என்ன தான் மேம்பாலம் கட்டினாலும், நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தாலும், ரங்கநாதன் தெருவிலும், உஸ்மான் ரோடிலும், நடைபாதை என்ற ஒன்று இருக்கவே இருக்காது போலிருக்கிறது. நடைபாதை வியாபாரிகளுக்கென்று தனியே இடம் ஒதுக்கி கொடுத்தால் அந்த இடத்தை வேறு ஒருவனுக்கு மேல் வாடகைக்கு விட்டுவிட்டு, திரும்பவும் அதே இடத்தில் கடை போடுபவர்களை, போலீஸார் கண்டு கொள்வதேயில்லை. இன்னொரு மாமூல் அதிகமாகிற போது அவர்களுக்கென்ன?. இவர்களை விடுங்கள். ரத்னா ஸ்டோர்ஸ் காரர்கள் நடைபாதையில் பாதி கடையை பரப்பியிருக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அதை பார்த்துக் கொள்ள நான்கு ஆட்கள் அதைச் சுற்றி. அவர்களே அங்கு பாதி ட்ராபிக் ஜாமை ஏற்படுத்துகிறார்கள். முக்கியமாய் உஸ்மான் ரோடிலிருக்கும் சரவணா ஸ்டோர்ஸிலிருந்து நடந்து ஒரு பத்தடி நடப்பதற்கு பத்து நிமிஷம் ஆகும் போலிருக்கிறது. அரசும் போலீஸும் நினைத்தால் நிச்சயம் இதை சரி செய்ய முடியும். எப்போ தோணப் போவுதோ?
#######################################
அரபு நாட்டில் ஒருவர் தன் மனைவி மேல் சுமார் 400 கோடிக்கு கேஸ் போட்டிருக்கிறார். என்ன விஷயம் தெரியுமா? மனைவியை “மேட்டருக்கு” கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்லிட்டாளாம் அதுக்குத்தான். மனைவியை கூப்பிட்டி கேட்டதுக்கு “கல்யாணமாகி நாலு மாசத்துக்கு நான் கூப்ட்டு அவரு வரலை. அவரு கிட்ட எதோ ப்ராப்ளம் இருக்குன்னு சொல்லுதாம். எந்த புத்துல எந்த பாம்போ?
######################################
கனிமொழிக்கும் கலைஞர் டிவி ப்ரச்சனைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர் வெறும் 20 சதவிகித பார்ட்னர் மட்டுமே. அது மட்டுமில்லாமல் அவரின் கையொப்பமிட்டு எந்த முடிவுகளும் எடுக்கப்படுவதில்லை. அப்படியிருக்க எல்லா குற்றங்களுக்கு ராசாதான் காரணம். எனவே கனிமொழிக்கு ஜாமீன் கொடுக்கும்படி கேட்டிருகிறார் அவரது வக்கீல் ராம் ஜெத்மலானி. ராஜா பலிகடாவாக்கிவிட்டார்கள், பெண்ணுக்கு ஒன்றென்றால் இங்கே இவருக்கு துடிக்குது. என்றெல்லாம் ஆளாளுக்கு இணையத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னவோ ராம் ஜெத்மலானி பேசியதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. அவர் கனிமொழிக்குத்தான் வக்கீலே தவிர, ராசாவுக்கில்லையே.. இதே இருவருக்கும் அவர் வக்கீலாக இருந்தால் இருவருக்குமே இதில் சம்மந்தமில்லை என்றுதான் வாதாடியிருப்பார். நாளுக்கு பத்து லட்சம்னா சும்மாவா? பி.கு: கனிமொழி அவரின் கணவருடன் வந்திருந்தார். அவரு பேரு என்னப்பா… சே.. மறந்து போச்சே..
###################################
நம்மிடையே ஒரு மேனியா இருக்கிறது. யாராவது தீவிரவாதியோ, போராளியோ கொல்லப்பட்டுவிட்டால் அவர் இன்னும் சாகவில்லை. இல்லை முன்பே கொன்று விட்டார்கள் இப்போது தான் வெளியிடுகிறார்கள் என்பது போன்ற ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துக் கொண்டிருப்பது. இது வரை உலகில் அறிவிக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தவர் ஜிசஸ் மட்டுமே என்பது என் எண்ணம். அதுவும் சொல்லி படித்து கேட்டது.
####################################
செவிக்கினிமை.
