Thottal Thodarum

May 7, 2011

எங்கேயும் காதல்

Engeyum-Kadhal-Movie-Wallpaper1 சன் பிக்சர்ஸ் அவசர அவசரமாய் பெரும் தோல்வியான மாப்பிள்ளை ஓடும் தியேட்டர்களில் எல்லாம் ரிலீஸ் செய்திருக்கிற படம். நேற்று நள்ளிரவிலிருந்தே உலகமெங்கு சூப்பர்ஹிட்டான  என்று விளம்பரம் போட ஆரம்பித்திருக்கும் படம். சென்னையில் மட்டும் சுமார் பதினெட்டு தியேட்டர்களுக்கு மேல் வெளியாகியிருக்கும் ஜெயம் ரவியின் படம். ஹாரிஸின் ஹிட் பாடல்கள் கொண்ட படம் என்று பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த படம். எதிர்பார்ப்பை திருப்திபடுத்தியதா? என்ற கேள்விக்கு பதில் பின் வரும் வரிகளில்.


engeyum_kadhal_movie_stills_photos_images_02 ஆரம்பக் காட்சியிலேயே “எங்கேயும் காதல்” பாடலில் பிரபு தேவா வந்து கதையையும், கதாநாயகன், நாயகியை அறிமுகப்படுத்த வரும் போது அட ஏதோ வித்யாசமாய் இருக்கேன்னு தோன்ற வைக்கிறார். அதிலும் ப்ரகாஷ்ராஜ் இயக்குனர் பிரபுதேவாவை பார்த்து வணக்கம் வைக்க், இவரு இந்த படத்தில நடிக்கவேயில்லை என்று அறிமுகப்படுத்தும் போது அட என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.  கரோக்கே பாரில் நான் விரும்பிப் பாடும் எங்கேயும் காதல் பாடலை “என்னடா..இவ்வளவு ஸோவான பாடலை எப்படி படமாக்கப் போகிறார்கள்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது, தென்றலாய்  நடனமைத்து, மிரட்டிய போது அடி தூள் என்று சந்தோசப்பட்டேன். வாழ்க்கையில் எங்கேயும் எப்போதும் கமிட்டாகாமல் ஜாலியாய் இருப்பேன் என்ற முடிவோடு இருக்கும் ஒருவன். பாரிஸிலேயே பிறந்து வளர்ந்து இந்திய கலாச்சாரங்களில் ஊறியவள் என்று சொல்லப்படுகிறவளுக்கும் இடையே ஆன காதல் என்றதும் அடடா என்று தயாராகி உட்கார்ந்தது எல்லாம் படு தொய்வான திரைக்கதையில் வீழ்ந்துவிட்டது.
engeyum_kadhal_movie_stills_photos_images_07 ஒரு ட்ரெடிஷனலான பெண்ணுக்கு எப்படி ஒரு ஸ்திரிலோலனுடன் காதல் வரும்? என்ற அடிப்படை கேள்விக்கே பதிலில்லை. அதன் பிறகு எப்படி படம் முழுக்க இன்வால்வ் ஆக முடியும். பார்த்த மாத்திரத்திலேயே ஹீரோவை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்.  அதன் பிறகு அவனைப் பற்றிய விவரங்கள் அவளுடய டிடெக்டிவ் அப்பாவின் கேஸ் ஃபைலினால் தெரிய  வருகிறது. அதன் பிறகு அவனைக் காப்பாற்ற அவள் எடுக்கும் முயற்சியெல்லாம் பெரிய லாஜிக் சொதப்பல்கள். இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டில் ஹீரோயினாய் பிறந்தாலும், லூசுப் பெண்ணாய்த்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது வேண்டுதலா?.  சரி காதல் வருகிறது. அதை சொல்ல முடியாமல் அந்த பெண்ணுக்கு என்ன ப்ரச்சனை என்றால் அவன் காதல் என்றால் காத தூரம் ஓடிவிடுபவன் என்று தெரிந்ததால். அவன் ஊருக்கு கிளம்பும் போது தன் காதலை தெரிவிக்காமல் இருந்து விடுகிறாள் இடைவேளை. அதன் பிறகு ஒரு வருடம் அவனுக்காக அவள் காத்திருக்கிறாள்.  அடுத்த வருட லீவுக்கு வரும் போது மீண்டும் சந்திக்கிறார்கள். அவனை இம்ப்ரஸ் செய்ய நெகட்டிவான ஒரு அப்ரோச்சை செய்து தன் காதலை புரிய வைக்க முயற்சிக்கிறாள். அவனுக்கு புரிந்ததா? இல்லையா என்பதுதான் கதை.

