எங்கேயும் காதல்
ஜெயம் ரவியிடம் ஒரு கார்பரேட் லுக் இருக்கிறது ஆனால் அந்த வயதுக்கான இளைமை துள்ளல் இல்லை. பிரபு தேவாவிடம் இருக்கும் ஒரு லைவ்லினெஸ் அவரிடம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கும் ஹன்சிகாவுக்குமிடையே ”கெமிஸ்ட்ரி” இல்லவேயில்லை.ஒன்று காதலர்களுக்குள் ப்ரச்சனை, இல்லை காதலுக்கு வெளியிலிருந்து ப்ரச்சனை, இல்லை காதலால் அவர்களுக்கு ப்ரச்சனை இதைத் தவிர வேறேதும் காதல் கதைகளில் இருக்க முடியாது. அம்மாதிரி கதைகள் எப்போது நம்முள் ஏறும் என்றால் அவர்களின் காதல் நம் உணர்வுகளுடன் சிங்க் ஆகும் போது படத்தினூடே இன்வால்வா ஆகி அவர்கள் சேர்ந்தே ஆகவேண்டும் என்று நாமும் பதைப்போம். ஆனால் படத்தில் சுறுசுறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லாததால் எப்படியும் க்ளைமாக்ஸில் சேர்ந்துவிடுவாரக்ள் என்று கட்டாயமாய் தெரிந்துவிடுவதால் சுவாரஸ்யம் மிகவும் கம்மி.
ஹன்சிகா மோத்வானி நன்றாக மொத்து மொத்தென்று இருக்கிறார். பல இடங்களில் இவரது நடிப்பு படு மோசம். படத்தின் மைனஸ் என்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும். வேண்டுமென்ற அளவிற்கு தாராளமாய் நடித்திருந்தாலும், மனசுக்குள் உட்காராததால் எடுபடவில்லை.பல இடங்களில் நமிதாவின் சைஸில் இருக்கிறார். இதில் நடு நடுவே ராஜு சுந்தரம் காமெடி செய்கிறேன் பேர்விழி என்று கடு இம்சை. முடியலை.
படத்தின் மூன்று அருமையான விஷயங்கள். ஒன்று நிரவ்ஷாவின Soothing விஷூவல். நியூசிலாந்து, ப்ரான்ஸ் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. அடுத்து இசையமைப்பாள்ர் ஹாரிஸ். மூன்று பாடல்கள் இதம். முக்கியமாய் எங்கேயும் காதல், த்முதிமு, நெஞ்சில் நெஞ்சில் ஆகிய பாடல்கள் அருமை. மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லரின் அட்டக் காப்பினான நங்கை பாடல் கேட்பதை விட விஷூவலாக நன்றாக இருக்கிறது. ஆண்டணியின் எடிட்டிங் படு ஸ்லீக்.
திரைக்கதை, இயக்கம் பிரபு தேவா. பாடல் காட்சிகள் எந்த அளவுக்கு நன்றாக எடுபடுகிறதோ அதே அளவுக்கு அடிக்கடி பாடல் எரிச்சலுட்டுகிறது. சரியாய் க்ளைமாஸுக்கு முன் ஹீரோயின் அப்பா சுமன் வந்து பேசுவது எல்லாம் முடியலை சாமி. இம்மாதிரியான கதைகளில் முக்கியமாய் வசனஙக்ள் மிக அழகாய் ஷார்ப்பாக இருக்கவேண்டும். அதே போல் ஒரே மாதிரி ப்ளாட்டாய் போய்க் கொண்டிருக்கும் கதையில் எங்கே திருப்பம் வரும், எங்கே திருப்பம் வரும் என்று எதிர்பார்ப்பதே ஒரு திருப்பமாய் அமைந்திருப்பது வேடிக்கை. இன்னும் எத்தனை முறைதான் ஹீரோயின், ஹீரோவை புரிந்து கொள்ள ராத்திரியில் தனியாய் ரவுடிகளிடம் மாட்டிக் கொண்டு காப்பாற்றுவது. நான் கூட நினைத்தேன் அட அரத பழசான காட்சியாக இருக்கிறதே என்று? ஒரு வேளை ஆரம்ப காட்சிகளில் தேவையேயில்லாமல் வரும் ப்ரகாஷ்ராஜ் கேரக்டரை புத்திசாலித்தனமாய் திரைக்கதையில் நுழைக்கப் போகிறாரோ? என்று கூட நினைத்திருந்தேன். ஆனால் ம்ஹும். ஆனால் பாராட்ட வேண்டிய அம்சம். அந்த சக்கர வல்லியே பாடலுக்கான கான்செப்ட். பாட்டும் ஆட்டமும் கூத்தும் அட்டகாசம். அதே போல, ஆங்காங்கே தெளித்திருக்கும் சிறு சிறு பிரபு தேவா ப்ராண்ட் நகைச்சுவைகள். அருமையாய் செய்திருக்க வேண்டிய படம். ம்ஹும்.