யுவனின் அவன் இவன் பாடல்கள் முதலில் கேட்டவுடன் பிடிக்கவில்லை. ஆனால் கேட்க கேட்க கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. முக்கியமாய் ஒரு மலையோரம் பாடல் கேட்டவுடன் தெரிந்த குரலாய் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அட நம்ம பிரியங்கா என்று குதூகலம் வந்தது. என் இனிய நண்பர் இசையமைப்பாளர் பிரின்ஸ் நல்லதம்பியின் குட்டிப் பெண். ஏற்கனவே சென்ற முறை ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் செமி பைனல் வரைக்கும் வந்தவள். இப்போது மீண்டும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பைனலுக்கு வந்திருக்கிறாள். பாலசாரங்காவுடன். அந்த பாடலில் அவளது குரலை கேட்டுப் பாருங்கள். என்ன ஒரு மெச்சூரிட்டி.. நல்லதம்பி சார் திருஷ்டி சுத்தி போடுங்க ப்ரியங்காவுக்கு. மக்களே முடிஞ்சா உங்களுக்கு பிரியங்கா, பால சாரங்காவின் குரல் பிடித்திருந்தால் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு ஓட்டும் போடுங்க.
##################################
வெள்ளியன்று ஒசாமா பின்லேடனுக்காக தொழுகை நடத்தியிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். உலக தீவிரவாதியான ஒசாமாவுக்கு இப்படி செய்கிறீர்களே இது ஞாயமா? என்று கேட்டிருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். அதற்கு நீங்கள் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனை, தீவிரவாதி என்று தடை செய்யப் பட்ட இயக்கத்தின் தலைவருக்காக், அவர் இறந்த போது துக்கம் அனுஷ்டிக்கவில்லையா? ஊர்வலம் போகவில்லையா? அதுப் போலத்தான் என்றிருக்கிறார்கள். யாரை யாரோடு கம்பேர் செய்வது என்று ஒரு விவஸ்த்தையில்லையா? அங்கு ஒரு இனத்தின் தலைவருக்காக கொடுக்கும் ஆதரவையும், தன் இனம், மதம் என்றும் பாராமல் குண்டு வைத்து அமெரிக்காவில் மட்டுமல்ல மற்ற ஏழை முஸ்லிம் நாடுகளிலும் தீவிரவாதத்தை விதைத்த ஓசாமாவை ஆதரித்து தொழுகை நடத்துவது அல்லாவிற்கே பொறுக்காது. இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஓசாமா பேர் வேறு வைக்கப் போகிறார்களாம்..
##########################################
இந்த வார தத்துவம்
எந்த ஒரு மெழுகு வர்த்தியும் தன் ஒளியை இழப்பதில்லை, இன்னொரு மெழுகு வர்த்தி ஏற்றி வைக்கப்படுகிற போது எனவே மற்றவர்களுக்கு உதவுவதை என்றும் நிறுத்தாதே.

Efficiency is doing things Right. Effectiveness is doing the right thing. Peter Druker.
######################################
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு
இதற்கு ஏதும் சொல்லத் தேவையில்லை.
#######################################
ப்ளாஷ்பேக்
ருத்ரைய்யாவின் அற்புதமான படம். இன்றைக்கும் இந்த அளவிற்கு ஒரு படம் வந்ததாய் த்மிழில் தெரியவில்லை. கமல், ரஜினி, ஸ்ரீபிரியா எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். இளையராஜா இப்படத்திற்கு போட்டிருந்த இரண்டு பாடல்களும் அட்டகாசமான மெலடி. அதில் ஒன்றுதான் இது. ஜேசுதாஸின் மயக்கும் குரல் நம்மை எங்கோ கொண்டு போகும். இதே ட்யூனில் ராஜா பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கோடை கால காற்றே என்றொரு பாட்டு போட்டிருப்பார் மலேசியாவின் குரலில்.
######################################
அடல்ட் கார்னர்
ஒரு பெண் உண்டாகிவிட்டால் அவளது தோழிகளும், உறவினர்களும் அவள் வயிற்றை தடவி கொடுத்து "congrats" என்று வாழ்த்து சொல்கிறார்கள். ஆனால் அதுக்கு காரணமான ஆணின் ”லுல்லாவை” தடவிக் கொடுத்து "well done" என்று வாழ்த்து சொல்ல மாட்டேன்கிறாங்களே... நன்றி கேட்ட உலகமடா..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
34 comments:
அண்ணே! இதெல்லாம் அரபு நாட்டில் சகஜம். சிக்கன் சமோசாவுக்கு பதில் வெஜ் சமோசா கொடுத்தால , ஆல் டைம் ப்ளாக்பெரி பயன் படுத்துதல் போன்ற சப்பை மேட்டர்களுக்கெல்லாம் அங்கே விவாகரத்து நடந்திருக்கிறது..
