அழகர்சாமியின் குதிரை
தமிழ் சினிமாவில் எப்போதும் எழுத்தாளர்களுக்கு பெரிய மரியாதை இருந்ததில்லை. ஒரு காலத்தில் ஏ.எல்.நாராயணன், ஆரூர்தாஸ் போன்றோர் தவிர பெரிய அளவில் எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதில்லை. அதுவும் பாக்யராஜின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாவற்றையும் ஒருவரே செய்வதுதான் சாங்கியமாகிப் போய்விட்டது. ஒரு இயக்குனர், தயாரிப்பாளரிடம் இது இந்த எழுத்தாளர் எழுதிய கதை என்று சொல்லி கதை சொல்ல ஆரம்பித்தால், அப்ப நீங்க என்ன டைரக்டர் என்று கேட்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனாலும் இனறளவில் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் போன்றோர் கதையை வேறொருவர் எழுத, திரைக்கதை இயக்கத்தை மட்டுமே அவர்கள் செய்ய வெற்றிப் பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் சமிப காலமாய் தான் அதுவும் சுஜாதாவை தமிழ் திரையுலகத்தினர் கொண்டாட ஆரம்பித்தப் பிறகு தான் மற்ற எழுத்தாளர்களை வசனமெழுத பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கும் ஆரோக்கியமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் தன் வசனங்களுக்காக மிகவும் கவனிக்கப்பட்ட எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் சிறுகதையான அழகர்சாமியின் குதிரையை படமாக்கியுள்ள இயக்குனர் சுசீந்திரனை பாராட்ட வேண்டும்.
மிக சிம்பிளான லைன். கிராமத்தில் அழகர் சாமி எனும் கடவுளின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிறது. அப்போது அங்கே வரும் அழகர்சாமி எனும் பக்கத்தூர் குதிரைக்காரனின் குதிரை வழி தவறி இவர்களிடம் வந்து மாட்ட, அந்த குதிரை வந்த நேரத்தில் ஊரில் நல்லது நடக்க, சாமியே குதிரையை அனுப்பி வைப்பதாய் நம்பிக்கை வந்து பிடித்து வைக்கிறார்கள். குதிரையை தேடி வரும் அழகர்சாமிக்கு குதிரையை கொண்டு போனால் தான் அவனுடய திருமணம் இல்லாவிட்டால் அவ்வளவுதான் என்ற நிலமை. அவனுடய குதிரை திரும்ப கிடைத்ததா? காணாமல் போன மரக்குதிரை என்னவாயிற்று? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுகதையோ, அல்லது நாவலோ.. அது எழுதப்படும் போது திரைப்படம் ஆவதற்காக எழுதப்பட்டதில்லை. சிற்சில சினிமாட்டிக் சுதந்திரத்துடன் சுவாரஸ்யமான திரைக்கதையமைத்திருந்தால் இயக்குனர் சுசீந்திரன் ஹாட்ரிக் அடித்திருப்பார். முதல் பாதி பல இடங்களில் மிகவும் மெதுவாகச் சென்று பொருமையை சோதிக்கிறது. இரண்டாவது பாதியில் தான் கதை மெல்ல சூடு பிடித்து கொஞ்சம் விறுவிறுப்பான கட்டத்திற்கு மாறுகிறது. அந்த இளம் காதல் ஜோடிகளை பற்றி முதல் காட்சியிலேயே அருமையாய் காட்டியபிறகு அந்த பாட்டு எதற்கு? தாட்சண்யமில்லாமல் வெட்டி எறிந்துவிடலாம். நிச்சயம் கதையை கெடுக்கக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் திரைக்கதையில் கோட்டைவிட்டிருந்தாலும், எழுதப்பட்ட காட்சிகளை முடிந்த வரை திரையில் பிரதிபலிக்க முயற்சித்த இயக்குனர் சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள்.
ந்டிப்பு என்று வரும் போது அப்புக்குட்டியின் நடிப்பும், காதல் ஜோடி இனிகோவும் ஓகே என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற நடிகர்கள் பெரும்பாலும் புதிய நடிகர்கள் ஆதலால் நிறைய மைனசுகளும், சில பல ப்ள்ஸ்களும் இருக்கத்தான் செய்கிறது. சரண்யா மோகனுக்கு ஒரு சின்ன கேரக்ட்ர்தான் ஆனால் அதுதான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. நிறைவான நடிப்பு. கோடங்கியாக வரும் கிருஷ்ணமூர்த்தியும், உளவுபாக்க வரும் சூரியின் கேரக்ட்ரும் பெரிதாக எடுபடவில்லை.ஆனால் அந்த மைனர் கேரக்டர் செம இண்ட்ரஸ்டிங்.