ஜெயம் ரவியிடம் ஒரு கார்பரேட் லுக் இருக்கிறது ஆனால் அந்த வயதுக்கான இளைமை துள்ளல் இல்லை. பிரபு தேவாவிடம் இருக்கும் ஒரு லைவ்லினெஸ் அவரிடம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கும் ஹன்சிகாவுக்குமிடையே ”கெமிஸ்ட்ரி” இல்லவேயில்லை.ஒன்று காதலர்களுக்குள் ப்ரச்சனை, இல்லை காதலுக்கு வெளியிலிருந்து ப்ரச்சனை, இல்லை காதலால் அவர்களுக்கு ப்ரச்சனை இதைத் தவிர வேறேதும் காதல் கதைகளில் இருக்க முடியாது.  அம்மாதிரி கதைகள் எப்போது நம்முள் ஏறும் என்றால் அவர்களின் காதல் நம் உணர்வுகளுடன் சிங்க் ஆகும் போது படத்தினூடே இன்வால்வா ஆகி அவர்கள் சேர்ந்தே ஆகவேண்டும் என்று நாமும் பதைப்போம். ஆனால் படத்தில் சுறுசுறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லாததால் எப்படியும் க்ளைமாக்ஸில் சேர்ந்துவிடுவாரக்ள் என்று கட்டாயமாய் தெரிந்துவிடுவதால் சுவாரஸ்யம் மிகவும் கம்மி.

Engeyum_Kadhal_movie_posters_wallpapers1
ஹன்சிகா மோத்வானி நன்றாக மொத்து மொத்தென்று இருக்கிறார்.  பல இடங்களில் இவரது நடிப்பு படு மோசம்.  படத்தின் மைனஸ் என்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்.  வேண்டுமென்ற அளவிற்கு தாராளமாய் நடித்திருந்தாலும், மனசுக்குள் உட்காராததால் எடுபடவில்லை.பல இடங்களில் நமிதாவின் சைஸில் இருக்கிறார். இதில் நடு நடுவே ராஜு சுந்தரம் காமெடி செய்கிறேன் பேர்விழி என்று கடு இம்சை. முடியலை. 

படத்தின் மூன்று அருமையான விஷயங்கள். ஒன்று நிரவ்ஷாவின Soothing  விஷூவல். நியூசிலாந்து, ப்ரான்ஸ் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. அடுத்து இசையமைப்பாள்ர் ஹாரிஸ்.  மூன்று பாடல்கள் இதம். முக்கியமாய் எங்கேயும் காதல், த்முதிமு, நெஞ்சில் நெஞ்சில் ஆகிய பாடல்கள் அருமை. மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லரின் அட்டக் காப்பினான நங்கை பாடல் கேட்பதை விட விஷூவலாக நன்றாக இருக்கிறது. ஆண்டணியின் எடிட்டிங் படு ஸ்லீக்.

