நேற்று சூப்பர் சிங்கர் அல்காவின் முதல் சினிமா பாடலைப் பற்றி எழுதினாலும் எழுதினேன். ஒரே மாநிலப் ப்ரச்சனையாகிவிட்டது. அதிலும் ப்ரியங்காவிற்கு ஏகப்பட்ட சப்போர்ட். ப்ரியங்காவைப் எனக்கு சுமார் ஐந்து வருடங்களாய் தெரியும். ஆறு ஏழு வயதாக இருக்கும் போதே அவளுடய தந்தையின் இசையில் ஒரு பக்தி பாடல் ஆல்பத்தை கொடுத்தவள். இனிய குரலுக்கு சொந்தக்காரி. அவரது தந்தை ப்ரின்ஸ் நல்லதம்பி ஒரு இசையமைப்பாளர். என்னுடய எல்லாக் குறும்படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர். தம்பீஸ் எனும் இசைக்குழு ஒன்றை வைத்திருக்கிறார். அருமையான கம்போசர். இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவருக்கான ப்ரேக்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் திறமையை பற்றி அவருடன் சேர்ந்து வேலை செய்த அனுபவத்தில் சொல்கிறேன். அவரின் வெற்றி வெகு தொலைவில் இல்லை. அது போலத்தான் ப்ரியங்காவின் வெற்றியும். ப்ரியங்காவிற்காக தற்போது நடைப்பெற்று வரும் சூப்பர் சிங்கர் ஜுனியருக்காக ஓட்டுப் போடும் படி வேண்டுகோளைக்கூட சென்ற சில வாரங்களுக்கு முன் எழுதிய கொத்து பரோட்டாவில் கேட்டிருந்தேன்.
அவன் இவன் படத்தில் அவள் பாடியுள்ள பாடலே அதற்கு சாட்சி. இப்படி எல்லாவிதத்திலும் அவளைப் பற்றி, அவளின் திறமையைப் பற்றி நன்கு அறிந்தும் அல்காவை நான் பாராட்டுகிறேன் என்றால் அது நிச்சயம் அவளின் திறமைக்காகத்தான். நேற்று போட்ட வீடியோவில் அவளின் பாடலைக் கேளுங்கள். கேட்டவர்கள் இன்னும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு ஸ்ரீனிவாஸின் கம்போஸிங்கும், அல்காவின் குரலுமே காரணம். நன்றாக இருப்பதை மனம் விட்டு பாராட்டாமல் தேவையில்லாமல், ஜாதி, மொழி, இன வாரியாக வரிந்து கட்டிக் கொண்டு பேசுவதை விடுவோமே. அது மட்டுமில்லாமல் அடுத்த விஷயம் கேரளாவில் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் ஒரு தமிழரை, தமிழச்சியை செலக்ட் செய்வார்களா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் தான் அப்படி குறுகிய மனப்பான்மையில் இருந்துவிட்டு போகட்டுமே. நாமும் அப்படியிருக்க வேண்டுமா? ஒரு மலையாளப் பெண் இவ்வளவு அழகாய் தமிழில் பாடுகிறாளே? அதற்கு ஏன் பாராட்டக்கூடாது? ஷ்ரேயாகோஷலின் குரலில் எத்தனையோ தமிழ் பாடல்களைக் கேட்டுக் கிறங்கிப் போயிருக்கிறோம். பாடுகிற விஷயத்தில் குரலும், பாவமும், தான் முக்கியமே தவிர, இந்தியா, தமிழா, கன்னடமா, மலையாளமா? என்றெல்லாம் முக்கியமில்லை என்பதே என் கருத்து. ஒரு வேளை விஜய் டிவியில் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று வைத்துவிட்டு மலையாள கரையோர குழந்தையை வெற்றி பெற வைத்துதான் ப்ரச்சனை என்றால்… அதற்குத்தான் இம்முறை உலகளவில் என்று சொல்லி தவறை சரி செய்துவிட்டார்களே.. பிறகென்ன? தப்புன்னு தெரிஞ்சு திரும்பப் திரும்ப செய்யறதைவிட இது சரிதானே? அப்படி ப்ரியங்காவிற்காகவோ, அல்லது நம் தமிழ்நாட்டு திறமையை நீங்கள் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கண்டீர்களானால் அவர்களுக்காக ஓட்டை போட்டு, உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நிச்சயம் ஒரு தரமற்ற குரலை நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவு செய்ய மாட்டார்கள். என்ன தான் அல்காவிற்காக மலையாள நடுவர்கள் ஆதரவு தெரிவித்தாலும் சிங்கார வேலன் பாட்டிற்கு மொத்த அரங்கமே எழுந்து நின்று கைத் தட்டி ஆரவாரித்து கண்ணீர் விட்டதை பார்த்தால் எல்லாரையும் மலையாளிகளாய் மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறதே?
