Thottal Thodarum

May 18, 2011

சாப்பாட்டுக்கடை - வெல்கம் ஓட்டல்



கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்லும் வழியில் நாயுடுபுரம் என்று ஒரு இடம் இருக்கிறது.  அந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள். இல்லையேல் ஏரியிலிருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் மேல் நோக்கி நடந்தால் இன்னும் சிறப்பு. நல்ல பசியோடு நடை நடந்தால் நன்றாக பசியெடுக்கும். அந்த ஏரியாவில் நல்ல நான்வெஜ், வெஜ் ஓட்டல் எதுவென யாரை கேட்டாலும் கைக்காட்டிய இடம் வெல்கம் தான். ஓட்டலின் பெயர் வெல்கம். ஏதோ பெயரை பார்த்து பெரிய ரெஸ்டாரண்ட் என்று நினைத்தால் அது உங்கள் கற்பனை ஆனால் கொடுக்கும் உணவுகளின் தரமோ அடிதூள்.


சுமாராய் ஒரு பத்து பேருக்கு மேல் உட்கார இடமிருக்காது. காத்திருந்துதான் சாப்பிட வேண்டும். உள்ளே போக நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன். தண்ணி அடித்துவிட்டு உள்ளே போனால் அனுமதி கிடையாது.. பிஸி நேரங்களில் செல்போன் பேசுபவர்களுக்கு அனுமதி கிடையாது. என்று ஏகப்பட்ட ரூல்ஸ் இருந்தாலும் கூட்டம் அம்முகிறது. முக்கியமாய் சாப்பாடும் டிபனும் அருமை.. ஏதாவது ஒரு அயிட்டம் நன்றாக இருந்தால் சொல்லலாம். வெஜ், நான் வெஜ் எல்லாவற்றிலும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள்..அதிலும் புளிக்குழம்பு என்று ஒன்று கொடுத்தார்கள் . அந்தக் காரமும், புளிப்பும் ம்ம்ம் டிவைன். என்ன ரேட்டும், கூட்டமும் தான் கொஞம் அதிகம். அதனாலென்ன,

கொடைக்கானல் அரசு அதிகாரிகளுக்கு முழுக்க, முழுக்க அங்கேயிருந்துதான் சாப்பாடு பார்சல் போகிறதாம். சுற்றியிருப்பவர்களை பற்றிய லஜ்ஜை இல்லாமல் அங்கு வரும் புதுமண தம்பதிகள் இடையே சாப்பிடும் போது நடக்கும் சரசத்தையும், அப்புதுப் பெண்களின் அப்பட்டமான வெட்கத்தையும், சிணுங்கலையும், யாராவது ஒருத்தருக்கு இடம் கிடைத்தாலும், உட்காராமல் இரண்டு சீட்டிற்காக் காத்திருப்பதையெல்லாம்,  பார்த்தபடி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வெயிட் செய்யலாம். கொடைக்கானல் போனால் டோண்ட் மிஸ்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

saarvaakan said...

புளிக் குழம்பு அருமை
நன்றி

Lenin said...

ithu enna meel pathiva? ippathan recent-a ithe pathi unga blog-la padicha maathiri iruku?

Cable சங்கர் said...

இல்லை லெனின் போனவாரம் எலக்‌ஷன் ரிசல்ட் அன்னைக்கு கடைசி ரெண்டு பதிவுகளை ப்ளாக்கர் சாப்பிட்டிருச்சு.. அதான் ரீ பப்ளீஷ்..

பிரபல பதிவர் said...

//அதான் ரீ பப்ளீஷ்..//

ரீ பப்ளிஷ் தேவையில்லை... ஏன்னா உங்க வாசகர்கள் வித் இன் ஒன் அவர்ல படிச்சிருப்பாங்க.....

rajesh said...

After reading the blog about the hotel I went there. Nice food and taste. Biriyani is excellent. i give 5 star rating for the food. ambiance is not great though a family can go decently. They serve all the food items in the banana leaf which adds flavour to the food. Dont miss if u r in kodaikanal.

Unknown said...

Kodaikanalil M.M. streetil ulla Kamaraj messukku oru murai chendru varungal (morning 7 manikku) tiifin sappida pona nan aanavamai ella hotelilum sollum dialogue i ingum sonnen "Enakku oru pongal, vadai sooda irundha mattum kondu vanga" endru (hill station epdi sooda kodupandra thenavattula irundhen)Koduthan paru oru medhuvadai kodhikka kodhikka sathiyamai andha ooril andha nerathil ippadi oru heatum tasteum nan edhir parkavey illa, pongal thondayil vechadhum T.N. veli halwa pola vazhukkituu vayathukkulla pochu, poori, idli, dosaiyum nalla irundhadunnu nan sollidhan theriyanuma. Ingu veg food dhan serve seigirargal. Orderin peril Non veg um sidhu kodukkirargal (pepper chicken dhoool)don't miss in ur next trip..