திரைக்கதை, இயக்கம் பிரபு தேவா.  பாடல் காட்சிகள் எந்த அளவுக்கு நன்றாக எடுபடுகிறதோ அதே அளவுக்கு அடிக்கடி பாடல் எரிச்சலுட்டுகிறது.   சரியாய் க்ளைமாஸுக்கு முன்  ஹீரோயின் அப்பா சுமன் வந்து பேசுவது எல்லாம் முடியலை சாமி. இம்மாதிரியான கதைகளில் முக்கியமாய் வசனஙக்ள் மிக அழகாய் ஷார்ப்பாக இருக்கவேண்டும். அதே போல் ஒரே மாதிரி ப்ளாட்டாய் போய்க் கொண்டிருக்கும் கதையில் எங்கே திருப்பம் வரும், எங்கே திருப்பம் வரும் என்று எதிர்பார்ப்பதே ஒரு திருப்பமாய் அமைந்திருப்பது வேடிக்கை. இன்னும் எத்தனை முறைதான் ஹீரோயின், ஹீரோவை புரிந்து கொள்ள ராத்திரியில் தனியாய் ரவுடிகளிடம் மாட்டிக் கொண்டு காப்பாற்றுவது. நான் கூட நினைத்தேன் அட அரத பழசான காட்சியாக இருக்கிறதே  என்று? ஒரு வேளை ஆரம்ப காட்சிகளில் தேவையேயில்லாமல் வரும் ப்ரகாஷ்ராஜ் கேரக்டரை புத்திசாலித்தனமாய் திரைக்கதையில் நுழைக்கப் போகிறாரோ? என்று கூட நினைத்திருந்தேன். ஆனால் ம்ஹும். ஆனால் பாராட்ட வேண்டிய அம்சம். அந்த சக்கர வல்லியே பாடலுக்கான கான்செப்ட். பாட்டும் ஆட்டமும் கூத்தும் அட்டகாசம். அதே போல, ஆங்காங்கே தெளித்திருக்கும்  சிறு சிறு பிரபு தேவா ப்ராண்ட் நகைச்சுவைகள். அருமையாய் செய்திருக்க வேண்டிய படம். ம்ஹும்.
எங்கேயும் காதல்- மீண்டும் சன் டிவிக்கு மட்டுமான ஒரு ஹிட்டு படம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

30 comments:

மனோவி said...

உங்களைப் போலவே நானும் நொந்து போய் விட்டேன் படம் பார்த்து...

இல்லாத ஊருக்கு வழி சொல்ற மாதிரி
ஓடாத படத்தை எல்லாம் சூப்பர் ஹிட்டுன்னு நிமிடத்துக்கு ஒருமுறை சன் டிவிகாரர்கள் போட்டு இம்சை பண்ணுகிறார்கள்..

எங்கேயும் காதல் - இனிக்காத சக்கர வள்ளி..!

Anonymous said...

//ஹன்சிகா மோத்வானி நன்றாக மொத்து மொத்தென்று இருக்கிறார்.//

நேர்ல பாத்தா நல்லா நடிக்காததுக்கு பாப்பாவை நாலு மொத்து மொத்துங்க.

karuppu said...

"இம்மாதிரியான கதைகளில் முக்கியமாய் வசனஙக்ள் மிக அழகாய் ஷார்ப்பாக இருக்கவேண்டும்..." என்று சொல்லி இருக்கிறிர்கள். உதாரணமாக அழகாய் ஷார்ப்பாக 2 வசனங்களை நீங்கள் போட்டு காமியுன்களேன்?

Unknown said...

GREAT ESCAPE..

Cable சங்கர் said...

karuppu.. ஒரு லட்ச்ம கொடுக்க சொல்லுங்க.. நான் எழுதி காட்டுகிறேன். சும்மா எழுதிக் கொடுக்க நான் என்ன எவனுக்காவது சொம்பு தூக்கிட்டா அலையுறேன்.:)

kchandru said...

தெரியா தனமா முதல் நாள் ஷோ போகி தொலைச்சுட்டேன் ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லை

ஏண்டா போனோம்ன்னு

படத்தில் பிடிச்சது
1. ராஜு சுந்தரம் - மாவாட்ட கேட்குற காட்சி
2. சக்கர வள்ளி பாட்டு
3. பிரான்ஷ் காட்சி (திரும்ப திரும்ப அதையும் காட்டி போரடிச்சுடுச்சு)

இந்த படத்துக்கு சுறா பரவாயில்லை போல... ரூ. 320 ஒரு டிச்கெட் க்க்கு போச்சு .......

disney said...

முழுக்க முழுக்க காதலர்களுக்கான படம்.
எனக்கு பிடித்திருந்தது....
நீங்க சொன்ன மாதிரி இன்னும் அருமையாக வந்திருக்க வேண்டிய படம் தான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்........

இளங்கோ@ இளமகேஷ் said...

பிரபுதேவா நயன்தாராவை நினைத்து
sorry உருகி எடுத்திருப்பார் போல.
அதான் சொதப்பிடுச்சி.Better luck
next time Deva&SunTv

a said...

//
கே.ஆர்.பி.செந்தில் said...
GREAT ESCAPE..
//
நானும்...