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
டிஸ்கி: அப்படி ஒரு தமிழரை நீங்கள் சிறப்பித்து கொண்டாட விரும்பினால் இந்த வீடியோவைப் பார்த்து பாராட்டுங்கள். கொண்டாடுங்கள்.:)
Post a Comment
27 comments:
பிரியங்காவின் குரல் தேன் போன்று அருமையாக உள்ளது.
கேபிளாரின் பாடலும் அருமை. Expecting கேபிளார் in next edition of super singer senior
உங்க குரலையெல்லாம் கரோக்கில கேட்டு கிறங்கினவன் தல நானு! :))
ரைட்டு!
பின்றீங்களே பாஸ்! :-)
தமிழனைத் தவிர மற்ற மாநிலத்தவர் எல்லோரும் அப்பிடித்தான் (விவரமா) இருக்காய்ங்களா? உங்களுக்கும் இயக்குனர் ப்ரியதர்ஷனுடனான அனுபவம் ஒண்ணு இருக்கில்ல பாஸ்?
எண்ட சாரே..எந்த சம்சாரிக்குன்னு...
ஏண்ணே..மேடையில் பாடுறது எஸ்.பி.பியா??..#டவுட்டு..ஹி..ஹி..
டிஸ்கி: அப்படி ஒரு தமிழரை நீங்கள் சிறப்பித்து கொண்டாட விரும்பினால் இந்த வீடியோவைப் பார்த்து பாராட்டுங்கள். கொண்டாடுங்கள்.என்னது,தமிழரா?????????
//அவர்கள் தான் அப்படி குறுகிய மனப்பான்மையில் இருந்துவிட்டு போகட்டுமே. நாமும் அப்படியிருக்க வேண்டுமா//
//அவர்கள் தான் அப்படி குறுகிய மனப்பான்மையில் இருந்துவிட்டு போகட்டுமே. நாமும் அப்படியிருக்க வேண்டுமா///
வந்தாரை வாழவைப்பதும் தமிழன் தான்... போற இடத்திலெல்லாம் மிதி வாங்குறதும் தமிழன் தான்...
மடத் தமிழர்களே.... உணர்வீர்களா???
//டிஸ்கி: அப்படி ஒரு தமிழரை நீங்கள் சிறப்பித்து கொண்டாட விரும்பினால் இந்த வீடியோவைப் பார்த்து பாராட்டுங்கள். கொண்டாடுங்கள்.:)//
சீரியஸான பதிவையும் பகடியா முடிக்கிற திறமை உங்களுக்கு அதிகம் தல... மலையாளியாவோ... கன்னடியராவோ... தெலுங்கராவோ இருந்திருந்தா தமிழ் நாட்டுல இப்போ இருக்கிறத விட முன்னேறியிருப்பீங்க... தமிழரா போய்டீங்களே... கஷ்டந்தான்
cool
:)
ஒரு கவிஞனாக, எழுத்தாளனாக, விமர்சகராக கொண்டாடிய தமிழ் உலகம் , ஒரு பாடகனை கவனிக்க தவறியது கண்டனத்துக்குரியது, அதுவும் பதிவுலகம் மிக்கவே கண்டணத்துக்குரியது.
பதிவர்களே, ஒன்று திரள்வோம், கேபிளாரை கொண்டாடுவோம்..
I completely apologise if harsh, but my honest comment for your stand is :
மன்னாங்கட்டி
என்னா வாய்ஸ்டா? ...
Sema comedy sir neenga...
நல்ல அருமையான குரல் தல
உங்க சிபாரிசு தகுதியானதுக்கு தான்.இதுல கூட சாதி,மதம்,இனமா?எதாவது அசிங்கமா திட்டிடுவேன்.
நீங்கள் தமிழர்தான் . ஏன்னா, ஐந்து வருடங்களாக உங்களுக்கு தெரிந்த ஒரு தமிழ்ப் பெண் தமிழ் திரை இசையில் பாடி இருக்கின்றார். அதை பற்றி comment ல வந்தப்புறம் தான் நீங்க சொல்றீங்க. ஆனால் ஒரு மலையாள பெண் மலையாளத்தில் பாடி இருக்கின்றார். உடனே வரிந்துக் கட்டி போஸ்ட் போடறீங்க. நீங்கள் சந்தேகமே இல்லாம தமிழந்தான்
தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் இம்முறை உலக அளவில் என்பது உங்களுக்கு தவறை சரி செய்து விட்டது போல் தோனுகிறதா? தமிழகம் மற்றும் உலகம் ரெண்டும் Geographical locations. So ஒன்று தமிழகத்தின் என்று இருக்க வேண்டும், அல்லது உலக அளவில் என்று இருக்க வேண்டும். ரெண்டும் ஒருமித்து வருவது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
எனது கணினியில் கோளாறு இருப்பதாகத் தெரியவில்லை, ஏனென்றால் பிரியங்கா குரல் தெளிவாகத்தான் ஒலிக்கிறது. கேபிளார் பாடியதைப் பதிந்தவர்தான் சதிசெய்துவிட்டார். பாடகரின் அருமையான குரல் இழைத்துத் தந்த (தந்திருக்கும்தானே?) சங்கதிகளைக் கேட்கமுடியவில்லை.