அவ்வளவு ஈஸியாவா இருக்கு... ம்ஹும்..
ஆமாம்ணே! ஃபேஸ்புக்,எஸ்.எம்.எஸ்,மியூசிக் சேனல் மாத்தினதுக்கெல்லாம் விவாகரத்து நடக்குது.. 2010ல் மட்டும் சவுதியில் ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு விவாகரத்து நடந்ததாய் புள்ளிவிவரம் கூறுகிறது.
http://www.emirates247.com/news/region/saudi-had-one-divorce-every-30-minutes-in-2010-2011-03-21-1.370907
ஜீசஸ் - ஒரு காலத்திய போராளி???
//நம்மிடையே ஒரு மேனியா இருக்கிறது. யாராவது தீவிரவாதியோ, போராளியோ கொல்லப்பட்டுவிட்டால் அவர் இன்னும் சாகவில்லை. இல்லை முன்பே கொன்று விட்டார்கள் இப்போது தான் வெளியிடுகிறார்கள் என்பது போன்ற ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துக் கொண்டிருப்பது.//
சரியாச் சொன்னீங்க யுவர் ஆனர்!!
//ருத்ரைய்யாவின் அற்புதமான படம். இன்றைக்கும் இந்த அளவிற்கு ஒரு படம் வந்ததாய் த்மிழில் தெரியவில்லை. கமல், ரஜினி, ஸ்ரீபிரியா எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். இளையராஜா இப்படத்திற்கு போட்டிருந்த இரண்டு பாடல்களும் அட்டகாசமான மெலடி. அதில் ஒன்றுதான் இது. ஜேசுதாஸின் மயக்கும் குரல் நம்மை எங்கோ கொண்டு போகும். இதே ட்யூனில் ராஜா பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கோடை கால காற்றே என்றொரு பாட்டு போட்டிருப்பார் மலேசியாவின் குரலில். //
இந்த படம் என் வீட்டில் எத்தனை தடவை ஓடி இருக்கு எண்டு எனக்கே நினைவு இல்லை,
மறக்க முடியாத படம்
ஸ்ரீபிரியா நடிப்பு கலக்கலா இருக்கும்
//அப்படியிருக்க எல்லா குற்றங்களுக்கு ராசாதான் காரணம்.//
Ramjedmilani didn't say that Raja commit a crime. He explained that what ever the decision he makes (whether it is a crime or not) he is responsible not Kani.
I don't know why our bloggers are so ignorant about the law and blame DMK for this.
In court of law you can't argue like movie.
Aval Appadithan, there is a classic scene, Rajini tries to misbehave with Sripriya and she slaps him. The next day, she will be hesitant to talk to him and Rajini's response was awesome...its unfortunate that not many movies were made by the director.
//பி.கு: கனிமொழி அவரின் கணவருடன் வந்திருந்தார். அவரு பேரு என்னப்பா… சே.. மறந்து போச்சே.. //
A 'guest' who flew down to stand by Kanimozhi
CHENNAI: When Kanimozhi first broached the subject of marrying a little-known Singapore resident to her parents in 1997, they were far from elated. Hailing from Thanjavur but settled in Singapore with his mother and sister, doing translations and English subtitles for films, G Aravindan seemed an unlikely match for their daughter.
But Kanimozhi, whose first marriage, arranged by her father, had broken down, convinced them that she and Aravindan were greatly compatible and got along well. On Friday, when Kanimozhi got out of her car in front of the Patiala House court in Delhi, few recognised the big built man who accompanied her, looking distinctly uncomfortable under the media spotlight.
Aravindan, now a businessman, had taken the next flight down to be with his wife and lend her moral support soon after the CBI filed its supplementary chargesheet in the trial court in the spectrum case naming her as a co-conspirator. The gesture surprised close family friends who had seen their marriage change to "friendly understanding". Aravindan and Kanimozhi now live apart - she in Chennai and he in Singapore. Soon after their marriage and the birth of their son Adithyan, Kanimozhi left Singapore, admitting she missed her Chennai home, her father and her friends in the Tamil literary circle.
While her father and DMK supremo M Karunanidhi dotes on 11-year-old Adithyan, Aravindan remains a guest in the family household. There is little interaction between him and his father-in-law. Aravindan confines himself to Carnatic music and his wife's literary world whenever he is in Chennai.