நிழற்குடை said...

சன் பிக்சர்ஸ்-ன் பேங்க் பேலன்ஸை காலி பண்ண வேண்டும் என்றே ஒரு‍ கூட்டம் அலைந்து‍ கொண்டிருப்பதாக கேள்வி.

karuppu said...

@Cable Sankar

One lakh for 2 (example) sentences!! Oh, my god!!

shortfilmindia.com said...

summaa ezhutha naan ethukku..

Unknown said...

THIS MOVIE IS THE DITTO COPY OF ENGLISH MOVIE"LOVE IN THE AFTERNOON " RELEASED IN THE YEAR 1957..EVEN THE DIALOGUES AND SCENES ARE COPYCAT.. SHANKAR PLSSSSSSSSS COMMENT ON THIS

Unknown said...

PLS CHECK OUT THE SYNOPISI HERE
http://www.imdb.com/title/tt0050658/

karuppu said...

@Cable Sankar

ஒரு கருத்தை வெளிப்படுத்தும்போது செம்பு தூக்கிக்கொண்டு கக்கூசுக்கு போற உவமானத்தை சொல்கிரிர்களே, நீங்கள் எல்லாம் எப்படி இரம்யமான காதல் வசனங்கள் எழுதுவிர்கள்?

Unknown said...

பாஸ் படத்துல உருப்படியான விசயம் ஹாரீஸோட (திருட்டு)பாட்டுக்கள்தான். அப்புறம் ராஜூ சுந்தரம் நடிக்க டிரை பண்ணுவார் பாருங்க நான் விழுந்து விழுந்து சிரிச்சேன். முதல் பாட்டு வரிகளுக்கு http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_9208.html

Cable சங்கர் said...

karuppu.. ரம்யமான காதல் வசனம் எழுதுவதற்கும் கக்கூஸுக்கு சொம்பு தூக்குவதற்கு என்ன சம்பந்தம்?.. காதலிப்பவர்கள் கக்கூசுக்கு போக மாட்டார்களா?

முதலில்.. சொம்பு என்றால் கக்கூஸு மட்டுமே ஞாபகம் வரும் ஆட்களோடு என்ன விவாதித்து என்ன பயன்..?

முதலில் முகத்தோடு வந்து உரையாடுங்கள். அப்படி பயமாய் இருந்தால்.. என் தொலைபேசிக்கு போய் செய்யுங்கள். 9840332666.. அப்புறம்.. சொம்புக்கு விளக்கம் கொடுக்கிறேன்.

ராஜரத்தினம் said...

கருப்பு என்பவர் என்ன தவறாய் சொல்லிவிட்டார் என்று தெரியவில்லையே. சினிமா விமர்சனத்தை (சொம்பை அல்ல) படித்த நானும் பல முறை இதே போல் நினைத்திருக்கிறேன். ஒரு sequence சொல்லி அதற்கு சும்மாவாச்சும் ரெண்டு வசனங்களை சொன்னால் முடிந்தது. அப்படி எழுதினால் நீங்கள் expose அகி விடுவீர்கள் என்று யோசிக்கிறீக்கிறீர்களா? அது மட்டுமல்லாமல் நீங்களே திமுக சொம்பு தூக்கியதை பல வாட்டி ஒப்புகொண்டுள்ளீர்கள். அப்புறம் ஏன் நீங்களே சொம்பு என்று ஆரம்பித்து அவரிடம் வம்புக்கு போகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.ஏன்னா சாப்பாடு சுவையை யார் வேண்டுமானாலும் அளந்துவிடமுடியும். அதற்காக எல்லாருக்குமே சமைக்க தெரிந்திருக்க வாய்பில்லையே? அதனாலும் அப்படி கேட்டிருக்கலாம்.

Cable சங்கர் said...

நன்றி.. நான் திமுக சொம்பு தூக்கியாகவே இருந்து விட்டு போகிறேன். ஏன் நீங்கள் வந்து அரசியல் செய்து பாருங்களேன் என்று நான் யாரையும் அழைக்கவில்லை.. சொம்பு தூக்கி என்பதற்கான அர்த்தம் இப்போதாவது கருப்புவுக்கு புரிந்திருக்கும். நான் எக்ஸ்போஸ் ஆவதைப் பற்றி கவலைப்பட்டவானால். நான் எழுதிய கதைகளை, இயக்கிய குறும்படங்களை. எழுதிய குறும்படங்களை இங்கே போட மாட்டேன்.. ராஜரத்னம்.. நான் கூட உங்களை ஜெ சொம்பு என்று கூப்பிடலாம்.. :)

karuppu said...