அது என்ன, கல்யாண மண்டபத்துக் கச்சேரியா? பாடகரின் முன்னே ஒரு வெற்று நாற்காலியை இட்டு, அவர்தம் முழு உருவத்தையும் நாம் காணத் தரக் கூடாது என்று வேறு சதி!
முன்னேற்றப் பாதையில் எவ்வளவு முட்டுக் கட்டைகள் பாருங்கள்!
உங்கள் எல்லாக் கருத்துகளையும் ஏற்கலாம். ஆனால் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் பங்கேற்கும் தகுதி என்ற ஒன்றை முன் வைக்கும் போது அல்கா அதற்கு தகுதியானவரா என்று ஒரு கேள்வியை முன் வைத்து வெற்றி தோல்வியை பார்க்க வேண்டும். ஏன்கனவே பல பரிசுகளை வென்ற ஒரு பிரபல மேடைப் பாடகியான அந்த சிறுமி அந்த போட்டியில் கலந்து கொண்ட மற்ற சிறுவர் சிருமியரோடு போட்டி போட்டு ஜெயிப்பது என்பது எப்படி முறையாகும் ? இது எப்படி இருக்கிறது என்றால் சென்ற வருடம் முதல் பரிசு பெற்ற ஒருவர் அடுத்த அடுத்த வருடங்களிலும் கலந்து கொண்டு புதிதாக போட்டி போடுபவரோடு போட்டியிட்டு ஜெயிப்பது எப்படியோ அப்படி.
அப்படிப்பார்த்தால் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பல பேர் பல போட்டிகளில் கலந்து கொண்டு, முன் அனுபவத்துடன் கூட வந்திருக்கிறார்கள். வருவார்கள். இதே பிரியங்கா.. சென்ற முறை தோற்றாள்.. இம்முறை மீண்டும் சூப்பர் சிங்கர்3யில் தன் முயற்சியை விடாமல தொடர்கிறார். அல்கா சும்மா தான் பாடிய பாடலைப் பாடினார் அவ்வளவுதான்.
//சிங்கார வேலன் பாட்டிற்கு மொத்த அரங்கமே எழுந்து நின்று கைத் தட்டி ஆரவாரித்து கண்ணீர் விட்டதை பார்த்தால் எல்லாரையும் மலையாளிகளாய் மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறதே?//
Very simple. மொதல்ல ஜதி சங்கதி இதெல்லாம் ரொம்ப போட்டு பாடினாலே சரியோ தப்போ தமிழன் கிரங்கி போய் விடுவான். ஏன்னா கர்நாடக சங்கீதம் மட்டுமே உயர்ந்த சங்கீதம் என நினைக்கும் முட்டாள் தனமான எண்ணம். ரெண்டாவது Mass psycology.
summa pinnuringa
பிரியங்காவின் குரல் எனக்குப் பிடித்தமே...
ஒருமுறை ‘ஆட்டமா தேரோட்டமா” பாடல் மிக அருமையாகப் பாடினார்...
உங்களின் குரலும் நன்றாக இருக்கிறது சங்கர்...கொஞ்சம் நல்ல ஒலி யமைப்புடன் கூடிய வீடியோவை ஏற்றலாம் அல்லவா? அல்லது தனியாகப் பாடிப் பதிவேற்றலாமே...?
மிஷ்கின் மாதிரி உங்க படத்துல நீங்க ளே பாடிடுங்க...டான்சுக்கு மட்டும் சாருநிவேதிதாவைக் கூப்பிடுங்க...(அவர் விரல்டான்ஸ் ஸ்பெஷலிஸ்ட்) :)
பைனல்ஸ்ல அல்கா பெர்பார்மன்ஸ் சூப்பர்,அதான் அவங்க ஜெயிச்சாங்க.அவன் இவன் பட பாட்டு நிச்சயம் ஒரு கியூட் மெலடி.
-அருண்-
கடைசியா பாடற சின்ன பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு
அந்த நிகழ்ச்சியில எல்லாரையும் வெறுப்படிச்சது விஜய் டிவியோட கேவலமான அரசியல்தான், அதுவும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில. அல்காதான் சூப்பர்னு கருத்தை உருவாக்கிடாங்க. கவுதம் மேனன் விருந்தினரா வந்த எபிஸோட்ல அல்காவுக்கு சித்ரா, மனோ இவங்ககிட்டயிருந்து standing ovation எல்லாம். ஆனா பிரியங்கா, சஹானாவுக்கு பரிசை குடுத்துட்டு போயிட்டாரு கவுதம். பாவம் அவருக்கு இசை ரசனையே இல்ல பாருங்க.
Anyways, உங்க அல்கா பதிவுக்கு என்னோட comment - Exaggerated!
Post a Comment