை எல்லாம் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு சார்!
ஒக்கே, வெயிட்டிங் பார் எஜன்ட் வினோத்.
கிங் விஸ்வா
வேதாளரின் (முகமூடி வீரர் மாயாவியின்) புத்தம் புதிய காமிக்ஸ் கதைகள் - யூரோ புக்ஸ்
தமிழ் சினிமா உலகம் - மைதானம் சினிமா விமர்சனம்
ஓர் இரவு என்று தமிழில் ஒரு படம் வந்தது.. அதை பற்றி விமர்சனம் எதிர்பார்க்கிறேன் இதுவரை நான் பார்க்கவில்லை
uyirvani.com இல் இந்த படம் தரவிறக்கம் செய்தேன்
raaj for you.. already wrote about that film.