படத்தின் கதாநாயகன் என்றால் அது இளையராஜா என்பதை மறுக்க முடியாது. என்ன ஒரு அருமையான பின்னணியிசை. அதுவும் அப்புக்குட்டி தன் குதிரையை கூட்டிக் கொண்டு போக முற்படும்போது ஆட்களுடன் சண்டையிட்டு அடிவாங்கி மயங்கிவிழும் காட்சியில் மனுஷன் பின்னி பெடலெடுத்துவிட்டார். படம் நெடுக அப்புக்குட்டியின் மேல் வர வேண்டிய சிம்பதியை மனுஷன் அந்த ஒரு காட்சியிலேயே நம்மனதுள் கொண்டு வந்துவிடுகிறார். அந்த குதிக்கிற குதிக்குற குதிரைக்குட்டி பாடலில் அவர் குரலில் உள்ள குழந்தைத்தனமும், குதூகலமும், அப்பாவித்தனமும்.. அட்டகாசம். அவரின் படத்தை தூக்கி நிறுத்திய முக்கிய தூண்களில் ராஜா முக்கியத்துல முக்கியமானவரு. தேனி ஈஸ்வரின் டாப் ஆங்கிள் காட்சிகள் நச்.
நாட்டில் கதையில்லை.. கதையில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இதோ ஒரு ஊரின் கதை, ஒரு குதிரைக்காரனின் கதை, அவனுக்கும், குதிரைக்குமான காதலை சொல்லும் கதை என்று எவ்வளவோ கதையிருக்கிறது என்பதை தமிழ்க் கூறும் நல்லுலகத்திற்கு சொல்ல வந்திருக்கும் படம். ஆனால் எந்த ஒரு கதையாக இருந்தாலும் சுவாரஸ்மாக சொன்னலே ஒழிய மனதில் நிற்காது. ஒரு சிறுகதையை அக்கதை கொடுத்த பாதிப்பை கெடுக்காமல் மெனக்கெட்டது திரைக்கதையாசிரியர் சுசீந்தரனின் பெருந்தன்மை. ஆனால் அது படத்தின் சுவாரஸ்யத்திற்கு குறையாய் இருப்பதை கவனிக்க தவறியதால், மனதை கவர்ந்து அப்புக்குட்டியுடனே ஒன்றிபோகச் செய்ய வேண்டிய படத்தை, பெரிதான எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் போகவிட்டதற்காக இயக்குனர் சுசீந்திரன் மீது கொஞ்சம் வருத்தமே. அழகர்சாமியாய் அப்புக்குட்டியை கேஸ்டிங் செய்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர நினைத்தவர்கள், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்து திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் மூன்றாவது வெற்றி சுசீந்திரனுக்கும் ஒரு அருமையான படம் நமக்கும் கிடைத்திருக்கும். என்பதுகளில் ந்டக்கும் கதையென்கிறார்கள். ஆனால் அதை சொல்லுபடியான காட்சிகள் படத்தில் ஏதுமில்லை. ஏனோ தெரியவில்லை தியேட்டரை விட்டு வ்ரும் போது நம் மனமெங்கும் வியாபித்திருக்க வேண்டிய படம். எந்த விதமான இம்பாக்டும் கொடுக்காமல் போய்விடுகிறது.
அழகர்சாமியின் குதிரை- வித்யாசமான முயற்சி அவ்வள்வுதான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
120 கோடி மக்கள் வாழும் இந்நாட்டில் இல்லாத கதையா? உலக சினிமாவை உருவாக்கியவனின் படைப்பை உரிய அனுமதி இன்றி உருவி எடுத்து உறுமி அடிப்பது எதற்கு??? திருட்டு திருட்டுதான். அதையும் ஒரு படைப்பாளி செய்தால் There is no second thought, cable sir!
I'm sure u r not a biased person and I expected that u'll publish my comments even though its against u. I'm a regular reader of ur blog and I wish I could read a review from you for a tamil movie that is good. I'm sorry to say that I couldn't find any. (correct me if I'm wrong). Even I've not seen the movie "Azagar samin Kudhirai". Being a cinematic person u know the difficulties of making a film and the compromises you've to make. No one can give 100% perfect movie. All I ask you is, try to encourage directors like you. Just imagine after reading your review of this movie, "It just different... thats it...(the last punch line)", I've changed my mind to watch this movie. If its happens to every one, is not good right? Even this can happen to you once. I'm not concerning abt other bloggers as they r not having huge fans like you. As a continuous reader of your blog, I'm just asking you to asses the movie and try to give the positive points in a bold manner rather maximizing negative points. Hope you can understand. If at all I've written anything wrong, I feel sorry for it.
அழகர்சாமியின் குதிரை- வித்யாசமான முயற்சி அவ்வள்வுதான்.//
இதற்கு பதில் வித்யாசமான முயற்சிகாக ஒருமுறை பார்க்கலாம் என்று இருந்து இருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்து இருக்கும். இது தான் என் ஆதங்கம். இப்போதும் உங்கள் விமர்சனம் தவறு என்று சொல்லவில்லை.
well said charles!
சமிபத்தில் வெளிவந்த படங்களிலே எனக்கும் என் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்த படம்.
of AZHAKAR SAMIYIN KUTHIRAI .
Susinthiran is try diffrent film maker.
சீ திஸ் லிங்க்-
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=465:2011-05-06-09-10-38&catid=928:cinema-preview&Itemid=93