எங்கேயும் காதல்- மீண்டும் சன் டிவிக்கு மட்டுமான ஒரு ஹிட்டு படம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
இல்லாத ஊருக்கு வழி சொல்ற மாதிரி
ஓடாத படத்தை எல்லாம் சூப்பர் ஹிட்டுன்னு நிமிடத்துக்கு ஒருமுறை சன் டிவிகாரர்கள் போட்டு இம்சை பண்ணுகிறார்கள்..
எங்கேயும் காதல் - இனிக்காத சக்கர வள்ளி..!
நேர்ல பாத்தா நல்லா நடிக்காததுக்கு பாப்பாவை நாலு மொத்து மொத்துங்க.
ஏண்டா போனோம்ன்னு
படத்தில் பிடிச்சது
1. ராஜு சுந்தரம் - மாவாட்ட கேட்குற காட்சி
2. சக்கர வள்ளி பாட்டு
3. பிரான்ஷ் காட்சி (திரும்ப திரும்ப அதையும் காட்டி போரடிச்சுடுச்சு)
இந்த படத்துக்கு சுறா பரவாயில்லை போல... ரூ. 320 ஒரு டிச்கெட் க்க்கு போச்சு .......
எனக்கு பிடித்திருந்தது....
நீங்க சொன்ன மாதிரி இன்னும் அருமையாக வந்திருக்க வேண்டிய படம் தான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்........
sorry உருகி எடுத்திருப்பார் போல.
அதான் சொதப்பிடுச்சி.Better luck
next time Deva&SunTv
கே.ஆர்.பி.செந்தில் said...
GREAT ESCAPE..
//
நானும்...
One lakh for 2 (example) sentences!! Oh, my god!!
http://www.imdb.com/title/tt0050658/
ஒரு கருத்தை வெளிப்படுத்தும்போது செம்பு தூக்கிக்கொண்டு கக்கூசுக்கு போற உவமானத்தை சொல்கிரிர்களே, நீங்கள் எல்லாம் எப்படி இரம்யமான காதல் வசனங்கள் எழுதுவிர்கள்?
முதலில்.. சொம்பு என்றால் கக்கூஸு மட்டுமே ஞாபகம் வரும் ஆட்களோடு என்ன விவாதித்து என்ன பயன்..?
முதலில் முகத்தோடு வந்து உரையாடுங்கள். அப்படி பயமாய் இருந்தால்.. என் தொலைபேசிக்கு போய் செய்யுங்கள். 9840332666.. அப்புறம்.. சொம்புக்கு விளக்கம் கொடுக்கிறேன்.
You usually present here third party materials (from youtube, basically infringing copyright laws) but not your own.
Please give me a single (video) link of your own production
செம பஞ்ச்
do not get angry and react to expose easily which we don't want happen.
ரொம்ப நன்றி. நீங்க என்ன அவருக்கு குஞ்சாமணியா? நாமெல்லாம் சொம்பிலிருந்து வந்தவர்கள்தானே? அப்புறம் அதிலென்னா அவமானம்?