He comes down to the city for two months (December and January) every year, celebrates his son's birthday on December 15, wife's on January 5, and attends the Margazhi (the Carnatic music) season and the Chennai Sangamam, an art extravaganza authored by Kanimozhi.
Chennai Sangamam, which brought interesting folk art from Tamil Nadu's rural backyard to the city's crowded streets and parks, was a major attraction for Aravindan.
Every year since the first event in January 2007, Aravindan has not failed to attend even a single event, organised with the help of NGO Tamil Maiyam, headed by Father Jegath Gaspar Raj and in which Kanimozhi was a co-patron. In fact, it is their passion for music, art, poetry and literature that first brought Kanimozhi and Aravindan together.
இந்த வார அடல்ட் கார்னர் கொஞ்சம்
ஓவர் தான்.
நீங்கள் பிரபாகரனை புரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமே!
:) ( thanks Mr.Abdulla to introduce this mania)
sharpudeen.. avaru ennaga pannaaru..?
//
கனிமொழி அவரின் கணவருடன் வந்திருந்தார். அவரு பேரு என்னப்பா… சே.. மறந்து போச்சே.
//
அவரு பேரு அரவிந்தன்....
கொத்து 1 : தி நகர்ல பொழப்பு ஓடறதே அங்க வர்ற மக்களாலதான் அப்படி இருந்தும் சரியான பார்க்கிங் வசதி இல்லை. ஆனா சரியான கேப்ல போலீஸ் ரெக்கவரி வண்டி நோ பார்க்கிங்ல இருக்கற டூவீலர்ஸ தூக்கிட்டுப் போகறது ஒரு தொழிலாவே நடக்குது. மொத்தம் அங்கே வர்ற வண்டிகள் எத்தனை? அந்த ஏரியால எத்தனை வண்டிகள் நிறுத்தலாம்? மேம்பாலத்துக்கு அடில நிறுத்தப் பட்டிருக்கிற வண்டிகள் யாருடையது? இருக்கும் கடைகளின் தொழிலாளர்கள் வண்டி நிறுத்துவது எங்கே? இதுக்கெல்லாம் பதில் கெடச்சாதான் தெரியும் மக்களை எந்த அளவுக்கு இவனுங்க ஏமாத்தறாங்கன்னு???
கொத்து 3: ஏன் தலைவரே ரத்னா ஸ்டோருக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லாதபோதே அவங்க பண்ற தப்பத் தட்டிக் கேக்கறீங்களே? கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செஞ்ச ஒரு நிறுவனத்தில் (20 %) என்ன பண்றாங்க? எங்கேர்ந்து முதலீடு வந்தது? கம்பெனி எப்படிப் போகுதுன்னு அந்தப் பங்குதாரருக்குத் தெரியாதுன்னு ஒரு வக்கீல் சொன்னா கேக்கறவன் கேணையா இருந்தா கே.ஆர்.... சாரி சாரி கேழ்வரகுல வடியும்னு சொல்றவங்க சொன்னா நம்பிடலாம் போல! (இதுக்கு எங்கள் வருங்கால பிரதமர் கனிமொழி ரூவா நோட்டையே பார்த்ததில்லைன்னு சொல்லிடுங்க. ப்ரச்சனை சால்வ்டு!) :)
கொத்து 4 : போராளி, தீவிரவாதி சரி இதுல ஏன் ஜீஸஸ புகுத்தினீங்க??? ஒன்னும் புரியல. ரைட்டு பழைய தினத்தந்தி எல்லாம் எடுத்துப் பாருங்க வருஷத்துக்கு பத்து பேராவது இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்ன்னு நியூஸ் இருக்கும். :)
கொத்து 5: //யாரை யாரோடு கம்பேர் செய்வது என்று ஒரு விவஸ்த்தையில்லையா??// (இது கொத்து 4-க்காக:)))
தெரியாத பல புதிய தகவல்கள்..!
//யாராவது தீவிரவாதியோ, போராளியோ கொல்லப்பட்டுவிட்டால் அவர் இன்னும் சாகவில்லை. இல்லை முன்பே கொன்று விட்டார்கள் இப்போது தான் வெளியிடுகிறார்கள் என்பது போன்ற ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துக் கொண்டிருப்பது. //
சரியா சொன்னிங்க..
Nice postings shankar.
t nagar under bridge shop rent 300rs per day mr.shankar.
மனித மனத்தின் இயல்பான முரண் நகைக்க வைக்கிறது.....