@Cable Sankar
You usually present here third party materials (from youtube, basically infringing copyright laws) but not your own.

karuppu said...

@Cable Sankar

Please give me a single (video) link of your own production

Anonymous said...

எங்கேயும் காதல்- மீண்டும் சன் டிவிக்கு மட்டுமான ஒரு ஹிட்டு படம்.//
செம பஞ்ச்

Cable சங்கர் said...

என்னை பற்றித் தெரிந்துகொள்ள.. தினமும் என் பதிவுகளை படியுங்கள். அப்புறம் அதில் என் வீடியோ எதுஎன்று தேடிப் பாருங்கள். கருப்பு..

Seshadri said...

you have given over build up for one tamil movie (i think you are the associate dir.)which ran away from screens, can u justify for that.

do not get angry and react to expose easily which we don't want happen.

Cable சங்கர் said...

seshadri.. i never extra buildup for any movie.. even which i worked.. so.. kindly give me the film name which iave given such a hype? and i dont get angry. and aim wide open for the critics.. not the synics.. and i lke the people who come with the profile..:)

ராஜரத்தினம் said...

நான் ஜெ சொம்பு என்பது இப்ப பிரச்னை அல்ல. திமுக அதன் யோக்கிதையும் உலகம் அறிந்த நிலையிலும் 50ரூ பருப்புக்காக அவருக்கு ஓட்டு போடுவேன் என்கிற கேவலமான சொம்பிற்கு முன் என் சொம்பு நிச்சயம் பெருமை படவைக்கின்ற சொம்புதான்.

மாதேவி said...

நன்றி.

shortfilmindia.com said...

எப்படியோ ராஜரத்னம். சொம்புங்கிறதுக்கு உங்களுக்கு பொருந்தும்ங்கிற உண்மைய புரிஞ்சிட்டதுக்கு.. நன்றி..:)

Lakshmikanthan said...

வசனம் ஷார்ப்பாக இல்லை என்று சொன்னால் உடனே நீ எழுதி காட்டு என்று சொல்வது சின்னபுள்ளைத்தனம்.ஒவ்வொரு விமரிசகரும் ஒரு படம் எடுத்து தங்களை ப்ரூவ் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.கேபிள் ஒரு படம் எடுக்கும்போது அந்த படத்தில் வசனம் சரியில்லாமல் இருந்தால் அதை நீங்கள் சுட்டிக்காட்டலாம்.அறிமுக இயக்குனர்களை வைத்து சூப்பர் ஹிட்டுகளை கொடுப்பதை ஒரு வியாபார உத்தியாக பயன்படுத்தி பெரும் பலன் அடைந்தவர் ஆர்.பி.சௌத்ரி.அப்படி எதுவும் இல்லாமல் மொக்கை படங்களை வெளியிட்டு சூப்பர் ஹிட், சூப்பர் ஹிட் என்று நொடிக்கு ஒரு விளம்பரம் வெளியிடுவதை தங்களது வியாபார உத்தியாக ஒரு கூட்டம் பயன்படுத்தி வருகிறது.இவர்களது தொலைக்காட்சியில் இன்னும் மாப்பிள்ளைதான் டாப் டென்னில் முதலிடத்தில் இருக்கிறது.எந்திரன், அயன் தவிர இவர்கள் வெளியிட்ட படங்கள் எல்லாம் தோல்வி அல்லது சுமார்தான் என்று சொல்கிறார்கள்.எதற்காக இவர்கள் இப்படி காசை கடலில் கொட்டுகிறார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது.

ராஜரத்தினம் said...

@shortfilmindia.com

ரொம்ப நன்றி. நீங்க என்ன அவருக்கு குஞ்சாமணியா? நாமெல்லாம் சொம்பிலிருந்து வந்தவர்கள்தானே? அப்புறம் அதிலென்னா அவமானம்?