எந்த போராளியும் கூட இருப்பவனை கொல்ல மாட்டான்... துட்டுக்காக அண்டை நாட்டு தலைவனை கொன்றுவிட்டு துன்பியல் சம்பவம்னு வர்ணிக்க மாட்டான்.... தப்பு தப்புதான் என பிணத்தின் மேல் பிழைப்பு நடத்துபவர்கள் என்று உணர்வார்களோ....
அமெரிக்காவோ ஓசாமா பேரை சொல்லி அரபு நாடுகளில் அடிக்கும் கொள்ளையை யாராவது தட்டிகேட்க இயலுமா.....
இவ்வளவு ஆபாசமா அடல்ட் கார்னர் அவசியமா.? உங்களோட பசங்களே படிச்சாங்கனா? no idea? get idea!!
shankar sir antha song very nice
neenga mattum epdi yosikeering room potta,,,,,,
http://savukku.net/home/790-2011-05-09-02-11-28.html
ஒரு குறிப்பிட்ட அரசியலை ஏற்றுக் கொண்டுள்ள ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒரு வழக்கறிஞர் தனது கட்சி எதற்காகப் போராடுகிறதோ அதற்கு எதிராகச் செயல்பட்டால் அது கட்சிக்கு எதிரான நடவடிக்கையாகாதா?அதன்படி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையவர்களைத் தண்டிக்க வேண்டும் என பாரதிய ஜனதாகட்சி போராடும் போது அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி கனிமொழிக்காக முன்னிலையாவது கட்சியின் தர்மத்துக்கு எதிரானதாகாதா?
தொழில் தர்மப்படி நடந்து கொண்டால் இலட்சங்களும் கோடிகளும் கொட்டும். கட்சி தர்மப்படி நடந்து கொண்டால் சுண்டலுக்கே திண்டாட்டம் வந்துவிடும். ஆகையினால்தான் தொழில் தர்மம் என்ற போர்வையில் இவை நியாயப் படுத்தப்படுகின்றன. பாரதிய ஜனதாக்கட்சியின் இல.கணேசனிடம் கேட்டால் அது அவருடைய தொழில் தர்மம் என்று மழுப்புகிறார். "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" என்பார்களே, அதுபோல தொழில் தர்மத்தையும் பேசுகிறார்; ஊழலுக்கு எதிரான கட்சியின் கொள்கையையும் பேசுகிறார். கசாப்புக்காக வாதாடினாலும் இல.கணேசன் இப்படித்தான் பதில் அளிப்பாரோ! 'பாரத மாதாவையே' அம்மனமாக்கிவிட்டார்கள். பிறகென்ன தொழில் தர்மம் வேண்டிக்கிடக்கு?
http://hooraan.blogspot.com/2011/05/blog-post_09.html
/ருத்ரைய்யாவின் அற்புதமான படம். இன்றைக்கும் இந்த அளவிற்கு ஒரு படம் வந்ததாய் த்மிழில் தெரியவில்லை. கமல், ரஜினி, ஸ்ரீபிரியா எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள்./
படத்தின் தலைப்பையும் சேர்த்து கொடுத்திருந்தால் நன்றாக இருக்குமே.
தல,
பின்லேடன் குற்றவாளி என்பதில் எனக்கு மாற்றுகருத்தேயில்லை.அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் கட்டமைப்பும் செயலாக்கமும் முழுக்க முழுக்க அமெரிக்காவையே சாரும்,அதில் எந்த யூதருமே சாகவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?அமெரிக்கா வெளியிட்ட பலியான யூதர்கள் பட்டியல் முழுக்க போலி,என்கிறது இந்த ஆவணப்படம்.அவர்களுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது,மேலும் ஒரு வாரம் முன்பாகவே யாரையும் இரட்டைகோபுரம் இருக்கும் பேஸ்மெண்டுக்குள்ளே காரை நிறுத்தவோ,அதனுள் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள்ளே சென்று மெட்ரோ பிடிக்கவோ தடை செய்துள்ளனர்,தவிர விமானம் மோதினால் ஒரு கட்டிடம் இப்படி தவிடு பொடியாகாது,ஒன்று வளைந்து போயிருக்கும்,அல்லது மேலே உள்ள இருபது மாடிகள் மட்டுமே பஸ்பமாகவோ,தீய்ந்து கருகியோ போயிருக்கும், அமெரிக்க அரசு ஆயில் மற்றும் கனிமவளங்களுக்காகவும்,தங்களிடமிருந்த நவீன ஆயுதங்களின் வீரயத்தை பரீட்சிப்பதற்காகவுமே தொடுக்கப்பட்ட போர் தான் அது,அது முடியாது முடிந்தால் அமெரிக்கா கிடையாது,நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அன்றைய தினம் அது இஸ்ரேல் கூட்டுடன் வெறிகொண்டு அமெரிக்கா ஈராக்கையும், ஆஃப்கானிஸ்தானையும் கபளீகரம் செய்ய ஆடிய விபரீத விளையாட்டு , சொந்த நாட்டு மக்கள் சுமார் 3500 பேரை கொன்ற கொலைமா பாதகம்.அது சுமார் 20 வருட திட்டம்,ஒரு ஜனாதிபதி விலகுகையில் இன்னொரு ஜனாதிபதிக்கு கைமாற்றிவிட்ட பக்கா புளூப்ரிண்ட் திட்டம். ஒசாமா தலையில் போடப்பட்ட அநியாய பழி அது, ஒசாமா கத்தியை கீழே போட முடியாமல் நன்றாக ஃப்ரேம் செய்யப்பட்டார். ஒரு அறைக்குள்ளே உங்களையும் பூனையையும் வைத்து பூட்டிவிட்டால்,பூனை எப்படி எதிர்ப்பை பதிவு செய்யுமோ அப்படி சேராத இடம் சேர்ந்து சோரம் போனார் பின் லேடன். தவிர அவரை கொன்ற படத்தை உண்மையாக வெளியிட என்ன கொள்ளை?புலியை காட்டுடா என்றால் புலி போட்ட புழுக்கையை காட்டுகிறார் ஒபாமா.இதைப்பார்த்தால் யாருமே குதத்தால் தான் சிரிப்பார்கள்.அமெரிக்கர்கள் பார்ன் கிரிமினலஸ் என்றால் மிகையில்லை,இது பற்றி மேலும் விபரம் அறிய.
http://en.wikipedia.org/wiki/Loose_Change_%28film%29
http://www.youtube.com/watch?v=7E3oIbO0AWE
பொறுமையாக இந்த முழு ஆவணப்படத்தை பாருங்கள்
அமெரிக்கா கற்பழித்த தேசங்கள் அதிகமா?அல்லது பின்லேடன் கொன்று குவித்த மனிதர்கள் அதிகமா? என்று!!!அமெரிக்காவை கொண்டாடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை,அதற்காக போராளிகளுக்கு களங்கம் கற்பிக்காதீர்கள்.
கடந்த சூப்பர் சிங்கர் ஜூனியரில் அல்காவிற்காக விஜய் டிவி, சித்ரா, மனோ கும்பலால் பலிகடா ஆக்கப்பட்ட ஒரு natural talent பிரியங்கா.பல பதிவர்களும் (நீங்கள் உட்பட) இதிலெல்லாம் மாநில பிரிவினை பார்க்கக்கூடாது என்று அல்காவிற்காக உருகினார்கள். அந்தளவிற்கு விஜய் டிவி கும்பலின் marketing வெற்றி பெற்றிருந்தது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகம் என்ற வாதம் எடுபடவேயில்லை.
இவர்கள் எல்லோருக்கும் பிரியங்காவின் humble answer "ஒரு மலையோரம்"!
தல,
அமெரிக்காவில் ஒருவன் தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு பிடிக்கப்பட்டால் எப்படி நடத்துவார்கள் என்று தெரிந்துகொள்ள பார்க்கவும்,
http://www.youtube.com/watch?v=E9ff9EVNHJU&feature=related
தல., அப்துல்லாஹ் அந்த மாதிரி சின்ன சிரிப்பு கமென்ட் கூட போடலேன்னு சொல்றீங்களா, அல்லது அவரு அப்படியெல்லாம் போடவே இல்லை, என்று சொல்ல வர்றீங்களா, ( டைரக்டர் ஆச்சே நீங்க எப்பவும் தெளிவாதான் சொல்லனும்!)
:)
|கீதப்ப்ரியன் super
//இது வரை உலகில் அறிவிக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தவர் ஜிசஸ் மட்டுமே என்பது என் எண்ணம்// அதுவும் இதே போன்ற கட்டுக்கதை தான். மார்கெட்டிங்ல ஜெயிச்சதால இன்னும் கதை சூடா வியாபாரம் ஆகிட்டு இருக்கு.
it is not only priyanka .. my fav nithyasree also sung it thala
Post a Comment